Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

print
சென்ற பதிவை பார்த்துவிட்டு சிவக்குமார் என்னும் நண்பர் ‘வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ என்பதை விளக்கி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பலருக்கும் உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன்.

மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை  அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.  இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது  முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து,  மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.

மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும்.  அதுமட்டுமின்றி  பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.

விளக்கேற்றவேண்டிய நேரம்

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்,  குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்

1. விளக்கில் எண்ணெய் விட்டு  எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு  திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.  மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.  தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன்-மனைவி உறவு நலம்  பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.

திசைகள்

கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?

தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக  பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி :  வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும்  மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு  ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால்  செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

[END]

59 thoughts on “வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

  1. நல்ல பயனுள்ள தகவல்.
    “பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்” இந்த தகவல் நான் இதுவரை அறியாதது. தெரியபடுத்திய சிவகுமார் சார், சுந்தர் சார் இருவருக்கும் நன்றி.
    தீபம் ஏற்றும் முறையும் திரிகளின் பலனும் எல்லோருக்கும் பயன்படுத்தும் விதத்தில் கொடுத்துள்ளிர்கள்.

  2. சுந்தர் சார்
    மிகையும் பயனுள்ள தகவல்.பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்” இந்த தகவல் நான் இதுவரை அறியாதது. விளக்கேற்றுவதில் இத்தன விசயங்கள
    இதை தெஇயபடித்ய சுந்தர் சார் மிகையும், நன்றி.
    விளக்கேற்றுவதில் கிடைக்கும் புண்ணியத்தில் சிவகுமார் சார், சுந்தர் சார் பங்கு உண்டு.
    selvi

  3. அய்யா சுந்தர்ஜி, ஒரு சிறிய விஷயத்தை எவ்வளவு பெரிய பயனுள்ள பதிவாக செய்து விட்டீர்கள்.

    விளக்கேற்றும் மகத்துவம் பற்றி எத்தனை தகவல்கள். பிரமாதம்.

    (ஒரு சிறு கோடாரியால் பெரிய மலையைப் பிளந்த மாதிரி உள்ளது)

  4. இதோடு நான் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தது,முடிந்தவரை ஆண்கள் விளக்கை அணைக்க கூடாது என்று போட்டு இருந்தது

  5. சார் வணக்கம் . மிக மிக பயனுள்ள தகவல் . தந்தமைக்கு நன்றி . எங்கள் வீட்டில் இனி தினதொரும் வீளக்கு ஏற்றுவோம் .

  6. அருமையான பதிவு !!!

    மிகவும் பயனுள்ள தகவல்கள் !!!

    தினசரி தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம்
    அந்த தீப ஒளியில் தீய சக்திகளும் வினைகளும் பொசுங்கி மறையட்டும் !!!

  7. சுந்தர்ஜி

    நல்ல பதிவு

    கோவிலில் கடவுளை நோக்கி தீபம் ஏற்றலாமா அல்லது திசை நோக்கி ஏற்றனுமா ?

    1. உள்ளே சுவாமியின் சன்னதியில் எப்படி உள்ளதோ அப்படி. (பக்கவாட்டில்) ஏற்றவேண்டும்

      – சுந்தர்

  8. சுந்தர் குறிப்பிட்ட அனைத்தும் மிகமிக அருமை.இவ்வளவு குறிப்புக்களும் ஒரே பதிவாக பதிந்தது அற்புதம் .
    ==============================================================
    சுத்தமான நெய் கோயில் ஆராதனைக்கு வாங்கி கொடுத்தால் நெய் கரைவது போல் நமது கர்மவினை கரைந்து நன்மை உண்டாகும் .{50 ml ,100 ml தங்களால் முடிந்ததை வழங்கலாம் }

    விளக்கை அணைக்க”தூண்டும் குச்சியாலோ அல்லது சிறிதொரு சுத்தமான கம்பி பயன் படுத்தி அழுத்தி அணைக்கலாம் ”

    கடன் தொல்லை {கொடுக்கல் ,வாங்கல் ,வட்டி } இருப்பின் பார்வதி தேவியை மனதில் நிறுத்தி
    “அபர்ணியாயை நமஹ”
    “அபர்ணியாயை நமஹ”
    “அபர்ணியாயை நமஹ”

    புஷ்பதினால் அர்ச்சித்து வந்தால் கைமேல் பலன் கிடைத்துள்ளது .
    ==============================================================

  9. சுந்தர் சார், நல்ல அருமையான பதிவு. மனோகரன் சார் உங்கள் பதிலுக்கு நன்றி.
    ஆண்கள் விளக்கு அணைக்க கூடாது என்று ராஜா அவர்கள் சொல்லி இருப்பதற்கு விளக்கம் கிடைத்தால் நன்று.

  10. நண்பர் ராஜா அருநோதயகுமார் அவர்களுக்கு,

    பொதுவாக விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

    ஆண்கள் குடும்பத்தின் தலைவர்கள் ஆவார்கள் .நமது வீட்டு ஒளியை நாமே அமர்த்துதல் நல்லதல்ல .வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆண்களே தீபம் ஏற்றி விளக்கை அமர்த்தளம்.

    இனிப்பு கட்டி (கற்கண்டு ) கொண்டும் விளக்கை குளிரவைக்கலாம் .
    -மனோகர்

  11. என்ன விஹிததில் என்னை சேர்க்க வேண்டும்

    1. எலுமிச்சையில் விளக்கு ஏற்றவேண்டாம்.

      ஆலயத்திலும் சரி…. வீட்டிலும் சரி…மண்ணாலான அகல் விளக்கே சாலச் சிறந்தது. வசதி இருப்பின் சிறிய வெள்ளி விளக்கில் ஏற்றலாம்.

      – சுந்தர்

  12. எக்கொருக்கும் பயனுள்ள ஒரு தொகுப்பு. இதைபோல வேறு பயனுள்ள விழயங்கள் இருந்தால் அனுப்பவும்.
    ரொம்ப நன்றி
    இப்படிக்கு
    ல். சூரியநாராயணன்

  13. எனக்கு மிகவும் பயன் உள்ள தாக இருந்தது ரொம்ம நன்றி சார்

  14. நான் தினமும் இரு வேலை உம் விளக்கு ஏற்றி வருகிறேன். நான் ஒரு ஒரு தெய்வத்துக்கும் தனி தனியாக விளக்கு ஏற்றி வருகிறேன். நான் ஏற்றும் முறை எங்கள் விட்டில் உள்ள தெய்வதிருக்கு ஒரு விளக்கு , என் பிறந்த வீடு குல தெய்வத்துக்கும் புகுந்த வீடு குல தெய்வத்துக்கும் சேர்த்து ஒரு விளக்கும் , பின் என் இஷ்ட தெய்வங்கள் இருவருக்கும் தனி தனியாக இரு விளக்கும் நான் தினமும் இவாறு நான்கு விள்ளகுகள் ஏற்றி வழி பட்டு வருகிறேன். நான் விளக்கு ஏற்றும் முறை சரியா என்றும் அதில் எதாவது பிழை இருந்தால் தயவு செய்து எனக்கு கூறவும் . வேறு எதாவது சேர்த்து செய்ய வேண்டிய விஷயங்கள் இருந்தால் அதையும் தயவு செய்து எனக்கு சொல்லுங்க சார் .

    இப்படிக்கு
    சுதாசரவணன்

    1. நீங்கள் செய்வதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், பொதுவாக ஒரே ஒரு ஐந்துமுக விளக்கு ஏற்றினால் போதுமே. தனித்தனியாக தேவையில்லை என்பது நம் கருத்து.

      – சுந்தர்

  15. நன்றி அய்யா ,
    விளக்கு தானாக அன்னயலமா அல்லது நாம் தன அன்னைக்க வேண்டுமா. ப்ளீஸ் சொல்லுங்கல்.

    1. பெரிய கல்கண்டை கொண்டு நாம் தான் மலையேற்ற வேண்டும். தானாக அணையக் கூடாது.

  16. வணக்கம் ஐயா, நான் எனது வீட்டில் அஷ்டலக்ஷ்மி விளக்கு,ஐந்து முக வெள்ளி விளக்கு,குபேர விளக்கு என 3 விளக்கு ஏற்றுகிறேன் .வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றலாம்.

  17. ஒற்றை படை அல்லது இரட்டை படை விகிதத்தில் விளக்கு ஏற்ற வேண்டுமா சார்

    1. குத்துவிளக்கை எப்போதும் ஜோடியாக தான் ஏற்றவேண்டும். ஜோடியை பிரிக்கக்கூடாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் ஒரு முகம் ஏற்றினால் போதும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகமாக ஏற்றுவது சுபிக்ஷம்.

      காமாக்ஷி அம்மன் விளக்காக இருந்தால் ஒரு விளக்கு போதும்.

      மேலும் சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட விளக்கை ஏற்றுவார்கள். அதை மாற்றவேண்டாம்.

      – சுந்தர்

  18. இயா வணக்கம்,
    வீட்டில் ஏற்றிய குத்து விளக்கு அணைவது போல் எனக்கு கனவு வந்தது இதன் பலன் எனக்கு சொலுங்கள் .

    1. இதில் பயப்பட ஒன்றும் இல்லை. ஏதேனும் ஒரு கோவிலுக்கு வெள்ளிதோறும் சென்று துர்க்கை சன்னதியில் ஜோடி விளக்கு ஏற்றிவரவும். ஆலயங்களுக்கு விளக்கேற்ற எண்ணை வாங்கித் தரவும்.

      – சுந்தர்

  19. இயா வணக்கம்,
    அசைவம் சாப்பிட்டு விட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா..

  20. வணக்கம். தீபத்தை வீட்டில் 24 மணி நேரமும் எறிய விடலாமா? சிரிய விளக்கம் அளிக்கவும்.

    1. தேவையில்லை. விளக்கேற்றியபின் ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் எரிந்தால் போதுமானது.

  21. அய்யா இங்கு மலேசியாவில், தீபத்தை 24 மணி நேரம் ஏற்றக்கூடாது,அப்படி ஏற்றினால் அது துஸ்ட சக்தி வ்ந்துவிடும் என்று கூறி காலை 10 மணிக்கும் இரவு 10 மணிக்குள் அணைத்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள் .. எது உண்மை?

    1. 24 மணிநேரமும் விளக்கேற்ற வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. காலை 2 மணிநேரமும், மாலை 2 மணிநேரமும் போதுமானது.

  22. பயனுள்ள தகவல் நன்றி

    வீட்டில் ஒற்றை விளக்கு இருக்கலாமா ஜோடியாக தான் இருக்க வேண்டுமா…

    1. குத்து விளக்கு என்றால் ஜோடி விளக்கு ஏற்றுவது நல்லது. காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றினால் ஒன்று போதும்.

  23. மிகவும் பயனுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கும் திரு சுந்தர் அவர்களுக்கு என் மனமர்ந்த நன்றிகள் .

  24. கோவில் மற்றும் வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றலாமா …?பெண்கள் மட்டுமே விளக்கு ஏற்றவேண்டும் என்று விதி ஏதும் உள்ளதா..?

  25. வணக்கம் என் வீட்டில் வெள்ளி அஷ்ட லட்சுமி விளக்கு எண்னை கசிகிறது (ஒழுகுது) என்ன செய்வது அய்யா

  26. விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது மிகச் சிறந்தது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், நன்று, ஆனால், சைவ வைணவ நெறிமுறைகளின் படி பார்த்தால் கலப்பு விளக்கு நல்லதல்ல, ஐந்து பலன் வேண்டி ஐந்து எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற விரும்பினால் ஐந்து அகல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடவும், கலப்பெண்ணெய் விளக்கு என்பது தீய சக்திகளை ஒருங்கிணைப்பதற்காக செய்யக் கூடியது, எனவே கலப்பு எண்ணெய் விளக்கு தவிர்க்கவேண்டிய ஒன்று என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்,

    1. தகவலுக்கு நன்றி. பெரியோர்களிடம் விசாரித்து, தெளிவு பெற்று பின்னர் உரிய மாற்றங்களை பதிவில் செய்கிறேன்.

  27. Koilil oru kuthu vilakai koil nadai sathumbothu oruvar vayal oothi malaiyetrinar..idhai parthen..nalladha kettadha?

    1. அது தவறு. அவருக்குத் தான் தோஷம். உங்களுக்கு ஒன்றும் இல்லை. நீங்கள் அவ்வாறு (வாயால் ஊதுவது) செய்யாமல் இருக்கவேண்டும். அது போதும்.

  28. ஐயா, நான் 24 மணி நேரம் நல்லஎண்ணை விளக்கு வைத்துள்ளேன் தவறு இல்லையே ?

  29. பூஜை அரை மேற்கு திசையை நோக்கி வைக்கலாமா, எந்த திசையை பார்த்தால் நல்லது, விளக்கு அரை மணி நேரம் ஏற்றலாமா.

    1. பூஜை அறை ஈசானிய மூலையில் இருக்கவேண்டும். வடக்கு தவிர வேறு எந்த திசையை பார்த்தபடி பூஜையறை இருந்தாலும் நலம்.

  30. நான் என் வீட்டில் காமாட்சி விளக்கு ஒன்றும் அதற்கு ரெண்டு துணை விலகும் ஏற்றுகிறேன் , அதுபோல் ஒரு குத்துவிளக்கு அதற்கு துணையாக ரெண்டு துணை விலகும் ஏற்றுகிறேன் . ரெட்டை படை யாக வருவதால் வெளியே உள்ள பிள்ளையாருக்கு ஒரு அகல் விலகும் ஏற்றுகிறேன் . நான் ஏற்றும் முறை சரியாய் என்பதை எனக்கு சொல்லுங்கள் . ப்ளீஸ்

    1. ஏற்கனவே போதுமான அளவு விளக்கவிட்டேன். உங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஆலோசிப்பது நல்லது.

  31. இலுப்பை எண்ணெயில் விளக்கு சிவன் கோவிலில் மட்டும்தான் ஏற்ற வேண்டும், வீட்டில் ஏற்றக்கூடாது என்று சிலர் சொல்லுகிறார்களே. உண்மையா? தயவு செயது விளக்கவும் .

Leave a Reply to raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *