Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL!

குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL!

print
ன்று திங்கட்கிழமை காலை. எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருப்பீங்க. வர்ற வழியில சாலையில, பஸ்ல, ட்ரெயின்ல எத்தனையோ பேர் உங்களை எரிச்சல் படுத்தியிருப்பாங்க. நீங்க எத்தனையோ பேரை எரிச்சல்படுத்தியிருப்பீங்க. அதே உணர்வோட இன்றைய நாளை துவக்கலாமா? கூடாதல்லாவா? உங்களை குளிர்வித்து உங்கள் செயல் திறனை கூட்டவே இந்த பதிவு.

இனி திங்கட்கிழமை தோறும் காலை இது போன்று ஒரு பதிவை அளிக்க முயற்சிக்கிறேன்.

‘குப்பை வண்டி விதி’ தெரியுமா?

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.

“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.

“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம்  போய்கொண்டே இருக்க வேண்டும்”

“அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

சாதனையாளர்களாக உருவாகிக்கொண்டிருக்கும் நம் வாசகர்களுக்கு நாம் சொல்வது இது தான்: அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

ஒ.கே.? சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!

[END]

23 thoughts on “குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL!

  1. ///சாதனையாளர்களாக உருவாகிக்கொண்டிருக்கும் நம் வாசகர்களுக்கு நாம் சொல்வது இது தான்: அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.///

    கண்டிப்பாக பயனுள்ள அருமையான பதிவு .

    வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் .
    -மனோகரன்

  2. வாரத்தின் முதல் நாளில் மிக அருமையான கருத்து,இந்த வாரம் சிறப்பானதாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  3. மிக அருமையான பதிவு. நன்றி. சுந்தர் சார்.

  4. நண்பரே, இன்று காலை (தங்கள் பதிவை படிக்கும் முன்) ஒரு வேண்டாத நபரிடம் சில பேச்சக்களை கேட்டு கவலை பட்டுகொண்டிருந்தேன். உங்கள் பதிவு எனக்கே எழுதியிருந்தது போல இருந்தது. படித்த பின் குப்பைகளின் பேச்சுக்கு நான் ஏன் மதிப்பு கொடுத்து என் நாளை வீணாக்க வேண்டும் என்று புரிந்தது. நன்றி.

    தங்களின் பதிவுகள் என்னைப்போல் எத்தனை நண்பர்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு ஒரு விடைத்தாள்.. தாங்களும் நமது தளமும் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

  5. டியர் சார்
    உங்கள் பதிவு மிகவும் அருமை.
    எங்கள் தளமும் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

    1. //எங்கள் தளமும்//

      நன்றி!
      – சுந்தர்

  6. சாலை விதிகளை நான் ஓரளவு தெரிந்துகொண்டிருந்தாலும், இந்த குப்பை வண்டி விதி பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நிச்சயமாக இது நாம் எல்லோரும் தெரிந்து புரிந்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அருமையான விதி. மிக மிக உபயோகமான பதிவுக்கு நன்றி சுந்தர்.

  7. அருமை. மிக அருமை.

    நம் எண்ணம்தான் நம் வாழ்க்கை. இதுதான் நேற்று குருமகான் அவர்கள் சொன்னது.

    நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  8. திங்கட் கிழமை காலை டென்ஷன் குறைக்கும் நல்ல கருத்து .
    thankyou sir
    நம் தள வாசர்களுக்கு மேலும் ஒரு உற்சாகம் ஊட்டும் நல்ல பதிவு

  9. அற்புதமான விஷயம் பிரச்சனைகளை நன்றாக சீர் தூக்கி பார்த்து ஆராயிந்து பார்த்து முடிவேடிக்கும் பக்குவம் உங்களுக்கு மிக நன்றாக வந்து விட்டது. இல்லையென்றால் இப்படி ஒரு பதிவை நீங்கள் தர முடியாது. சுந்தர், நான் வயதில் மூத்தவன் ஆனால் பக்குவத்தில் நீங்கள் எனக்கு ஒரு ஆசான்

    1. நன்றி. அடக்கத்திற்காக இவ்வாறு கூறுகிறீர்கள்.
      ஆனால் நம் எல்லோருக்கும் காலமும் அது தரும் அனுபவங்களுமே மிகப் பெரிய ஆசான்!
      – சுந்தர்

  10. சுந்தர்ஜி,

    அருமையான பதிவு. வாயை கொடுத்து நம் மனதை புண்ணாக்கி கொள்ள வேண்டாமே. இன்றைய சூழலில் அவரவர் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு.

    NANDRI

  11. மனிதன் தன்னை மாற்றிக்கொள்ளாதவரை அவனிடம் பெருமை, பொறாமை, கவலை, துக்கம் , கோபம் , பயம் எல்லாம் ஏற்பட்டு தன்னையே அழித்துகொள்கிறான். இவற்றை கடக்க “பொறுமையை” கடைபிடித்தால் வாழ்கையில் நிம்மதி கிடைக்கும்.

  12. குப்பை போல் அழுக்கு என்னமுடைய வார்த்தைகலை சுமந்து திரியும் மனிதர்கல் எத்தனை…எத்தனை…!அப்படிபட்ட மனிதர்கலுடன் விவாரதம் செய்தால் எப்படிப்பட்ட குப்பைகல் நம்மிடம் வந்து சேரும் என மிக அழகாக சொல்லியுல்லீர்கல்..
    நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது. –
    நன்றி..

  13. மிக அருமையான பதிவு அண்ணா,

    “உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை
    உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் , நாளை துன்பம் இல்லை”

    நம் அன்றாட வாழ்வியல்கான பயனுள்ள தகவல்.

    வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

    நன்றி,
    மு. சுந்தரபாண்டி

    1. சுந்தர் அண்ணா மிக மிக அருமையாக உள்ளது

  14. “நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.”

    அருமையான வரிகள்

    கண்ணன்

  15. அருமையான பதிவு.
    இன்றைய இளைய சமுதாயத்தின் சுயமுன்னேற்ற கோட்பாடுகளில் இது ஒன்றாக இருக்கட்டும்.

    அந்த டாக்ஸி ஓட்டுனரின் செய்கையே மிகுந்த பாராட்டுக்குரியது.

    நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை — அதாவது Reactionதான் கோபம்

    அன்பே சிவம்

  16. மிக தெளிவான அதே சமையம் மிகவும் அவசியமான பதிவு !!!

    மௌனம்
    புன்னகை
    மன்னிக்கும் மனப்பக்குவம்
    இவற்ற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாண்டோமேய்யானால் எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் மிக எளிதாத எதிர்கொண்டு வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ்ந்திடலாம் !!!

    வாழ்க வளமுடன் !!!

  17. மிக மிக அருமை,

    பிரபல தொழில் அதிபர் கூறியது,

    வழியில் குறைக்கும் நாய் மீது கல் எரிவதை விட புத்திசாலிகள் ,
    பிஸ்கட் ஐ எரியலாம்.

    இரா.சுரேஷ்பாபு

Leave a Reply to SHIVAKUMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *