Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > “சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல!” – சிவபெருமான் ருசிகர பேட்டி!

“சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல!” – சிவபெருமான் ருசிகர பேட்டி!

print
பேரம்பாக்கம் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சென்ற மாதம் உழவாரப்பணி மேற்கொண்டது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். சற்று விரிவாக ஆழ்ந்து, அனுபவித்து எழுதி வருவதால் நேரம் பிடிக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அது போஸ்ட் செய்யப்படும். இதற்கிடையே ஆவலுடன் தினசரி வந்து செல்லும் நீங்கள் ஏமாற்றமடையக்கூடாது என்று கருதி இன்று இரண்டு பதிவுகளை அளிக்கிறேன்.

ஒன்று நான் மிகவும் ரசித்து படித்தது. மற்றது வேதனையுடன் படித்தது. ஒவ்வொன்றாக இன்று அளிக்கப்படும்.

முதலாவதாக நான் அளிப்பது, ‘மகாதேவ்’ என்கிற டெலிவிஷன் தொடரில் (தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது) பரமசிவனாக நடித்துவரும் நடிகர் மோகித் ரைன் அவர்களின் பேட்டி. இந்த தொடரின் ப்ரோமோஷன் போஸ்டர்கள் சென்னையில் சென்ற ஆண்டு ஒட்டப்பட்டபோது பார்த்து பரவசமாகி ஒட்டிக்கொண்டிருந்த வண்டியை நிறுத்தி சில நிமிடங்கள் ரசித்துவிட்டு தான் சென்றேன்.

சிவபெருமான் வேடத்திற்கு மிகப் பொருத்தமாக காட்சியளித்த இவரை பேட்டி எடுக்க வேண்டும், அந்த அனுபவத்தை கேட்கவேண்டும் என்று நினைத்ததுண்டு. இதோ இந்த வாரம் அவரது பேட்டி தினத்தந்தி ஞாயிறு மலரிலேயே வெளியாகியிருக்கிறது. எல்லாம் அருணாச்சலேஸ்வரர் மகிமை.

நான் என்னென்ன கேட்க நினைத்தேனோ அத்தனை கேள்விகளும் இவரிடம் கேட்கப்பட்டுள்ளது உண்மையில் என்னை சிலிரிக்க வைத்தது. கேள்விகளுக்கு மிகவும் எதார்த்தமாக, வெள்ளந்தியாக, அடக்கமாக அதே சமயம் புத்திசாலித்தனத்துடன் மோகித் ரைன் பதில் கூறியிருப்பதை பாருங்கள். சிவனாக நடித்தமையால் மனிதர் இவருக்குள் இந்த பக்குவம் ஏற்பட்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

தந்தியில் வெளியான கட்டுரையை மிகவும் பரவசப்பட்டு படித்தேன். இதோ உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன். தன் பெற்றோர் ஒவ்வொரு சிவராத்திரியன்றும் விரதம் இருந்து வந்த காரணத்தினாலேயே தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக மோகித் ரைன் குறிப்பிட்டுள்ளதை கவனியுங்கள்.

(Double click the image. It will open in a new window. Again click that to ZOOM & READ)

=======================================

உழவாரப்பணிஅறிவிப்பு :

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 25/08/2013 அன்று – திருஞானசம்பந்தர் பாடிய – தேவாரப் பாடல் பெற்ற குரு பரிகாரத் தலமான யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள கனககுசாம்பிகை சமேத அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவனருளால் நடைபெறும். மேற்படி உழவாரப்பணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலைபேசியில் தொடர்புகொள்ள விரும்புகிறவர்கள் மாலை 7.30 க்கு மேல் 9840169215 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

வேனில் செல்ல ஏற்பாடாகியுள்ளது. கைங்கரியத்தில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு தளம் சார்பாக காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படும்.

கோவிலில் வழக்கமான துப்புரவு மற்றும் தூய்மை செய்யும் பணிகளுடன் கூடவே நால்வர் சன்னதி, சூரியன்,  சந்திரன், தக்ஷிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளுக்கு மல்டி கலர் பெயிண்ட் பூசும் கைங்கரியம் (தகுந்த நபர்களை வைத்து), எலக்ட்ரிகல் ஃபிட்டிங்க்ஸ் பழுது பார்ப்பது மற்றும் புதிதாக போடுவது, கோவிலை பற்றிய அறிவிப்புடன் கூடிய சிமென்ட்டினால் ஆன CONCRETE CEMENT SLAB BOARDS தயார் செய்து பிரதான இடங்களில் நிறுவுவது உள்ளிட்டவை நம் தளம் சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. உழவாரப்பணி நண்பர்கள் இது தொடர்பாக உதவுவதாக கூறியிருக்கிறார்கள்.

நம் தளம் சார்பாக நண்பர்கள் உதவியுடன் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மப்பேடு சிங்கீஸ்வரரின் கோபுரம் ஜொலிப்பதை புகைப்படம் எடுத்து வந்துள்ளேன்.  இது குறித்த விரிவான பதிவு இரண்டு நாளில் வெளியிடப்படும்.

=======================================

6 thoughts on ““சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல!” – சிவபெருமான் ருசிகர பேட்டி!

  1. சிவன் வேடத்தில் நடித்தவர் பேட்டி நன்றாக உள்ளது.
    அந்த பாத்திரமாகவே அவர் மாறி உள்ளது அவர் பேச்சில் தெரிகிறது.
    சின்னதாக ஒரு பதிவு போட்டாலும் சும்மா சொல்லகூடாது நிறைவாக உள்ளது.

  2. சுந்தர்ஜி,

    எல்லாம் சிவ மயம். அருமையான பதிவு. அவர் அந்த பாத்திரமாகவே மாறியது நெகிழ்ச்சியாக உள்ளது. சிவனை மனதார பிரார்த்தனை செய்பவர் எவரும் பித்தனாக மாறி விடுவர்.

    தந்தியில் வெளியான பதிவாக இருந்தாலும் நாங்கள் பார்க்காத பதிவு.
    அருமையான தகவல்.

    நன்றி.

  3. ///சுந்தர் சார்,நாம் எதை நினைக்கின்ரொமோ அதுவாகவே மாருவோம் இது விவேகானந்தர் சொன்னது..விலையாட்டாக சிரித்தால் சிரிப்பு உன்மையாகவே வரும், விலையாட்டாக கோபப்பட்டால் உண்மயிலெயே கோபம் வரும்,
    சும்மா அழுதால் அழை உன்மையாகவே வரும் அதுபோல சிவன் வேடம்தரித்து நடித்த மோகித் ரைன்
    அந்த சிவனாகவே மாரிவிட்டார்…///

    செண்ற குரு பெயர்சியின்போது எந்த பரிகாரமும் நான் செய்யவில்லை என்பது எனக்கு ஒரு குரையாகவே இருந்தது,ஆணால் குரு பரிகாரத் தலமான யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள கனககுசாம்பிகை சமேத அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், ..திருஇலம்பையங்கோட்டூர்.தேர்ந்தெடுத்து.இந்த வார உழவாரப்பனியின் இடத்தை கேள்விபட்டவுடன் அந்த குரு நம்மை வலுக்கட்டாயமாக அழைக்கின்ராற் என தோண்ருகிரது இந்த வாய்ப்பை தவரவிடமாட்டேண் முண்கூட்டியே தகவல் அலித்தமைக்கு நன்ரிகல்….

  4. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    இந்த கலியின் கொடுமையில் மனிதர்களை காப்பாற்ற அந்த சிவன். அதை வலி நடத்த இந்த தொடர் சிவனும் சுந்தர் போன்ற அடியவர்களும் தான்.

    மிக்க நன்றி, நன்றி, நன்றி.

  5. பொருத்தம் மற்றும் ப்ராப்தம் என்று சொல்வார்களே அது திரு மோகித் அவர்களின் விஷயத்தில் உண்மையாகி விட்டது !!!

    சிவபெருமான் வேடத்துக்கு அவ்வளவு கனக்கச்சிதமாக பொருந்தியுள்ளார் – அவருடைய உடல் அமைப்பு, கண்களின் காணப்படும் அமைதி கலந்த ஈர்ப்பு எல்லாவற்றிக்கும் மேலாக முகத்தில் சுடர்விடும் அந்த தேஜஸ் இவை அனைத்தும் சேர்ந்து அவரது கதாபாத்திரம் நம் மனதிற்குள் ஆழமாக பதிய காரணமாகிவிட்டது !!!

    ஒளிவு மறைவின்றி கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் மிகவும் அருமை – குறிப்பாக அந்த நடிகை பிரியங்கா சோப்ரா பற்றியது – மனதில் துளி கூட கர்வமோ அஹங்காரமோ இல்லாமல் இருப்பதால் தானோ என்னமோ அவர் சிவபெருமான் வேடத்துக்கு அத்துணை பொருத்தமாக காட்சியளிக்கிறார் !!!

    திரு மோகித் தனது தோற்றத்தை பேணிக்காக்க எத்துனை சிரமம் எடுத்துக்கொள்கிறார் என்பதிலிருந்து அவர் தனது கதாபாத்திரத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது !!!

    வாழ்க வளமுடன் !!!

  6. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
    உங்கள் அடுத்த உழவாரப்பணி யங்க நடைபருகிறது , ? தேதி ?
    சுரேஷ்பாபு , சென்னை

Leave a Reply to N.chandirasekaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *