Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

print
த்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘காதலர் தினம்’ என்கிற வார்த்தையையே நம் இளைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். புகழ் பெற்ற தனியார் தொலைகாட்சி ஒன்று போணியாகாத ஒரு காதல் திரைப்படத்தை வாங்கி வைத்திருக்க, அதை ஒளிபரப்ப கண்டுபிடித்த சந்தை டெக்னிக் தான் இந்த ‘காதலர் தினம்’. ‘காதலர் தின சிறப்பு திரைப்படம்’ என்று அது அந்த விஷ விதையை தூவி வைத்து ஆரம்பித்து வைத்த வழக்கம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது. தமிழகத்தில் காதலர் தினம் ஊடுருவியது இப்படித் தான். அதற்கு முன்பு வரை நம் தமிழகத்துக்கு அது தெரியாது.

காதலர் தினத்தை எதிர்ப்பது பிற்போக்குத் தனமானது என்று நாமும் முன்பு கருதியதுண்டு. ஆனால் இன்று காதல் என்கிற பெயரில் காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்களை பார்க்கும்போதும், செய்திதாள்களில் படிக்கும்போதும் அதை எதிர்ப்போர் கூறுவது எந்தளவு உண்மை என்று தான்  தோன்றுகிறது.

True love vs Fake love

‘காதலர் தினம்’ என்றாலே அன்று வலுக்கட்டாயமாக எவருக்கேனும் ப்ரோபோஸ் செய்வது அல்லது ப்ரொபோசலை ஏற்றுக்கொள்வது என்ற வாடிக்கை, நம் இளைய தலைமுறையினர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. இந்த மாயையில் சிக்குண்டு ஆராய்ந்து பாராமல் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை. திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அல்லவா? அதை இப்படி ஆராயாமல் கைகொள்ளலாமா?

ஆராயாமல் காதலித்து, மணமுடித்து, திருமண வாழ்க்கையில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டு ஒற்றை ஆளாக நிற்க நேர்ந்தால், அந்த பெண்ணிற்கு வாழ்க்கை தர, மறுமணம் செய்துகொள்ள, எத்தனை பேர் இங்கே முன்வருவார்கள்? ஆழமாக யோசிக்கவேண்டிய விஷயம் இது. எனவே நமது கலாச்சாரத்திற்கு ‘காதலர் தினம்’ ஒத்துவராத ஒன்று.

நேற்று மாலை நாம் வீடு திரும்பும் வழியில் ஒரு அமைப்பு ஒட்டியிருந்த காதலர் தின எதிர்ப்பு சுவொரொட்டி ஒன்றை பார்க்க நேர்ந்தது. சற்று சூடாக இருந்தாலும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காதல் என்ற போர்வையில் கற்பு கள்வர்களிடம் வாழ்க்கையை பறிகொடுத்த பெண்களுக்கு தெரியும் அந்த உண்மை.

ஏமாற்றப்படும் வரை எங்கள் காதல் தெய்வீகமானது என்று தான் பெண்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

காதல் என்பதே கூடாது என்பதல்ல நம் வாதம். காதல் என்கிற போர்வையில் நடக்கும் கூத்துக்கள் குறிப்பாக காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்கள் கூடாது என்பதே நம் கருத்து.

உங்கள் காதல் கைகூடவேண்டுமா? அதை நிறைவேற்றி வைக்கும்படி இறைவனிடம் கேளுங்கள். அது உண்மையானது என்றால் – உங்களுக்கு நன்மை தருவது என்றால் – நிச்சயம் இறைவன் நிறைவேற்றி வைப்பான். எந்தக் கடவுளும் (உண்மையான) காதலுக்கு எதிரி அல்ல.

காதலர் தினம் குறித்து நாம் படித்த நெத்தியடி கட்டுரை ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். உங்களையும் கவரும் என்று நம்புகிறோம்.

===================================================

காதலர் தினம் – இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

‘காதலர் தினம்’ என்ற பெயரில் இன்று, மனித வாழ்க்கையில் இளம் பருவத்தில் ஏற்படும் இன்பகரமான புனிதமான அனுபவத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.

காதலின் புனிதத்துவத்தை பாதுகாப்பதற்காக காதலர் தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல்யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று
நினைவுகூரப்படுகிறது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என்பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மையான காதல்.

நள தமயந்தி, சாவித்திரி சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம்.

இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது.

காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

===================================================
Also Check :
காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

===================================================

[END]

3 thoughts on “காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

  1. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு நறுக் பதிவுக்கு மனமார்ந்த நன்றி சுந்தர். காதலர் தினம் என்கிற பெயரில் நடக்கும் வணிகக்கூத்துக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு கொடுப்பதற்கும் அல்லது அந்த மாயைக்கு அடிமையாவதற்கும் இன்று நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவையெல்லாம் வெறும் களியாட்டம்தான், காதல் அல்ல. They want only Entertainment and not Enlightenment. என்ன செய்வது, எல்லாம் காலத்தின் கோலம். உண்மையிலேயே இவர்களையெல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

  2. அன்பு தம்பி
    நல்ல பதிவு சகோதரா…நானும் இந்த களியாட்டங்களைக் கண்டு மனம் வெம்பி இருக்கிறேன். நேரம் பொன்னானது …பொக்கிஷமான நேரத்தை எத்தனையோ ஆக்க பூர்வமான வழிகளில் செலவிட வழி இருக்கும் பொது இதற்கென ஒரு நாள் இளைஞர்கள் தங்கள் ஒரு நாளை கழிப்பது வேதனையாக இருக்கிறது….ஆனால்..இத்தகைய நாட்களைக் கொண்டாடாத அந்நாளைய காதலே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது….திரு விழா கொண்டாடும் இந்நாளைய காதல் எல்லாம் தற்கொலையில் தான் முடிகிறது….எல்லாம் இறைவன் செயல்…அவன் ஒருவனால்தான் இதையும் நடத்த முடியும் இதை மாற்றவும் முடியும்… 🙁

  3. நமது உயர்ந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் சீர்குலைக்கும் இந்த காதலர் தினத்தை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்.

    இந்த அநாகரீக தினத்தன்று படிக்கும் பிள்ளைகளின் சிந்தனைகள் சீரழிக்கப்படுகிறது.

    -மனோகர்

Leave a Reply to Keeran Nalina Cancel reply

Your email address will not be published. Required fields are marked *