Home > பிரார்த்தனை (Page 11)

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது. தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார். நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன். ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?” ‘‘அவலும் வெல்லமும் போதுமே!” ‘‘சரி பகவானே… அவலும்

Read More

இறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்?

இரண்டு பெரிய சிவபக்தர்கள் சிவனருள் வேண்டி ஒரு பெரிய மரத்தின் கீழ் அடிக்கடி தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் அவ்வழியே ஒரு ரிஷி செல்வதை கண்டனர். மிகப் பெரிய தவசீலரான அவர் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்க  செல்கிறார் என்று தெரிந்து கொள்கின்றனர். அவரின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, "முனி சிரேஷ்டரே எங்களுக்காக நீங்கள் ஒரு உபகாரம் செய்யவேண்டும்" என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டனர். "நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சிவபெருமானை நோக்கி தியானம்

Read More

பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை!!

கடும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரை தினமும் மதியம் ஒரு மணிநேரம் எழுந்து உட்காரவைத்து அவரது நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றுவர். இதன் பொருட்டு அவரை தினமும் ஒரு மணிநேரம் உட்கார வைப்பது வழக்கமாயிற்று. அவருக்கு பக்கத்தில் ஜன்னல் இருந்தது. அவர்கள் இருந்த அறையில் அந்த ஒரே ஒரு ஜன்னல் தான். மற்றவர் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் எழுந்து உட்கார முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர்

Read More

சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

கௌரவர் சபையில் நூற்றுக்கனக்கானோர் நடுவே திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சம்பவமும் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளும் நமக்கு உணர்த்தும் பாடங்கள், நீதிகள் அநேகம் அநேகம். தன்னை துகிலுரியப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் திரௌபதி துச்சாதனன் தன்னை நெருங்குவதற்கு முன்பு சபையில் அங்கும் இங்கும் ஓடுகிறாள். அங்குள்ள பெரியோர்களிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். துரியோதனின் கொடுங்கோன்மைக்கு முன்னர் எவருக்கும் தர்மத்தை எடுத்துரைக்க துணிவிருக்கவில்லை. "துவாரகாபுரி வாசா.....கிருஷ்ணா... காப்பாற்று.... அபயம்.... அபயம்..."  என்று அலறுகிறாள். அப்போதும்

Read More

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

ஒரு ஏழைப் பெண் தன் பகுதியில் இருந்த மளிகை கடை ஒன்றிற்கு சென்றார். அவள் முகத்தை பார்க்கும்போது அவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது. தனது கணவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தானும் தனது நான்கு குழந்தைகளும் பட்டினியால் வாடுவதாகவும் சில மளிகை பொருட்களை கடனாக கொடுத்து உதவும்படியும் கடைக்காரரிடம் கேட்கிறார். கடைக்காரர் அந்த பெண்ணை ஏளனமாக பார்த்து, "என்னது கடனா? உடனே இடத்தை காலி பண்ணும்மா... வந்துட்டா

Read More

அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

பிரார்த்தனை நிகழ்ந்தவுடன் நாம் அனைவரும் ஒரு உடனடி மாற்றத்தை அதிசயத்தை எதிர்பார்க்கிறோம். தவறில்லை. ஆனால்.... சரி கீழே நான் சொல்ற உண்மை சம்பவத்தை படிங்க. இதுல இருந்து ஏதாவது உங்களுக்கு புரியுதான்னு பாருங்க.... தோல்வியிலும் நன்றி அவர் அரசியல் கட்சி ஒன்றில் முன்னணி தலைவர். வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களில் நிச்சயம் அவரும் ஒருவர். ஒரு முறை பொதுத் தேர்தல் வந்தது. அவரும் அவர் கட்சியை சார்ந்தவர்களும் அவரது வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்தனர்.

Read More

வண்டியில தான் ஏறிட்டீரே… பாரத்தை இறக்கி வைக்க வேண்டியது தானே?

எந்த பிரச்னைக்காக எந்த சூழ்நிலையில் நாம பிரார்த்தனை செஞ்சாலும் நமது நம்பிக்கையில் மட்டும் குறையே இருக்ககூடாது. எந்தளவு நம்மோட நம்பிக்கை உறுதியா இருக்கோ அந்தளவு நம்ம பிரார்த்தனைக்கு விடை உறுதியா கிடைக்கும். டூ-வீலர்ல போறதுக்கு கேக்குற லிப்ட் கூட நம்பிக்கையோட கேக்குறவங்களுக்கு தான் கிடைக்குது. பிரார்த்தனை எவ்ளோ பெரிய விஷயம்? அவநம்பிக்கையோட செய்யலாமா? அரைகுறை நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் பயனற்றவை. ஆண்டவனை நம்புங்க. உங்கள் பாரத்தை அவன் மேல இறக்கி வைங்க. அதுக்கு

Read More

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

ஒவ்வொரு வாரமும் நமது பிரார்த்தனை கிளப்பில் இணைந்து பிரார்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளங்கள் இணைய இணைய பிரார்த்தனையின் வலிமை அதிகரிக்கும். உடலுக்கு எவ்வாறு இரத்தமோ அவ்வாறே மனதுக்கு பிரார்த்தனை என்கிறார் அன்னை தெரெசா. நிம்மதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு பிரார்த்தனை இன்றியமையாதது. உள்ளம் ஒன்றி உருகிச் செய்யப்படும் பிரார்த்தனையின் வலிமை அளப்பரியது. அதுவும் பிறர் நன்மைக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் உடனே இறைவனால் கவனிக்கப்படுகின்றன. "என்னைக் காத்து வருவது பிரார்த்தனையே; அதில்லாவிட்டால் நான்

Read More

“தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… எது சிறந்தது?” ஆதிசேஷன் உணர்த்திய உண்மை!

"தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா... இரண்டில் எது சிறந்தது?" என்று வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே ஒரு சமயம் வாக்குவாதம் மூண்டது. தவவலிமை தான் சிறந்தது என்று விஸ்வாமித்திரரும் இல்லை இல்லை கூட்டு பிரார்த்தனை தான் சிறந்தது என வசிஷ்டரும் வாதிட்டனர். "உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். அது ஒன்று தான் அவன் அருளை பெற ஒரே வழி" என்று விஸ்வாமித்திரர் வாதிட்டார். வசிஷ்டரோ "துறவிகளுக்கு

Read More

மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

நமது 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' சார்பாக நேற்று துவங்கிய கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் உள்ள நம் தள வாசகர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர். நேற்று பிரதோஷ தினம் என்பதால் பிரார்த்தனை நேரத்தில் (5.30 pm - 5.45 pm) சிவாலயங்களில் பிரார்த்தனை செய்ததாக நம்மை தொடர்பு கொண்ட பலர் கூறினர். நமது பிரார்த்தனை, மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில்

Read More

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

நமது தளம் துவக்கிய நாளிலிருந்து செயல்படுத்த நினைத்த ஒரு உன்னத விஷயம் இது. தற்போது அதற்கு அவசியம் வந்திருப்பதாக கருதுகிறேன். நம் தளம் சார்பாக உடனடியாக 'பிரார்த்தனை கிளப்' ஒன்று துவக்கப்படுகிறது. பிரார்த்தனை கிளப்பின் செயல்பாடு என்ன? எங்கே... எப்படி செய்யவேண்டும் ? என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிரார்த்தனையின் வலிமையை பற்றி அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பிரார்த்தனையின் வலிமை கற்பனைகளுக்கு அப்பாற்ப்பட்டது. அதன் ஆற்றலை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அது எப்பேர்ப்பட்ட ஒரு

Read More

இறைவனிடம் இவற்றை கேட்கலாமே..!

தினசரி பிரார்த்தனை நெஞ்சு நிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும்! நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும்!! வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும்! வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும்!! சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும்! ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும்!! நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்! தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும்!! பிறர் நிறைவில் பெருமிதமே தினம்

Read More