Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க குருவே…Monday Morning Spl 9

பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க குருவே…Monday Morning Spl 9

print
ன்னை நாடிவருபவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லவர் அந்த ஞானி. அவரை பற்றி கேள்விப்பட்டு அவரை தேடி ஒரு இளைஞன் வந்தான்.

“குருவே வாழ்க்கையே நரகமாக இருக்கிறது. பிரச்னைகள், துன்பங்கள், தோல்விகள் இது தவிர என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. நீங்கள் தான் நான் இவற்றிலிருந்து மீள ஒரு வழி சொல்லவேண்டும்!”

ஞானி உடனே அந்த இளைஞனிடம் ஒரு கிளாஸில் நீரை கொண்டு வரச் சொன்னார். இளைஞனும் கொண்டும் வந்தான்.

அவன் கைகளில் ஒரு கைப்பிடி உப்பை தந்து அந்த கிளாஸில் போடச் சொன்னார்.

“இப்போது அந்த நீரை குடி!” என்றார் ஞானி.

சற்று தயங்கினாலும் அவர் சொல்வதில் ஏதோ காரணம் இருக்கிறது என்பதை யூகித்த அந்த இளைஞன் மறுபேச்சு பேசாமல் அந்த நீரை குடித்தான். அவனால் ஒரு வாய் கூட குடிக்க முடியவில்லை.

“எப்படி இருக்கிறது?”

“ஐயோ முடியவில்லை குருவே. கொடுமை…!”

“சரி… என்னுடன் வா….” என்று கூறி அவனை அருகில் உள்ள ஏரிக்கு அழைத்து செல்கிறார். மீண்டும் ஒரு கைப்பிடி உப்பை அவனிடம் கொடுத்து, “இதை ஏரியில் வீசு” என்கிறார். அவனும் உப்பை வாங்கி அதை ஏரியில் வீசுகிறான்.

“இப்போது சிறிது நீரை எடுத்துக் குடி”- ஞானி கட்டளையிட அவனும் ஏரியிலிருந்து சிறிது நீரை அள்ளிக் குடிக்கிறான்.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“அருமையாக இருக்கிறது!”

“நீர் உப்புக் கரித்ததா ?”

“இல்லை!”

“நீ இரண்டு முறையும் போட்ட உப்பு ஒரே அளவு தான். அதிகமாகவும் இல்லை. குறையவும் இல்லை. ஆனால் டம்ப்ளரில் நீ போட்டு குடித்தபோது உன்னால் குடிக்க முடியவில்லை. ஏரியில் போட்டு குடித்தபோது உன்னால் குடிக்க முடிகிறது. எப்படி?”

“குருவே… எந்த கொள்கலனில் எவ்வளவு நீரில் போடுகிறோம் என்பதை பொறுத்து உப்பின் சுவை நீர்த்துவிடுகிறதே…”

“வாழ்க்கையில் நீ அனுபவிக்கும் துன்பம் போன்றது தான் உப்பு. எந்தளவு நாம் அந்த துன்பத்தின் வலியை உணர்கிறோம் என்பது நாம் அதை எந்த கொள்கலனில் போடுகிறோம் என்பதை பொருத்தது. நீ செய்ய வேண்டியது என்னவென்றால் உன்னுடைய பார்வையை விரிவாக்கிக்கொள். உன்னுடைய உலகை பெரிதாக ஆக்கிக்கொள். ஒரு சிறு கண்ணாடி டம்ப்ளராக இருக்காதே. பரந்து விரிந்த பெரிய ஏரியாக இரு. எந்த துன்பமும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது.”

======================================================
மேலோட்டமா படிச்சா ஒரு சாதாரண கதை போல இது இருக்கும். ஆனால் எத்தனை பெரிய உண்மையை இது சொல்கிறது தெரியுமா?

பிரச்னைகள் நமக்கு எப்போதும் இருக்கிறது தான். ஆனா நாம் அதை அணுகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அந்த பிரச்னை ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.

வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. கிடைத்தவர்களுக்கு அதை அனுபவிக்க தெரியாது.

எனக்கு முன்பிருந்த அதே கஷ்டங்கள், பிரச்னைகள் இப்போதும் இருக்கிறது. எதுவும் தலைகீழாக மாறிவிடவில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. வாழ்க்கையை குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. பிரச்னைகளை நான் எதிர்நோக்கும் விதம் மாறியிருக்கிறது. ஆகையால் சிறிய சிறிய விஷயங்களில் கூட (நான் முன்பு கண்டுகொள்ள மறந்த) மகிழ்ச்சியின் அலைகளை உணர முடிகிறது.

சுருங்கச் சொன்னால் என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. ஆகையால் பிரச்னைகள் சிறியதாகிவிட்டது.

ரைட்மந்த்ரா வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து உங்களிடமும் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கை குறித்த உங்கள் கண்ணோட்டம் நிச்சயம் சிறிதாவது மாறியிருக்கும் என்று கருதுகிறேன். உங்களில் ஒருவர் இதை ஏற்றுக்கொண்டு “ஆம்” என்று சொன்னால் கூட ஆண்டு விழா கொண்டாடுவதற்கு முழு தகுதியை  இந்த தளம் பெற்றுவிட்டதாக கருதுவேன்!

=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=====================================

[END]

 

29 thoughts on “பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க குருவே…Monday Morning Spl 9

  1. அருமையான பதிவு
    நாம் அனைவரும் (Rightmantra viewers) ஏற்று கொள்ளவேண்டிய பதிவு.
    எந்த ஒரு பிரச்னையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.
    ஒரு வருடத்திற்கு முன் நானும் அப்படித்தான் இருந்தேன்.
    தினமும் நம் பதிவு வாசிக்க ஆரம்பித்த பிறகு எதையும் பார்க்கும் விதம் மாறிஉள்ளது
    எல்லாம் நல்லதாக தெரிகிறது. மனம் எப்போதும் அமைதியாக சந்தோசமாக உள்ளது.
    இது எந்த ஒரு தியான கூடத்திலும் கூட எனக்கு கிடைத்து இருக்காது.
    அவனன்றி ஒன்றும் அசையாது.200% முழு மனதுடன் சொல்கிறேன்
    நன்றி சுந்தர் சார்.

  2. சுந்தர் சார்,

    மிக அருமையான கட்டுரை. இன்றைய இளைய தலைமுறைக்கு மிக பயனுள்ள கட்டுரை.

  3. ஆம். நீங்கள் ஆண்டு விழா கொண்டாட மிகவும் தகுதி உடையவர்.
    நன்றி

  4. சுந்தர் சார், முதலில் என்னுடைய பிரச்சனைகளை உங்களிடம் தெரிவித்தபோது, ”
    நீங்கள் ஒரு ஆன்மீக வாதி உங்களுக்கு ஜோசியம், உள்ளிட்டவை ஓரளவுக்காவது தெரிந்திருக்கும், அவர் நம் வாழ்க்கைக்கு
    ஒரு தீர்வு சொல்வார்” என நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ஆனால் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது இந்த கதையில் தாங்கள் சொல்லியது போல “நீங்கள்
    என்னுடன் வாருங்கள் ! உங்கள் பிரச்சினை எவ்வளவு சிறியது என நான்
    காட்டுகிறேன் ” என்பதுபோல முதல் சந்திப்பிலேயே பிரேமவாசம்
    அழைத்துக்கொண்டுபோய் “இங்கே பாருங்கள் எவ்வளவு பிரச்சனைகள்
    கொட்டிக்கிடக்கின்றன” என்பதுபோல உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற குழந்தைகளை சுற்றி சுற்றி காண்பித்தீர்கள்…
    பின்பு வெளியே வந்து “இப்போது சொல்லுங்கள் உங்கள் பிரச்சனைகளைப் பற்றி”
    என்றீர்கள்..

    சத்தியமா சொல்கிறேன் சுந்தர் சார் நமக்கு வந்த பிரச்சினை
    ஒரு பிரச்சனையே அல்ல என்பதை உணர்த்தேன் அப்போது…எனக்கு முன்பிருந்த
    அதே கஷ்டங்கள், பிரச்சனைகள் இப்போதும் இருக்கிறது. எதுவும் தலைகீழாக
    மாறிவிடவில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. வாழ்க்கையை
    குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. பிரச்சனைகளை நான் எதிர்நோக்கும்
    விதம் மாறியிருக்கிறது. ஆகையால் சிறிய சிறிய விஷயங்களில் கூட (நான்
    முன்பு கண்டுகொள்ள மறந்த) மகிழ்ச்சியின் அலைகளை உணர முடிகிறது.
    சுருங்கச் சொன்னால் என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. ஆகையால் பிரச்சனைகள்
    சிறியதாகிவிட்டது.

    என்றும் நன்றியுடன் …
    சந்திரசேகரன் …

  5. சுந்தர் சார், நீங்கள் சொல்வது 10000000000% உண்மை. என்னைப்
    பொறுத்தவரையில் என் குடும்பத்தில் வந்து கேளுங்கள். Rightmantra படிக்க
    ஆரம்பித்ததில் இருந்து தற்போது இருக்கும் செல்வி வேறு; அதற்கு முன்பு
    இருந்த செல்வி வேறு..பேசுவதில், செயல்பாட்டில் எல்லாம் என இப்போது
    செல்வி வேறு..இது முற்றிலும் உண்மை.,

    செல்வி

  6. இனிய வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு ..

    ///வாழ்க்கை குறித்த உங்கள் கண்ணோட்டம் நிச்சயம் சிறிதாவது மாறியிருக்கும் என்று கருதுகிறேன் உங்களில் ஒருவர் இதை ஏற்றுக்கொண்டு “ஆம்” என்று சொன்னால் கூட ஆண்டு விழா கொண்டாடுவதற்கு முழு தகுதியை இந்த தளம் பெற்றுவிட்டதாக கருதுவேன்! ///

    இதன் மூலம் எதனை உள்ளங்கள் நல்வழ்வு பெற்று இருக்கோம் என்று உங்களுக்கு தெரியாத சார்..

    மிக மிக முழு தகுதி பெற்று ரொம்ப மாதங்கள் ஆச்சு சார்..

    நன்றி நன்றி

  7. //எனக்கு முன்பிருந்த அதே கஷ்டங்கள், பிரச்னைகள் இப்போதும் இருக்கிறது. எதுவும் தலைகீழாக மாறிவிடவில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. வாழ்க்கையை குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. பிரச்னைகளை நான் எதிர்நோக்கும் விதம் மாறியிருக்கிறது.//

    சாத்தியமான வார்த்தைகள். என் வாழ்வில் என் அணுகுமுறையும், வாழ்க்கையை குறித்த என் கண்ணோட்டம் முற்றிலுமாக மாறி இருக்கிறது. பிரச்சனைகளை பக்குவத்தோடு அணுகுகிறேன்.
    பிறர் வாழ நாம் வாழ்வோம் என்ற உங்கள் பதிவையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன் சுந்தர் சார். உங்களது ஒவ்வொரு பதிவும் மனதை தெளிவு படுத்துகிறது. வாழ்வினை குறித்த எங்கள் தேடல் முற்றிலுமாக மாறி இருக்கிறது. “துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் “, “மனம் அது கோவில் ஆகலாம் ” என்ற கண்ணதாசன் சார் சொன்னது போல், எங்கள் மனம் கோயில் ஆகிறது உங்கள் ரைட் மந்த்ரா தளத்தால். மிக்க நன்றி சுந்தர் சார். வளர்க உங்கள் தொண்டு.

    சுமை தாங்கி பாடல்: கண்ணதாசனின் வைர வரிகள் நினைவு படுத்த விரும்புகிறேன்.

    //மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
    வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
    உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    தெய்வம் ஆகலாம் ..

    ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
    உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
    ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
    உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
    யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
    மனம் மனம் அது கோவில் ஆகலாம்

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

    மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
    வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
    மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
    வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
    துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
    குணம் குணம் அது கோவில் ஆகலாம்

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
    வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
    உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    தெய்வம் ஆகலாம் ..//

  8. வணக்கம் சார் ,

    கண்டிப்பாக இந்த தளத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து நம்மை விட பெரிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் , நம் பிரச்னை எவளவோ பரவில்லை என்று நினைத்தேன் . மற்றும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை த்ரிதுகொண்டேன். ஒவொரு பதிவையும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுவேன் . எப்போதாவது இதை படிபர்ர்கள் என்று.

    தங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்தி தங்கள் வழி நடக்கும் சகோதரி .

  9. சுந்தர் ஜி

    உளி பட்ட சிலை போல …..
    தாங்கள் தகுதியோடுதான் தொடங்கினீர்கள்.
    உங்கள் வாழ்க்கை நலமாக அமைய உளமாற வாழ்த்துகிறேன்.

  10. சுந்தர்ஜி..

    அருமையான பதிவு. நமது தளத்தின் முதலாம் ஆண்டுவிழா கொண்டாட நம் தள வாசகர்கள் அனைவரும் தயாராக உள்ளோம். ஏனெனில்,இந்த மற்றம் நம் ஒவ்வொருவற்குள்ளும் வந்துவிட்டது. எனவே உங்களுடன் இணைந்து நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம்.

    நன்றி

    ப.சங்கரநாராயணன்

  11. manday marning spl வாரா வாரம் எப்படி சுவாரசியம் குறையாமல்,தங்களால் தர முடிகிறது ???..
    படிக்கும் எங்களுக்கு உற்சாகமும்,மகிழ்ச்சி பிறக்கிறது . எங்களுக்கு உற்சாகம் தருவதற்கு நீங்கள் தினம் தினம் புதிய பிரம்மாவக அவதாரம் எடுப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே…

    \\ சுருங்கச் சொன்னால் என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. ஆகையால் பிரச்னைகள் சிறியதாகிவிட்டது.\\
    இரு வரிகளில் தீர்ப்பு அருமை ,அருமை…

    தங்களின் வாசகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று தாங்கள் தொடரும் ஒரு ஒரு பணியும்.எங்களை நாங்கள் செதுக்கிக்கொள்கிறோம் .

    நம் தளத்திற்கு நம்மை ஆளும் ஈசன் அருணச்சலம் தினம் தினம் நம்மை வழி நடத்துவது தெரிகிறது .

    Rightmantra வசிக்க ஆரமித்து நாள் முதல்,நானும் எனது குடும்பத்தினரும் மகிச்சியுடன் உள்ளோம் .

    எல்லோரும் Rightmantra மாறிகிட்டு இருக்காங்க சுந்தர் ஜி .

    நம் ஆண்டு விழா தேதியை எல்லோரும் வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்து கொண்டுள்ளோம் .

    என்றும் நட்புடன்
    மனோகர் .

  12. சுந்தர்ஜி,
    எனக்கு முன்பிருந்த அதே கஷ்டங்கள், பிரச்னைகள் இப்போதும் இருக்கிறது. எதுவும் தலைகீழாக மாறிவிடவில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. வாழ்க்கையை குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. பிரச்னைகளை நான் எதிர்நோக்கும் விதம் மாறியிருக்கிறது. ஆகையால் சிறிய சிறிய விஷயங்களில் கூட (நான் முன்பு கண்டுகொள்ள மறந்த) மகிழ்ச்சியின் அலைகளை உணர முடிகிறது.

    சுருங்கச் சொன்னால் என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. ஆகையால் பிரச்னைகள் சிறியதாகிவிட்டது நிதர்சனமான உண்மைகள்.

    ரைட்மந்த்ரா வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நம் தள வாசகர்கள் அனைவரும் எதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை சுவாசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அது தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

    இப்படி எல்லோரையும் மகிழ்ச்சி என்னும் ஆனந்த கடலில் ஆழ்த்திய தங்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்.

    தங்கள் ஆண்டு விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள். ஆண்டு விழாவிற்காக காத்து கொண்டு உள்ளோம்.

  13. இப்படை தோற்கின் எப்படை ஜெய்க்கும்?

    RightMantra -விற்கு அனைத்து தகுதிகளும் உண்டு. ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

  14. சுந்தர் சார்,

    இன்றைய “monday morning spl super “.

    Rightmantra.com ஆண்டு விழா கொண்டாட எந்த வித சந்தேகமும் வேண்டாம். “ஆம்”. நீங்கள் நினைத்ததை விட Rightmantra.com மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு உள்ளது.

    நன்றியுடன் அருண்

  15. பரந்த மனப்பான்மையோடு தான் எந்த ஒரு பிரச்னையும் கையாளப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இன்றைய பதிவு.

    ரைட்மந்த்ரா வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து என்னிடம் நிச்சயம் ஒரு மாற்றம் அல்ல, நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கோ முகம் தெரியாத நண்பர்கள் ஒண்று சேர்ந்து சுயனலமில்லாமல் நமக்காக வேண்டிக்கொள்வது என்பது சாதாரண காரியமில்லை. நமது தளத்தின் முத்தாய்ப்பு பகுதி என்பது நம் பிரார்த்தனை கிளப் தான்.

    சாப்பிடுவதற்கு பல உணவகம் இருப்பதுபோல் ஆன்மீகத்திற்கு பல தளங்கள் இருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி தந்தது நம் தளம் தான் என்பதில் மிகையில்லை. அத்துணை பெருமையும் திரு.சுந்தர் அவர்களுக்கும் , அவருக்கும் உதவும் நம் தள நண்பர்களுக்கும், அவர்களை வழினடத்தும் இறைசக்திக்கும் தான் சாரும்.

    நமது தளத்தின் ஆண்டு விழா மிக சிறப்பாக நடக்க என் சார்பாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன். திரு. சுந்தர் அவர்களின் இறைத்தொண்டு மென்மேலும் சிறந்து வளரட்டும். நன்றி

  16. மிக நன்றாக சொன்னீர்கள் ,ஆண்டு விழா வாழ்த்துக்கள் மேலும் உமது இந்த உயர்ந்த பணிதொடர கடவுளை வேண்டுகிறேன் நன்றி

    ரா .சிவகுமார் ஹுப்ளி

  17. தேசியமும் தெய்விகமும் தன்னம்பிக்கையும் கை கோர்க்கும் திரிவேணி சங்கமம் நம் ஆண்டு விழா அழைப்பிதழ் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் விழா.
    விழா வெற்றி பெற எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு.
    சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்பதேற்கேற்ப அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்


  18. கடுகளவே கொடுத்தாலும் கலங்க மாட்டேன்
    அது கடல் அளவே அனாலும் மயங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
    அதை உணர்த்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா

  19. ஆமாம். ரைட் மந்த்ரா ஆறு போன்றது.நமது பிரட்சினை போன்ற உப்பை அதில் போட்டுவிடலாம்.

  20. வணக்கம் சுந்தர் ,

    வினோதினியின் பதிவுக்கு பிறகு இப்பொழுதுதான் தங்களுக்கு கமெண்ட் போடுகிறேன் , மன்னிக்கவும் . பெரியவா அவர்களின் மடம் இருக்கும் காஞ்சிபுரத்தை சொந்த ஊரக கொண்ட எனக்கு . அவரை பற்றிய உங்களின் ஒவ்வொரு வரியும் , கண்களில் நிறையும் , பக்தியையும் மற்றும் கருணையும் த்ருவிகிறது .

    என்னை போன்ற பலரது நேரத்தையும் ,மனதையும் மிக நல்ல பக்தி , தொண்டு , காருண்யம் திசைகளில் திருப்பி மற்றும் அதை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி எங்களையும் உங்களுடன் கடைதேறும் வழியில் அழைத்து கொண்டு சென்றுகொண்டு இருகிறிர்கள் அதுதான் , நீங்கள் பெற்ற வெற்றி , உங்களோடு நாங்களும் இந்த வெற்றியை கொண்டாடுகிறோம் .

    அன்புடன் நண்பன் ,
    செல்வகணபதி .வே

  21. ரைட்மந்த்ரா வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து உங்களிடமும் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கை குறித்த உங்கள் கண்ணோட்டம் நிச்சயம் சிறிதாவது மாறியிருக்கும் என்று கருதுகிறேன். உங்களில் ஒருவர் இதை ஏற்றுக்கொண்டு “ஆம்” என்று சொன்னால் கூட ஆண்டு விழா கொண்டாடுவதற்கு முழு தகுதியை இந்த தளம் பெற்றுவிட்டதாக கருதுவேன்!
    ————————————-
    நிச்சயமாக சுந்தர்

  22. குடிசெய்வல் என்னும் ஒருவர்க்கு தெய்வம்
    மடிதற்று தான்முந்துறும்

    இது 100% சுந்தருக்கு உண்மை .
    .

    1. மிக்க நன்றி சார்.

      அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
      பேணித் தமராக் கொளல். (குறள் 443)

      – சுந்தர்

  23. அருமையான சிறுகதை

    வாழ்க்கையில் நாணல் போல இருக்க பழக வேண்டும் – அப்பொழுது தான் எப்பேர்பட்ட சூறாவளி அடிக்கும்போதும் தம்மால் நிலைத்து இருக்க முடியும்

    இந்த தளம் நிச்சயமாக படிப்பவர்கள் உள்ளத்தில், பார்வையில், அவர் தம் அணுகுமுறையில் நல்லதொரு தெளிவையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை

    என்னுள் இருக்கும் ஒரு அவா அல்லது வேண்டுகோள் இந்த தளத்தை இணைய வசதி உள்ளவர்கள் மட்டுமல்லாது பாமரமக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதுதான் – குறிப்பாக வளரும் இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த தளம் சரியான முறையில் சென்று சேருமானால் நிச்சயமாக இந்த சமுதாயம் புத்துயிர் பெற்று அமைதியும் ஆனந்தமும் எங்கும் பரவும் என்பதில் ஐயமில்லை !!!

  24. மனிதனை செதுக்குவதற்கு ஒரு விதை முளைக்க ஆரம்பித்துவிட்டது
    நன்றி .

Leave a Reply to Sm.sakthivel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *