Home > 2013 > November (Page 2)

கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

நாளை (17/11/2013) முதல் கார்த்திகை மாதம் துவங்குகிறது. மார்கழி மாதத்துக்கு எத்தனை சிறப்பு உள்ளதோ அதே அளவு கார்த்திகை மாதத்துக்கும் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஜதீகம்.  அதே போன்று நினைத்தாலே முக்தியளிக்க கூடியது

Read More

பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

செல்வத்துள் இன்றியமையாத செல்வமான மழலைச் செல்வம் எங்களுக்கு வேண்டும் என்று பலர் நம் பிரார்த்தனை கிளப்புக்கு மனு செய்துவருகின்றனர். "பல பரிகாரங்கள் செய்தும் இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை" என்பதே அவர்களின் வேதனை குரல். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இறைவனையே ஒரு கணம் மடக்கி அவனை தடுமாற வைத்து சாதித்துக்கொண்ட தம்பதியினரை பற்றிய வரலாற்றையல்லவா படிக்கப்போகிறோம்? திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

Read More

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? குழந்தைகள் தின ஸ்பெஷல்!

இன்று நவம்பர் 14. 'குழந்தைகள் தினம்'. பண்டித நேருவின் பிறந்தநாள். குழந்தைகளை போல மிகச் சிறந்த ஆசிரியர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. குழந்தைகளை போன்ற ஒரு ஒளஷதம் (மருந்து) எந்த உலகிலும் இல்லை. மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் கூட நீங்கள் கற்றுக்கொள்ள முடியாத பாடத்தை ஒரு குழந்தையிடம் நீங்கள் சிறிது நேரத்தை செலவழிப்பதன் மூலம் அனாயசமாக கற்றுக்கொள்ளலாம். மிகப் பெரிய கவலைகள் கூட ஒரு குழந்தையின் சிரிப்பை கண்டால்

Read More

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

நம் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், நட்சத்திரப்படி ஒருவர் தன் பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியத்தையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம். ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும். பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ? 1) காலையில் சீக்கிரம் எழுந்து

Read More

இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

குன்றத்தூர் முருகன் நமக்கு மிகப் பெரிய பேறு ஒன்றை அளித்திருப்பதாகவும் அதை அடுத்த பதவில் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன் அல்லவா? இதோ அந்த பதிவு. கந்தசஷ்டியை முன்னிட்டு சமீபத்தில் குன்றத்தூருக்கு முருகன் கோவிலுக்கு சென்று வந்ததில் அங்கு விளக்குகள் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக தெரிந்தது. (கோவில்களுக்கு அரசு தனது கோட்டாவில் தரும் சொற்ப எண்ணை உண்மையில் எந்தக் கோவிலுக்கும் ஒரு வேளை விளக்கேற்ற கூட போதாது.)  முருகப் பெருமான் ஏன் நம்மை

Read More

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

இன்று நவம்பர் 12, 2013. செவ்வாய்க்கிழமை. ஐப்பசி சதயம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1028 வது ஜெயந்தி. ராஜ ராஜ சோழன் என்றால் பலருக்கு எப்போதோ பள்ளிக்கூட பாடத்தில் படித்த பெயர் நினைவுக்கு வரும். வேறு சிலருக்கு நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' படம் நினைவுக்கு வரும். மற்றும் சிலருக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னன் என்பது நினைவுக்கு

Read More

கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

இது வழக்கமான பதிவு அல்ல. கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம். இந்த ஒரு பதிவு பல பதிவுகளுக்கு சமம் (நீளத்தில்) என்றால் மிகையாகாது. இறைவனுக்கு தொண்டு செய்யவேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் தகுந்த நபர்களை இணைத்து அவன் அதை சிறப்பாக நடத்தி கொள்வான் என்பதை அனுபவப்பூர்வமாக அவன் நமக்கு மற்றுமொருமுறை உணர்த்திய நிகழ்வு இது. நம் தேவைகள் அனைத்தையும் அவன் அறிவான்... அவன் ஒவ்வொரு

Read More

பெருந்தன்மை என்னும் பந்து! – Monday Morning Spl 19

அது ஒரு புகழ்பெற்ற பாடசாலை. தூர தேசங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் அங்கு வந்து தங்கி கல்வி கற்றுக்கொண்டு செல்வார்கள். மிக மிக அரிய நூல்களின் ஓலைச் சுவடிகளின் களஞ்சியமாகவும் அந்த பாடசாலை விளங்கியது. அதை ஒரு சந்நியாசி   நிர்வகித்து வந்தார். அந்த பாடசாலைக்கு சந்நியாசியின் நண்பர்களில் ஒருவரான அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவர் பழமையான நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர். பாடசாலையில் பழங்கால, அரிய தகவல்களும் ஆரூடங்களும்

Read More

விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் ! Rightmantra Prayer Club

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு பெரிய ஞானி என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு தன் அனுபவத்திலிருந்து அவர் மிக மிகத் தெளிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். இந்த வார பிரார்த்தனை பதிவில் ஜாதகம் மற்றும் ஜோதிடர்கள் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் அவர் கூறியிருப்பதை பார்ப்போம். =========================================================== [highlight]எல்லாம் இறைவன் செயல்[/highlight] நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என்

Read More

யாமிருக்க பயமேன் ? அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்!

08/11/2013 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி. நாம் தவறவிடக்கூடாத மகத்துவம் வாய்ந்த நாட்களில் கந்த சஷ்டியும் ஒன்று. கந்த சஷ்டியன்று முருகனை தரிசிப்பது மிக மிக நன்மை தரக்கூடியது. பல வித பிரார்த்தனைகள் விரதங்கள் இருந்தும் தங்கள் பிரார்த்தனை நிறைவேறவில்லை என்று கருதுபவர்கள் கந்த சஷ்டி தினத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முருகப் பெருமானை தரிசிப்பவர்களுக்கு அவனது அருள் பரிபூரணமாக வெளிப்படும் தினங்களில் கந்த சஷ்டியும் ஒன்றாகும். கந்த சஷ்டி மொத்தம் ஆறு

Read More

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

தீபாவளியை முன்னிட்டு நாம் பல அறப்பணிகளை செய்ய திட்டமிட்டிருந்தாலும், அதில் முக்கியமாக நாம் அடிக்கடி செய்துவரும் கோ-சம்ரோக்ஷனம் தவறாமல் இடம்பெறவேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றார்போல சென்ற வாரம் திருவேற்காடு பசு மடத்திலிருந்து ஒரு நாள் நமக்கு அழைப்பு வந்தது. "தீவனம் கொஞ்சம் தான் இருக்கிறது. உடனடியாக தேவை" என்று சொன்னார்கள். இதையடுத்து மறுநாள் காலை சற்று முன்கூட்டியே கிளம்பி திருவேற்காடு சென்று, நாம் ரெகுலராக தீவனம் வாங்கும் கடையில் பணத்தை

Read More

ஒரு துரோகத்தின் முன்னால்…

இந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம். ஏன் பிரச்னைகள் என்பதையே சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்தை சந்திக்கின்றனர். உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில்

Read More

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. என் தங்கை அப்போது ஸ்ரீவில்லிப்புதூரில் இருந்தார். தங்கை வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர். தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு

Read More

வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுதிறன் வாய்ந்த குழந்தைகளின் காப்பகமான பிரேமவாசத்திலிருந்து நமக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. நம்மிடம் பேசிய அதன் பொறுப்பாளர் மும்தாஜ், பிரேமவாச குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் தேவைப்படுவதாகவும் ஏற்கனவே நாம் பள்ளி சீருடைகள் எடுத்து தந்திருந்தபடியால் நம்மிடம் மீண்டும் தீபாவளிக்கு ஆடைகள் கேட்டு நம் சுமையை கூட்ட விரும்பவில்லை என்றும் நம்மால் முடிந்த எண்ணிக்கையில் இரண்டு குழந்தைகளுக்கோ

Read More