Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

print
ருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் விவசாயி அவன். ஒரு அழகான உயர் ஜாதி குதிரை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அது தான். மேய்ச்சலுக்கு சென்ற அந்த குதிரை ஒரு நாள் எங்கோ ஓடிச் சென்று விட்டது. அதை அறிந்த அவன் நண்பர்கள் “நீ எத்தனை நல்லவன்… இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது” என்று அவனுக்கு பலவாறாக ஆறுதல் கூறினர்.

ஆனால் அவன் அதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை. “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!” என்றான்.

ஓடிச் சென்ற குதிரை சில நாட்களுக்கு பின்னர் வேறு சில அழகான காட்டுக் குதிரைகளை அழைத்துக்கொண்டு இவன் இருப்பிடத்திற்கே திரும்ப வந்தது. அவன் நண்பர்களுக்கு கொள்ளை சந்தோஷம். “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா” என்றார்கள் குதூகலத்துடன்.

இம்முறையும் அலட்டிக்கொள்ளாமல் “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!” என்றான்.

சில நாட்கள் கழிந்தது. விவசாயியின் துறுதுறுப்பான 14 வயது மகன் புதிதாக வந்த குதிரைகளில் ஒன்றில் சவாரி செய்வதற்கு ஆசைப்பட்டு ஏற, குதிரை பயந்துபோய் ஓட அந்த முயற்சியில் அவன் கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டான்.

நண்பர்கள் உறவினர்கள் உட்பட அனைவரும் “ஐயோ… பாவம்…உன் மகனுக்கு இந்த வயதில் இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.” என்றனர்.

இம்முறையும் அதே “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!” என்றான் விவசாயி.

திடீரென்று பக்கத்து நாட்டுடன் போரிட வேண்டிய சூழல் அந்நாட்டிற்கு ஏற்பட, அந்த கால வழக்கப்படி வீட்டிற்கு ஒருவர் போர்முனைக்கு சென்றனர். விவசாயியின் மகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் போர் முனைக்கு செல்லவில்லை.

தங்கள் வாரிசுகளை போர்முனைக்கு அனுப்பும் நிர்பந்தத்தில் இருந்த மற்றவர்கள்… “உண்மையில் நீ அதிர்ஷ்டசாலிப்பா… உன் பிள்ளை போர் முனைக்கு போகவேண்டியதில்லை!” என்றனர்.

“எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!”  என்றான் விவசாயி.

நம்மை சுற்றி அன்றாடம் நடக்கும் – நம்மை பாதிக்கக் கூடிய நிகழ்வுகள் அனைத்தையும் – இந்த விவசாயியை போல “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!” என்று சுலபமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்க்கை மிகவும் இனியதாக மாறிவிடும்.

சுலபமாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திவிட்டு நம் வேலையை நாம் பாட்டுக்கு செய்துகொண்டிருக்க வேண்டும். காரணத்தை ஆராய்கிறேன் பேர்வழி என்று நீங்கள் நடப்பவற்றுக்கு எல்லாம் காரண காரியங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் உங்கள் நிம்மதி தான் கெட்டுப் போகும்.

நிகழ்வுகளுக்கான காரணங்கள் அதுவாக ஒரு நாள் உங்களுக்கு புரியும். எனக்கு சில விஷயங்களின் காரணங்கள் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து தான் புரிந்தது. இறைவனின் கருணையை எண்ணி எண்ணி இப்போது வியக்கிறேன்.

நம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கு தான் இந்த உலகம் சொந்தம். அவர்கள் தான் இங்கு ஜெயிக்க முடியும்.

அதே போல நாம் ஒரு விஷயத்தை ஆண்டவனிடம் கேட்டு அடம்பிடிக்கிறோம். அது கிடைப்பதால் நமக்கு உண்மையில் நன்மையா தீமையா என்று ஒருபோதும் நாம் அறிவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கு தெரியும் அது நமக்கு ஏற்புடையதா இல்லையா என்று…!

நாம் நினைப்பது நடக்கவில்லை என்றால் ஆண்டவன் மீது கோபப்படுகிறோம். ஆனால் அது நடந்திருந்தால் நம் வாழ்க்கை எப்படி திசை மாறி போயிருக்கும் என்பதை ஆண்டவன் ஒருவன் தான் அறிவான். எனவே அவன் விருப்பத்தை மனமுவந்து ஏற்று அதன்படி நடந்துகொள்வோம். ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார்.

அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் இவர், இதுவரை ‘வந்தாரை வாழவைக்கும் வைணவத் தலங்கள்’, ‘பாடல் பெற்ற சைவத் தலங்கள்’, ‘விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்’, ‘திருப்புகழ் பாடும் முருகன் தலங்கள்’, போன்ற 11 க்கும் மேற்ப்பட்ட ஆலய வழிகாட்டி நூல்கள் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகங்களை விற்பதில் வரும் வருவாயை நலிவுற்ற ஆலயங்களின் கைங்கரியங்களுக்கு வாரி வழங்கி வருகிறார். இவர் இல்லத்தரசி திருமதி.லலிதா இவரது பணிகளில் பெரிதும் உதவி வருகிறார்.

திருப்பூர் கிருஷ்ணன், சிவச்சுடர் திரு.சிவக்குமார், (இவர் சொற்பொழிவை நீங்கள் கேட்டதில்லையே? சிவபெருமான் மேல நீங்க பித்து பிடிச்சி அலையுற அளவுக்கு சும்மா பிச்சி உதறிடுவார்!) உள்ளிட்ட அறிஞர் பெருமக்களோடு நெருங்கிய நட்புடையவர் திரு.சாய்குமார்.

நூல் வெளியீட்டு விழாவில் திரு.சாய்குமார், திரு.திருப்பூர் கிருஷ்ணன், திரு.சிவக்குமார்

தமிழகத்தில் சாய்குமார் அவர்களின் காலடி படாத கோவில்களே இல்லையெனுமளவிற்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் (ஏன் இந்தியா முழுவதிலும் கூட என்று வைத்துக்கொள்ளலாம்) உள்ள  அத்தனை கோவில்களையும் தரிசித்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட புண்ணியாத்மா இவர் என்று யூகித்துக்கொள்ளுங்கள். எந்த கோவில், எங்கிருக்கிறது, எப்படி போகவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இவருக்கு அத்துப்படி.

இவரது பணிகள் மற்றும் கோவில்களை பற்றி விபரங்களை அறிந்துகொள்ள paadal-petra-sthalangal.blogspot.in & sivavishnutemplesguide.com ஆகிய முகவரிகளில் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நமது பாரதி விழாவில் திரு.சாய்குமாருடன் (வலது ஓரம்).
(இடது புறம்) Shivatemples.com திரு.நாராயணசாமி தம்பதியினர்

இப்படி ஒருவரை இந்த காலத்தில் பார்ப்பதே அபூர்வம். இவர்  நமது பிரார்த்தனை கிளப்பிற்கு இந்த வாரம் தலைமை தாங்குவதை பெருமையாக கருதுகிறோம்.

இவர் அறிமுகம் கிடைத்தது எப்படி?

சென்ற ஆண்டு இவரது ‘விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் ஆலயங்கள்’ என்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல நேர்ந்தது. அப்போது தான் திரு.சாய்குமாரின் அறிமுகம் நமக்கு கிடைத்தது. தொடர்ந்து நடைபெற்ற நமது தளத்தின் பாரதி விழாவில் நம் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு நம்மை கௌரவித்தார். நம் வேண்டுகோளுக்கிணங்க இவரது புத்தகங்களின் ஸ்டாலும் அங்கு அமைக்கப்பட்டது. (சிவனருளால் அடுத்த மாதம் நடைபெறும் ஆண்டு விழாவிலும் இவரது ஸ்டால் உண்டு!).

இந்த வாரம் பிரார்த்தனை கிளப்பிற்கு  தலைமை ஏற்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொண்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் திரு.சாய்குமார்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=========================================================

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்னை

சுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு,

இந்த தளத்தின் ரெகுலர் வாசகி நான். நண்பர்களுக்கு உதவி செய்யப் போய் நான் தற்போது தாங்க முடியாத கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறேன். நண்பர்களுக்கு கடன் வாங்கித் தருவதற்கு ஜாமீன் கையெழுத்து போட்டு நான் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேல் எனக்கு கடன் உள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும்படி கடன்காரர்கள் கழுத்தை நெறிக்கின்றனர்.

“நீ செய்த தவறு… நீயே தீர்த்துக்கொள். என்னை எதிர்பார்க்காதே” என்று கணவரும் இது விஷயத்தில் ஒதுங்கிவிட்டார். இரண்டு பெண் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து கரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் வேறு எனக்கு உள்ளது. மேற்படி கடன் பிரச்னையால் என் பணி உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஆன்மீகமும் ரைட்மந்த்ரா போன்ற தளங்களும் தான்.

என் கடன் பிரச்னை விரைவில் தீர்ந்து சுபிட்சம் ஏற்பட அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வாசகி & தோழி

=========================================================

வேண்டும் ஒரு புது வாழ்வு & வேலை!

எல்லோருக்கும் வணக்கம்.

என்னுடைய சகோதரி மகளின் திருமண வாழ்க்கை மணமகன் வீட்டில் ஒரு விஷயத்தை மூடி மறைத்து திருமணம் செய்தபடியால் செல்லாகாசாகிவிட்டது. மன அமைதிக்காகவும் ஒரு மாற்றத்திற்காகவும் தற்போது தற்காலிக வேலை ஒன்றிற்கு சென்று வருகிறாள். அவளுக்கு நல்ல வேலையும் நல்லதொரு எதிர்காலமும் அமைந்திட பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

ரைட்மந்த்ரா வாசகி
=========================================================

எனது பிரார்த்தனை

போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவேண்டும்!

தற்போது தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. முன்பெல்லாம் குடும்பத் தலைவர்கள் தாம் குடிக்கு அடிமையாக இருந்தனர். தற்போது நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று கருதப்படும் மாணவர்களும் இளைஞர்களும் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

மது விருந்து (Alcohol Treat) இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஏற்கனவே இளைய சமுதாயம் அதில் ஊறி தன்னை இழந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ வேலை வெட்டியில்லாத கதாநாயகன் டாஸ்மாக்கில் நண்பர்களோடு அமர்ந்து மது அருந்தும் காட்சி நிச்சயம் இருக்கும். குடிப்பதை ஒரு ஹீரோயிசமாகவே வெள்ளித் திரையில் காண்பித்து காண்பித்து நன்கு கல்லா கட்டிவிட்டனர் கோடம்பாக்கத்தில் சில மகானுபாவர்கள். (இந்த பணம் உங்களுக்கு ஒட்டவே ஒட்டாது!).

சில வாரங்களுக்கு முன்பு நாம் பழனி சென்றிருந்த போது பேருந்து நிலையம் அருகே தேநீர் குடிக்க டீக்கடை தேடிய சில நிமிட இடைவெளியில்  டீக்கடைக்கு பதில் நான்கு டாஸ்மாக் கடைகளை பார்க்க நேர்ந்தது. பழனியிலேயே இந்த கதி என்றால் மற்ற பகுதிகளில்? யோசித்துப் பாருங்கள்.

தமிழகத்தல் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், இளைய சமுதாயம் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு வீட்டையும் நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளவும் பிரார்த்திப்போம்.

=========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. அவர்கள் சங்கடம் உங்களுக்கு புரியும் என்று கருதுகிறேன். எனவே அவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பிரச்னையை மட்டும் இறைவனிடம் கூறி பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்..

கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வாசகிக்கு இருள் முழுதும் விலகி அருள் பெருகவேண்டும் என்று பிரார்த்திப்போம். அவர் தம் கடனை தீர்த்து இரு மகள்களையும் நல்லபடியாக ஆளாக்க தேவையான சக்தியை இறைவன் தருவானாக. அடுத்து, திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து தக்க துணை ஒன்று கிடைக்க பிரார்த்திப்போம். தமிழத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவும் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும் பிரார்த்திப்போம்.

முன்பு நமது பிரார்த்தனை கிளப் சார்பாக பிரார்த்தனை செய்யப்பட்ட தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை ராகுல், தற்போது சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டான். குழந்தைக்கு பெரியளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இனி அக்குழந்தைக்கு எந்த பிரச்னையும் வராது என்று நம்புவோம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 25, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :
திருவாசகத் தூதுவர் திரு.பிச்சையா

13 thoughts on “ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்!

  1. Your attempt is extraordinary. Your goals are people and service oriented.

    I am too small to congratulate the big effort. Thanks for the efforts to promote the goodness of historic temple development and uzhavaarapani. Let your ambition and inspiration to imbibe the good qualities of great people achieve unique things in life come true. It is coming true!

    I also seek the blessings of the almighty for the members who have placed their requests for praying on their behalf. God will shower the blessings for their wishes to come true. As every one knows prarthana or meditation is not localisted. The vibrations spreads and pervades to the society at large.

    Regards
    K SAI KUMAR

  2. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் ‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார்.
    அவர்களை வணக்குகிறேன் .
    இந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. அவர்கள் சொல்ல முடியாத துயரத்தை படிக்கும் போதிலிருந்து பிரார்த்தனையை ஆரமித்து விட்டேன் .
    கண்டிப்பாக உங்களின் இந்தநிலை மாறும் ,சகோதரிகள் மனம் தளராதீர்கள்.மகாபெரியவர் தங்களை சிக்கிரம் வழி நடத்துவர்.
    \\\போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவேண்டும்! \\\. என்று சுந்தர்ஜி அவர்களின் இளைய தலைமுறை மீதுள்ள ,அக்கறையும் ,ஆவேசமும் சீக்கிரம் ஒரு முடிவு கிடக்கவும் ,மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் .

    -மனோகர்

  3. சுந்தர்ஜி

    குதிரைக்கார விவசாயியை போல்தான் நம்மிடமும் சிலர் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு பல காரணங்களைச் சொல்லி நம்மை மேலும் வேதனைப்படுத்தி பார்ப்பார்கள். நான் ரைட் மந்திரா வாசகி ஆகும் முன்பு என் பிரார்த்தனைக்காகவும், மன அமைதிக்காகவும் ஒரு ஆன்மிக இயக்கத்தில் இருந்து வந்தேன். அதில் குருஜியை பார்பதும் தியானம் கற்பதும் அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எனக்கு என் பிரார்த்தநை நடக்க வேண்டுமே என பல முறை கலந்து கொண்டேன். அதில் ஓரளவு மன அமைதி கிட்டியது. ஆனால் என் பிரார்த்த்னை நிறைவேறவில்லை. என்னொடு வந்த ஒரு சிலர்க்கு நடந்தது. அதற்கு அந்த இயக்கத்தில் இருந்த சில சீனியர்கள் (மேல் நிலை தியானம் கற்றவர்களும், எனக்கு முன்பு பல வருடம் அந்த இயக்கத்தில் இருந்தவர்களும்) உன் கர்மவினை இன்னும் தீரவில்லை. நீ நிறைய கர்மங்கள் சேர்த்து வைத்திருப்பாய் என ஒரு சிலரும், நீ மேலும் பலமுறை குருவை சந்திக்க வேன்டும் எனவும் சொல்லி வந்தனர். குருவை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல. நிறைய பணமும் லீவும் வீட்டில் அனுமதியும் பெறவேண்டுமே. அப்படியும் வீட்டை எதிர்த்து குழந்தகளைவிட்டு அல்லது அவர்களையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஒரு சிலமுறை சென்றென். வழக்கம் போல் மன அமைதி கிட்டும். சில நாட்கள் கழித்து பிரார்த்தநை நிறைவேறவில்லை என கவலையும் மற்றவர்களின் விமர்சனமும் தான் மிஞ்சியது.

    ஒரு சில நாட்கள் நம்பிக்கையும் அவனம்பிக்கையுமாக கழிந்தது. நான் அந்த குதிரைக்காரன்போல்தான் மனதை தேற்றிக்கொண்டு என் தேடுதலை தொடர்ந்தேன். என் விடாத நம்பிக்கையால் நான் வணங்கும் அம்மையும் அப்பனும் என் பல ஆன்மீக முயற்சிக்கு பிறகு தான் எனக்கு ரைட் மந்திரா தளத்தையும், அதன் மூலம் எல்லாம் வல்ல சர்வ வல்லமை படைத்த மஹா பெரியவாவின் பரிபூரண அருள் கடாட்சமும் கிடைக்க வைத்துள்ளார்கள். எத்தனை நல்ல உள்ளங்களின் பிரார்த்த்னையும் என் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது . ஆனால் இதற்காக நான் நிறைய நேரமும் பணமும் செலவழிக்கவேண்டியதில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி. சுந்தர் அவர்களுக்கும் நம் தளத்திற்கும் நான் வாழ்வு உள்ளவரை கடமைப்பட்டுள்ளேன்.

    சுந்தர் அவர்கள் குறிப்பிட்ட பெருகிவரும் இந்த குடிப்பழக்கத்தினால் நானே என் சொந்த வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்து உள்ளேன். பல குடும்பங்களில் இதனால் ஒரு வேளை உணவுக்கூட சாப்பிடமுடியாமல் இருப்பதை நானே கண்கூடாக பார்த்து வருகிறேன். நிச்சயம் இதற்கு ஒரு முடிவினை நம் பிரார்த்தனைக்கு இறைவன் அருள்வார் . மேலும் அந்த இரு வாசகிகளின் பிரார்த்த்னைக்கும் வேண்டுவோம்.

    இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சாய்குமார் அவர்களை நினைக்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. பணமே பிரதானம் என்று கருதும் இவ்வுலகில் தனது புத்தகங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில் கைங்கரியங்களுக்கு அவர் செலவிடுவது வியக்கத்தக்க ஒன்று.

    பொது நலன் கருதி சுந்தர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையால் குழந்தை ராகுல் நலம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி சுந்தர் அவர்களே

    1. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
      அதை பெற்றுத் தந்த பெருமை நம் மகா பெரியவா அவர்களுக்கே…!!
      – சுந்தர்

  4. ///“எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா!”///

    அனைவரும் இந்த வாசகத்தை துன்பம் வரும்போதும் இன்பம் வரும்போதும் எண்ணிப்பார்க்கவேண்டும் …

    தமிழகத்தல விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், இளைய சமுதாயம் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு வீட்டையும் நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளவும் பிரார்த்திப்போம். –

    மேலும்,கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்னை உள்ள மற்றும் புது வாழ்வு & வேலை! வேண்டிய வாசகிகல் இருவருக்காகவும் முக்கியமாக பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்.. –

    என்றும் அன்புடன் ..
    N .சந்திரசேகரன்.

  5. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் ‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார். அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. எனவே அவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பிரச்னையை மட்டும் இறைவனிடம் கூறி பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்..

    கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வாசகி. அடுத்து, திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து தக்க துணை ஒன்று கிடைக்க பிரார்த்திப்போம். தமிழத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவும் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும் பிரார்த்தனை செய்து அவர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

  6. கடன் பிரச்னையில் சிரம படும் வாசகி, கடன் சுமையிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறவும், மற்றும் திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து எதிர் காலம் சிறப்பாக அமையவும் மனம் உருகி பிரார்த்திப்போம்.

    தமிழகத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீண்டு புது வாழ்வுதனை பெற வேண்டுவோம்.

  7. உங்க கதை ரொம்ப நல இருக்கு சார்,கதை சொன்னது போல எல்லோரும் நடக்க திடமான மனோ திறம் வேண்டும்,அதை சிவன் அருள வேண்டும், இன்று தான் உங்கள வெப் சைட் பிரஸ்ட் டைம் பார்க்க முடிந்தது நன்றி.

    1. ரைட்மந்த்ரா குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்க்கிறேன்.
      நன்றி!
      – சுந்தர்

  8. குடி மற்றும் போதை பொருள் பழக்கம் நம் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது. இதிலிருந்து சமூகம் விடுபட ஆன்மிகம் ஒரு அருமருந்து. இதை நம் பிரார்த்தனையில் சேர்த்திருப்பது சுந்தரின் சமூக உணர்வை காட்டுகிறது. திரு சாய்குமார் அவர்களின் தலைமையில் நடக்கும் இந்த வார பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்க்க நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

  9. எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்///
    இதை எல்லா சூழ்நிலையிலும் நிலை மாறாமல் பின் பற்றுவது கஷ்டம் அனால் இதை நான் என்னை என் விரக்தியை ஆண்டவன் மீது சில சமயம் வரும் கோவத்தை கன்ட்ரோல் செய்ய இது போல முயற்சிப்பது உண்டு ….
    அனால் நான் இன்னும் பக்குவ படவில்லை

  10. திரு சாய்குமார் அவர்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி

    பிரார்த்தனை கோரிக்கைகள் விரைவில் நிறைவேறி அனைவரது வாழ்வினிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் நல்ல ஆரோக்யத்துடன் வாழ்ந்திட மனதார வேண்டுவோம் !!!

Leave a Reply to usha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *