Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club

வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club

print
திருடர்கள் நள்ளிரவில் ஒரு வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் எதிர்பார்த்த எதுவும் அங்கில்லை. வீட்டைத் துருவித் துருவித் தேடினர். ஒரு மூலையில்  ஒரு சேவலைக் கண்டார்கள். திருடர்கள் அச்சேவலை மட்டுமே எடுத்துச் சென்றனர். தங்கள் வீட்டிற்குப் போனவுடன் சேவலைக் கொல்ல முயன்றனர்.

DSC00570

சேவல் அவர்களைப் பார்த்து, ‘‘ஐயா, என்னைக் கொல்லாதீர். நான் மனிதருக்கு மிகுந்த பயன் அளிப்பேன்; அதிகாலையில் கூவி எழுப்பி விடுபவன்  நான்தான்’’ என்று கூறிக் கெஞ்சியது. அரக்க குணம் மிகுந்த திருடர்கள் சேவலின் வேண்டுகோளைப் புறக்கணித்தனர். ‘‘சேவலே! நீ கூறும் காரணத்திற்காகவே நாங்கள் உன்னைக் கொல் லப் போகிறோம். நீ அதிகாலையில் மாந்தரை எழுப்புதல் எங்கள் திருட்டுத் தொழிலுக்குப் பெரிய இடைஞ்சல் என்பதை அறிந்துகொள்’’ என்று  கூறிக்கொண்டே சேவலின் தலையைத் திருகினர்.

மேலோர் பொன்போல் போற்றும் நற்குணத்தை, கீழோர் இகழ்வர். தீயோர் துன்புறுத்தும்போது மன்றாடினால் பயன் இல்லை. கெஞ்சக் கெஞ்ச மென் மேலும் துன்புறுத்துவர்; தூயவரைத் தீயவரெனக் கருதுவர். பொல்லாதவர் நடுவே நல்லவர் வாழ முடியாது. பாவமும் கொடுமையும் ஆட்சி நடத் தும்போது நல்லவர் கலக்கமின்றி வாழ இயலாது. தீயோர் நல்லவர்க்குப் பகைவர் ஆவார்கள். நல்லவர் அமைதியுடன் வாழ வேண்டுமானால் பொல்லாதவர்களின் பார்வை படாத இடத்திற்குப் போக வேண்டும். வாழ்க்கையில் ஏற்பட்ட அவலங்களுக்குத் தன்னைத்தானே நொந்துகொண்டிருப்பவர்கள் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  நம்முடைய இன்றைய நிலைக்கு நாம் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நம்முடைய கடந்த காலமே நம்மை இந்த நிலைக்குக் கொண்டு  வந்திருக்கிறது. இன்று நாம் நிகழ்காலத்தைப் பயன்படுத்தும் விதமே நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எதிர்காலம் இன்னமும் நம் கையில்தான்  இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். நிகழ்காலத்தைக் கருத்தோடு செலவழித்தாலே போதும். ஆதலால் நம் துரதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து போக வேண்டாம். வாழ்க்கையின் உண்மைகளை நேருக்கு நேர் சந்திப்போம். தைரியமாகச் சந்திப்போம். நம் வாழ்க்கைக்கு நாமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நம்  எண்ணங்கள், வாயிலிருந்து வெளிவரும் சொந்தங்கள் மற்றும் செயல்கள் யாவும் நம் எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்பதை மறக்க வேண்டாம்.

இவைதான் வாழ்க்கையின் மீது நாம் கொண்டிருக்கும் நம் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர வல்லவை. இன்றைய நிலைமையைக்கூட மாற்றிக்கொள்ளக்கூடிய வலிமை நம்மிடமே இருக்கிறது. விதியின் கையில் நாம் பிணைக் கைதியாக இருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொண்டு, மன உறுதியுடன் நடந்து கொண்டால், என்ன தடங்கல் வந்தாலும் முறியடித்து முன்னேறினால், விதியை வலிமையிழக்கச் செய்ய முடியும். அத்துடனும்கூட, கடவுளிடம் சரணாகதி அடைந்து விட்டால் போதும், நிலைமை மேலும் எளிதாகி  விடும். விதி எனும் சுற்றிக்கொண்டே இருக்கும் சக்கரத்தின் பாதிப்பிலிருந்து அந்தப் புனிதனின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவோம்.  (நன்றி : தினகரன் நாளிதழ்)

========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு.முல்லைவனம்.

திரு.முல்லைவனம் – நமது பூமியின் பால் அக்கறை கொண்ட சுற்றுச் சூழல் ஆர்வலர், பசுமைக் காவலர். சென்னையில் மட்டும் இதுவரை மூன்று லட்சம் மரங்களை நட்டு அதை பராமரித்து வருகிறார். ‘பசுமைக் கலாம்’ திட்டத்துக்கு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக அளித்திருக்கிறார். இந்தியா முழுதும் இவரது TREE BANK சார்பாக 20 லட்சம் மரங்களை இதுவரை நட்டிருக்கிறார்கள். தன்னைத் தேடி வருபவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் தந்து அவர்களையும் சமூகக் கடமையில் இணைத்துக்கொள்ளும் பசுமை மனிதர். மதுப் பழக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்துவருபவர்.

 நமது 2012 ஆம் ஆண்டு பாரதி விழாவில் திரு.முல்லைவனம் உரையாற்றும் காட்சி

நமது 2012 ஆம் ஆண்டு பாரதி விழாவில் திரு.முல்லைவனம் உரையாற்றும் காட்சி

”கண் தானம், ரத்த தானம், உறுப்பு தானம், அன்ன தானம் என இப்படி எத்தனையோ தானங்கள் இருக்கின்றன. ஆனால், பூமிக்குத் தானமாக நாம் எதைக் கொடுத்தோம்? இந்தச் சிந்தனையில் உதித்ததுதான் மர வங்கி. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஐந்து மரங்கள் நட்டால் போதும். அது இந்த உலகத்துக்கே செய்யும் தானமாகும்!” என்கிறார் முல்லைவனம்.

மரங்கள் குறைந்துவரும் நிலையில் நம் அடுத்த தலைமுறை எப்படி வாழப்போகிறது? பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மரங்கள் தினமும் லட்சக்கணக்கில் நாகரீகத்தின் தேவைகளுக்கு வெட்டப்படும் சூழ்நிலையில் அடுத்த தலைமுறையினர் எதை சுவாசிக்கப்போகிறார்கள் என்று கவலைக்கொண்டு அதற்காக போராடி வருபவர் இவர்.

(இந்த ஆண்டு பாரதி விழாவில்)
(இந்த ஆண்டு பாரதி விழாவில்)

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நம் தளம் சார்பாக நடைபெற்ற பாரதி விழாவில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாரதி விழாவிலும் கலந்துகொண்டு வந்திருந்தவர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தார். நம் இனிய நண்பர். தன்னலம் கருதா உத்தமர் திரு.முல்லைவனம். நமது பிரார்த்தனை கிளப்பிற்கு இந்த வாரம் இவர் தலைமை தாங்குவதை பெருமையாக கருதுகிறோம்.

நமது வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்க ஒப்புக்கொண்டமைக்கு திரு.முல்லைவனம் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

நம்மை சுற்றி இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதே நமக்கு ஒரு வகையில் ஆறுதல் தான். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி.

(சமீபத்தில் விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டை முன்னிட்டு ராமகிருஷ்ண மடம் கௌரவித்த 800 பேரில் இவரும் ஒருவர். நிகழ்ச்சியில் இவர் அருகே தான் அமர்ந்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது!)

========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா…

இந்த வார பிரார்த்தனைக்காக விண்ணப்பித்திருக்கும் இருவரும் பல ஆண்டுகளாக  எம் நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது இக்கட்டான பல தருணங்களில் ஆறுதலாக இருந்து உதவியிருக்கிறார்கள். துயர் துடைத்திருக்கிரார்கள். எந்த பிரதிபலனும் எதிர்பாராதொரு நட்பை நம் மீது கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் சூழ்நிலையையும் பிரச்னையையும் அறிந்து, நாம் தான் அவர்களது கோரிக்கைகளை நமது பிரார்த்தனை கிளப்பிற்கு மனு செய்யும்படி கேட்டுக்கொண்டோம். அதையடுத்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பியிருக்கிறார்கள்.

அவர்கள் வேண்டுதல் யாவும் நிறைவேறி சந்தோஷமாக சுபிட்சமாக வாழவேண்டும்.

============================================================
வேலை கிடைக்க வேண்டும்… கடன் தீரவேண்டும்!

நண்பர்களே,

என் பெயர்  ஜெகன். துபாயில் மின் பொறியாளராக பணியாற்றிவிட்டு சில வருடங்களுக்கு முன்னர் தான் தமிழகம் திரும்பினேன். இங்கு வந்ததும் திருமணமாகி இறைவன் ஆசியில் ஒரு குழந்தை உண்டு. திருமணத்திற்கு சுந்தர் அவர்கள் கூட வந்திருந்தார்.

தற்போது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு சென்று வேலை செய்ய முடிவுசெய்திருக்கிறேன். என் குடும்ப சூழ்நிலைக்கு நான் வெளிநாடு சென்று வேலை செய்து பொருளீட்டினால் தான் எனக்கிருக்கும் பல்வேறு கடன்களை அடைக்க முடியும்.

எனவே அதற்காக முயற்சித்து வருகிறேன். என் முயற்சிகள் வெற்றியடைந்து நல்லதொரு வேலை கிடைக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– ஜெகன்,
திருவொற்றியூர்.

============================================================

அடுத்தடுத்து கருச்சிதைவு….. கடவுள் கண் திறக்க வேண்டும்……

சுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் விஜய் ஆனந்த் (38). தூத்துக்குடியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. என் மனைவி ஒரு பதிவு பெற்ற ஆங்கில மருத்துவர்.  என் மனைவிக்கு கரு நிற்காமல் தொடர்ந்து கலைந்துவிடுகிறது. நான் சற்று தைரியமாக இருந்தாலும் என் மனைவி இதனால் சற்று பாதிக்கப்பட்டுள்ளார்.

அவளுக்கு கரு நல்லமுறையில் தங்கி, ஒரு ஆரோக்கியமான சிசு ஜனிக்கவும், எங்கள் குடும்பம் தழைக்கவும், வம்சம் செழிக்கவும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,
விஜய ஆனந்த்,
தூத்துக்குடி
============================================================

இந்த வார பொது பிரார்த்தனை

பசுமை செழிக்க வேண்டும்..!

உணவு பயிர்களை உற்பத்தி செய்த விளை நிலங்கள் அனைத்தும் தற்போது பிளாட்டுக்களாக மாறிவருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் விளைநிலங்களில் சுமார் 60 சதம் வரை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறியிருக்கும் நிலையில் உணவு உற்பத்திக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தவிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றன.  இந்தியாவின் மூலாதாரத் தொழிலான உழவுத் தொழிலை அழித்து, மற்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்து வரும் தொழில்களால் நம் நாட்டு வளங்கள் அயல்நாட்டு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன.

ஒரு நாடு நல்ல நாடாக இருக்க வேண் டும் எனில், நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும். சுதந்திரம் அடைவதற்கு முன், நமது நாட்டில் 27 சதவீத அளவுக்கு காடுகள் இருந்தன. தற்போது வெறும் 10 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. காடுகளின் பரப்பளவு குறைய, குறைய மழை வளம் குறைகிறது; பூமி வெப்பம் அடைகிறது; நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. நல்ல காற்று, மழை வளம் கிடைக்க, நாம் அதிக அளவு மரக்கன்றுகளை நட வேண்டும்.

சொந்த வீடு இருப்பவர்களும், அதற்குரிய சூழ்நிலை அமையப்பெற்றவர்களும் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று உறுதி மேற்கொள்வோம். அதே போல பசுமையை அழிக்க நாம் எள்ளளவும் துணை போகக்கூடாது.

பசுமை செழிக்கவும், மரங்கள் பெருகிடவும், விளைச்சல் நிலங்கள் விலை நிலங்களாக மாறும் போக்கு நிறுத்தப்படவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

இல்லையெனில், எதிர்கால சந்ததியினர் சுவாசிக்கும் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவர்.

==========================================================

நண்பர் திரு.ஜெகன் அவர்களுக்கு அயல்நாட்டில் நல்ல வேலை கிடைத்து தனது கடன்கள் யாவற்றையும் அவர அடைத்து நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழவும், நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் மனைவிக்கு அடிக்கடி நிகழும் கருச்சிதைவு நின்று, குழந்தை தங்கவும் அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும், அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவும், விவசாய நிலங்கள் யாவும் விலை நிலங்களாக மாறும் அவலம் ஒரு முடிவுக்கு வரவும், நாடெங்கும் மரங்கள் பெருகி பசுமை செழிக்கவும் மழை குறைவில்லாது பொழியவும் இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 5,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த சமூக சேவகர் திரு.தீனதயாளன்

[END]

8 thoughts on “வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club

  1. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு முல்லை வனம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டை முன்னிட்டு ராமகிருஷ்ண மடம் கௌரவித்த 800 பேரில் இவரும் ஒருவர் என்பதை கேட்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இன்றய சூழலில் அவரை போன்ற ஒருவர் நம் நாட்டுக்கு கிடைத்தது நம் செய்த புண்ணியமே ஆகும். பசுமை என்ற சொல்லை கேட்ட உடனே நம்மை ஒரு உற்சாகம் தொற்றி கொள்கின்றது.

    மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்… மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..

    கதை மிகவும் அருமை. துஷ்டனை கண்டால் தூர போ என்று சும்மாவா சொன்னார்கள்.

    நண்பர் திரு.ஜெகன் அவர்களுக்கு அயல்நாட்டில் நல்ல வேலை கிடைத்து தனது கடன்கள் யாவற்றையும் அவர அடைத்து நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழவும், நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் மனைவிக்கு அடிக்கடி நிகழும் கருச்சிதைவு நின்று, குழந்தை தங்கவும் அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும், அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவும், விவசாய நிலங்கள் யாவும் விலை நிலங்களாக மாறும் அவலம் ஒரு முடிவுக்கு வரவும், நாடெங்கும் மரங்கள் பெருகி பசுமை செழிக்கவும் மழை குறைவில்லாது பொழியவும் இறைவனை பிரார்த்திப்போம்

  2. ///பொல்லாதவர் நடுவே நல்லவர் வாழ முடியாது. பாவமும் கொடுமையும் ஆட்சி நடத் தும்போது நல்லவர் கலக்கமின்றி வாழ இயலாது. தீயோர் நல்லவர்க்குப் பகைவர் ஆவார்கள். நல்லவர் அமைதியுடன் வாழ வேண்டுமானால் பொல்லாதவர்களின் பார்வை படாத இடத்திற்குப் போக வேண்டும். -///நம்முடைய இன்றைய நிலைக்கு நாம் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்… உண்மை என நினைக்கின்றேன் ..மேலும் இந்த வார பிரார்த்தனை கோரிய அன்பர் ..திரு,ஜெகன் அவர்களுக்கு அயல்நாட்டில் நல்ல வேலை கிடைத்து தனது கடன்கள் யாவற்றையும் அவர அடைத்து நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழவும், நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் மனைவிக்கு அடிக்கடி நிகழும் கருச்சிதைவு நின்று, குழந்தை தங்கவும் அவர்களுக்கு ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும், அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவும், விவசாய நிலங்கள் யாவும் விலை நிலங்களாக மாறும் அவலம் ஒரு முடிவுக்கு வரவும், நாடெங்கும் மரங்கள் பெருகி பசுமை செழிக்கவும் மழை குறைவில்லாது பொழியவும் இறைவனை பிரார்த்திப்போம். –

  3. Dear சுந்தர்ஜி
    Story is fine. My hearty congrats to mr.mullaivanam.
    Ii will pray for mr jegan and vijay.

    Ii
    Thanks and ரேகர்ட்ஸ்
    Uma

  4. குரங்கணில்முட்டம் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்[ வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் ]..இத்தல இளையாளம்மன்[இறையார் வளையம்மை] யையும் வழிபட்டால் கருசிதைவு அண்டாது ….காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ. [ 9944725284 ]…..
    ………………………………………………………………………………………………………..திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் கோயில்.திருக்கருகாவூர் கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கினால், கரு உண்டாவதுடன், கலையாமல் நிலைக்கும், சுகப்பிரசவம் உண்டாகும்’ என்பது ஐதீகம். `நித்துருவர்-வேதிகை தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இருவரும் கர்ப்பபுரீசுவரர்-கற்பகராட்சாம்பிகை சமேதரை பணிந்து தொழ, வேதிகை கருவுற்றாள்.அப்போது முனிவர் ஊர்த்துவபாதர், வீடு தேடிவந்து பிச்சை கேட்டார். ஆனால் வேதிகையால், உடனடியாக தானம் தரஇயலவில்லை. இதனால் கோபமுற்ற ஊர்த்துவபாதர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதையடுத்து கர்ப்பரட்சாம்பிகையிடம் சென்று கண்ணீர் விட்டாள், வேதிகை.
    அப்போது கர்ப்பரட்சாம்பிகையே நேரில் தோன்றி, `கலைந்த கருவை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து, குழந்தை உருவாகும் நாள்வரை காத்தருளி, `நைந்துருவன்’ என்று பெயர்சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள்’ …அன்று முதல் இன்று வரை திருக்கருகாவூர் வந்து வழிபடுவோர் குழந்தை பாக்கியம் நிச்சயம் …கரு உண்டாவதுடன், கலையாமல் நிலைக்கும், சுகப்பிரசவம் உண்டாகும்[தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இருந்து 6 கி.மீ.] 8870058269…………….

  5. ருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;
    கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
    பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்;
    பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
    ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்;
    உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
    கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்
    ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்;
    வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற
    பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்;
    பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;
    தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
    தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற
    கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்
    ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;
    பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
    கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன்
    ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
    ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான்
    ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
    காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண்
    திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
    அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
    ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
    குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
    கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
    கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
    ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு
    ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்;
    உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
    அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)
    அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம்
    அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;
    கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்;
    மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்;
    சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன்
    ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்;
    மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று
    ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்
    காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண்
    ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்;
    ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர்
    திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை
    நாசன், என் சிந்தையான் ஆம்;
    உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்;
    உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக்
    கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
    சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
    படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
    நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
    கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
    கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
    கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.

    விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
    விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
    பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்;
    பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
    எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
    என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
    கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
    இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
    செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
    குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
    அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
    இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
    கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

    ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
    அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
    இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
    இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
    அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
    ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
    கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
    கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
    [கரு கலையாமல் இருக்க தினமும் படித்து வரவும் ]

  6. கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சேறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது சார பரமேஸ்வரர் ஆலயம்.நாச்சியார்கோவிலுக்கு தெற்கே 5 கி.மீ…[ 0435246 8001 ]…இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும். (ரிண- கடன், விமோசனம் – நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் – ரிண விமோசன லிங்கேஸ்வரர்) …..வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும். ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். …..இத்தல பைரவர் வர பிரசாதி …..

    விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
    தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
    உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’

    பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
    கூரி தாய அறிவுகை கூடிடும்
    சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
    நாரி பாகன்றன் நாம நவிலவே.

    என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
    மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
    செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
    மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

    பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
    இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
    சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
    மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

    மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
    ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
    சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
    ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.

    எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
    துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
    திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
    அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

    தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
    ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
    செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
    அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

    வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
    ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
    சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
    அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.

    குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
    துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
    இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
    அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

    பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
    விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
    திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
    அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

    பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
    வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
    திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
    கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே

    [தினமும் மும்முறை படித்து வரவும் ….]

  7. கடன் நீங்கவும் ,கரு சிதைவு அகலவும் ,குழந்தை பாக்கியம் கிட்டவும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சென்று பிரம்மஹதி தோசம் நிவர்த்தி பூஜா செய்து விடவும் [50 ரூபாய் அல்லது 500 ரூபாய் செலுத்தினால் தினமும் பிரம்ம ஹதி தோசம் நிவர்த்தி பூஜா செய்வர் ….இப் பூஜா தினமும் காலை 8 மணி ,9 மணி,மற்றும் 10 மணிக்கு மட்டுமே நடைபெறும் …..9445765270

  8. We will sincerely pray to our Guru for both of them ..and also for Mullai Vanam greening the Mother Earth… Even in his name there is Forest VANAM,,,May God Bless all of them

Leave a Reply to N.CHANDRASEKARAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *