Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

print

தா சர்வ காலமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?” என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, “அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்!” என்றார்.

சிறியதாக புன்முறவல் புரிந்த நாராயணன், “நாரதா இதை அனுபவப்பூர்வமாக உனக்கு விளக்க சிறிது காலம் தேவைப்படும். அதுவரை நீ நான் சொல்வதை தட்டாது கேட்கவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். பரவாயில்லையா?” என்கிறார்.

நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பயனை தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதால்… “அதனால் என்ன பிரபு… எப்படியோ எனக்கு உன் நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் பற்றி தெரிந்தால் போதும்!” என்கிறார்.

“சரி…நீ நேராக பூலோகம் சென்று அங்கு ஒரு சிறிய புல்லிடம் என் நாமத்தை கூறு. உனக்கே புரியும்” என்கிறார் பரமாத்மா.

நேராக பூலோகம் வரும் நாரதர், ஒரு நந்தவனத்தில் அப்போது தான் முளைத்த ஒரு சிறிய புல்லிடம் சென்று ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். அடுத்த கணம் அந்த புல் கருகி கீழே சாய்ந்து விடுகிறது. அதிர்ச்சி அடையும் நாரதர் நேராக திரும்பவும் வைகுண்டம் வருகிறார்.

“என்ன பிரபோ உங்கள் நாமத்தை சொல்வதால் ஏதோ அதிசயம் நடக்கும் என்று நினைத்தால் தளிர் போல இருந்த புல்லும் கருகிவிட்டதே… இது தானா உன் நாமத்தின் மகிமை…?”

மறுபடியும் பகவான் தனக்கேயுரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

“சரி… அது போகட்டும் நாரதா… இம்முறை நீ பூலோகம் சென்று ஒரு புழுவிடம் என் நாமத்தை சொல்” என்கிறார்.

நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.

[box size=”large” style=”rounded” border=”full”]நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.[/box]

நாரதருக்கு இம்முறை சற்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் வைகுண்டம் ஓடிவருகிறார்.

“பரந்தாமா? என்ன இது அக்கிரமம்… உன்  பெயரை சொன்னவுடன் அந்த புழு எழுந்து பறக்குமல்லவா என்று நினைத்தேன். மாறாக புல்லை போல அதுவும் மரணித்துவிட்டது. இது தானா உன் நாமத்தின் பெருமை? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது” என்று குமுறுகிறார்.

“அப்படியா? எதற்கும் வேறொரு ஜீவனிடம் இன்னொரு முறை முயற்சித்து பாரேன்….” என்று கூறும் பகவான் அடுத்து அப்போது தான் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வந்த ஒரு குருவிக்குஞ்சிடம் சென்று தன் நாமத்தை கூறுமாறு பணிக்கிறார். நாரதரும் அவ்வாறே செய்கிறார். குருவிக் குஞ்சும் உயிரை விட்டுவிடுகிறது.

அடுத்து ஒரு கன்றுக்குட்டி. கன்றுக்குட்டிக்கும் அதே கதி தான்.

இப்படியாக புல், புழு, பறவை, விலங்கு என்று ஒவ்வொன்றாக பார்த்து இறைவனின் கட்டளைப்படி நாராயண மந்திரத்தை கூறுகிறார் நாரதர். சொல்லி வைத்தார் போல அனைத்தும் உடனே மரணத்தை தழுவுகின்றன. நாராயண நாமத்தை சொல்கிறோம் என்ற நினைப்பில் ஒவ்வொரு உயிராக நாம் கொன்றுகுவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு.

இம்முறை பகவானிடம் சண்டைக்கே போய்விடுகிறார். “நாராயணா போதும் உன் விளையாட்டு. உன்னால் பல உயிர்களை இதுவரை கொன்றுவிட்டேன். அந்த பாவம் என்னை சும்மா விடாது. இப்போது உன் நாமத்தை உச்சரிப்பது குறித்து எனக்கே சற்று தயக்கமாக இருக்கிறது!” என்கிறார்.

“நாரதா எதற்கும் கடைசியாக ஒரே ஒரு முறை எனக்காக பூலோகத்தில் விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப் பாரேன்….” என்கிறார்.

நாரதர் அலறியடித்துக்கொண்டு…. “ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…” என்று கெஞ்சுகிறார்.

[box size=”large” style=”rounded” border=”full”]”ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…” [/box]

“நாரதா நிபந்தைனையை மீறினால் எப்படி… சொல்வதை கேட்டு பொறுமையாக இருப்பேன் என்றல்லவா கூறினாய்…?” என்கிறார் பகவான்.

சற்று யோசிக்கும் நாரதர்… “சரி… பூலோகம் சென்று அந்த குழந்தையிடம் உன் நாமத்தை சொல்கிறேன். ஆனால் என் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் நீ கூறியதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்”

“சரி…” என்று பகவான் கூற நாரதர் விதர்ப்ப நாட்டிற்கு விரைகிறார்.

நாரதரை பலவாறாக துதித்து வரவேற்கிறான் மன்னன். குழந்தையை பார்க்கவேண்டும் என்று நாரதர் கூற, அந்தப்புறத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு மன்னனுக்கு புதியதாக பிறந்த அந்த குழந்தையின் காதில் சென்று ‘நாராயணா! நாராயணா! நாராயணா!’ என்று கூறுகிறார் நாரதர்.

உடனே அங்கு அனைவரும் ஆச்சரியப்படும்படி அந்த குழந்தை வாய் திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பிக்கிறது . அந்த அதிசயத்தை கண்ட யாவரும் வியந்தனர்.

அக்குழந்தை கூறியதாவது…. “நாரத மகரிஷியே! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நான் போன பல பிறவிகளில் புழுவாகவும் பூச்சியாகவும் மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன். எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அதுவும் ஒரு ராஜகுமாரனாக இந்த பிறவியை மிக விரைவில் அடைந்தேன். அது மட்டுமல்ல பிறந்தவுடனே பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன். நாராயண நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பல காலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன். எனக்கு ஸ்ரீமன் நாராயணனை அடைய வழிகாட்டியதற்கு நன்றி’ என்று அக்குழந்தை கூறியது.

நாராயண நாமத்தின் மகிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர் வடித்தார். ‘நாராயணா! என்னே உன் நாமத்தின் மகிமை!’ என வியந்து மகிழ்ந்தார்.

ஒரு புழுவே நாராயண நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால், மனிதப் பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப் பாருங்கள். அதை நான் ஒரு பதிவில் கூறமுடியுமா? நூறு பிறவிகள் எடுத்தாலும் அதற்கு போதாதே…

இதைத் தான் ஆதி சங்கரரும் சொல்கிறார்..

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் சரி….ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பலன் உண்டு. எனவே நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் உள்ளத்தின் மூலம் இருக்கட்டும்.

பகவானின் நாமஸ்மரனையும் சரி… உங்கள் பிரார்த்தனையும் சரி…. என்றுமே வீண் போகாது!

இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா?

=======================================================
விபத்தில் கால் முறிவு – விரைவில் குணமடையவேண்டும்

என்னுடைய நெருங்கிய நண்பர் திரு.தேவன் அவர்கள் கடந்த 08/06/13 அன்று எங்கள் கம்பனி வாசலில் விபத்துக்குள்ளானார். விபத்தில் அவரது இடது கால் முறிந்துவிட்டது. கடந்த வாரம் புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவரது மனைவி மக்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. சீக்கிரம் அவர் குணம் பெற்று வீடு திரும்பி, எப்போதும் போல வேலைக்கு வர இறைவனை வேண்டிக்கொள்வோம்.

-மனோகர், திருவள்ளூர்
=======================================================
முன்னேற்றத்துக்காக முதுகலை பட்டப்படிப்பு – உங்கள் பிரார்த்தனை வேண்டும்

வணக்கம் நண்பர்களே. இந்த தளத்தின் ஆசிரியர் சுந்தர் அவர்களின் நெருங்கிய நண்பன் நான். தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். எனது முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் M.Sc. (Psychology) முதுகலை படிப்பு சேர்ந்து படித்து வருகிறேன். விரைவில் தேர்வு நடைபெறவிருக்கிறது. அதற்காக தயார் செய்து வருகிறேன். தேர்வை நல்லபடியாக எழுதி முடிக்க, உங்கள் அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– T V E ராஜேஷ், வேலூர்
=======================================================

நண்பர்களே, திரு.மனோகரன் அவர்களின் நண்பர் திரு.தேவன் அவர்கள் பரிபூரண நலம் பெற்று வீடு திரும்பி, விரைவில் தன பணியில் சேரவும், நண்பர் திரு.ராஜேஷ் அவர்கள் நல்லபடியாக தேர்வை எழுதி வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு உயரவும் பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூன் 16, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=============================================================

– See more at: http://rightmantra.com/?p=5013#sthash.NDmr46OZ.dpuf

11 thoughts on “எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

  1. நாராயணன் பெயரை உச்சரித்தாலே என்ன பயன்கள் கிடைகிறது என்று தெளிவாக கூறி உள்ளீர்கள்

    பிராத்தனை வேண்டி கேட்டுள்ள இருவரின் வேண்டுதலும் நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன்

  2. ஓம் நமோ நாராயணாய…..ஆத்மதமாக இதை உச்சரிக்கும்போது மனதின் வலி குறைந்து மனவலிமை பெரும்….

  3. ஓம் நமோ நாராயணாய நாமத்தின் மகிமை குறித்து அருமையான கதையுடன் விளக்கம் அருமை .
    =============================================================
    அதாவது குரங்கு குட்டியாக இருக்கும் போது எப்படி தாய் குரங்கை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும் . தாய் பிடித்துக்கொள்வது என்பது சேயின் பிரயத்தனம் முயற்சி என்பதாகும் ,முயற்சியே இல்லாமல் எதுவும் நடைபெறாது .

    ஒரு பூனைக்குட்டி தன்னை முழுமையாக தாய்இடம் ஒப்படைத்து விடுகிறது .தாய் பூனைகுட்டியை ஒரு வேலை பரண் மீது வைக்கிறது ,மறுவேலை பானைக்குள் வைக்கிறது,மறுவேலை பொந்துக்குள் வைக்கிறது .இந்த இடம் சரியா?சௌகரியமானதா ?என்று குட்டி கவலைபடுவது இல்லை.
    அம்மாவுக்கு எல்லாம் தெரியும் .அவள் அபாயத்தில் கொண்டு நிறுத்தமாட்டாள் என்ற நம்பிக்கை .இதை போலவே பக்தனும் பகவானிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடவேண்டும் .
    அவன் நம்மை வழி நடத்துவான் என்ற நம்பிக்கை அவனிடத்தில் விட்டுவிட வேண்டும்.
    எல்லோரும் எட்டுஎழுத்து மந்திரத்தை ஓம் நமோ நாராயணாய,ஓம் நமோ நாராயணாய,ஓம் நமோ நாராயணாய என்று மீண்டும் மீண்டும் சொல்லி துன்பங்களை களைந்து,பாவங்களை போக்கி குழ்ந்தை போல் அரவணைக்கும் திருமாலின் பாத கமலங்களை சிக்கென பிடித்து வைகுண்ட இன்பத்தை வாழும் போதே பெறுவோம் .
    ‘ஓம் நமோ நாராயணாய’
    ‘ஓம் நமோ நாராயணாய’
    ‘ஓம் நமோ நாராயணாய’
    ==================================================
    தேவன் அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தேன்.நமது தளம் சார்பாக பிராத்தனை நடைபெறுவதை தெரிவித்தேன் .அவரது உறவினர்களும் கம்பனி நண்பர்களும் ,நன்றி தெரிவித்து அதே நேரத்தில் பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர் .

    மனோகர் .திருவள்ளூர்

  4. அருமையான பதிவு சுந்தர்,

    “ஒரு புழுவே நாராயண நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால், மனிதப் பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப் பாருங்கள். ”

    “இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் சரி….ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பலன் உண்டு. எனவே நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் உள்ளத்தின் மூலம் இருக்கட்டும்.”

    ஓம் நமோ நாராயணாய!

    திரு.மனோகரன் அவர்களின் நண்பர் திரு.தேவன் அவர்கள் பரிபூரண நலம் பெற்று வீடு திரும்பி, விரைவில் தன பணியில் சேரவும், என்னுடைய அலுவலக சக ஊழியர் மற்றும் என் முன்னால் Boss திரு.ராஜேஷ் அவர்கள் நல்லபடியாக தேர்வை எழுதி வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு உயரவும் பிரார்த்திப்போம்.

    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கீதையின் நாயகனே கிருஷ்ணா! கிருஷ்ணா!

    சுந்தரபாண்டி,
    வேலூர்

  5. “என்ன பிரபோ உங்கள் நாமத்தை சொல்வதால் ஏதோ அதிசயம் நடக்கும் என்று நினைத்தால் தளிர் போல இருந்த புல்லும் கருகிவிட்டதே… இது தானா உன் நாமத்தின் மகிமை…?”

    சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகம் பயம் தான் நாரதருக்கும் ஏற்பட்டுள்ளது படிக்க எதார்த்தமாகவும் சிந்திக்கும் விதமாகவும் உல்லது ….
    ஓம் நமோ நாராயணாய’ ‘
    ஓம் நமோ நாராயணாய’ ‘
    ஓம் நமோ நாராயணாய’ –

    மனோகர், திருவள்ளூர் நெருங்கிய நண்பர் திரு.தேவன் அவர்கலுக்காகவும்,அவ்ர் சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்பி, எப்போதும் போல வேலைக்கு வர இறைவனை வேண்டிக்கொள்வோம். மற்றும், ஆசிரியர் சுந்தர் அவர்களின் நெருங்கிய நண்பர் திரு,T V E ராஜேஷ், வேலூர்அவர்கல் தேர்வை நல்லபடியாக எழுதி முடிக்க, நம் தலம் சார்பாக பிரார்திப்போம்..

  6. ஓம் நமோ நாராயணாய !!!

    பிறவிப்பயன் அடைய
    ஜென்மம் கடைத்தேற
    பாவங்கள் நீங்கிட
    முக்தி அடைந்திட
    எத்துனை எளிய மகா மந்த்ரம் !!!

    முழு ஈடுபாட்டோடு நம்பிக்கையுடன் இந்த மஹா மந்த்ரத்தை ஜெபிப்போம் !!!

    வாழ்வில் துயருறும் அனைவரும்
    அவரவர் துயர் நீங்கி
    பிரார்த்தனைகள் நிறைவேரப்பெற்று
    சகல சௌபாக்கியத்துடன் வாழ
    மனதார வேண்டுவோம் !!!

    ஓம் நமோ நாராயணாய !!!

  7. சுந்தர்ஜி.

    நான் பிரார்த்தனை நேரம் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் இருந்தேன் .மனோகர், திருவள்ளூர் நெருங்கிய நண்பர் திரு.தேவன் அவர்கலுக்காகவும்,அவ்ர் சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்பி, எப்போதும் போல வேலைக்கு வர வேண்டியும் மற்றும், ஆசிரியர் சுந்தர் அவர்களின் நெருங்கிய நண்பர் தேர்வை நல்லபடியாக எழுதி PROMOTION கிடைக்க வேண்டியும் மீனாக்ஷி முன்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

    ஓம் நமோ நாராயணாய

  8. 16/06/13 அன்று நம் தளம் சார்பாக என் நெருங்கிய நண்பர் திரு.தேவன் அவர்கலுக்காகவும்,அவ்ர் சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்பி, எப்போதும் போல வேலைக்கு வர வேண்டியும் மற்றும், ஆசிரியர் சுந்தர் அவர்களின் நெருங்கிய நண்பர் தேர்வை நல்லபடியாக எழுதி PROMOTION கிடைக்க வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

    நமது தல வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

    இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து பேசினேன் .சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .
    நண்பர் தேவன் சுந்தர் ஜி அவர்களுக்கும் ,பிரார்த்தனை யில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் .

    இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் .

    நன்றியுடன் மனோகர்.

  9. பிராத்தனை செய்து வேண்டிகொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

  10. என்று முதல் நாம் நாராயணனின் நாமத்தை உச்சரிப்பேன்.

Leave a Reply to latha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *