Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

print
ந்த்ராலயத்திலே குடிகொண்டிருக்கும் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், தன்னை நம்பி சரணடைந்தால், இன்றும் கூப்பிட்ட குரலுக்கு இல்லந்தோறும் ஓடிவருகிறார் என்று கூறுவார்கள். இந்த வாரம், தனது பக்தை ஒருவர் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை பார்ப்போம். குருவின் பெருமை படிக்க சிறந்தது. இருவினையை நீக்க வல்லது.

நம் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களின் ஸ்ரீ ராகவேந்திர மகிமை 6 ஆம் பாகத்திலிருந்து…

காத்திருந்து அருள் புரியும் கருணைக்கடல் நீ குருராஜா!

1987- சென்னை ராயப்பேட்டையில் குடியிருந்த, திருமதி சீதாலக்ஷ்மி குடும்பத்தில் அன்று குதூகலம் பொங்கிப் பிரவாகித்தது.மந்த்ராலய மஹாபிரபு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் மீது மாறாதபக்தி கொண்ட குடும்பம் அது.  அன்று வந்திருந்த உத்தரவு கூட  அந்த மஹானின் அருட்கொடைதான் என்று திடமாக அந்தக் குடும்பமே நம்பியது.தமது ஒரே மகளுக்கு நல்ல இடத்தில், அதுவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து வேலைக்கான உத்தரவு வந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.உடல் நலமில்லாத கணவர் மாற்றல் செய்து கொள்ளமுடியாத தனியார் பள்ளி வேலை என்றிருந்த போது தன் மகளுக்கு வங்கியொன்றில் பணிக்கான உத்திரவு வந்ததில் திருமதி சீதாலக்ஷ்மிக்கு நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டது.மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. அதேபோல் பின்னால் நல்ல இடத்தில் வரனும் கிடைத்தது விட்டால் என்னைப் போன்ற பாக்யசாலி யாருமில்லை என்று தனக்குள்ளே நினைத்து மகிழ்ந்துகொண்டார்.

Sri Ragavendhra Swamyசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளஅந்த வங்கியிலிருந்து உத்திரவு வந்திருந்ததே தவிர, அதில் எந்த இடத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்கின்ற விபரம் தரப்படவில்லை.  பணிககுத் தேர்வு ஆகியுள்ளதற்கான அத்தாட்சி அது.

இன்னும் சில மாதங்களில் எந்தக் கிளையில் பணியில் சேரவேண்டும் என்பதைத் தெரியப்படுத்துகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.உத்திரவு வராத வரை இல்லாத பரபரப்பு, உத்திரவு வந்ததும் எந்த ஊரோ,எந்தக் கிளையோ என்கின்ற ஒருவித எதிர்பார்ப்பு நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருந்தது.பண்டிகைக்காகப் புத்தாடை வாங்கி வைத்திருந்தால், அந்தப் பண்டிகை வரும் வரை தினம் தினம் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் குழந்தையைப் போல, சீதாலக்ஷ்மியின் குடும்பத்தாரும் தினம் தினம் அந்த உத்தரவை ஸ்வாமியிடமும், ஸ்ரீகுருராஜாpடம் வைத்து வைத்து எடுத்துப் பார்த்தவாறிருந்தனர்.அதன்படி ஒரு சில மாதங்கள் கழித்து அவர்கள் வெகு ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்த கடிதம் அவர்கள் கைக்குக் கிடைத்தது.அதைப் பிரித்துப் பார்த்தபோது , ஏன் தான் அதைப் பிரித்தோமோ என்று தோன்றியது.

‘கடிதம் வரும், கடிதம் வரும்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இருந்த சுகம் மாறி, அதைக் கடிதத்தைக் கண்டதும் முகம் மாறியது.

“வேலை கிடைத்தும் இப்படியா? உத்திரவுவந்துள்ள இடம் இங்கேயா இருக்கு? அந்த இடத்திற்குப் பதிலாக கிண்டியில் கிடைச்சிருக்கப்படாதா…“ என்று மனசுபாடாய் படுத்தியது.

ஆம் ! சீதாலக்ஷ்மியின் மகளிற்கு பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் வேலைக்குச் சென்று அமர வேண்டும் என்று அந்தத் தலைமை வங்கியிலிருந்து ஆணை வந்திருந்தது.வேலைகிடைத்ததே என்று சந்தோஷப்படுவதா? இப்படிக் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத தூரத்தில் ஆர்டர் வந்து விட்டதே என்று துக்கப்படுவதா என்றே அவர்களுக்குத் தோன்றவில்லை.இதிலென்ன கஷ்டம்  இருக்கிறது.  போய்ச் சேர வேண்டியது தானே.  அந்த இடமும் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது.  ஏதோ தொலை தூரத்திலா, பாதை தெரியாத இடத்திலா போட்டுவிட்டார்கள் என்று சிலருக்குத் தோன்றும்.பாவம், சீதாலக்ஷ்மிக்கு மாற்றல் வாங்க இயலாத தனியார் பள்ளி உத்தியோகம்.  கணவருக்கோ உடல்நிலை சரியில்லை.

சரி, தானும் வேலையை விட்டுவிட்டு கணவருடன் சென்று மகளுடனே தங்கிவிடலாம். என்றாலும், அவசர ஆபத்திற்கு வைத்திய வசதியில்லாத கிராமம் அது.  அங்கே எப்படித் தன் கணவரை அழைத்துச் செல்வது?அல்லது மகளுடன் தான் மட்டும் சென்று தங்கிவிடலாம் என்றாலும் உடல் நிலை சரியில்லாத கணவரை எப்படித் தனியே சென்னையில் விட்டுச் செல்வது. இல்லை, மகளை மட்டும் அங்கே சென்று தனியாக இருக்கச் சொல்லலாம் என்றால். இளம்பெண்ணை எப்படித் தனியே விடுவது என்பது ஒருபக்கமிருந்தாலும் ஒரே மகளை எப்படி விட்டுப் பிரிந்திருப்பது என்பது தான் அவர்களை வாட்டியெடுத்தது.

எப்படியெப்படியெல்லாமோ மனம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கடைசியில் அந்த இடத்திற்கு எப்படிச் செல்வது என்பதே கேள்வியாய் வந்து நின்றது.

இதற்கு என்னதான் தீர்வு?

ஒன்று, வேலையை வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிடுவது, இன்னொன்று அலுவலகத்திலேயே நேரில்  சென்று விசாரிப்பது. இதில் இரண்டாவதுதான் சரியென்று தோன்றவே, அலுவலகம் சென்று விசாரித்தபோது இவர்களுக்குச் சாதகமான பதில் கிட்டவில்லை.“அவனவன் பாங்க் வேலை கிடைக்கவில்லையே என ஏங்குகிறான். கழிப்பறை வசதி கூட இல்லாத கிராமங்களுக்குச் செல்லக்கூடத் தயாராக இருக்கிறான். பாங்க் வேலை வேண்டுமென்றால் முதலில் அங்கு சென்று பணியில் சேருங்கள்…” என்கின்ற ரீதியில் தான் பதில் வந்தது.

சோர்வுடன் வீட்டிற்கு வந்தனர். திருமதி. சீதாலக்ஷ்மி அதோடு விடவில்லை.  தினந்தோறும் காலையில் அண்ணாசலையில் உள்ள அந்த வங்கிக்குச் செல்ல வேண்டியது.  அதிகாரிகளைப் பார்க்கவேண்டியது.  மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மந்தைவெளியிலிருந்த பள்ளிக்குச் செல்லவேண்டியது. சிலதினங்களில் காலையில் பள்ளிக்குச் சென்று மதியம் வங்கி அலுவலகத்திற்குச் செல்லவேண்டியது என்று தொடர்ந்தது.  ஆனால் விடையென்னவோ இவர்களுக்குச் சாதகமாய் இல்லை.பள்ளிக்கும் வங்கிக்கும் என்று நடையாய் நடந்து ஒரு மாதமாகியும் பயனில்லாது போனது கூடப் பெரிதாய்த் தெரியவில்லை.  ஆனால் கடைசியாய் வங்கியில் சொன்ன வார்த்தைகள் தான் செவிகளில் ஒலித்த வண்ணமிருந்தன.

“பாருங்களம்மா… இன்னும் ஒரு சில தினங்களில் உங்கள் மகள் அந்த கிராமத்திற்குச் சென்று சேர்ந்தே ஆக வேண்டும். இல்லையேல் அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் ஆகிவிடும்…”

“ஐயாசென்னையிலிருந்துதினமும் போயிட்டு வர்ற மாதிரியாவது போட முடியுமா பாருங்கள். வேலூர் இருந்தாலும் பரவாயில்லை. சென்னை தான் வேண்டுமென்று இல்லை…’

“நாங்க சொல்றத சொல்லிட்டோம்.  ஆனா நீங்க திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டு வர்றீங்க.  நாளைக் கடத்திட்டே இருந்தா நல்லதில்லையம்மா…” என்று வங்கியின் நிர்வாகத்தினரும் சொல்லிவிடவே, பாவம் சீதாலக்ஷ்மிக்கு ஒன்றுமே புரியவில்லை.  வேலை தான் கிடைத்ததே, சிக்கலில்லாமல் கிடைத்திருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தார்.

“குருராஜா ! இதென்ன சோதனை? குறிப்பிட்ட தினத்திற்குள் போய்ச் சேராவிட்டால் வேலைக்கான உத்திரவே போய்விடுமாமே, இதைப்போன்ற மன உளைச்சலைத் தருவதற்கா இந்த வேலையைக் கொடுத்தாய்?  முன்னேயும் போகமுடியவில்லை. பின்னேயும் வர இயலவில்லை.  போதுமப்பா உன் விளையாட்டு…” என்று தோன்றினாலும் “குருராஜா ! ஆனாலும் கூட இந்த நிலையிலும் நீதானப்பா வழிகாட்ட வேண்டும்” என்று மனம் அலையாய் அலைந்தது.

வேலை கைவிட்டுப் போக இன்னும் மூன்றே நாட்கள் தான் பாக்கி.

கடைசி முயற்சியாய் மீண்டும் அலுவலகம் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று தனது மகளுடன் சீதாலக்ஷ்மி சென்றார்.பலமாடிக் கட்டிடங்கள் கொண்ட அந்த வங்கித் தலைமையகத்தில் ஏற்கனவே பார்த்தவர்களை மீண்டும் பார்ப்பதால் எந்த விதப் பயனும் ஏற்படப் போவதில்லை… இனி யாரைஅணுகி முறையிடலாம் என்று யோசித்துக் கொண்டு நிற்கையில், அங்கே ஒருவர் வந்து நின்றார்.  அவர் காக்கிச் சீருடை அணிந்து கொண்டிருந்தார்.  தன்னை லிப்ட் ஆப்பரேட்டர் என்று சொல்லிக் கொண்டார்.

இவர்கள் கேட்காமலேயே “அம்மா அதோ இருக்கிறாரே அவரிடம் சென்று உங்கள் பிரச்னையைக் கூறுங்கள்” என்று குறிப்பிட்ட நபர் ஒருவரை அவர் அடையாளம் காட்டிச் சென்றார்.அந்தக் காக்கிச் சீருடை அடையாளம் காட்டிய நபரிடம் சென்று இவர்கள் நிலைமை குறித்து விளக்கிக் கூறியதும் “பரிவுடன் கவனிக்கிறேன். இரண்டு தினங்கள் கழித்து வாருங்கள்..” என்று சொல்லி அனுப்பினார்.வேலை கைவிட்டுப் போக இன்னும் மூன்று நாட்கள் தானே இருக்கின்றன.  இரண்டு நாட்கள் கழித்தென்றால் அது தானே கடைசிநாள் என்று எண்ணியவாறு குருராஜாரின் மீது பாரத்தைப் போட்டு வீட்டிற்கு வந்தனர்.அடுத்தநாளும், அதற்கடுத்தநாளும் மனம் மிகவும் அழுத்தமாய் இருந்தது.

இனி நம்மால் என்னசெய்ய இயலும்?நடப்பதுநடக்கட்டும். எதுநடந்தாலும் அதைஏற்றுக் கொள்ளவேண்டியதுதான் என்கின்ற முடிவிற்கு வருவதைத் தவிர வேறேதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.குறிப்பிட்டநாளும் வந்தது.இன்றோடு கெடுமுடிகிறது. இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை.  நேரே போய் வங்கியின் தலைமையகத்தில் “அந்தக் கிராமத்திற்குச் சென்று பணியில் சேர்கிறேன் என்றுகடிதம் கொடுத்துவிட்டால் போதும் வேலை கை நழுவிப் போகாது.

ஆனால் ஒரு மாத காலமாக அலைந்த அலைச்சல் குருராஜாரிடம் பிரார்த்தனை இவையெல்லாம் வீணாகத்தானே போய்விடும்?

சரி… யோசித்துக் கொண்டிருந்தால் நேரம்தான் போய்க் கொண்டிருக்கும.  இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னாரே என்னவென்று தான் போய்ப் பார்ப்போம் என்றவாறு ராயபேட்டையிலிருந்து அண்ணாசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பீட்டர்ஸ் சாலையில் உள்ள தபால் நிலையத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது “அம்மா…” என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோது, அவர்கள் பகுதிக்குத் தபால்களைப் பட்டுவாடா செய்யும் தபால் ஊழியர்  நின்றுகொண்டிருந்தார்.

“எங்கோ வெளியே போறீங்க போலருக்கு.  உங்கள் பொண்ணுக்குக் கடிதம் வந்திருக்கு, இந்தாங்க…” என்று தந்தார்.

அது அந்த வங்கியின் தலைமையகத்திலிருந்து வந்திருந்த கடிதம்.

“ஐயா ! நீங்கள் சொன்ன இடத்தில் பணிக்கு இப்போது சேர்கிறேன்.  எவ்வளவு விரைவில் மாற்றல் செய்து தர முடியுமோ அதைச் செய்துதாருங்கள் என்று கேட்காம கேட்காமல் எடுத்த எடுப்பிலேயே சென்னையிலேயே போஸ்டிங் வேண்டுமென்றால் எப்படி? யாருக்குத்தான் பிரச்சினை இல்லை.  ஆதலால் உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ரத்து செய்கிறோம்…” என்று எழுதியிருக்குமோ என்று பதட்டத்துடன் பிரித்தபோது, அவர்கள் அப்போது நினைத்ததற்கு நேரெதிராய் இருந்தது.  இத்தனை காலம் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப இருந்தது.

சீதாலக்ஷ்மியின் மகளிற்கு சென்னையிலே, அதுவும் வீட்டின் அருகிலேயே வேலையில் சேரும்படி உத்தரவு வந்திருந்தது.  அதுவும் சாதாரணத் தபாலில்.

உடனே அண்ணாசாலைக்குச் சென்று அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவரைச் சென்றுபார்க்குமாறு கூறிய அந்த லிப்ட்  ஆப்பரேட்டரையும் சந்தித்து நன்றி கூறலாம் என்று தேடியபோது அவர் இல்லை.

ஒருவேளை வெளியில் சென்றிருக்கலாம் அல்லது விடுப்பில் இருக்கலாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டிற்கு வந்து பூஜையறையில் அந்தக் கடிதத்தை வைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

சீதாலக்ஷ்மி எனக்கு எழுதிய கடிதத்தில்,“காக்கி யூனிபார்மில் வந்தவர் மந்த்ராலய மஹானே என்று இன்றும் நம்புகிறோம்”என்று எழுதியிருந்தார்.

நான் அவர்களிடம் தொலைபேசியில் “அது எப்படி அவ்வளவு சரியாகச் சொல்லுகிறீர்கள்?” என்றேன்.

அதற்கு சீதாலக்ஷ்மியின் மகள் “எனக்கு அங்கேயே வேலைக்கு ஆர்டர் வந்ததில் தினமும் லிப்டில் செல்வேன்.  அப்போதுஒருநாள் கூட அவரைநான் பார்த்ததே இல்லை. விசாரித்ததில் அதைப் போன்ற ஒரு லிப்ட் ஆப்பரேட்டர்  இருந்ததாகவே யாரும் சொல்லவில்லை.  பின்னர் நானும் அங்கே பணிபுரிந்ததால் அதை அனுபவத்தில் உணர்ந்தேன்”என்று சொன்னதும்…

”ஸ்ரீராகவேந்த்ர மகாபிரபு! உன்னை நிஜ பக்திகொண்டு ஒழுகுவோருக்கு, நீ எந்தெந்த ரூபத்திலெல்லாம் அருள் புரிகின்றாயப்பா” என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

சரி! அது குருராஜரின் அநுக்ரஹம் என்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் இவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்து மனஉளைச்சலைக் கொடுத்து, கடைசி நேரத்தில் கடைசி கட்டத்தில் தான் அருள வேண்டுமா?  இதை ஏன் முதலிலேயே அந்த கிராமம்  என்றில்லாமல் சென்னை என்று குருராஜர் மாற்றியிருக்கக் கூடாதா என்றெல்லாம் இதைப் படிக்கும் போது நமக்குத் தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள்.  முதலிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு நிகழ்வு. அவ்வளவே.  நீங்கள் இந்த நூலில் இதைப் போன்ற அத்தியாயத்தையும் படித்திருக்கமாட்டடீர்கள்.

அப்படி என்றால் சாதாரணமாக நிகழ்ந்தால் அதெல்லாம் மகிமைகள் இல்லையா? இப்படிக் கஷ்டப்பட்டு நடந்தால் தான் மகிமையா என்றால் அதுவல்ல காரணம்.

குருராஜாரின் மகிமை அளப்பரியது.  அனைத்தையும் யாராலும் கண்டுணர்ந்து எழுத முடியாதது.  எனினும் ஒவ்வொரு பாகத்திலும் குறிப்பிட்ட சிலதை மட்டும் தான் எழுத முடிகிறது.  ஓவ்வொரு மகிமையிலும் ஏதேனுமொரு உட்பொருள் மறைந்திருக்கும்.

நானும் முந்தையபாகங்களில் கூட  ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பேன்.  நமது முன்வினைப்பயன்களைச் சீர் தூக்கிப் பார்த்து ஸ்ரீராகவேந்தரரைத் திடமாகச் சரணடையும் போது, அதையெல்லாம் நீக்கி அருள்பாலிப்பார் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இதைப் போன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதி வருகிறேன். இந்தப் பிராரப்த்தம் குறித்து நூலின் கடைசியில் ஒருதனி அத்யாயமே எழுதியிருக்கிறேன்.

(நன்றி : திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ  ராகவேந்திர மகிமை’ 6 ம் பாகம்)

==========================================================

இது நம் கருத்து 

ஒன்று :

குருராஜர் லிப்ட் ஆப்பரேட்டராக வந்தது ஏன் ?

ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியர்கள் எத்தனையோ பேர் இருக்க, குருராஜர் தன்னை லிப்ட் ஆப்பரேட்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது ஏன் தெரியுமா? ‘உங்கள் வாழ்க்கைக்கே லிப்ட் கொடுக்க வந்த ஆப்பரேட்டர் நான்’ என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் வேறு ஒன்றுமில்லை. மற்றபடி இந்த லிப்ட்  ஆப்பரேட்டருக்கு நம்மை உயரே கொண்டு செல்ல மட்டுமே தெரியும். கீழே கொண்டு வர தெரியாது.

இரண்டு :

மஹா பெரியவா or ஸ்ரீ ராகவேந்திரர் ?

இருவருமே நமக்கு இரு கண்கள் போலத் தான். சொல்லப்போனால் மஹா பெரியவா, தான்  வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் மேல் திடமான பக்தி செலுத்தி வந்தார்.

மஹா பெரியவாவோ அல்லது ஸ்ரீ ராகவேந்திரரோ,  எந்த குருவாகட்டும், நாம் எந்தளவு அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அவர்கள் கைகொடுக்கிறார்கள். மேலும் ‘நமது பிரார்த்தனையில் நமது உழைப்பும் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். மந்திரத்தில் மாங்காய் எதிர்பார்க்க கூடாது’ என்பதே சீதாலக்ஷ்மி அவர்களின் அனுபவம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

சரி தானே நண்பர்களே?

(இது வரை நாம் தயாரித்த பிரார்த்தனை பதிவுகளிலேயே இது தான் மிகவும் சவாலாக இருந்தது. பதிவாக வடிப்பதற்குள் அத்தனை சிரமம். அதிகாலை கோவிலுக்கு செல்வதால் தட்டச்சு செய்ய நேரம் கிடைக்கவில்லை. வெளியே கம்ப்யூட்டர் சென்டரில் கொடுத்து வாங்கலாம் என்றால் அதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ‘இராகவேந்திர மகிமை -6’ நூலின் சில பக்கங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்தோம். கடைசீயில் நம் வாசகி உமா வெங்கட் அவர்கள் தான் உதவிக்கு வந்தார். நூலின் பக்கங்களை அவருக்கு மின்னஞ்சல் அனுப்ப அவர் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பினார்.  ஆனால் இணையத்தில் ஏற்றும்படியான FORMATல் அதை UNICODE கன்வர்ஷன் செய்யவேண்டும்.  செய்யும் போது ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் தோன்றின. எப்படியோ குருராஜரின் அருளால் அனைத்தும் இறுதியில் சாத்தியமாயிற்று. உமா அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் உதவி இல்லையேல் இது சாத்தியப்பட்டிருக்காது. )

==========================================================

இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்:

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சமூக சேவகர் மற்றும்  இராகவேந்திரா மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளி மற்றும் இராகவேந்திரா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தின் அமைப்பாளர் திரு.ஜெகதீசன் அவர்கள். இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். (இவரால் நிற்க முடியும். ஆனால் ஒரு போலியோவால் பாதிக்கப்பட்டு ஒரு கால் வளைந்திருப்பதால் சரிவர  நடக்க முடியாது.)

ஒரு பக்கம் திரு.ஜெகதீசன் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளி, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என நடத்திவந்தாலும் மறுபக்கம் இவர் சைக்கிள் ரிப்பேர் ஷாப் வைத்துள்ளார். வெளியூர் பேருந்து டிக்கட்டுகளை புக் செய்து தரும் எஜன்சியும் நடத்துகிறார். இராகவேந்திரா சுவாமிகளின் தீவிர பக்தர் இவர்.

5

ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள்
ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள்

சமீபத்தில் இராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற ‘எண்ணங்களின் சங்கமம்’ தொண்டு நிறுவனங்களின் பாராட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது அங்கு இவரை சந்தித்தோம்.

 (விழாவில் சுவாமிஜியிடம் ஆசி பெறும்போது.... கருப்பு பேண்ட் அணிந்து நடுவில் நிற்பவர் தான் திரு.ஜெகதீசன்.)

(விழாவில் சுவாமிஜியிடம் ஆசி பெறும்போது…. கருப்பு பேண்ட் அணிந்து நடுவில் நிற்பவர் தான் திரு.ஜெகதீசன்.)

விவேகானந்தரின் 150ம் ஆண்டு பிறந்த ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற மேற்படி விழாவில் பாராட்டை பெறுவதற்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்திருந்த திரு.ஜெகதீசன்,  போலியோ அட்டாக்கினால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அங்கிருந்து மூன்று சக்கர தட்டு சைக்கிள் ரிக்-ஷாவிலேயே வந்திருந்தார்.

இதன் நோக்கம் என்னவென்று கேட்டபோது, விவேகானந்தரின் கொள்கை, புகழ், மற்றும் அவரது லட்சியத்தை பரப்புவது என்று குறிப்பிட்டார்.

அவரை பற்றி மேலும் தகவகள் தெரிந்துகொள்ள விரும்பி பேசியபோது கிடைத்த தகவல்கள் நம்மை சிலிர்க்க வைத்தது.

Videocon-A15+_IMG_20131215_174308ஜெகதீசன் அடிப்படையில் ஒரு மாற்றுத் திறனாளி என்றாலும் உழைப்பதில் இவருக்கு அலாதி ஆர்வம் உண்டு. ஊனத்தை உதறித் தள்ளிவிட்டு உழைத்துக் கொண்டிருந்த இவருக்கு தீ விபத்து, தொழில் நஷ்டம் என அடுத்தடுத்து சோகம். இருப்பினும் அசரவில்லை ஜெகதீசன். விட்டேனா பார்  வாழ்க்கையுடன் இவர் நடத்திய போர்,  இன்று இவரை ஒரு சேவராக அடையாளம் காட்டியுள்ளது.

சைக்கிள் கடை நடத்தி வந்த இவர், தன்னை போல உள்ள பிறருக்கு உதவேண்டும் என்கிற நோக்கில் 2000 ஆம்  ஆண்டு, திருவாரூர் அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை துவக்கினார். பின்னர் மாற்றுத் திறநாளிகள் படிக்க என்று சிறப்பு பள்ளி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என படிப்படியாக தொடங்கினார்.

அரசு ஊனமுற்றவர்களுக்கு தரும் பஸ் பாஸ், சமூக நலத்துறையின் அடையாள அட்டை, மற்றும் இதர பல சலுகைகளை மாற்றுத் திறனாளிகள், ஏழை எளியோர் எளிதில் பெறமுடிவதில்லை. அதை பெறுவதற்குரிய வழிமுறைகளும் அவர்களுக்கு தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு தனது ஒரு கால் பாதிப்படைந்திருக்கும் நிலையிலும் தேவையான உதவிகளை அலைந்து திரிந்து பெற்று தருகிறார் இவர்.

ஏழை எளிய மக்களின் சேவையே அந்த இறைவனுக்கு செய்யும் சேவை என சுவாமி விவேகானந்தர் கூறியதையே வேத வாக்காக கொண்டு செயல்பட்டுவருகிறார் இவர்.

தனது ஒரு காலை இறைவன் முடக்கிவிட்டபோதும், துவண்டுவிடாமல் சக மனிதர்களின் துயரை துடைக்க, ஒரு மாபெரும் லட்சியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திவரும் இவரையும், அனைத்து உறுப்புகளும் சரியாக அமையப்பெற்று, சகல வித சௌகரியங்களையும் வாழ்வில் அனுபவித்து வரும் பல இளைஞர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு கணம் யோசித்து பார்த்தோம். என்ன சொல்வது… அவரது ரிக்-ஷாவில் பார்த்த வாசகம் தான் நினைவுக்கு வந்தது. (கீழே அதன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.)

Jegadheesan Tri Cycleஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது சந்தோஷமாக ஒப்புக்கொண்டதோடு அந்த நேரம் இராகவேந்திரா சுவாமிகளுக்கு பூஜையும் செய்து தனது இல்ல குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வதாக கூறி நம்மை நெகிழ வைத்தார் திரு.ஜெகதீசன். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
==========================================================
கணவருக்கு நல்ல ஊதியத்துடன் கௌரவமான ஒரு வேலை வேண்டும்!ரைட்மந்த்ரா குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.நானும் என் கணவரும் அயல்நாட்டில் இருக்கிறோம். என் கணவர் பல மாதங்களாக வேலையின்றி இருந்தார். ரைட்மந்த்ரா தளத்தை படித்து அதில் கூறப்பட்டுள்ள பலவற்றை என்னால் முடிந்த அளவிற்கு கடைபிடிக்க முயற்சிகள் செய்துவருகிறேன். அதன் பலனாலோ என்னவோ என் கணவருக்கு தற்போது வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் கம்பெனியில் இன்னும் சில ஃபார்மாலிட்டிகள் பாக்கியிருக்கிறது. சற்று பயமாக இருக்கிறது. அவருக்கு நல்ல முறையில் பணி அமையவும், எங்கள் குடும்பம் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடன் சௌக்கியமாக இருக்கவும் உங்கள் அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

திருமதி.முருகன் துணை,
ரைட்மந்த்ரா வாசகி

==========================================================
மகனுக்கு வேலை நிரந்தரமாக வேண்டும்!

அன்புள்ள சுந்தர் & ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு,

என் மகன் வேலை நிமித்தமாக யூ.எஸ். சென்றான். அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. 5 மாதங்கள் கழித்து தற்சமயம் ஒரு வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் நிரந்தரமாக பணி புரிய பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,
சிவகுமார்

===========================================================
மகனுக்கு நோய் இல்லாத வாழ்வு அமையவேண்டும்!

Dear Mr. Sundar and friends,

Well,  My son S.Prahladh who is aged 6 years is having fever for the past 5 days and today Dr. prescribed blood test and we found that CRP test is positive which means he is having infection due to some cause in his body.  The cause is yet to be ascertained and is unknown.  Meanwhile Dr. has advised for admission in Hospital but we requested him for treatment at Home as we do not have suitable person to attend the patient at Hospital.  The Dr. has now prescribed medicines and told us that by Wednesday the fever is not subsiding, we need to admit him in Hospital.

I request our Right Mantra Prayer Club members for the speedy recovery of my son.  After 5 days fever is very low now but it recurs.  I thank you and other members for the same.

Thanks & Regards,
Satishkumar

* குறிப்பு : இந்த வாரம் பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் திரு.சதீஷ் குமார் அவர்களின் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? பிரஹலாத். இரண்யகசிபுவின் மகனாக பிறந்து நரசிம்மரின் அருளை பெற்ற பக்த பிரஹலாதன் வேறு யாருமல்ல ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பூர்வ ஜென்ம அவதாரம் தான் !

===========================================================

நம் பொது பிரார்த்தனை

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும்!

உலகில் எந்த நாடு மாற்றுத் திறநானிகள் சிரமமின்றி சௌகரியத்துடன் வாழ வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோ அந்த நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவாக இருப்பதோடு மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். (யூ.எஸ்., ஜப்பான், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் முன்னேறிய நாடுகளை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை புரியும்.)

ஆனால் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு நியாயமாக அரசாங்கம் கொடுக்கவேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகளுக்கு கூட போராடவேண்டியிருக்கிறது. தங்களுக்கு தேவையானவைகளை பெற அவர்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். பேருந்தோ, ரயிலோ, அன்றாடம் பயன்படுத்தும் வங்கி ஏ.டி.எம். களோ DISABLED PERSONS FRIENDLY என்று சொல்லப்படும் மாற்றுத் திறனாளிகள் எவர் உதவியும் இன்றி அவற்றை பயன்படுத்தக் கூடிய அளவு வசதிமிக்கதாக இல்லை.

இந்நிலை மாறவேண்டும். மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவிகளையோ  சலுகைகளையோ சுலபமாக பெறும்  நிலை நம் நாட்டில் மலரவேண்டும். அவர்களுக்கு  தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும்.

==========================================================

வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.மாற்றுத் திறனாளிகள் அனைவரின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழல் நம் நாட்டில் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 22, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பாரதி கண்ட புதுமைப் பெண் பாஸிட்டிவ் கௌசல்யா!

[END]

 

11 thoughts on “எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

  1. டியர் சுந்தர்ஜி

    ///இது வரை நாம் தயாரித்த பிரார்த்தனை பதிவுகளிலேயே இது தான் மிகவும் சவாலாக இருந்தது. பதிவாக வடிப்பதற்குள் அத்தனை சிரமம். அதிகாலை கோவிலுக்கு செல்வதால் தட்டச்சு செய்ய நேரம் கிடைக்கவில்லை. வெளியே கம்ப்யூட்டர் சென்டரில் கொடுத்து வாங்கலாம் என்றால் அதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ‘இராகவேந்திர மகிமை -6′ நூலின் சில பக்கங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்தோம். கடைசீயில் நம் வாசகி உமா வெங்கட் அவர்கள் தான் உதவிக்கு வந்தார். நூலின் பக்கங்களை தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பினார். அவருக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.////

    நான் type செய்ததற்கு நீங்கள் எதற்கு நன்றி கூறுகிறீர்கள். இது ஆண்டவன் கட்டளை. இந்த பதிவை type செய்ய ஆரம்பிக்கும் பொழுதே ஷிர்டி சாய்பாபாவின் சம்மதத்துடன் தான் ஆரம்பித்தேன், அவர் படத்திலிருந்து காலையில் வைத்த பூ கீழே விழுந்தது.
    என்னை பொறுத்த வரையில் இருவருமே மகான்கள். உங்களுக்கு நான் நன்றி சொல்லிகொள்கிறேன் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு

    வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு அவர் கொடுத்த கடன் திரும்ப வந்து அவரது கஷ்டத்தை போக்கவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திகிறேன்

    மாற்றுத் திறனாளிகள் அனைவரின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழல் நம் நாட்டில் ஏற்படவும் இறைவனை பிரார்த்திகிறேன்
    .
    பகவான் ராகவேந்திர சுவாமிகளும் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவர் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது

    நன்றி
    உமா

  2. வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.

    மாற்றுத் திறனாளிகள் அனைவரின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழல் நம் நாட்டில் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம்..

  3. Om Sri Guru Raghavendraya Namaha

    GURU’s way of solving problems are always unique—also the solution will come in the end after lot of obstacles—

    When I read that the operator was wearing khaki uniform—that instance itself came 2 know that its GURU RAGHAVENDRA only!!!

    Miracles happen everyday if u have unshakable faith in GURU—

    Today what I am is all because of GURU RAGHAVENDRA ONLY-He don’s all the roles for me—friend,guide,role model,father, mother,lover..what not!!!

    Without GURU’s grace I would be what I am today and also what I achieve in the future will be of only HIS GRACE!!!

    Dis s another example of GURU RAGHAVENDRA’S grace—

    For a long time I had a doubt—whether it is right rather proper to consider Maha Periyava also as GURU—(small kid’s doubt dan—kindly bear with it)..dis doubt kept on nagging me frequently—

    Today morning I was fortunate to visit Maruntheswarar temple and GURU RAGHAVA’S temple in triplicane—there I bowed before Maha Periyava and Raghava and asked them to clear dis doubt—however small it may be or however childish!!!

    And in the night I checked RIGHTMANTRA.com—in the prayer article—was GURU RAGHAVA’S photo—automatically read it!!

    The beauty is that after the article—answer to the question was there—was as usual astonished!!
    Prayed and conveyed my heartfelt thanks to both the GURU’S—even though the doubt was childish GURU cleared it–!!That is his GRACE!!

    OM SRI RAGHAVENDRAYA NAMAHA
    Regards
    R.HariHaraSudan

  4. காஞ்சிபுரம்[ சங்கரமடம் அருகிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்நிதித் தெருவில் உள்ளது ஜுரஹரேஸ்வரர் திருகோயில் ] ஜுரஹரேஸ்வரர் திருக்கோயிலில்[ 94436 89978 ] உள்ள ஜுரஹரேஸ்வர தீர்த்தத்தில் ஒரு அமாவாசை நாளில் நீராடி , மூலவர் ஜுரஹரேஸ்வரருக்கு அபிசேகம் செய்து , வில்வம் அர்ச்சனை செய்து,5 நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் 3 நாட்கள் வழிபட்டு வர தீராத தொடர் காய்ச்சல் தீரும் …

    பழைய சீவரம்[ செங்கல்பட்டு அருகில் உள்ளது ] மலை லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில்[ 04427290550 ]. உள்ள மூலவர் லட்சுமிநரசிம்மருக்கு துளசி சாற்றி , பானகம் படைத்து வழிபட்டு வர தீராத தொடர்காய்ச்சல் தீரும் …இதனை பிரதோஷ காலத்தில் செய்வது நன்மைகளை உடன் பெற்று தரும் ………

    கூடவே குலதெய்வ வேண்டுதல் செய்து நிறைவு செய்யவும் …..

    மேலும் 48 நாட்கள் கீழ் கண்ட சம்பந்தர் திருமுறையை பாராயணம் செய்யவும்[அசைவம் கூடாது …….வீட்டில் சுவாமி அம்பாள் ,நால்வர் படத்தின் முன் விளக்கு யாற்றி வைத்து காலை மாலை படித்து வரவும் …

    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
    உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
    கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
    ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
    பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
    விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
    இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
    சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
    புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
    கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
    திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
    கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
    சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
    செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
    பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
    பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
    உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
    செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
    திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
    தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
    தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
    சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
    பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
    பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
    தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

    பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
    இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
    திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
    நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

    ………. திருக்கொடிமாடச் செங்குன்றூரில் {திருச்செங்கோடு }அடியார்களுக்குக்
    கண்ட சுரப்பிணிநீங்க சம்பந்தர் வோதியருளியது….கூடவே மதுரை திருமுறையை பாடி திருநீறு பூசி விடவும்… கை மேல் பலன் உடனே கிடைகும் …..

    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

    வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
    ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
    சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

    முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
    சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

    காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
    பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
    மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
    சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

    பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
    பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
    ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
    தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.

    அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
    வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
    பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
    திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

    எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
    பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
    துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
    அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.

    இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
    பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

    மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
    மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
    ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
    ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.

    குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
    கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
    எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
    அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.

    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
    போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

  5. உவரி [ திருச்செந்தூர் அருகில் உள்ளது ]சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் கடலில் நீராடி , கடற்கரை மண்ணை 11 முறை ஓலைப்பெட்டியில் தலையில் சுமந்து போட்டு வழிபட்டு வர நல்ல வேலை கிடைகும் …மேலும் கிடைத்த வேலை நிரந்தரமாகும்[ 9498025866 ] …….இந்த திருமுறையை படித்து வரவும் ….

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.

    பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.

    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

    இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.

    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

    வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.

    இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.

    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.

    மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

    மேலும்

    “ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
    கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
    சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
    குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ”
    இப் பாடலை தினமும் படித்து விட்டு , கன்னியாகுமரி அருகில் உள்ள சுவாமி தோப்பு என்ற ஊரில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் உள்ள முத்திரி கிணறு நீரில் குளித்து விட்டு ,தலையில் தலைபாகை [turban] அணிந்து அய்யா வைகுண்ட சுவாமியை வணகி வந்தால் வேலை கிடைகும் ,கிடைத்த வேலை நிரந்தரமாகும்[9445765270 ] ..சென்னை மணலிபுதுநகரிலும் அய்யா கோயில் உள்ளது …….

  6. திருவிடைமருதூர்
    மகாலிங்க சுவாமி யை

    மனத்தால்
    நினைத்து
    கொண்டாலே யாவும் நலமாகும் ….அப்புறம் ஒருநாள் திருவிடைமருதூர் சென்று வரவும் ….

  7. “”எது வந்த போதும் துணை நீயே குருராஜா””மெய் சிலிர்க்கும் அனுபவத்தை அளித்தமைக்கு நன்றி.

    மிக நீண்ட பதிவினை எழுத்துருவிற்கு உதவிய சகோதரி உமா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் ஜெகதீசன் அவர்களின் சேவையை நினைக்கும்போதே வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன் .

    \\\வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.மாற்றுத் திறனாளிகள் அனைவரின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழல் நம் நாட்டில் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம். \\

    ஸ்ரீ இராகவேந்திராயா நமஹ .

    -மனோகர்

  8. எது வந்த போதும் துணை நீயே குருராஜா மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை.
    சீதாலக்ஷ்மி அம்மாவின் நம்பிக்கை, பக்தி, இடைவிடாது வங்கி அலுவலகத்திற்கு அலைந்து அவர் பெற்றது மகளின் பணியிட உத்தரவு மட்டுமல்ல குருராஜாவின் பேரன்பும் கருணை பார்வையும்.
    படிக்க படிக்க உருகி வழியும் படி அமைந்த தொடர்.
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.ஜெகதீசன் அவர்கள் ஒரு மாற்று திறனளி என்பதைவிட கடவுளின் குழந்தை எனலாம்.
    அவர் செய்யும் காரியம் நன்றாக இருப்பவர்கள் கூட செய்ய முடியாது.
    அவர் செய்யும் செயலுக்கு அவரை எப்படி பாராட்டினாலும் தகும் அதனால் தான் கௌரவப்படுத்த பட்டுள்ளார்.
    வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு அவர் கொடுத்த கடன் திரும்ப வந்து அவரது கஷ்டத்தை போக்கவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திகிறேன்

  9. “எது வந்த போதும் துணை நீயே குருராஜா”

    தலைப்பே உடம்பு சிலிர்கின்றது. குரு அருள் இல்லையேல் திரு அருள் இல்லை .சீதா லக்ஷ்மி அம்மாவின் உண்மையான பக்திதான் அவர் தேவையை பூர்த்தி செய்து விட்டது. உண்மையான பக்திக்கு என்றைக்கும் பகவான் இறங்கி வருவார்.

    திரு ஜெகதீசன் அவர்களின் சேவையை பார்க்கும் போது உண்மையில் நாம்தான் ஊனமுற்றவர்களாக இருக்கின்றோம். அவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    தக்க சமயத்தில் உதவி புரிந்த உமா அவர்களுக்கு தளம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

    வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, வேலை நல்ல முறையில் நல்ல ஊதியத்துடனும் கௌரவத்துடனும் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு அவர் கொடுத்த கடன் திரும்ப வந்து அவரது கஷ்டத்தை போக்கவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி அக்குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்திகிறேன் .

    நன்றி

  10. வாசகி முருகன் துணை அவர்களின் கணவருக்கு, மனதிற்கு நிம்மதி தரும் வகையில் வேலை அமையவும், வாசகர் சிவக்குமார் அவர்களின் மகனுக்கு தற்போது கிடைத்திருக்கும் வேலை நிரந்தரமாக அமையவும், திரு.சதீஷ்குமார் அவர்களின் மகன் பிரஹலாத்துக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் பரிபூரணமாக குணமாகி, ஆரோக்கியத்துடன் வளர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கவும், மாற்றுத் திறனாளிகள் அனைவரின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழல் நம் நாட்டில் ஏற்படவும் மகா பெரியவாவை வணங்கி மனதார பிரார்த்தனை செய்வோம்.

  11. Thank you Mr. சுந்தர் ஜி மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்கள் அனைவருக்கும். I am overwhelmed with happiness to say that my son Prahladh is absolutely alright now just with medication. I once again profoundly thank you for your efforts to publish my request in the Prarthanai club of Rightmantra. Also the note about Baktha Prahladh is very nice. Actually I named my son Prahladh because of my devotion towards Lord Lakshmi Narasimha.

    May God bless all the lives on earth. Thanks again.

Leave a Reply to N,CHANDRASEKARAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *