Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!

print
ன்றைக்கு எமது எழுத்துக்கள் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் கடுகளவாவது பயன்படவேண்டும் என்று விரும்பி இந்த ‘ரைட்மந்த்ரா.காம்’ தளத்தை துவக்கினோமோ அன்றே அதன் பலனை இறைவன் கைகளில் கொடுத்தாகிவிட்டது. நமது கடமை உழைப்பது மட்டும் தான். இடையில் சில சில சஞ்சலங்கள் ஏற்பட்டபோதும் அவை யாவும் நன்மைக்கே என்று கருதி தான் இந்த தளத்தை நடத்தி வந்தோம்.

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே

என்ற ஒளவையின் முதுமொழிக்கேற்ப நமது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டோம்.

அதன் பலன் தான் இது….!

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பின் எட்டாவது ஆண்டு விழா கடந்த ஞாயிறு சென்னை ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு சமுதாய முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு வலிமையான பாரதத்தை உருவாக்கிட உதவி புரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த சுமார் 800 சேவை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் ஒன்று திரட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதில் நம் RIGHTMANTRA.COM தளமும் ஒன்று.

இந்த பட்டியலில் நமது ரைட்மந்த்ராவும் உண்டு!
இந்த பட்டியலில் நமது ரைட்மந்த்ராவும் உண்டு!

‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பானது திரு.ஜெ.பி. அவர்களின் எண்ணத்தில் உதயமான ஒரு சமூக நல அமைப்பு. சமுதாய முன்னேற்றத்துக்காக தன்னலமற்ற சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் விழா எண்ணங்களின் சங்கமம் சார்பாக திரு.ஜெ.பி. அவர்கள் விழா நடத்துவார்.

(திரு.ஜெ.பி. அவர்கள் நமது ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததோடல்லாமல் நமது தளத்தின் பணிகளையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

விழா அழைப்பிதழ்
விழா அழைப்பிதழ்

இந்த அமைப்பின் செயல்பாடுகளை கவனித்து வந்த சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இம்முறை அப்படி ஒருங்கிணைக்கப்படுபவர்களை கௌரவிக்க விரும்பியது. இதற்கான விழா சென்ற ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 5.30 வரை ராமகிருஷ்ண மடத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது. விழாவின் இறுதியில் அனைவருக்கும் ராமகிருஷ்ண மடம் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

IMG_0126

இந்த விழாவின் நோக்கம் என்னவென்றால், மேற்படி சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொண்டு இன்னும் சிறப்பாக அவற்றை செய்ய வழிமுறைகளை ஆராய்வதுமே ஆகும்.

IMG_0291

விழாவிற்கு சென்றபோது, ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. நாம் தற்போது தான் முதல் படியிலேயே காலை எடுத்து வைத்திருக்கிறோம் என்று கருதுகிறோம்.

IMG_0252

தன்னலமற்ற சேவைகளில் தங்களை ஈடுபடுத்தி, விவேகானந்தரும், பாரதியும், கனவு கண்ட ஒரு பாரதத்தை செதுக்கிக்கொண்டிருக்கும் 800 சிற்பிகளில் ஒருவனாக நம் தளம் சார்பாக ஒரு ஓரத்தில் அமரும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது என்றால் அது இறைவனின் கருணையேயன்றி  வேறொன்றும் இருக்க முடியாது.
Rightmantra NDSO Certificate

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போவோர் வருவோர் கால்களிலெல்லாம் மிதிபட்டுக்கொண்டிருந்த இந்த கருவேப்பிலை, ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கும்’ துளசி தளமாகி அவன் திருவடிகளை சரணடைந்து, இன்று பக்தர்களின் கைகளுக்கு சென்று கொண்டிருப்பதை போலவே இந்த சம்பவத்தை நாம் உணர்ந்தோம். இந்த நிகழ்வை வர்ணிக்க இதைவிட பொருத்தமான வார்த்தைகள் இருக்க முடியாது.

Ennangalin Sangamam

நம் தளத்தின் பணிகளில், வளர்ச்சியில் உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்த பாராட்டை காணிக்கையாக்குகின்றேன்.

இந்த கௌரவம் உங்களுக்கு கிடைத்த கௌரவம். இந்த நற்சான்று உங்களுக்கு உங்கள் எண்ணங்களுக்கு கிடைத்த நற்சான்று! ‘எண்ணங்களின் சங்கமம்’ சார்பாக நம் அனைவரின் எண்ணங்களின் சங்கமத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இது!!!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதை பெற்றுத் தந்த பெருமை உங்கள் அனைவருக்குமே ஆகும்!! உங்கள் ஒத்துழைப்பும் நீங்கள் அளித்த உற்சாகமும் இன்றி இது சாத்தியப்பட்டிருக்காது.

விழாவின் இறுதியில் நாம் நம் தளம் சார்பாக சான்றிதழ் பெறும் காட்சி. இது நம் தளம் பெறும் முதல் பாராட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0340 copy

நமது பணிகளில் எத்தனையோ இன்னல்கள் மற்றும் கமிட்மெண்ட்டுகளுக்கிடையே துணை நின்று உதவி புரிந்து வரும் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாருங்கள்… ஆன்மீக பலம் பெற்று அஞ்சா நெஞ்சத்துடன் அனைத்து வளங்களும் பெற்று தலை நிமிர்ந்து நிற்கவல்ல வலிமையான பாரதத்தை உருவாக்கிட நமது பங்கை ஆற்றுவோம்.

நாம் அனைவரும் கூடி இழுக்க வேண்டிய கடமைத் தேர் இது!

என்றென்றும் நன்றியுடன்,
சுந்தர்,
www.rightmantra.com

(விழா அன்று நடைபெற்ற நிகழ்வுகளை பற்றிய விரிவான பதிவு வரவிருக்கிறது. அவசியம் அனைவரும் அதை தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் அகமும் புறமும் குளிரும் என்பது மட்டும் உறுதி!)

[END]

36 thoughts on “எல்லாப் புகழும் இறைவனுக்கே! துணை நின்ற பெருமை உங்களுக்கே!!

  1. Dear Mr Sundar

    Very great excitement!!!!!!!!!!!!!!!!!!

    My hearty congratulations for receiving such a great award!!!!!!

    This is the first stepping stone. This award is very much enthusiastic for you to go in for next stage in your life. I wish you all the very best and definitely RMS will get more and more awards. We will be the part and parcel of RM and will be associated with you for doing such good work

    Regards

    Uma

  2. சுந்தர்ஜி
    படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. ரைட் மந்திரா மேலும் பல பாராட்டுகளை விரைவில் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். இது தளத்தின் வெற்றி மட்டுமல்ல, தன்னலமற்ற சுந்தர் என்ற தனிமனிதரின் வெற்றியும் தான். எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமை உங்களுக்கு தான் சார். பல நல்லவர்களை ஒரே மேடையில் சந்திப்பதே அதிர்ஷ்டம். அதில் பரிசும் என்றால் சும்மாவா? நம் தளத்தையும் இறைவன் ஆசீ ர்வதிக்கிறார் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி

  3. முதல் முறையாக நம் வெற்றியை மற்றவர்கள் சான்றோர்கள் மத்தியில் கொண்டாடியிருக்கிறார்கள். நாம் ஏறிய படிகள் வெற்றி படிகள்தான் என்பதை இந்த பாராட்டு உறுதிப்படுத்தியுள்ளது. நமது பணிகள் மேலும் சிறப்பான முறையில் தொடர நிச்சயம் இது ஒரு உற்சாக டானிக்.

    சுந்தரின் அயராத உழைப்புக்கும் தன்னலமற்ற சமூகப்பணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. தளத்தின் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  4. சுந்தர்ஜி
    வாழ்த்துக்கள் . மேலும் பல சாதனைகள் புரிந்து பற்பல விருதுகள் வாங்கி வளர்ந்தோங்கிட , உளமார அந்த தில்லை யம்பலத்தில் ஆனந்த நடனமாடிடும் நடராஜரை இந்த திருவாதிரை நாளில் பிரார்த்திக்கிறேன் .
    நன்றி .

  5. சுந்தர் சார்,

    தங்களுக்கு கிடைத்த முதல் பாராட்டு விழா இது என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதுதான் என்னை இங்கு பின்னூட்டம் அளிக்க தூண்டியது ராமகிருஷ்ண மடம் பற்றி நீங்கள் தெரிந்து இருக்கலாம் அதன் சிறப்புகளும் அவர்கள் செய்து வரும் சேவைகளும் நிச்சயம் ஒரு அரசாங்கம் கூட செய் முடியாதவைகள் இது எப்போது சாத்தியம் என்றால் தன்னலம் கருதாத மக்கள் சேவையே வாழ்க்கை என்று வாழும் மனிதர்களால் மட்டுமே, அதனால்தான் தன்னலமற்ற பல துறவிகளின் சேவைகள் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாமல் ஆனால் தொடர்ந்து நடந்து வருகின்றன அப்படி ஒரு நிறுவனம் தங்களுக்கு முதல் பாராட்டு அளித்திருக்கிறது என்றால் அது அந்த ஆண்டவன் செயல் அன்றி வேறு ஒன்றும் இல்லை , இதை பற்றி நான் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் அன்று நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சுவாமி கௌதமானந்தர் சென்னை பீடத்தின் தலைமை துறவி அவரை அன்று சந்திக்க வேண்டும் என்று நான் அலை பேசியில் அவரிடம் 2 மணிக்கு பேசினேன் அப்போது அவர் இன்று மிக முக்கியமான நிகழ்ச்சி நடக்கிறது நீங்கள் இரவு 8 மணிக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டார் அவரிடம் பேச வேண்டும் என்றால் முன் அனுமதி பெற்றுதான் பார்க்க முடியும் (நான் அவரிடம் தீட்சை பெற்றவன் ஆதலால் என்னிடம் சில வினாடிகள் மட்டும் பேசினார்) இதை சொல்ல காரணம் அன்று முழுவதும் தாங்கள் அவரின் ஆகர்ஷன சக்தியில் அமர்ந்து இருக்கிறீர்கள் நிச்சயம் தங்களின் வாழ்க்கையில் உங்களுக்கே தெரியாமல் அந்த சக்தி வேலை செய்ய துவங்கும் இது உண்மை, தங்களின் தளமும் மற்றும் அதற்க்கு பின்னணியில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அந்த ஆண்டவனின் விருப்பம் அவன் நினது விட்டால் அதை மாற்ற யாரால் முடியும். வாழ்த்துக்கள்

    1. ராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் பற்றி நாம் அறிந்திருந்தாலும் அங்கு அதை விரிவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தபோது, உண்மையில் பிரமித்தோம். நீங்கள் கூறுவது போல அரசாங்கம் கூட செய்ய முடியாத அரும்பணிகள் தான்.

      நன்றியுடன்…

      – சுந்தர்

  6. “வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் எல்லாம் உன்னை சேரும்”

    என்ற கவிஞர் வாலியின் வைர வரிகளுக்கு இந்த பதிவு மிகவும் பொருந்தும்

    வீழ் நாள் படா சுமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழி அடைக்கும் கல்

    It means

    பயனற்றதாக ஒரு நாள் கூடக் கழிந்து போகாமல் தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவர்க்கு வாழ்க்கை பாதையை சீராக்கி அமைத்து தரும் கல்லாக அந்த செயல்கள் விளங்கும்

    Like stones that block rebirth and pain
    Are doing good and good again

    நன்றி
    உமா

  7. சுந்தர்ஜி
    வாழ்த்துக்கள் . மேலும் பல சாதனைகள் புரிந்து பற்பல விருதுகள் வாங்கவேண்டும் என்று அந்த தில்லை யம்பலத்தில் ஆனந்த நடனமாடிடும் நடராஜரை இந்த திருவாதிரை நாளில் பிரார்த்திக்கிறேன். வேண்டும்.
    சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பின் எட்டாவது ஆண்டு விழாவில் பல்வேறு சமுதாய முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு வலிமையான பாரத்தை உருவாக்கிட உதவி புரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த சுமார் 800 சேவை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் ஒன்று திரட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதில் நம் RIGHTMANTRA.COM தளமும் ஒன்று. எனும் பொது நம் எலோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லமுடியாது .
    சுந்தரின் அயராத உழைப்புக்கும் தன்னலமற்ற சமூகப்பணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி
    உழைப்பு(HardWork):
    “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்”
    – குறள் எண் : 620
    ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கையுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு மிகவும் அவசியம். தளராத முயற்சியும், உழைப்பும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் அவனுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.நமது உழைப்பு எப்படிப்பட்டதாய் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.நாம் என்ன செய்கிறோம், அதை ஏன் செய்கிறோம், அதைச் செய்வதால் நமக்கு என்ன பலன், அதற்கு போதுமான உழைப்பை நாம் மேற்கொள்ளுகிறோமா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.நம்மை விட உயர்ந்தவர்களின் செயல்புரியும் விதம், சிறப்பானதாக இருப்பின் அதை பின்பற்ற தயங்கக் கூடாது. வெற்றி பெற்றவர்களின் அறிவுரையை பெறவும் மறக்கக் கூடாது. செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும்.
    ஈடுபாடு சிறிதுமின்றி,கட்டாயத்தின் பேரால் மேற்கொள்ளும் உழைப்பினால் வெற்றி கிட்டுவதில்லை.எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதாய் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.அங்ஙனம் செய்யும் பட்சத்தில், நமக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.

    “ வெற்றி வேண்டுமா… போட்டுப் பாரடா எதிர் நீச்சல்…”

    இதை மனதில் கொண்டு உழைப்போம்….வெற்றி மலர்களை மாலைகளாய் சூடுவோம்.

    நன்றி திரு சுந்தர்ஜி

  8. Great—KUDOS to RIGHTMANTRA SUNDAR and heartfelt gratitude to the almighty!!
    Last December—was the month where u had apprehensions regarding right mantra and its success–
    And THIS DECEMBER—here U are—Garlanded by the ALMIGHTY!!! A phenomenal rise and growth of both RIGHTMANTRA&RIGHTMANTRA SUNDAR(anna)— and look at the Context , place where U got the award—ELLAM AVAN SEYALL!!This is first ur victory and then only the entire team’s victory!!

    I am sure U still have miles to go—to reach ur destination—KEEP UP THE SPIRIT!!
    Lets keep moving—however slow it might be—as long as it is towards our goals..!!
    Proud to be a part of RIGHTMANTRA..–collar ah thookivitukalam kandipa–
    Pray to the ALMIGHTY to support us in all our endeavours.
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  9. ஆண்டவன் அன்று எழுதினான் அது இன்று கிடைத்தது. எல்லோரும் அவன் தாள் அடைய என்றும் அவனை வணங்கும் சிறிய தொண்டன்.

  10. Hi Sundhar sir ,

    இதை படிக்க என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே… இல்ல சார்…..

    Great …..!

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர….

    -Uday

  11. அந்த ஆண்டவன் நமோடு இருகின்றான் என்பதற்கு மற்றுமோர் சாட்சிதான் இந்த மரியதை…இது முழுக்க உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி…தொடர்ந்து இதுபோன்ற விருதுகளை பெற அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரதிகிறேன்…
    .
    மாரீஸ் கண்ணன்

  12. சுந்தர் கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக
    கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகனும்
    உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்
    ஆனந்த கண்ணீரே என்று ஆகனும்
    ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ
    அதை பார்கின்ற என் உள்ளம் தாய் ஆக…………..
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அன்பு மலர்களே நம்பி இருங்களே
    நாளை நமதே இந்த நாளும் நமதே
    தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
    நாளை நமதே எந்த நாளும் நமதே

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று சுந்தர் வழி சென்றால்
    நாளை நமதே…

    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
    நமக்கென வளர்ந்து….
    …………………………………………………………..

  13. அன்பு சகோதரர்க்கு
    இன்று காலை வலை தளம் வந்ததில் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இதுதான் …மிக்க மகிழ்ச்சி..இன்னும் இன்னும் உயர இறைவனை வேண்டுகிறேன்…..இறைவன் உங்கள் அருகில் இருந்து உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று….உங்களின் எண்ணங்கள் எல்லாம் ஈடேற…குறைவின்றி உங்களுக்கு உங்கள் பணிகளுக்கு உதவி கிடைக்கவும் என்னுடைய பிரார்த்தனைகள் ..வாழ்க வளமுடன்… _/\_

  14. சந்தோசம்

    குரு அருளும் இறை அருளும் இன்றுபோல் என்றும் உங்களுக்கு அருள என்னாளும் பிரார்த்திப்போம்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  15. முடிவைப் பற்றிய கவலை படாமல், ஒவ்வொரு முறையும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல் பட்டீர்கள் .பாரதிக்கு விழா எடுத்து கெளரவம் செய்தீர்கள் .அந்த விவேகனந்தர் உங்களை அழைத்து கௌரவம் செய்துள்ளார் .

    விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்

    நமது தளம் மேலும் மேலும் பல வெற்றிகள் குவிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    -வாழ்த்துக்களுடன்
    மனோகர் .

  16. மென் மேலும் பலப்பல விருதுகள் நமது தளம் பெறவேண்டும் … தன்னலமற்ற உங்களுக்கு மேலும் பல வெற்றிகள் விரைவில் கிடைக்க இறைவனை மனமார பிரார்த்திக்கின்றேன் ..

  17. Great and happiest moment for Right Mantra readers. you will achieve all your goals and targets with Sri Ramakrishnar blessings.

  18. டியர் சுந்தர்ஜி,

    மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துகள்.

    உனன்னால் ஒருவனுக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும். என்ற விவேகானந்தரின் பொன்மொழிகேற்ப நடத்திகொண்டிருக்கும் உங்களுக்கும் , அதை எங்களை செய்ய முயர்த்சியாவது எடுக்க தூண்டியமைக்கும் நன்றி.

    பாலு மகேந்திரன்.வீ

  19. முருகபெருமானின் திருவருளால் தங்கள் பணி தொடர்ந்திட என் வாழ்த்துக்கள் .

  20. ஹலோ சுந்தர்
    உங்கள் நேர்மையான உழைப்புக்கு கிடைத்த பரிசு இது என்றால் அது மிகை அல்ல .
    மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!!. நமது சேவை இன்னும் சிறப்பாக தொடர இது நிச்சயம் ஒரு உந்துகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    நன்றி

    1. வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

      இறைவன் நமக்கு அளித்துள்ள சிறு உற்சாகம் இது. அவ்வளவே. நாம் போக வேண்டிய தூரம், ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன.

      திருவருளும் குருவருளும் துணைக்கொண்டு நம்மால் இயன்றதை செய்வோம்.

      – சுந்தர்

  21. சுந்தர்ஜி,

    மிகவும் பெருமையாக உள்ளது. நேரம் காலம் பார்க்காமல் தாங்கள் ஒரு வருட காலமாக எந்த ஒரு பலனையும் எதிர் பார்க்காமல், கை மாறு கருதாமல் தேனீக்களை போல் உழைத்ததின் பலன் தங்களுக்கு கௌரவம் தேடி வந்து உள்ளது. கடவுள் உங்களை கை விட வில்லை.

    உங்களது தொண்டு மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  22. சுந்தர் சார் ,
    குருவருளும் திருவருளும் துணை நிற்க வெற்றி படிக்கட்டில் முதல் அடி எடுத்து வைத்து மகுடம் பெற்று இருக்கிர்கள்.
    நம் தளத்திற்கு பாராட்டு கிடைத்தது பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தோம்.
    சேவை செய்யும் பல பேரை நம் விழாவிற்கு விருந்தினர்களாக அழைத்து கௌரவப்படுத்தினீர்கல். அதை ஆண்டவன் பார்த்து சும்மா இருப்பாரா?. நீங்கள் மிகவும் மதிக்கும் நம் எண்ணங்களின் சங்கமம் மூலம் பாராட்டு பத்திரம் கொடுத்துள்ளார்.
    இன்னும் பல முயற்சிகளும் சேவைகளும் செய்து மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
    எல்லாம் அவன் செயல்

  23. வாழ்த்துக்கள்

    காலங்கள் மாற்றம் எல்ருக்கும் பொருந்தும் அதை நாம் எங்கு நம்மை பொருத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்து நம் வாழ்கை

    உங்களை அறிந்து வைத்திருப்பதே என்ன போன்றவர்களுக்கு பெரும் பெருமை

    அந்த இடத்தில உங்களுக்கு உங்களை போன்ற பல அறிமுகங்கள் கிட்டியது இன்னும் இந்த தளத்தையும் உங்கள் பாதைக்கும் ஒளி தந்து மெருகேற்றும்

  24. Hi sir,

    super.pls share the detailed information about this function.we are very much eager to know that.we will definitely support for our team.
    “Arise,Awake,do not stop till the goal is reached”.

    thanks,
    senthil

  25. வாழ்த்துக்கள் சுந்தர்.

    ஆண்டவன் உங்களுக்கு மேலும் மேலும் உடல் பலத்தையும் மன பலத்தையும் அளிக்க பிரார்த்திக்கின்றேன்.

  26. “To become successful is to recognize every tiny step towards success and then take more of them” – Larina Kase

    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். உங்கள் லட்சியத்தில் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம்.

Leave a Reply to சிவ அ.விஜய் பெரியசுவாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *