Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

print
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிப்பவரானாலும் சரி, 5 லட்சம் சம்பாதிப்பவரானாலும் சரி இந்த ஆசை இல்லாதவர் எவரும் இருக்க முடியாது. உலகம் என்னும் ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் இந்த ஆசை உண்டு.

3aநம்மை சுற்றியுள்ள ஐந்தறிவு விலங்குகள் கூட தங்களுக்கென்று ஒரு இருப்பிடத்தை கட்டிக்கொள்ளும் போது நமக்கென்று சொந்த வீடு ஒன்று வேண்டும் என்கிற கனவு இல்லாதவர் எவரும் இருக்க முடியுமா? சிறியதோ பெரியதோ மாடமாளிகையோ ஒலைக்குடிசையோ தனக்கென்று சொந்த வீடு வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர் எவரும் இருக்க முடியுமா? ‘எலிவளையானாலும் தனி வளை’ சிறந்தது அல்லவா?

ஆனால் சொந்த வீடு கட்டும் யோகமும் பாக்கியமும் அதற்குரிய சூழ்நிலையும் எத்தனை பேருக்கு அமைகிறது?

ஒரு காலத்தில் வீடு வாங்கவேண்டும் என்றாலோ கட்டவேண்டும் என்றாலோ அதிகபட்சம் ரூ.5 லட்சம் இருந்தால் போதும். ஆனால் இன்று 50 லட்சத்திற்கு குறைவாக ஒரு ஃபிளாட் கூட வாங்க முடியாது என்பதே யதார்த்தம். வீடு கட்டவேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம்.

எனவே இந்த சூழ்நிலையில் அதிக வருவாய் பெறுபவர்கள் கூட வங்கிக் கடன் பெற்று தான் வீட்டை வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அதிலும் உரிய வருவாய் தகுதியும் (ELIGIBILITY) இதர தகுதிகளும் இருந்தும் கூட சிலருக்கு வீடு கட்ட கடன் கிடைக்காது இழுத்துக்கொண்டே போகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்ற நிலை ஏற்படும்.

அதே போல வீடு கட்டும் ஆசை இருந்தும் ஏதேதோ காரணங்களினால் அது தடைப்பட்டு கொண்டே இருக்கும். ஆயுள் முழுதும் வாடைகை கட்டியே ஓய்ந்துபோனவர்கள் பலர் உண்டு.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377)

என்பது தெய்வப்புலவரின் வாக்கு.

ஆனால் அதுவே இறுதியல்ல. அவன் நமக்கு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய நமக்கு வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தான் வள்ளுவர் ‘முடியாது’ என்று சொல்லாமல் ‘அரிது’ என்று சொல்லி முடித்திருக்கிறார்.

நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் போது – நியாயம் நம் பக்கம் இருந்தாலும் – எப்படி வாக்கு சாதுரியம் மிக்க ஒரு வழக்கறிஞரை துணைக்கு வைத்துக்கொள்கிறோமோ அதுபோல இறைவனின் நீதிமன்றத்தில் அவன் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வைக்க நமக்கு உற்ற வழக்கறிஞர்கள் போல துணையாக நின்று பன்னிரு திருமுறைகள் மிகவும் உதவுகின்றன.

உண்மையிலேயே இவற்றில் பல பாடல்கள் இறைவனிடம் நியாயம் கேட்டு மூவர் பாடியது தான். இன்றைக்கு நாம் லௌகீக வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் பன்னிரு திருமுறைகளில் அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ என்கிற பாடலுக்கு ஏற்ப, கண்ணெதிரே கடவுளை கண்டவர்கள் தீர்வுகளை எழுதிவிட்டு சென்றிருக்க நாம் எங்கெங்கோ அவற்றை தேடி அலைகிறோம்.

Mantra for own house

தூக்கணாங்குருவிக்கு கூட கூடு கட்டும் வித்தையை கற்றுத் தந்தவன் இறைவன். ஆனால் வித்தையை தான் அவன் கற்று தந்தானே தவிர வீட்டை கட்டித் தரவில்லை. அவைகள் தான் அவற்றை கட்டிக்கொள்கின்றன.

நாம் என்ன செய்கிறோம்? சற்று யோசித்து பாருங்கள்…!

திருச்சிராப்பள்ளி தலத்தில் எழுந்தருளியுள்ள தாயுமானவர் மீது திருஞானசம்பந்தர் பாடிய இந்த பாடலை தினசரி குளித்து முடித்து, திருநீறு அணிந்து நம்பிக்கையுடன் படித்து வந்தால் விரைவில் வீடு கட்டும் யோகம் அமையும். தடைப்பட்ட வங்கிக் கடன்கள் விரைந்து கிடைக்கும். ஊதியம் உயரும். வீடு கட்ட/வாங்க நினைப்பவர்கள் மட்டுமல்ல… வழக்கு, சொத்து தகராறு முதலான பிரச்சனைகளால் வீடு கையைவிட்டு போய்விடுமோ என்று அஞ்சுபவர்கள் கூட இந்த பதிகத்தை படிக்கலாம்.

சொந்த வீடு கனவு இருப்பவர்கள் கீழ்கண்ட பதிகத்தை தினசரி படித்து வாருங்கள்…. படிப்பதோடு நின்றுவிடாமல் வீட்டை வாங்க / கட்டுவதற்குரிய ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் இறங்குங்கள். உங்கள் முயற்சியும் தெய்வத்தின் அருளும் சேரும்போது அற்புதம் சாத்தியமாகும். விரைவில் கிரகப்பிரவேசம் காண வாழ்த்துக்கள்!

அதே சமயம் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள். தன்னலமற்ற சேவையில் உங்களை நீங்கள் எந்தளவு ஈடுபடுத்தி வருகிறீர்களோ அந்தளவு உங்களின் பிரார்த்தனை வலிமை பெறும்.

தேவாரம் தந்த சைவ சமயக் குரவர்கள் மூவரும் உணர்த்துவது அதைத்  தான்.

(கோவில்களில் கல்லை அடுக்கி வைத்தால் வீடு கட்டும் யோகம் வரும் என்பது தவறான நம்பிக்கை. அதை நீங்கள் செய்ய வேண்டாம்!)

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் - மட்டுவார்குழலி
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் – மட்டுவார்குழலி

====================================================
முதலாம் திருமுறை
பாடியவர் : திருஞானசம்பந்தர்
பதிகம்: 1:98 | தலம்: திருச்சிராப்பள்ளி | பண்: குறிஞ்சி

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிரு(ம்)மே.

பொருள் : நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதிஉடன் வைத்தல் பழி அன்றே?

பொருள் : சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?

மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம்(ம்) அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

பொருள் : மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்துஇடை வைகி,
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,
கறை மல்கு கண்டன், கனல்எரிஆடும் கடவுள்(ள்), எம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!

பொருள் : பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

கொலை வரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்!
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளைநிறம் ஆமே?

பொருள் : கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

பொருள் : எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மே செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!

பொருள் : கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன்ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்—
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

பொருள் : மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

பொருள் : பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

நாணாது உடைநீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

பொருள் : நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமலஊரில் கவுணியன்—
ஞானசம்பந்தன்—நலம் மிகு பாடல்இவை வல்லார்
வான சம்பந்தவரொடும் மன்னி வாழ்வாரே.

பொருள் : தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

[END]

7 thoughts on “நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

  1. சுந்தர்ஜி
    நம் வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் பன்னிரு திருமுறைகளில் அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது. –
    அதை நாம் பயன்படுத்துவோம்.

    பாடலும் அதன் பொருள்ளும் மிக அருமை.

  2. எனது சொந்த அனுபவம்.-இந்த பதிகத்தை படித்தால் நிச்சயம் பயன் உண்டு. ஆரம்பத்தில் எப்போதும் போல் சோதனை கொடுத்து , பின்னர் அருள் புரிந்தார்.
    இறைவனுக்கு நன்றி

  3. Dear Sundarji

    Thank you for publishing such an excellent pathigam. Already I know about this. Before seventeen years back, daily I studied this pathigam along with my friend and bought a house in saligramam.
    Thanks a lot for your publication.

    Regards
    Uma

  4. thiruchittrambalam,om chiva chiva om, ayya,margazhi mathaththil devara padaigalai padalama.thayavusaithu thayrivikkavum,nantri,OM CHIVA CHIVA OM,THIRUCHITTRAMBALAM.

  5. ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்) சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு. இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே! இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!” இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “கிராண்ட் கன்யான்” என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “சிவம், விஷ்ணு, பிரம்மன்” மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் (கிட்டதட்ட) காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட (அ) உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது எத்தனை பேருக்கு தெரியும்? ….

Leave a Reply to A.S.PRABAKAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *