பல விஷயங்களை உங்களிடம் மனம் திறந்து பேசவேண்டியிருக்கிறது. ஒரு விரிவான பதிவை அளித்து அதனுடன் இந்த அழைப்பிதழை வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும். ஆனால் மதியம் ஒப்பற்ற வீரன் பகத் சிங் நினைவு பேச்சுப்போட்டிக்கான தகுதித் தேர்வுக்கு செல்ல வேண்டியிருப்பதால் பதிவு அளிக்க தாமதமாகலாம்.
(Doube click the Image to ZOOM & again ZOOM to READ the text)
(Doube click the Image to ZOOM & again ZOOM to READ the text)
பலர் ஆவலுடன் அழைப்பிதழுக்காக காத்திருப்பது தெரியும். எனவே அவர்களுக்காக இதோ ரைட்மந்த்ரா ஆண்டுவிழா அழைப்பிதழ். மாலை விரிவான பதிவில் சந்திக்கிறேன். உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் விழாவில் எதிர்பார்க்கிறேன். கலந்துகொள்பவர்களுக்கு திருவருளும் குருவருளும் ஒருங்கே சித்திக்கட்டும்.
நன்றி!!!
– சுந்தர்,
www.rightmantra.com
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இல்லை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே,,,,,
வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க பூதலத்தில் வந்துதித்த “ரைட் மந்தரா”……
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,
ஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே………
உண்மையான நன்மையான உழைப்பிற்கு இறைவன் ஆசிர் ஆண்டுவிழா ……….. நல்லதே நடக்கும்.
Rightmantravirku வாழ்த்துக்கள்.ஒரு வேண்டுகோள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ள நைரோபி மக்கள் நலமுடன் திரும்பிவர இறைவனை பிரார்த்திக்கவும்.news பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி சுந்தர்.
மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
நல்லவர்கள் நல்வழியில் சென்று மென்மேலும் உயரவும்(உயர் வாழ்க்கை) மற்றும் நல்லவர்கள் அல்லாரையும் நல்வழி படுத்த உதவும் சுந்தர் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
முருகபெருமானின் திருவருளால் யாவும் நலமுடன் நடைபெரும் .
வேல் உண்டு வினை இல்லை .
மயில் உண்டு பயம் இல்லை.
குகன் உண்டு குறை இல்லை
கந்தன் உண்டு கவலை வேண்டாம்.
அழைப்பிதழ் அருமையாக உள்ளது …கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வோம் …
நன்றி ….
சுந்தர் சார்,
உங்கள் அன்பான அழைபிதழை ஏற்று கொண்டு நிச்சயம் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வோம்.
நன்றியுடன் அருண்.
ரைட்மந்த்ரா தளத்தை ஆரம்பிக்க நாங்கள் சந்தித்த முதல் மனிதரின் வார்த்தைகள் அவ்வளவு நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை. அதையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த தளம் துவங்கப்பட்டது.
ஆண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் இதில் பங்கேற்கும் நல்ல மனிதர்களையும் அவர்கள் செய்துள்ள சமூக சேவைகளையும் பார்க்கும்போது, இந்த சிறிய ஒரு வருட காலகட்டத்தில் சுந்தர் செய்திருக்கும் மகத்தான காரியங்களும், அவருடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எல்லாம் மஹா பெரியவாளின் ஆசி.
ஆண்டு விழா அழைப்பிதழ் நன்றாக உள்ளது. அவசியம் விழாவில் பங்கு பெறுவோம். கடந்த ஒரு ஆண்டாக தங்கள் உழைப்பின் பலன் இந்த ஆண்டு விழா. இந்த ஒரு வருடத்தில் நீங்கள் வெளியிட்ட எல்லா கட்டுரைகளும் எங்களின் நன்மதிப்பை பெற்றது. நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.
சுந்தர் சார்
ஆண்டு விழா அழைப்பிதழ் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி
உண்மையான நன்மையான உழைப்பிற்கு இறைவன் ஆசிர் ஆண்டுவிழா ……….. நல்லதே நடக்கும்.
நன்றி சுந்தர் சார்.