Home > 2014 (Page 2)

ஏழையின் குடிசையில் சில சூரியன்கள்! – ரைட்மந்த்ரா முப்பெரும் விழா UPDATE 1

எல்லாம் வல்ல இறைவன் அருளாலும், நம்மை வழிநடத்தும் குருமார்கள் கருணையாலும், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் ஒத்துழைப்பு மற்றும் உதவியாலும் ரைட்மந்த்ரா விருதுகள் விழா, பாரதி விழா மற்றும் ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. அனைத்து சாதனையாளர்களும் தவறாமல் வந்திருந்து விருதுகளை பெற்று நம்மை ஆசீர்வதித்தனர். வருண பகவான் வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்து நம்மை பயமுறுத்தினாலும் குன்றத்தூர் முருகனின் மீது பாரத்தை போட்டுவிட்டபடியால் எந்த வித இடையூறும் இன்றி விழா இனிதே

Read More

உன்னால் முடியும் தம்பி தம்பி…!

சில நாட்களுக்கு முன்பு.... அதாவது 09/12/2014 அன்று நடந்த சம்பவம் இது. அலுவலகத்தில் கடும் பணிச் சுமை. மதியம் சுமார் நான்கு மணிக்கு ஒரு கிரீன் டீ சாப்பிடலாம் என்று அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தோம். சாலையில் ஒரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே... "அட நம்ம மணிமாறன்..." சிறந்த சமூக சேவைக்காக சென்ற ஆண்டு நமது திருவள்ளுவர் விருதை பெற்றவர். (மணிமாறனைப் பற்றிய பதிவிற்கு : தெய்வங்கள் ஒன்றென்று

Read More

யோகி ராம்சுரத்குமார் அற்புதம் – வயிறும் நிறைந்து மனமும் குளிர்ந்து வேலையும் கிடைத்தது!

சென்ற வாரம் டிசம்பர் 1 அன்று யோகி ராம்சுரத் குமார் அவர்களின் அவதாரத் திருநாளை முன்னிட்டு புகைப்படங்களுடன் ஒரு சிறப்பு பதிவு அளித்திருந்தது நினைவிருக்கலாம். யோகி அவர்களை பற்றி பதிவளிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் நம்மிடம் கேட்டுகொண்டது, மகா பெரியவாவும் அதற்கு இசைந்ததை போல சூழ்நிலை அமைந்து, தொடர்ந்து நாம் சென்னையில் இருக்க எங்கோ வேறு ஒரு மூலையில் இருக்கும் வாசகர் ஒருவரின் உதவியால் அது இனிதே நடைபெற்றது வரை

Read More

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

சென்ற வாரம், கார்த்திகையின் போது ஒரு நாள் மாலை நாமும் நண்பர் முகலிவாக்கம் வெங்கட்டும் நங்கநல்லூர் பொங்கி மடாலயம் சென்றிருந்தோம். வேல்மாறல் யந்திரத்தை உருவாக்கிய சாதுராம் சுவாமிகளின் திருச்சமாதி இங்கு தான் உள்ளது. அங்கு நம்மிடம் பேசிய வேல்மாறல் மன்றத்தின் நிர்வாகி திரு.ஆதிமூர்த்தி என்பவர், 'வேல்மாறல்' பற்றி விசாரித்து தினசரி 10 தொலைபேசி அழைப்புக்களாவது வருகிறது.. தினமும் பத்து பேருக்காவது கூரியர் அனுப்புகிறோம் என்றார். ஒரு மாபெரும் புண்ணியகாரியத்தில் பங்கேற்கும்

Read More

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

நம் வாசகர்கள் ஈரோடு திரு.ஞானப்பிரகாசம் & தமிழ்செல்வி தம்பதியினரிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, ஐந்து வருடத்துக்குள் 1000 சாதனையாளர்களை சந்திக்கும் நமது லட்சியத்தை பற்றி குறிப்பிட்டு நமது புதுக்கோட்டை பயணத்தை பற்றியும் ஆலங்குடி கணேசன் அவர்களை சந்திக்கவிருப்பதையும் கூறினோம். அப்போது அவர்கள் நீங்கள் புதுக்கோட்டை செல்வதென்றால் அவசியம் ராதாபாய் என்பவரை சந்திக்கவேண்டும் என்று கூறி அவரைப் பற்றிய விபரங்களை நமக்கு கூறினர். அவர்கள் கூறியதை கேட்டவுடனேயே ராதாபாய் அவர்களை சந்திக்க

Read More

ரைட்மந்த்ரா முப்பெரும் விழா 2014 – நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்!

நமக்கும் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கும் இந்த தளத்திற்கும் உள்ள தொடர்பு உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவரின்றி நானில்லை; இந்த தளமும் இல்லை. நம் தளத்தின் 'முப்பெரும் விழா 2014' அழைப்பிதழ் இறுதிப் பிரதி தயாரானவுடன் இன்று 07/12/2014 ஞாயிறு காலை பேரம்பாக்கம் சென்று நரசிம்மரின் பாதத்தில் அழைப்பிதழை வைத்து பூஜித்து விட்டு இதோ தற்போது தளத்தில்  வெளியிடுகிறோம். இன்று காலை நாம் பேரம்பாக்கம் சென்றபோது புதுவையிலிருந்து நண்பர் சிட்டி,

Read More

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ? Rightmantra Prayer Club

கால்நடை செல்வத்திற்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பொருளாதாரம் சரிந்துள்ள நாடுகளை பாருங்கள்... நிச்சயம் கால்நடை செல்வங்கள் அந்நாடுகளில் வற்றியிருக்கும். நம் நாட்டின் பொருளாதார சரிவிற்கு கூட கால்நடை செல்வங்கள் குறைந்துகொண்டே வருவது ஒரு முக்கிய காரணம். (பொதுப் பிரார்த்தனையில் புகைப்படத்துடன் பட்டியல் தரப்பட்டுள்ளது). சாலையிலோ அல்லது வேறு எங்கோ பசுவைப் பார்த்தீர்கள் என்றால், அது பசு அல்ல, ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு தங்கக் கட்டி என்று எண்ணிக்கொள்ளுங்கள். அது

Read More

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

இறைவனைப் பற்றிய அச்சமே இன்றி மனம்போன போக்கில் திரிந்து பாப காரியங்கள் செய்யும் பாபிகள் எல்லாம் சுகித்திருப்பதும், இறைவனையே சதா சர்வ காலமும் சிந்தித்து பக்தி செய்து ஒழுகி, நியாய தர்மப்படி வாழ்பவர்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதையும் அன்றாடம் காண்கிறோம். கலியின் கோலமே இதுவன்றி வேறொன்றுமில்லை. இவர்கள் உய்ய ஒரே வழி குருவை சரணாகதி அடைவது தான். அப்படி சரணாகதி அடைந்து சொத்து வழக்கு தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட்ட

Read More

இது ஆனந்தம் விளையாடும் வீடு!

டிசம்பர் 3. இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். மாற்றுத் திறனாளிகள் என்றாலே சமூகத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்படும் நிலையில், அந்தத் தடைக்கல்லை, வெற்றிப்படிக்கட்டாக மாற்றுபவர்கள் ஒரு சிலரே.  விதி தங்களை முடக்கிப் போட்டுவிட்டபோதும் தன்னம்பிக்கை தான் உற்ற தோழன், சாதிக்க வேண்டும் என்ற வெறி தான் தங்கள் வழிகாட்டி என்று எண்ணி விடாமுயற்சி செய்து, தற்போது நமக்கிடையே தலைநிமிர்ந்து வாழ்ந்து  வரும் இருவரைப் பற்றி இன்று அவசியம் தெரிந்துகொள்வோம். இவர்கள் இருவரைப்

Read More

கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்? வழிகாட்டுகிறார் மகா பெரியவா!

வரும் டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை 'கார்த்திகை தீபம்'. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது

Read More

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

மெய்ஞானிகள் மற்றும் உண்மையான மகான்கள் மற்றும் யோகிகளின் புகழ் அவர்கள் ஸ்தூல சரீரத்தோடு நடமாடும்போது இருப்பதைவிட மறைந்து சூட்சும சரீரம் பெற்ற பிறகே அதிகரிக்கும். அதிகரிக்கும் என்றால் அப்படி இப்படி அல்ல. நாளுக்கு நாள்...அதிகரிக்கும். பன்மடங்கு அதிகரிக்கும். அவர்கள் அருமையும் காலவோட்டத்தில் தான் மக்களுக்கு புரியும். மகா பெரியவா, ரமண மகரிஷி, பாம்பன்  ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஞானானந்த கிரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் முதல்

Read More

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ராமுவின் மனைவிக்கு ஒரு நாள் புடலங்காய் கூட்டு வைக்கவேண்டும் என்கிற ஆசை எழுந்தது. சந்தைக்கு போய் புடலங்காய் வாங்கி வாருங்கள் என்று அவனை அனுப்பினாள். புடலங்காய் கூட்டு அவனுக்கு  மிகவும் பிடிக்கும் என்றாலும் சரியான சோம்பேறியான அவனுக்கு சந்தைக்கு போய் அதை வாங்கி வரவேண்டுமே என்கிற அலுப்பு ஏற்பட்டது. இருப்பினும் சொன்னதை செய்யவில்லை என்றால் பலர் வீட்டில் உள்ள வழக்கத்தைப் போல அவன் மனைவியின் பூரிக்கட்டைக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால், வேறு வழியின்றி சந்தைக்கு

Read More

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பெற்ற தந்தையையே மகன் திட்டுவது & ஒருமையில் அழைப்பது, தெய்வமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி சக மாணவர்கள் மத்தியில் அழைப்பது, பிறரின் அங்கஹீனத்தை கேலி செய்வது, திருநங்கைகளை நகைச்சுவை பொருளாக்கி அனைவர் மனத்திலும் வக்கிரத்தை விதைப்பது.... இது தான் இன்றைக்கு திரைப்படங்களில் நகைச்சுவை. நகைச்சுவை என்றால் அது இப்படித் தான் போல என்று கருதும் நிலைக்கு

Read More

தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?

பரட்டை தலை, சரியாக பட்டன்கள் போடாத ஒரு அழுக்கு சிலுக்கு சட்டை, சீரற்ற கறை படிந்த பற்கள், ஏற்றம் இறக்கமாய் கட்டிய லுங்கி... அந்த முதியவரை பார்த்தால் அக்மார்க் கிராமத்து பெரிசு என்று தான் சொல்லத் தோன்றும். ஆனால், நமக்கு தெரிந்து தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர் இவர் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... இவர் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர்!! எப்படி? யார் இவர்?? இவர்  சேர்த்துள்ள

Read More