Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > தினையளவு செய்தாலும் பனையளவு திருப்பித் தருவான் – அவன் தான் இறைவன்! Rightmantra Prayer Club

தினையளவு செய்தாலும் பனையளவு திருப்பித் தருவான் – அவன் தான் இறைவன்! Rightmantra Prayer Club

print
லயம் மற்றும் தெய்வ வழிபாடு தொடர்பான அன்றாட செயல்களுக்கு பலன் உண்டா? ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கு உண்டு.

அதாவது “கோவிலுக்கு அடிக்கடி செல்கிறேன். விளக்கு ஏற்றுகிறேன். கற்பூரம் கொளுத்துகிறேன். பூக்கள் வாங்கித் தருகிறேன். ஏன்.. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கோவிலின் தேவைகளுக்கு என்னால் இயன்றவற்றை செய்கிறேன். பல கோவில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி  செய்திருக்கிறேன். இதெல்லாம் வீண் தானோ என்று சில சமயம் தோன்றுகிறது சார். எனக்கோ என் குடும்பத்திற்கோ ஒன்னும் பிரயோஜனமில்லை. இருந்தாலும் நிறுத்த மனிசில்லாமல் செய்துகிட்டு தான் வர்றேன்” – இப்படிப் பட்ட எண்ணம் பலருக்கு உண்டு.

இதற்கு பதில் : “நிச்சயம் உண்டு!”

ஆண்டவன் தொடர்பாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. எந்தளவு ஆத்மார்த்தமாக செய்கிறீர்களே அந்தளவு பலனின் ஆழம் இருக்கும்.

செய்யும் உதவிகளை மனிதர்கள் வேண்டுமானால் மறக்கலாம். ஆனால் கடவுள் மறக்கமாட்டார். வட்டியும் முதலுமாக நமக்கு உரிய நேரத்தில் திரும்பவரும்.
கடவுளை பொருத்தவரை அவர் ஒரு கடன்காரன் போலத் தான். நம்மால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் அவரிடம் நாம் கொடுத்துவரவேண்டும். நமக்கு தேவையான நேரத்தில் வட்டியும் முதலுமாக அவர் நாம் கொடுத்த கடனை தீர்ப்பார்.

சின்ன வயசுல எங்கேயோ எப்பவோ ஏதாவது ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை கொடுத்திருப்பீங்க. உங்க நன்கொடை அக்கோவிலில் ஓரிரு செங்கலாக மாறியிருக்கும். அதே போல, இந்த கோவிலுக்கு போய்ட்டு வந்தா நல்லதுன்னு யாரோ சொல்லியிருப்பாங்க. கடனை உடனை வாங்கி உடனே அந்த கோவிலுக்கு குடும்பத்தோட போய் வந்திருப்பீங்க. ஆனா போய்ட்டு வந்த பிறகு பெருசா எதுவும் மாறிவிடவில்லையேன்னு தோணியிருக்கும்.

அப்போது நீங்கள் செய்த செயல்கள் தான் இப்போது உங்களை எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து காத்து வருவதை நீங்கள் அறியமாட்டீர்கள்.

மனித உடம்பே நோய்க்கு ஆளாகும் ஒரு கூடு தான். சராசரியா நம்ம உடம்பை தினசரி 200 நோய்கள் தாக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி என்னும் அற்புதம் விஷயம் (IMMUNITY), நோய்களை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது. அந்த நோயெதிர்ப்பு சக்தி மட்டும் இல்லை என்று வைத்துக்கொள்வோம், நாம் அனைவரும் இப்போது மருத்துவமனைகளில் தான் படுத்துகிடப்போம்.

வாழ்க்கை தான் உடம்பு என்று வைத்துக்கொள்வோம்…. கடவுளுக்கு செய்யும் கைங்கரியம், ஆலய தரிசனம், அறப்பணிகள் முதலியவை தான் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இவை தான் உங்களை காக்கும் ரட்சையாகும்.

================================================

திரௌபதியிடம் கண்ணன் பெற்றதும் திரும்ப கொடுத்ததும் !

பகவான் கிருஷ்ணர் சிறு வயதில் ஒரு முறை நண்பர்களுடன் ஒரு நீர்நிலையில் விளையாடிக்கொண்டிருந்தார். மரத்தில் ஏறுவதும் பின்னர் குளத்தில் குதிப்பதும் என்று சிறுவர்களுக்கேயுரிய அந்த குதூகலத்துடன் அவர் விளையாட்டு இருந்தது. விளையாட்டின்போது நண்பர்கள் கண்ணனின் இடுப்பில் இருந்த ஆடையை உருவிக்கொண்டு, “நீ எப்படி வெளியே வர்றே பார்க்கலாம் கண்ணா” என்று அவரை அப்படியே குளத்தில் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இடுப்பில் ஆடையின்றி தவிக்கும் கண்ணன், வெளியே வரமுடியாது குளத்திலேயே நின்றுகொண்டிருக்கிறார். நம்மையெல்லாம் கரையேற்ற அவதரித்த கண்ணன், நண்பர்களின் குறும்பால் தான் கரையேற முடியாது நின்று கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து அந்த பகுதியில் திரௌபதி அர்ஜூனனுடன் இரதத்தில் சென்று கொண்டிருந்தாள்.

ஆடையின்றி குளத்தில் நின்றுகொண்டிருந்த பகவான் “திரௌபதி… உதவி!” என்று அழைக்க, இது கண்ணனின் குரலாயிற்றே… எங்கேயிருந்து வருகிறதோ தெரியவில்லையே என்று சுற்று முற்றும் பார்க்க, குளத்தில் கண்ணன் நின்றுகொண்டிருக்கிறான்.

உடனே இரதத்தில் இருந்து குளக்கரைக்கு வருகிறாள். நண்பர்கள் தம்மை தனது ஆடையை உருவி தவிக்கவிட்டுவிட்டு சென்ற கதையை கிருஷ்ணர் கூறி, இடுப்பில் கட்டிக்கொள்ள ஏதேனும் ஆடை இருந்தால் தா என்று கேட்கிறான். திரௌபதி சற்றும் தாமதிக்காமல் தனது புடவையின் முந்தானை பகுதியை, ஒரு துண்டின் அளவு கிழித்து கண்ணனை நோக்கி வீசுகிறாள்.

அதை பெற்றுக்கொள்ளும் கண்ணன், அதை கட்டிக்கொண்டு கரையேறுகிறான்.

“திரௌபதி, சமயத்தில் என் மானத்தை மறைக்க நீ இந்த உதவியை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்!” என்று கூறிவிட்டு செல்கிறான்.

காலம் உருண்டோடுகிறது. திரௌபதி இதையெல்லாம் மறந்துவிட்டாள். ஆனால் பகவான்?

விதிவசத்தால் சூதில் தோற்கும் தருமர் அடுத்தடுத்து அனைத்தையும் பணயம் வைக்க, இறுதியில் மனைவியையும் வைத்து தோற்றுவிடுகிறார். ஏற்கனவே திரௌபதி மீது தீராக்கோபத்துடன் இருந்த துரியோதனன், துச்சாதனனை வைத்து சபை நடுவே திரௌபதியின் சேலையை உருவ, நியாயம் கேட்டு சபையில் அங்கும் இங்கும் ஓடுகிறாள் திரௌபதி. பேயாட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும் அல்லவா? அவள் கூக்குரலுக்கு எந்த வித பயனும் கிட்டவில்லை.

(என்னவோ தெரியலே… திரௌபதியின் வஸ்திர ஹரனத்தை பற்றி படித்தாலே கேள்விப்பட்டாலோ இப்போது கூட என் கண்கள் என்னையுமறியாமல் கலங்கிவிடுகிறது.)

துச்சாதனன் சேலையை உருவ ஆரம்பிக்க, இறுதியில் பகவான் கிருஷ்ணரை சரணடைகிறாள் திரௌபதி. ஆபத்பாந்தவன் உடனே அருள் செகிறான். அடுத்த நொடி அவள் புடவை எவரும் நினைத்து பார்க்காத வகையில் வளர்கிறது.

எல்லாம் முடிந்தவுடன், துவாரகை சென்று கிருஷ்ணரின் பாதத்தில் பணிகிறாள் திரௌபதி. பரம்பொருள் புன்முறுவல் செய்துகொண்டே “பாஞ்சாலி, சிறுவயதில் நீ உன் புடவையை கிழித்து என் மானத்தை காத்ததை நான் மறக்கவில்லை. ஆகவே தான் இன்று சபைநடுவே உன் மானத்தை காப்பாற்றினேன்!” என்கிறான்.

இறைவனை பொருத்தவரை கடுகளவு நீங்கள் செய்யும் கைங்கரியம் பனையளவு திரும்ப வரும். எள்ளளவும் சந்தேகங்கொள்ளாமல் தொடர்ந்து உங்கள் கடமையை செய்துவாருங்கள். (ஆனால் எதையும் எதிர்பார்த்து நாம் செய்யவேண்டாம். அப்படி செய்தால் அது கைங்கரியம் அல்ல. வியாபாரம்.)

====================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

‘வேத அத்யபகர்’ சத்தியமூர்த்தி சுவாமி!

வாழ்க்கையில் சந்திக்கும் சிறு ஏமாற்றம் கூட நம்மையெல்லாம் பகவானை இந்த உலகை வெறுக்கச் செய்து முடக்கிப் போட்டுவிடுகிறது. ஆனால் இதோ இங்கே ஒருவரை பாருங்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பே இரு கண்களிலும் பார்வையை இழந்த இந்த பெரியவர் இப்போது கூட மாணவர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கும் வகுப்பை தவறவிடுவதில்லை. சத்தியமூர்த்தி சுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள பிளாட் ஒன்றில் தனது மகனுடன் வசித்து வருகிறார். சென்னை போர்ட் டிரஸ்ட்டில் உயரதிகாரியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் இவர். மறைந்த கணித மேதை இராமானுஜத்தை நன்கு அறிந்தவர் இவர்.

(மார்கழி மாதம், மேற்கு மாம்பலம் பிரசன்னா வேங்கடாஜாலாபதி கோவிலில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஸ்ரீமான் ட்ரஸ்ட் நடத்திய தொண்டின் ஆராதனை வைபவத்தில் முதலில் கௌரவிக்கப்பட்டவர் இவர்.)

தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு நேரடி உதாரணம் இவர். புறக்கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், அகக்கண்ணால் பார்க்கும் திறன் பெற்றவர் இவர். தன் முன்னே எத்தனை மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை உதடுகள் எழுப்பும் சத்தத்தை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்.

அதே போல, ஒவ்வொருவரும் வேதத்தை உச்சரிக்கும்போதும் செய்யும் தவறுகளையும் உன்னிப்பாக கவனித்து சொல்வார். தான் பார்வையில்லாதிருக்கும்போதும் இந்த உலகிற்கு, குறிப்பாக பக்தி உலகிற்கு ஏதேனும் தொண்டு செய்யவேண்டும் என்கிற அவர் வைராக்கியம் இருந்ததால் அவரது குறைபாடு அவருக்கு பெரிதாக தெரியவில்லை. எம்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்யும்போது இவரது மாணவர்கள் பார்த்தசாரதி கோவிலையும், இராமானுஜர் சன்னதியையும் வேத கோஷங்களால் அதிரச் செய்கின்றனர். இன்று வரை தினசரி இரண்டு மணிநேரம் மாணவர்களுக்கு இலவசமாக வேதம் சொல்லிக்கொடுத்து வருகிறார் சத்தியமூர்த்தி சுவாமி.

வேதங்களை அனைவரும் மறந்துவரும் காலகட்டம் இது. வேதத்தை கற்று, தேர்ந்து அதை பரவச் செய்ய வேண்டிய கடமையில் இருப்பவர்கள் அதை மறந்து ஏ.டி.எம். மெஷினாக எதிர்காலத்தில் மாறவேண்டி கல்வி கற்கின்றனர். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து முறையான சமஸ்கிருத உச்சரிப்பு எவருக்கேனும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட சூழ்நிலையில், திரு.சத்தியமூர்த்தி சுவாமி செய்து வரும் இந்த கைங்கரியம் பகவத் சேவையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது ஆண்டுவிழாவிற்கு இவரை அழைத்து விருதை அளித்து கௌரவிக்க வேண்டி இவரை சந்திக்க திருவல்லிக்கேணியில் உள்ள இவரது வீட்டிற்கு நண்பர் குட்டி சந்திரனுடன் இரண்டு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தோம்.

இவர் வீடு எனக்கு தெரியாது. ‘இரு கண்களிலும் பார்வை கிடையாது. இவர் திருவல்லிக்கேணி கோவிலில் வேதம் சொல்லித் தருகிறார்!’ என்கிற விபரம் மட்டுமே எனக்கு தெரியும்.

இருப்பினும் தேடல் இருந்தால் தேடுவது கிடைக்காதா என்ன? (சற்று தாமதமானாலும்!)

சில நிமிடங்களில் இவரது வீட்டை கண்டுபிடித்துவிட்டோம். கோவிலுக்கு அருகிலேயே இருந்தபடியால் அதிகம் அலைச்சலில்லை.

நேரே இவரது பிளாட்டுக்கு சென்று இவரை சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நாம் வந்த நோக்கத்தை கூறினோம்.

“எங்கள் ஆண்டுவிழாவிற்கு உங்களை அழைத்து விருதை தந்து கௌரவிக்க விரும்புகிறோம். வந்திருந்து இந்த எளியவர்களின் அன்புப் பரிசை பெற்றுக்கொண்டு எங்களையும் ஆசீர்வதிக்கவேண்டும் சுவாமி” என்றேன்.

ஆனால் சத்தியமூர்த்தி சுவாமி மறுத்துவிட்டார். நமது கௌரவத்திற்கு நன்றி தெரிவித்தவர், தம்மால் எங்கும் வரமுடியாது என்றும், தம் உடல்நிலை பிரயாணத்திற்கு ஒப்புக்கொள்வதில்லை என்றும் கூறினார்.

கால் டாக்சி வைத்து இவரை பத்திரமாக அழைத்து சென்று பத்திரமாக மீண்டும் விட்டுவிடுவதாக கூறினோம். அப்படியும் மறுத்துவிட்டார்.

“என் பொருட்டு உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. என்னை கூட்டிண்டு போக நாலு பேர்… கொண்டு வந்துவிட நாலு பேர் வேணும். நீ பங்கஷனை பார்ப்பியா இல்லே என்னை கவனிச்சுக்கிவியா? உனக்கு தான் தேவையில்லாத டென்ஷன்… அதனால தான் சொல்றேன். பங்க்ஷன் நல்லபடியா நடக்க என்னோட ஆசிகள்” என்றார்.

மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது நம் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, அக்டோபர் 6 ஞாயிறு அன்று பிரார்த்தனைக்கு  தலைமையேற்று எங்களுக்காக எங்கள் வாசகர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

நம்முடன் வந்திருந்த நண்பர் குட்டி சந்திரன் சத்தியமூர்த்தி சுவாமியிடம் ஆசிபெற்றபோது!

அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து, கால்களில் விழுந்து ஆசி பெற்றோம்.

“எங்கள் தள வாசகர்கள் எந்த குறையும் இல்லாம எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்!” என்று கூறினேன். “நான் தினமும் பிரார்த்தனை பண்ணிண்டு தான் இருக்கேன். அதனால் என்ன உங்க வாசகர்களுக்கும் சேர்த்து இனிமே பிரார்த்தனை பண்ணா போறது” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அப்படியே எனது தனிப்பட்ட கோரிக்கை ஒன்றையும் கூறி ஆசி கூறும்படி கேட்டுக்கொண்டேன். (இப்படிப் பட்ட வேதம் படித்த பெரியவங்க ஆசி பலிக்கும் என்கிற நம்பிக்கை தான்!)

“அதிசீக்கிர விவாக பிராப்திரஸ்து.  கல்யாணம் ஆனவுடனே உன் பாரியாளை அழைசிண்டு வா. ஆசீர்வாத பஞ்சாதி சொல்லி வாழ்த்துறேன்” என்றார்.

(வேதத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பஞ்சாதி உண்டு. கன்னிப் பெண் ஆசி பெற்றால் ஒரு பஞ்சாதி, சிறு குழந்தை ஆசி பெற்றால் ஒரு பஞ்சாதி, புதுமணத் தம்பதிகள் ஆசி பெற்றால் ஒரு பஞ்சாதி இப்படி.)

இன்று இந்த பதிவை டைப் செய்யும்போது நாளை பிரார்த்தனையை நினைவூட்டுவதற்காக அவரை அலைபேசியில் அழைத்தேன். சரியாக அனைத்தையும் நினைவில் வைத்திருந்தார். நேற்றைய விஷயத்தையே இன்று மறந்துவிடும் நமக்கு இந்த வயதிலும் பார்வைத் திறன் சவாலுடன் வாழும் இவர் நாம் வந்து சென்றது, நமது பிரார்த்தனை கிளப்பின் நேரம் உள்ளிட்டவைகளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது உண்மையில் ஆச்சரியம் தான்.

“வேதத்தை குறைவின்றி கற்கவேண்டும். கற்றவற்றை கடைசி வரை மறக்கக்கூடாது. அதை நான்கு பேருக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.” – இதுவே இவர் நமக்கு விடுக்கும் செய்தி.

நமது பொறுப்புக்கள் அதிகரித்து விட்டது. கண் முன்னே முடிக்க வேண்டிய கடமைகள் பல மலை போல குவிந்துள்ளன. ரைட்மந்த்ராவுக்கு என்று தனி அலுவலகம் அமைத்து முழு நேரம் செலவிட்டால் தான் என்னளவில் நான் நினைக்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறேன். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறேன். (அதாவது எனது லட்சியமான ‘ரைட்மந்த்ரா பப்ளிகேஷன்ஸ்’ துவங்கி பல புத்தககங்கள் அதில் பதிப்பிக்கவேண்டும். அந்த அலுவலகத்தில்  இந்த தளத்தின் பணிகள் நடைபெறவேண்டும்.)

எண்ணங்களை திருவருளின் துணைக்கொண்டு விரைவில் செயல்படுத்த முயற்சிக்கிறேன். அப்படிப்பட்டதொரு சூழ்நிலை மலர்ந்தால் இவரிடம் ரெகுலராக சென்று வேதம் படிக்க  விரும்புகிறேன். பார்க்கலாம்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=======================================================

சுட்டிப் பெண் குணமடையவேண்டும்; பெற்றோர் மனம் பூரிக்கவேண்டும்

என் தங்கை மகள் ஹரிணி (வயது 10). விடுமுறைக்கு வந்த இடத்தில் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 30) அன்று மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டாள். பின் தலையில் அடிபட்டுள்ளது. CT ஸ்கேன் எடுத்து உள்ளோம். தற்போது கொஞ்சம் தேறி வருகிறாள். அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும் பின்னந்தலையில் வலி இருக்கிறது. பழைய நினைவுகள் சற்று தவறியிருக்கிறது. அவள் பூரண குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் வேண்டிகொள்கிறேன் .

– சுந்தரி வெங்கட், மதுரை

=======================================================

காதலித்து மணந்தோம்; பிரிவில் வாடுகிறோம்!

என் பெயர் சிவராஜ். என் மாமன் மகள் திவ்யாவிற்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் மற்றும் பதிவு திருமணம் முடிந்தது. எங்கள் இருவரின் விருப்பத்தின் பெயரில் தான் திருமணம் நடந்தது.

என்னுடன் வாழ்ந்த என் மனைவி திவ்யா தற்பொழுது பிரிந்து இருக்கிறாள் நானும் என் மனைவியும் ஒன்றாக வாழ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

– சிவராஜ், ஊட்டி

=======================================================

கொல்லாமல் கொல்லும் கடனும் பாடாய்படுத்தும் நோயும் நீங்க வேண்டும்!

Hi Sundar,

I need a help from Right mantra for Prayers.

Abdulla is our family friend who resides in Theni district. His family is already suffering from lot of debts. In recent years he got Asthma and severe swelling in his foot.

5 Days back  he suddenly felt that he was unable to breath and admitted in Madurai Hospital. He was immediately admitted in ICU. Even though he is moved to normal ward after 3 days, his pulse is still very weak.

It would be a very big help if we could pray for him who is fighting for his life now.

Thanks.

– Shanthi, Coimbatore

=======================================================
நம் பொது பிரார்த்தனை

சோமாலியாவில் பட்டினி சாவு நிற்கவேண்டும்

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று சொன்னார் பாரதி. ஆனால் இன்று ஒரு நாடே பட்டினியின் பிடியில் சிக்கி மக்கள் தினம் தினம் ஆயிரக்கனக்கில் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள். சோமாலியா என்னும் ஆப்பிரிக்க நாட்டில் தான் இந்த நிலை. அதுவும் கடந்த பல ஆண்டுகளாக.

இறைவா உன் பிள்ளைகளில் ஒரு பிரிவினர் மட்டும் இப்படி சாதல் முறையோ?

பாரதியின் துடிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நமக்கு இருக்கவேண்டாமா? அம்மக்களின் பட்டினித் துயர் நீங்கி, அனைவருக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திட பரம்பொருளை வேண்டுவோம்.

=======================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgசிறுமி ஹரிணிக்கு தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆறி, பாதிப்பு முழுமையாக நீங்கி அவள் பரிபூரண குணமடையவும், திரு.,சிவரசா-திவ்யா தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறத்தை இனிதே  நடத்தவும், திரு.அப்துல்லா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை நீங்கி, மருத்துவமனையில் போராடி வரும் அவர் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்பி, எஞ்சிய நாட்களை நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் கழிக்கவும் இறைவனை வேண்டுவோம்.அதே போல பட்டினியால் வாடும் சோமாலியா மக்களின் துயர் நீங்கவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 6, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘திருக்குறள் முரசு’ திரு.இராஜேந்திரன் IRS அவர்கள்.

11 thoughts on “தினையளவு செய்தாலும் பனையளவு திருப்பித் தருவான் – அவன் தான் இறைவன்! Rightmantra Prayer Club

  1. சுந்தர் சார்,

    நம் மகா பெரியவளின் அனுகிரகதல் அவரின் ஆசியாலும் நிச்சயம் இவர்கள் நலம் பெறுவார்கள்.

    நன்றியுடன் அருண்.

  2. கிடைக்கபெற்ற பதவியைவிட, நம்மால் கொடுக்கப்பட்ட(பணம்மல்ல) உதவி கட்டாயம் பலன்தரும்.

  3. வணக்கம் சார்

    மிகவும் அருமையான பதிவு சார்

    அணைத்து நம் தள வாசகர்களாக வேண்டிகொல்வோம் சார்

    நன்றி

  4. சுந்தர்ஜி,
    என் தங்கை மகள் ஹரிணிக்கு பிரார்த்தனை அறிவிப்பு செய்தமைக்காக தங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். தங்களுடைய இந்த பதிவு என் கண்களில் நீரை வர வைத்து விட்டது. – நம் தளத்திற்கு வரும் எல்லா அன்பரின் பிரார்த்தனை நிறைவேற நம் மகா பெரியவரின் ஆசி நிச்சயம் உண்டு.

  5. நீங்கள் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகள் எல்லாம் என் மனதில் அடிக்கடி எழும் கேள்விகள். அதற்கு நானே பதிலும் சொல்லிகொள்வேன். என்னவோ தெரியவில்லை காலையில் 2, 3 முறை நினைத்து விட்டேன். என் மனதில் உள்ளதை படித்தது போல் எழுதி இருக்கிறிர்கள்.
    அப்துல்லா அவர்கள் நார்மல் வாழ்க்கைக்கு திரும்பவும், ஹரிணி நல்லபடியாக குணமடையவும் சிவராஜ் அவர்கள் தன மனைவியுடன் சேர்ந்து வாழவும் நாம் எல்லாம் வல்ல மகா பெரியவா முன்னிலையில் பிரார்த்தனை செய்வோம்.

  6. சுந்தர்ஜி ,

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு. சத்தியமூர்த்தி சுவாமிகள் அவர்களை வணங்கி வரவேற்று இடம்பெற்ற அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நாமும் வேண்டிகொள்வோம். சுவாமிகளின் சேவை கண்டு மிக்க மகிழ்ச்சி. சுவாமிகளை தேடிபிடித்து உங்களுக்காக ஆசி பெற்றது மட்டுமில்லாமல் நம் அனைவர்க்கும் தொடர்ந்து அவரை ஆசீர்வாதம் செய்ய வைத்ததுக்கு சுந்தர்ஜி அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் மிக்க நன்றி.

  7. சிறுமி ஹரிணிக்கு தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆறி, பாதிப்பு முழுமையாக நீங்கி அவள் பரிபூரண குணமடையவும், திரு.,சிவரசா-திவ்யா தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறத்தை இனிதே நடத்தவும், திரு.அப்துல்லா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை நீங்கி, மருத்துவமனையில் போராடி வரும் அவர் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்பி, எஞ்சிய நாட்களை நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் கழிக்கவும் இறைவனை வேண்டுவோம்.அதே போல பட்டினியால் வாடும் சோமாலியா மக்களின் துயர் நீங்கவும் பிரார்த்திப்போம். –

  8. திரு சத்யமூர்த்தி சுவாமிகளுக்கு நமஸ்காரம் ..
    .நாங்களும் பிரார்த்தனையில் எங்கள் குருநாதர் கரூர் சித்தர் பாலுசாமி அய்யா அவர்களிடம் வேண்டுதலை சமர்ப்பிக்கிறோம்
    .
    நெஞ்சம் நிறைந்த அன்புடன் ,
    ராஜேந்திரன்
    விசாகபட்டினம்

  9. நான் கண்ட உண்மை “கடவுள் பணக்கரன்களுக்கு முதலிலும் வறியவர்களுக்கு லேட்டாகவும் உதவுகின்றன் “. இதுதான் அப்படமான உண்மை.உண்மை உரக்கவே சொல்லப்படவேண்டும் .கடவுள் ஏழைகளின்
    தாதா.பணகரகளின் நண்பன்.

  10. குழந்தை ஹரிணி பரிபூரண குணம் அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன் ,ஹரிணி என்பது ஐயப்பன் சார்ந்த பெயர் அந்த ஐயப்பன் கண்டிப்பாக குழந்தையை பரிபூரண குணம் அடைய செய்வார்

    ———————————————————————————————————

    நண்பர் சிவராஜ் தன் மனைவியோடு சேர்ந்து வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்
    —————————————————————————————————-
    திரு அப்துல்லாஹ் அவர்கள் கடன் சுமை நீங்கி உடல் நலமும் பரிபூரண குணம் அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

    _______________________——————————————————

    ஒவ்வொரு பருக்கை அரிசியும் சாதமும் எவ்வளவு முக்கியம் என்பது பசியால் வாடும் மனிதர்களிடம் கேட்டால் தான் தெரியும் ஆனால் இன்று நாமில் நிறைய பேர் அதை வகை தொகை இல்லாமல் வீணடித்து கொண்டு இருக்கிறோம்,அவர்கள் எலோரும் மேலே உள்ள புகை படத்தை ஒரு முறை பார்த்தாலே போதும் உணவை வீணடிக்கும் எண்ணம் வராது

Leave a Reply to ARUNOTHAYAKUMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *