Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

print
சென்ற ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அளிக்கப்பட்ட பதிவு. இது. சிற்சில திருத்தங்களை செய்து மீண்டும் தந்திருக்கிறோம். அவசியம் படியுங்கள்… ஷேர் செய்யுங்கள்.

ரும் வியாழக்கிழமையன்று 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. உலகையே இன்று இணைக்கும் மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி என்பதையும் தாண்டி ஒரு அத்தியாவசியம் என்று ஆகிவிட்டது. ஆங்கில தேதிப்படியே இன்று பெரும்பாலான வர்த்தக, அலுவலக, தொழில் சார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சம்பளம் பெறுவது, பில்களை செட்டில் செய்வது உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத் தேதிப்படியே நடக்கின்றது. எனவே விரும்பியோ விரும்பாமலோ ஆங்கிலமும் ஆங்கில தேதி முறைகளும் நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன.

New year

உலகம் முழுதும் கொண்டாடும் ஒரு நிகழ்வை நாமும் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், அதை எப்படி வரவேற்கிறோம்? அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். சமீபகாலங்களாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் விடிய விடிய பிரதான ஆலயங்களை திறந்து வைத்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். அர்ச்சனைகளை பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர். அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு முரணானது.

ஆனால், புத்தாண்டு அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசு இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறது. இந்த பழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு மெளனமாக உள்ளனர். (அவர்களை சொல்லி குற்றமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்ககளின் போது தான் கோவிலில் வேலை செய்வதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று கருதும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்!)

பக்தர்கள் உண்டியலில் போடும் பணம் முழுதும் அந்தந்த கோவில்களின் வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிடப்படும் என்றால் ஒருவேளை இந்த நள்ளிரவு தரிசனத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால நடப்பது அதற்கு நேரெதிர். (தமிழகத்தில்).

Lampநம் வாசகர் ஒருவர் சமீபத்தில் நம்மிடம் பேசும்போது, புத்தாண்டு அன்று கோவில்களுக்கு சென்று நள்ளிரவில் இறைவனை தரிசிக்கலாமா? என்று கேட்டார். இது பற்றி ஒரு பதிவே அளிக்கவிருக்கிறோம். அதில் விரிவாக விளக்குவதாக கூறியிருந்தோம்.

புத்தாண்டு பிறக்கும்போது கோவிலில் இருப்பதையும் இறைவனை தரிசிப்பதையும் சிலர் மிகவும் விரும்புகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகின்றனர்.

நட்சத்திர ஓட்டல்களில் ஆடிக்கொண்டும், மது அருந்திக்கொண்டும், சாலைகளில் ஹாய்…ஹூய்… என்று கத்திக்கொண்டே தாறுமாறாக டூ-வீலர் ஒட்டிக்கொண்டு (இதனால் விபத்துக்கள் தான் ஏற்படுகின்றன) புத்தாண்டை வரவேற்பதை விட கோவிலில் அந்த நேரம் இருந்து இறைவனை தரிசிப்பது உண்மையில் 1000 மடங்கு மேலானது. எனவே அவர்கள் வழக்கத்தையோ நம்பிக்கையோ நாம் குறைகூறப்போவதில்லை.

அதே சமயம், சிலர் மனநிலை என்னவாக இருக்கிறது என்றால் : “நமது பாரம்பரிய வழக்கத்திற்கு மாறாக, கோவில்கள்  திறக்கப்படும் அந்த நேரத்தில் நாம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பவில்லை. நமது முன்னோர்கள் போற்றி வந்த வழிமுறைகளுக்கு ஊறு நேராமல், அதே சமயம் உலகமே கொண்டாடும் ஆங்கில புத்தாண்டை நான் வரவேற்பது எப்படி? கொண்டாடுவது எப்படி?” என்று கேட்டால்… இதோ அதற்கு விடை!!

புத்தாண்டு அன்று இரவு சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லாதவர்கள், புத்தாண்டு பிறக்கும் நேரம் இதை செய்யலாம்.

புத்தாண்டு பிறக்கும் நேரம் என்ன செய்யலாம் ?

* நிச்சயம் டீ.வி.யை. ஆஃப் செய்யுங்கள். முடிந்தால் நாதஸ்வரம், மிருதங்கம், வீணை, வயலின் முதலான மங்கள வாத்தியங்கள் உங்கள் வீட்டில் அந்நேரம் ஒலிக்கட்டும். (டி.வி.டி.பிளேயரில் இதை ஒலிக்கவிடலாம்).

* புத்தாண்டு பிறக்கும் நேரம், உங்கள் வீட்டில் சுவாமிக்கு படத்திற்கு முன்பு ஒரு ஜோடி விளக்கை ஏற்றி வையுங்கள். ஊதுபத்தியும் ஏற்றினால் .நலம்.

* உங்களுக்கு பிடித்த சுவாமி பாடலை, ஸ்லோகத்தை, ஸ்தோத்திரத்தை படியுங்கள்.

* உங்கள் வீட்டில் உள்ள அனைவருடனும் அந்த நேரம் – ஒரு 5 நிமிடம் – உங்கள் குடும்ப நலனும் ஒற்றுமையும் சுபிக்ஷமும் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். கூடவே நல்லோர் அனைவருக்கும் இந்த புத்தாண்டு இனியமையாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

* உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பை கொடுத்து, “இந்த வருடம் முழுக்க இனிப்பான செய்திகளை நான் உங்களுக்கு சொல்வேன். நீங்களும் எனக்கு சொல்லுங்கள்” என்று கூறுங்கள்.

* புது வருடத்தில் நீங்கள் அடையப்போகும் லட்சியத்தை பற்றி கூறி, அவர்கள் ஒத்துழைப்பையும் ஆசியையும் வேண்டுங்கள்.

hanuman_* அப்பார்ட்மெண்ட் மற்றும் ஃபிளாட்களில் வசிப்பவர்கள் அவர்கள் காம்பவுண்டுக்குள் பொதுவான ஒரு இடத்தில் ஒரு டேபிளோ பெஞ்சோ போட்டு, அதில் அகல் விளக்குகளை வரிசையாக வைத்து உங்கள் வீட்டு குழந்தைகளுடன் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை அழைத்து புத்தாண்டு பிறக்கும் நேரம் அவர்களை விளக்கேற்ற சொல்லி, பக்தி பாடல்கள், ஸ்லோகங்கள் பாடலாம். (இதை நம் வாசகர்களில் எவரேனும் ஒருவர் செய்துவிட்டு நம்மிடம் தெரிவித்தால் கூட போதும். மிக்க மகிழ்ச்சியடைவோம்!)

இதெல்லாம் செய்து முடிக்க அதிக பட்சம் 20 நிமிடங்கள் ஆகும். வருடத்தின் துவக்க நாளன்று துவக்க நேரத்தில் ஒரு 20 நிமிடத்தை உங்களால் ஒதுக்க முடியாதா?

அனுமத் ஜெயந்தியோடு புத்தாண்டு பிறக்கிறது!

புத்தாண்டை கொண்டாட எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அன்று நம் அஞ்சனை மைந்தனின் பிறந்த நாள். ஆம் 1/1/2014 புதன்கிழமை அனுமத் ஜெயந்தி.

மற்றபடி புத்தாண்டு அன்று செய்யவேண்டியவை :

* வீட்டில் பெற்றோர் மற்றும் மூத்தோரிடம் கால்களில் வீழ்ந்து ஆசி பெறவேண்டும்.

* ஏதேனும் ஒரு தொன்மையான ஆலயத்திற்கு சென்று இறைனை தரிசனம் செய்யுங்கள். மார்கழி மாதம் என்பதால் பல கோவில்கள் சீக்கிரம் திறந்துவிடுவார்கள். எனவே அதிகாலைசெல்வது சிறப்பு.

* உங்கள் வீட்டு பணியாளர்கள், மற்றும் உங்களுக்கு தெரிந்து சேவையில் ஈடுபடுகிறவர்களுக்கு பணமும், துணியும் கொடுங்கள்.

* அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளை செய்யலாம்.

Tirumala_Tirupati

இறைவனை தரிசித்தால் போதுமா?

புத்தாண்டு பிறக்கும் நேரம் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்தால் போதும். அந்த வருடம் முழுக்க நன்றாக இருக்கும். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று தயவு செய்து யாரும் கருதவேண்டாம். புத்தாண்டு பிறக்கும் நேரம் நீங்கள் ஆலயத்தில் இறைவனை தரிசித்தீர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.  நிச்சயம் அற்புதம் நடக்கும். நீங்கள் மனது வைத்தால். புத்தாண்டு பிறக்கும்போது இறைவனை நீங்கள் தரிசித்துவிட்டு வருவது நிச்சயம் ஒரு நல்ல ஆரம்பம் தான். ஆனால், வருடம் முழுக்க உங்களுக்கு இனிமையாக இருக்க நீங்கள் திட்டமிடுவதும் அதற்கு உழைப்பதும் அவசியம். புத்தாண்டு இறை தரிசனம் ஒரு நல்ல தொடக்கம். அவ்வளவே. மற்றபடி நீங்கள் தான் பயணத்தை தொடரவேண்டும்.

மற்றபடி புத்தாண்டு அன்று உங்களிடம் தீய பழக்கம் எதையேனும் விட்டுவிடுவதாக சபதம் எடுப்பதாக இருந்தால் அதை எடுத்து மனப்பூர்வமாக அதை கடைபிடியுங்கள். பொதுவாக புத்தாண்டு சபதம் என்றாலே பலர் புகைப்பதை விடுவதும், மது அருந்துவதை நிறுத்துவதும் என்றே நினைத்துகொண்டிருக்கிறார்கள். அல்ல. அல்ல.

நாம் நிறுத்தவேண்டிய நிறுத்தியே ஆகவேண்டிய தீய பழக்கங்கள் பல உள்ளன.

1) கோபம் 2) பொறாமை 3) அற்ப காரணங்களுக்காகவெல்லாம் பொய் பேசுவது (பொய்மையும் வாய்மை இடத்த..!) 4) சூரியன் உதித்த பின்பும் தூங்குவது 5) புறம் பேசுவது 6) திருட்டு டி.வி.டி.யில் சினிமா பார்ப்பது (சினிமா ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம்) 7) வாகனத்தை கண்மூடித்தனமாக ஓட்டுவது 8) எல்லாவற்றிலும் பர்பெக்ஷன் எதிர்பார்ப்பது (அது நமக்குத் தான் கெடுதி!) 9) க்ரெடிட் கார்டில் பொருள் வாங்குவது 10) கண்ட கண்ட நேரத்தில் உண்பது… etc.etc.,

– இவையெல்லாம் கூட நாம் விட்டே ஆகவேண்டிய தீய பழக்கங்கள் தான்.

நண்பர் பால்ஹனுமானின் தளத்தில் (balhanuman.wordpress.com) அமரர் சுஜாதா அவர்கள் இளைஞர்களுக்கு கூறிய பின்பற்றவேண்டிய பத்து கட்டளைகள் குறித்து சமீபத்தில் பதிவொன்றை பார்த்தோம். இந்த புத்தாண்டிலிருந்து நான் மேற்கொள்வேன் என்று இளைஞர்கள் மாத்திரமல்ல…. நாம் அனைவரும் கூட உறுதி எடுத்துக்கொள்ளலாம். பத்தும் முத்து என்றால் மிகையாகாது.

Writer Sujathaமுத்துக்கள் பத்து!

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்த தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய ஜனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்…!

==================================================================
இந்த புத்தாண்டிலிருந்து இந்த பதிவில் நாம் கூறியுள்ள விஷயங்களை நடைமுறைபடுத்தி பாருங்கள். முக்கியமாக புத்தாண்டு பிறக்கும் நேரம் விளக்கேற்றுவது. அடுத்த வருடம் இந்நேரம் வாழ்வில் பல படிகள் முன்னேறியிருப்பீர்கள்! சந்தேகமேயின்றி!!
==================================================================

அது சரி…. நமது புத்தாண்டு எப்படி என்று தானே கேட்கிறீர்கள்….?

அடுத்த பதிவில் அது பற்றி கூறுகிறோம். இந்த பதிவில் மேலும் விஷயங்களை திணிக்க விருப்பமில்லை.

==================================================================

பதிவை எடுத்தாளும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நமது பதிவுகள் அனைத்தும் கடுமையான உழைப்பில் விளைபவை என்பதை அறிவீர்கள். எடுத்தாளும் நண்பர்கள் அதை காப்பி & பேஸ்ட் 
செய்தால் தயை கூர்ந்து நம் தளத்தின் பெயரையும் பதிவின் லிங்கையும் கூடவே அளிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி அது முடியாது. நன்றி!

==================================================================

[END]

12 thoughts on “ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

  1. டியர் சுந்தர்ஜி

    Happy Morning. This article is superb.

    மிக பெரிய பயனுள்ள பதிவு. எல்லோரும் படித்து follow பண்ணினால் அதுவே உங்களுக்கு, உங்கள் தளத்திற்கு மாபெரும் வெற்றி. நீங்கள் கூறிய 10 points மிகவும் நன்றாக உள்ளது; Definitely on the eve of நியூ இயர், i will follow தி same

    எழுத்தாளர் சுஜாதாவின் ‘முத்துக்கள் பத்து’ பொட்டில் அடித்து போல் நச் என்று உள்ளது

    உங்கள் புத்தாண்டு பதிவிற்கு நன்றி கூறி கொள்கிறேன்.

    MY அட்வான்ஸ் நியூ இயர் WISHES டு யு அண்ட் ரைட் MANTRA READERS

    நன்றி
    உமா

  2. அன்பு சகோதரா சுந்தர்…அமர்க்களம் …..என்ன ஒரு சிந்தனை…என்ன ஒரு புதுமை….வாழ்க வளமுடன்….உங்கள் எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு மாபெரும் SALUTE …நீங்கள் சொன்ன அனைத்து கருத்துக்களும் கண்டிப்பாக கடை பிடிக்கவேண்டியவை …எளிதானதும் கூட….மற்றும் எனது மதிப்பிருக்குரிய எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் 10 வழி முறைகள் எவ்வளவு எளிதானவை…அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை….இன்றைய இளைய சமூகம் இதில் ஒன்றை கடைப் பிடித்தால் கூட போதுமே….மிக்க நன்றி சகோதரா….உங்களது புத்தாண்டு நல்ல முறையில் மலர்ந்திட என் வாழ்த்துக்கள்…உங்கள் எண்ணங்கள் அனைத்தும் சிறப்பாய் ஈடேற எனது வேண்டுதல்கள் …_/\_

  3. டியர் சுந்தர், இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய இடைவெளிக்கு மன்னிக்கவும். கம்ப்யூட்டர் பதிவில் நிதானமாக அமர்ந்து நீண்ட நாட்கள் ஆகின்றன.எனது தந்தையaரின் 100வது பிறந்த நாளினை முன்னிட்டு சில நிகழ்சிகளை செய்யவேண்டி இருந்ததினால் சற்று பிஸி.( நாரயணீயம் , ருத்ர ஜபம் , ஹோமம் , சாய் பஜன், விஷ்ணு சஹச்ர நாமம் , திருப்புகழ் அமுதம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ) தவிர நானே ஒன்பது நாட்கள் சுந்தர காண்ட பாராயணம் என்று தந்தையாரின் நினைவாகவும் , ஒரு நன்றி பாராட்டும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆண்டவனின் கருணையால் எல்லா நிகழ்சிகளும் நல்லபடியாக நடந்தேறின. இடையில் கணினியில் நெட்வொர்க் தகராறு . ரைட் மந்த்ரா சார்பில் உங்களை கண்டிப்பாக அழைத்திருக்க வேண்டும் . மன்னிக்கவும்.

    புது வருட கொண்டாட்டங்கள் பற்றிய இந்த பதிவு மிகவும் சிறப்பானது. ஒன்று மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசை. பல சபதங்கள் எடுத்துக்கொண்டு பாதியிலே விட்டுவிடாமல் ஒன்று அல்லது இரண்டு சின்ன நல்ல விஷயங்களை தெரிவு செய்து அதை முறையாக பின்பற்றினால் நலமாக இருக்கும் என்று நம்புகிறேன் . உதாரணமாக வாரத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று வழிபடுதல் , சற்று பொறுமை வளர்த்துக் கொள்ளுதல் etc . தொடர்ந்து வலையில் மற்றும் நேரிலும் தொடர்பு எல்லையில் இருப்போம். நமஸ்காரம் . மோகன்

    1. சார்…

      மீண்டும் வந்தமைக்கு மகிழ்ச்சி. கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

      பத்து விஷயங்களை பட்டியலிட்டால் தான் ஓரிரண்டையாவது விட முடியும். என்று கருதியே அவற்றை அளித்தேன்.

      – சுந்தர்

  4. சுந்தர்ஜி
    நம் தளம் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது.
    இந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக!

    நம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.
    இன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக!

    வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்!

  5. சுந்தர்ஜி,

    அருமையோ அருமை.

    எல்லோருக்கும் பயன்பட கூடிய பதிவு. பத்து முத்துக்களில் எந்த முத்தை எடுத்து கொண்டாலும் வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்பதில் ஐயமே இல்லை.

    நன்றி

  6. வரும் புத்தாண்டில் என்ன செய்யவேண்டும் எதனை செய்யகூடாது என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் நன்றிகள்..

  7. சுந்தர் ஜி அவர்களுக்கும் ,Right Mantra குடும்பத்தினர் அனைவருக்கும் ஆங்கில தின புத்தாண்டு வாழ்த்துக்கள் …

    புத்தாண்டு பதிவு அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.

    உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான்,ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.

    -மனோகர்

  8. சுந்தர் சார் வணக்கம்

    நம் தளம் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் –

    மிகவும் அருமையான பதிவு சார்..

    நன்றி

  9. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் –

    மிகவும் அருமையான பதிவு சார்..

    நன்றி

Leave a Reply to Dr.v. mohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *