Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? குழந்தைகள் தின ஸ்பெஷல்!

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? குழந்தைகள் தின ஸ்பெஷல்!

print
ன்று நவம்பர் 14. ‘குழந்தைகள் தினம்’. பண்டித நேருவின் பிறந்தநாள். குழந்தைகளை போல மிகச் சிறந்த ஆசிரியர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. குழந்தைகளை போன்ற ஒரு ஒளஷதம் (மருந்து) எந்த உலகிலும் இல்லை. மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் கூட நீங்கள் கற்றுக்கொள்ள முடியாத பாடத்தை ஒரு குழந்தையிடம் நீங்கள் சிறிது நேரத்தை செலவழிப்பதன் மூலம் அனாயசமாக கற்றுக்கொள்ளலாம். மிகப் பெரிய கவலைகள் கூட ஒரு குழந்தையின் சிரிப்பை கண்டால் பறந்தோடிவிடும்.

(இதை நேற்றே அளித்திருக்க வேண்டியது. நேற்று இரவு டைப் செய்து கொண்டிருக்கும்போதே கரண்ட் திடீரென போய்விட்டது. எனவே UPS ல் பவர் இருக்கும்போதே போஸ்ட் செய்துவிடவேண்டும் என்று ‘பிறந்த நாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன’ என்பது தொடர்பான பதிவை அளித்துவிட்டேன். தற்போது இந்த பதிவு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்!)

குழந்தைகளிடம் நாம் கற்றுகொள்ளக்கூடிய விஷயங்கள் உண்மையிலேயே மலைப்பை ஏற்படுத்துகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போமா?

நிகழ்காலத்தில் வாழ்வது

எந்தக் குழந்தையாவது சிந்திப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் கடந்த காலத்தை பற்றியோ, எதிர்காலத்தை பற்றியோ சிந்திப்பதில்லை. அவை நிகழ் காலத்தில்  வாழ்கின்றன. அது தான் குழந்தைகளின் முக்கிய குணம். அது தான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். எனவே தான் “Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That is why it is called the present.” என்று சொன்னார்கள்.

நம்பிக்கை

குழந்தைகளை பொருத்தவரை அவற்றுக்கு அவர்களின் பெற்றோர்கள் தான் உலகம். காரணம் அவர்கள் மீது அவை கொண்டுள்ள நம்பிக்கை. நம்மை பார்த்துக்கொள்ள தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றன. அதே போன்றதொரு நம்பிக்கை நமக்கு கடவுளிடமும் வேண்டும்.

குற்றங்களை மறந்துவிடுதல்

கடவுளுக்கு அடுத்து குழந்தைகளிடம் தான் இந்த குணம் உள்ளது. குற்றங்களை செய்வதும் அதை மன்னிப்பதும் மனிதர்களுக்கு உள்ள இயல்பு. ஆனால் அவற்றை மறந்துவிடுவது தான் கடவுளின் இயல்பு. கடவுள் மட்டும் நம் குற்றங்களை கணக்கெடுக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று யூகிக்க கூட முடியவில்லை. குழந்தைகளும் அப்படியே….!

திருவள்ளுவர் குருகுல குழந்தைகள்
நமது விநாயகர் சதுர்த்தி அன்னதானத்தின் போது

அச்சமின்மை

குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக மிகப் பெரிய பாடம் இது. குழந்தைகள் எப்போதும் எதற்கும் பயப்படுவதில்லை.  நினைப்பதை தைரியமாக செயல்படுத்துகின்றன. அச்சங்கள், சந்தேகங்கள், கவலைகள் இவை எதுவுமே குழந்தைகளிடம் இருக்காது.

இதயம் சொல்வதை கேள்

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இது. நாம் மூளை சொல்வதை கேட்கிறோம். குழந்தைகள் இதயம் சொல்வதை கேட்கின்றன. (adults live in mind, children live in the heart). அதனால் தான் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக, நேர்மறையாக, எனர்ஜியுடன் இருக்கின்றனர். தன் திறமை மீது தானே சந்தேகப்படுவது, பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவை குழந்தைகளிடம் ஒரு போதும் இருப்பதில்லை. நாம் இதை பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் மட்டுமே பெறமுடியும்.

உள்ளுணர்வை நம்புதல்

நாம் இந்த உலகத்திற்கு வரும்போதே நமக்கு தேவையானதை (ஆற்றல்) நம்முடனே நாம் கொண்டுவருகிறோம். அவை தான் உள்ளுணர்வு, தன்னையறிதல் என்றெல்லாம் கூறப்படுகிறது. உலகம் முழுதும் நீங்கள் கற்று தேர்ந்தாலும் உங்கள் உள்ளுணர்வுக்கு அவை ஈடாகது. உங்கள் ஆழ்மனதின் ஆற்றலுக்கு முன்பு அவை தூசி. எனவே தான் விவேகானந்தர் – WHAT YOU THINK YOU BECOME என்றார். குழந்தைகள் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட்.

தனித்தன்மை

குழந்தைகள் எப்போதுமே தனித் தன்மை வாய்ந்தவை. ஆனால் நாம் மற்றொருவராக மாற முயற்சித்து நம்மை இழக்கும் மாய வலையில் வீழ்வோம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதைத் தான் மற்றவர்கள் விரும்பவேண்டுமே தவிர, நாம் என்னவாக போகிறோமோ அதற்காக அல்ல. நம்மை உண்மையில் நேசிக்கும் நபர் நம்மைத் தான் நேசிக்கவேண்டுமே தவிர, மற்றவர்களின் நகல்களை அல்ல.

baby-trying-to-walk-2

முயற்சிகளை கைவிடாதிருத்தல்

குழந்தை நடக்க கற்றுக்கொள்ளும்போது ஒன்றிரண்டு அடி நடக்க ஆரம்பித்த பிறகு கீழே விழுந்துவிடும். உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்து மீண்டும் நடக்கும். மீண்டும் விழுந்துவிடும். ஆனால் மீண்டும் நடக்கும். நடையை பழகும் வரை எத்தனை முறை விழுந்தாலும் குழந்தைகள் தங்கள் முயற்சிகளை நிறுத்துவதில்லை. காரணம் என்ன தெரியுமா? கீழே விழுவது நடப்பதற்கு கற்றுகொள்வதில் ஒரு முக்கிய அங்கம் என்று அது நினைக்கிறது. இந்த குணம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? சற்று யோசித்து பாருங்கள்.

சிரிப்பு

குழந்தைகளை போல மகிழ்ச்சியான நபர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. அவர்களது மகிழ்ச்சியை அவர்களது சந்தர்ப்பங்களோ சூழ்நிலைகளோ பாதிப்பதில்லை. ஆனால் நாம் இந்த அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சிரிக்கவே மறந்துவிடுகிறோம். எனவே குழந்தைகளிடம் நாம் உண்மையிலேயே எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை கற்றுக்கொள்ளவேண்டும்.

நண்பர்களை சுலபமாக உருவாக்கி கொள்

குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கிய பண்பு இது. மற்றவர்கள் நம்மை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்பாடாது நண்பர்களை நட்பு வட்டத்தை உருவக்கிகொள்ளவேண்டும். கடைக்கோ, கேண்டீனுக்கே, வங்கிக்கோ நாம் எங்கே இருந்தாலும், எங்கே சென்றாலும் அங்கு ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளவேண்டும்.

 பிரேமவாசம் - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில்

பிரேமவாசம் – ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில்

வாய்விட்டு மனம் விட்டு பாடுவது

யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் குழந்தைகள் அது பாட்டுக்கு பாடுக்கொண்டிருக்கும். அதன் அழகே தனி. பாடுவது எத்தனை பெரிய பயிற்சி தெரியுமா? நமது ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பதில் அதற்கு இணை எதுவும் இல்லை. மன இறுக்கத்தை அகற்றும். பாடுவது என்றால் பத்து பேருக்கு கேட்டபடி பாடவேண்டும் என்றில்லை. ஜஸ்ட் ஏதாவது ஒரு பாடலை முனுமுனுத்தாலோ அல்லது ஹம் செய்தால் கூட போதும். குளிக்கும்போது சும்மா ஒரு பாட்டு பாடிப் [பாருங்க. அன்றைக்கு நாள் முழுதும் இனிமையாக இருக்கும்.

Child napகுட்டித் தூக்கம் போடுவது

குழந்தைகளிடம் நான் உண்மையிலேயே பொறாமைப்படும் விஷயம் இது. உட்கார்ந்த படியே, விளையாடியபடியே, என்த வித சௌகரியமும் இல்லாத இடத்தில் கூட ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடுவது குழந்தைகள் வழக்கம். அது நம்மை சுறுசுறுப்பாக்குவதுடன் எழுந்த பிறகு மூளை சற்று புத்துணர்வுடன் இருக்கும். இப்போதெல்லாம் பலருக்கு தூக்க மாத்திரை போட்டு படுத்தாகூட தூக்கம் வரமாட்டேங்குது.

தைரியமாக ரிஸ்க் எடுப்பது

குழந்தைகளிடம் உள்ள மிகப் பெரிய குணங்களில் ஒன்று இது. விளைவுகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் ரிஸ்க் எடுப்பது. குழந்தைகள் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த தயங்குவதேயில்லை. பதற்றம் எல்லாம் பெற்றோர்களுக்கு தான்.

ஆராயும் ஆர்வம்

குழந்தைகள் நமக்கு கற்றுத் தரும் மற்றொரு பெரிய பாடம் இது. வாழ்க்கை முழுதும் நமக்கு ஒன்றை தெரிந்துகொள்வதில், ஆராய்வதில் ஆர்வம் இருக்கவேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக நமாமி சுற்றி உள்ள விஷயங்கள் அனைத்தையும் நாம் ஆர்வத்துடன் கவனிக்கவேண்டும்.

=======================================================

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது
காற்று வந்தால் மறு படியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறு படியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகாளாய் இருந்தவர் தான் பெரியவரானர்
பிள்ளைகாளாய் இருந்தவர் தான் பெரியவரானர்
அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

[END]

5 thoughts on “குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? குழந்தைகள் தின ஸ்பெஷல்!

  1. அத்தனையும் முத்தான கருத்துக்கள் . அள்ளிக்கொள்ளத்தான் ஆள் இல்லை … காலத்தின் கோலம்..

  2. குழந்தைகளிடம் நாம் கற்றுகொள்ளக்கூடிய விஷயங்கள் உண்மையிலேயே மலைப்பை ஏற்படுத்துகின்றன.

    1-நிகழ்காலத்தில் வாழ்வது.
    2-நம்பிக்கை.
    3-குற்றங்களை மறந்துவிடுதல்.
    4-அச்சமின்மை.
    5-இதயம் சொல்வதை கேள்.
    6-உள்ளுணர்வை நம்புதல்.
    7-தனித்தன்மை.
    8-முயற்சிகளை கைவிடாதிருத்தல்.
    9-சிரிப்பு.
    10-நண்பர்களை சுலபமாக உருவாக்கி கொள்.
    11-வாய்விட்டு மனம் விட்டு பாடுவது.
    12-குட்டித் தூக்கம் போடுவது.
    13-தைரியமாக ரிஸ்க் எடுப்பது.
    14-ஆராயும் ஆர்வம்.

    சிறு சிறு தலைப்பை கொடுத்து விளக்கியவிதம் அருமை .
    ஒரு ஒரு தலைப்பும் ஒரு பதிவிற்கு சமம் .

    படிக்கும் போது நானும் குழந்தையாக மாறிவிட்டேன் .

    -பாராட்டுக்கள்
    -மனோகர்

  3. டியர் Sundarji

    Happy Morning to everybody,

    This article is very nice. Definitely, we have to learn more from children. Wonderful article. Thanks a lot.
    Regards
    Uma

  4. வணக்கம் சுந்தர் ,

    நீங்கள் சொல்லவந்த அனைத்தையும் இந்த ஒரு ஒரு பாடல் சொல்லிவிட்டது

    அன்பு நண்பன் ,
    செல்வகணபதி .வே

  5. Dear sundarji,

    It was a very nice article.
    In this current scenario we even forget to laugh and spend time with others.I have Learnt many new things from this article.

    Thanks and Regards
    Harish.V

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *