Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

print
பிறந்த நாளை முன்னிட்டு தளத்திலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தன்னலமற்ற  சேவையை உங்களுக்கு தொடர்ந்து அளிப்பதே உங்கள் அன்புக்கு நான் செய்யும் கைமாறாக இருக்க முடியும்.

நேற்று காலை நான் எழுந்தது முதல் மறுபடியும் உறங்கச் சென்றது வரை நெகிழ்ச்சியான அனுபவங்களுக்கு குறைவில்லை. குருவருளும் திருவருளும் குறைவின்றி பொழிந்ததை உணர்ந்தேன். அனைத்தையும் எழுதி வருகிறேன்.

அடுத்து வடலூர் பயண அனுபவங்கள். வடலூரில் நான் சந்தித்த அந்த முக்கிய பிரமுகரை போன்று இதுவரை சந்தித்ததில்லை. இனியும், அப்படி ஒருவரை சந்திப்பேனா என்று தெரியாது. இந்த உலகில் இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியந்து போவீர்கள் என்பது உறுதி.

ஞாயிறு பயணத்தால் பதிவுகள் அளிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாளில் அனைத்தையும் பேலன்ஸ் செய்து மறுபடியும் பழைய ஸ்பீடுக்கு வந்துவிடுவேன். அது வரை சற்று பொறுமையாக இருக்கவும். நமது தளத்தின் மீதும் பதிவுகள் மீதும் அனைவருக்கும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துவிட்ட நிலையில், எழுதும்போது அதை PRESENT செய்யும்போது சற்று மெனெக்கெட வேண்டியுள்ளது.

இப்போதைக்கு ஒரு FILLER போல இந்த பதிவை பாவிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்!

நாம் உய்யும் பொருட்டும் அவனருள் பெறும் பொருட்டும் நம் முன்னோர்கள் எத்தனையோ தானங்கள் பற்றி சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். நாம் அடிக்கடி செய்யும் தானங்களை தவிர அவர்கள் அப்படி கூறியுள்ள எத்தனையோ மகத்துவம் வாய்ந்த தானங்கள் இருக்கின்றன. இவற்றில் பல மிக மிக சுலபமானது. எளிமையானது. எவரும் செய்யக்கூடியது.

அப்படி ஒரு தானம் பற்றி சமீபத்திய தினமலர் – ஆன்மீக மலரில் படிக்க நேர்ந்தது. உங்களிடம் அதை பகிர்ந்துகொள்கிறேன்.

======================================================

Umbrella Dhanamகுடை தானம் செய்வோமே!

தானங்களில் உயர்ந்தது கல்விதானம். அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை, காலனி தானம் என்கிறது ஒரு கதை.

பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது, கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகா தேவி எடுத்து வருவாள். ஒரு முறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று.

“ஏன் தாமதமாக வந்தாய் தேவி” என்றார் ஜமதக்னி.

“நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன் காரணமாக அந்த மரநிழலில் சற்று இளைப்பாறி வந்தேன்.,” என்றாள்.

ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கி திருப்பினார்.

“சூரியனே! உலகோரை சுட்டேரிப்பதர்க்கும் ஒரு அளவில்லையா?” என்று கேட்டு பானத்தை தொடுக்கும் முன், சூரியன் கீழே வந்துவிட்டான். ஜமதக்னியை சரணடைந்தான்.

ஒரு குடையையும் காலணிகளையும் ரேணுகா தேவிக்கு கொடுத்து, வெயிலில் இருந்துகாத்துக்கொள்ளும்படி வேண்டினான்.

கோடையோ, மழையோ குடையும் காலணியையும் தானமாக கொடுத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

======================================================

திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான். வெயிலில் மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார்.

அதைப் பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான். பின் அவன் தன் வழியே திரும்பிய போது ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது. அப்போது எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டுபோக வந்தார்கள்.

அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எம தூதர்களைத் தடுத்து, இந்த வேடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகி விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அந்த திருடனின் உயிரைக் கொண்டு சென்றனர்.

(நன்றி : தினமலர் – ஆன்மீக மலர் & மாலைமலர்.காம்)

======================================================

நண்பர்களே, குடை தானம் மற்றும் செருப்பு தானம் குறித்த மேன்மையை உணர்த்துவதற்க்கே இக்கதைகள் தரப்பட்டுள்ளது. கதைகளில் உள்ள மையக்கருத்தை மட்டுமே எவரும் எடுத்துக்கொள்ளவேண்டும். வண்டி வண்டியாய் பாவம் செய்துவிட்டு செருப்பும் குடையும் தானமளித்தால் நம் பாவம் போய்விடும் என்று கருதக்கூடாது.

[END]

2 thoughts on “திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

  1. Happy Morning to right mantra readers

    சுந்தர்ஜி, நேற்றைய பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த வருடம் முழுவதும் energetic ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த வருட பிறந்த நாள் உங்கள் partner உடன் celebrate பண்ண இறைவன் அருள் புரியட்டும்

    Read தி above ஸ்டோரி and noted தி contents

    Regards
    உமா

  2. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். அதையும் விட சிறந்தது குடை மற்றும் செருப்பு தானம். அதை பற்றிய இரு கதைகளும் ன்றாக உள்ளது. அக்காலத்தில் உள்ளதும் இக்காலத்தில் நடந்ததும் ஆகிய இரு வேறு கதைகள் படித்து பயன் பெரும் படி இருந்தது.

    கடைசியில் சொல்லியிருக்கும் குறிப்பு எல்லாவற்றையும் விட அருமை.

Leave a Reply to parimalam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *