Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > குருப்பெயர்ச்சி – சிறப்பு தகவல்கள் !

குருப்பெயர்ச்சி – சிறப்பு தகவல்கள் !

print

வக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார்.

“குரு பார்க்க கோடி நன்மை’ என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது பார்வைக்கு பலம் அதிகம். அவரின் 5,7,9 பார்வைகள் முறையே துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் இந்த மூன்று ராசியினருக்கும் சனியின் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசியினருக்கு நன்மையும், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மரகம், மீனம் ஆகிய ஏழு ராசியினருக்கு சுமாரான பலனும் நடக்கும். இந்த ஏழுராசியினரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருவுக்கு வெண்முல்லை மாலையும், மஞ்சள் வஸ்திரமும் சாத்தி வழிபடுவது அவசியம். வியாழனன்று விரதமிருந்து, அன்று மாலையில் தட்சிணாமூர்த்திக்கு கடலைப்பொடி அன்னம் நைவேத்யம் செய்து தானம் செய்யலாம்.

குருவின் அதிதேவதையான பிரம்மாவை வழிபடுவதும், குருவுக்குரிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் ஆலய தரிசனம் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். சிவன் கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குவது நல்லது. நெய்தீபம் ஏற்றுவதும் சிறப்பு. வியாழக்கிழமைகளில், “”குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ” என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால், குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும். மிதுன ராசியில் சஞ்சரிக்கும் ஓராண்டுக்குள் குரு தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி (திருவாரூர்), பட்டமங்கலம் (சிவகங்கை) தென்குடித்திட்டை (தஞ்சாவூர்), குருவித்துறை (மதுரை), ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று தரிசித்தால் கெடுபலன் நீங்கி நன்மை அதிகரிக்கும்.

குரு பரிகாரம் செய்ய ஏற்ற நாள் – நேரம்

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம். வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான்.

குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் குரு பகவானை வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.

வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைப்பது நிச்சயம்.

குரு 108 போற்றிகள்

ஓம்      அன்ன வாகனனே     போற்றி
ஓம்     அங்கிரஸ புத்ரனே     போற்றி
ஓம்     அபய கரத்தனே     போற்றி
ஓம்     அரசு சமித்தனே     போற்றி
ஓம்     அயன் அதிதேவதையனே     போற்றி
ஓம்     அலைவாயில் அருள்பவனே     போற்றி
ஓம்     அறிவனே     போற்றி
ஓம்     அறிவுக்கதிபதியே     போற்றி
ஓம்     அறக்காவலே     போற்றி
ஓம்     அரவகுலம் காத்தவனே     போற்றி
ஓம்     ஆண் கிரகமே     போற்றி
ஓம்     ஆணவமழிப்பவனே     போற்றி
ஓம்     இந்திரன் ப்ரத்யதிதேவதையனே  போற்றி
ஓம்     இருவாகனனே     போற்றி
ஓம்     ஈசனருள் பெற்றவனே     போற்றி
ஓம்     ஈரெண்ணாண்டாள்பவனே     போற்றி
ஓம்     உதித்தியன் சோதரனே     போற்றி
ஓம்     உபகிரக முடையவனே     போற்றி
ஓம்     எண்பரித் தேரனே     போற்றி
ஓம்     எளியோர்க் காவலே     போற்றி
ஓம்     ஐந்தாமவனே     போற்றி
ஓம்     ஏடேந்தியவனே     போற்றி
ஓம்     கருணை உருவே     போற்றி
ஓம்     கற்பகத் தருவே     போற்றி
ஓம்     கடலை விரும்பியே     போற்றி
ஓம்     கமண்டலதாரியே     போற்றி
ஓம்     களங்கமிலானே     போற்றி
ஓம்     கசன் தந்தையே     போற்றி
ஓம்     கந்தனருள் பெற்றவனே     போற்றி
ஓம்     கடகராசி அதிபதியே     போற்றி
ஓம்     கார்ப்புச் சுவையனே     போற்றி
ஓம்     காக்கும் சுவையனே     போற்றி
ஓம்     கிரகாதீசனே     போற்றி
ஓம்     கீர்த்தியருள்வோனே     போற்றி
ஓம்     குருவே     போற்றி
ஓம்     குருபரனே     போற்றி
ஓம்     குணசீலனே     போற்றி
ஓம்     குரு பகவானே     போற்றி
ஓம்     சதுர பீடனே     போற்றி
ஓம்     சஞ்சீவினி அறிந்தவனே     போற்றி
ஓம்     சான்றோனே     போற்றி
ஓம்     சாந்த மூர்த்தியே     போற்றி
ஓம்     சிறுமையழிப்பவனே     போற்றி
ஓம்     சின்முத்திரை ஹஸ்தனே     போற்றி
ஓம்     கராச்சாரியனே     போற்றி
ஓம்     சுப கிரகமே     போற்றி
ஓம்     செல்வமளிப்பவனே     போற்றி
ஓம்     செந்தூரில் உயர்ந்தவனே     போற்றி
ஓம்     தங்கத் தேரனே     போற்றி
ஓம்     தனுர்ராசி அதிபதியே     போற்றி
ஓம்     தாரை மணாளனே     போற்றி
ஓம்     த்ரிலோகேசனே     போற்றி
ஓம்     திட்டைத் தேவனே     போற்றி
ஓம்     தீதழிப்பவனே     போற்றி
ஓம்     தூயவனே     போற்றி
ஓம்     துயர் துடைப்பவனே     போற்றி
ஓம்     தெளிவிப்பவனே     போற்றி
ஓம்     தேவ குருவே     போற்றி
ஓம்     தேவரமைச்சனே     போற்றி
ஓம்     தேவர்குலக் காவலனே     போற்றி
ஓம்     நற்குணனே     போற்றி
ஓம்     நல்லாசானே     போற்றி
ஓம்     நற்குரலோனே     போற்றி
ஓம்     நல்வாக்கருள்பவனே     போற்றி
ஓம்     நலமேயருள்பவனே     போற்றி
ஓம்     நாற்சக்கரத் தேரனே     போற்றி
ஓம்     நாற்கோணப் பீடனே     போற்றி
ஓம்     நாற்கரனே     போற்றி
ஓம்     நீதிகாரகனே     போற்றி
ஓம்     நீதி நூல் தந்தவனே     போற்றி
ஓம்     நேசனே   போற்றி
ஓம்     நெடியோனே     போற்றி
ஓம்     பரத்வாஜன் தந்தையே     போற்றி
ஓம்     `பாடி’யில் அருள்பவனே     போற்றி
ஓம்     பிரஹஸ்பதியே     போற்றி
ஓம்     பிரமன் பெயரனே     போற்றி
ஓம்     பீதாம்பரனே     போற்றி
ஓம்     புத்ர காரகனே     போற்றி
ஓம்     புணர்வசு நாதனே     போற்றி
ஓம்     புஷ்பராகம் விரும்பியே     போற்றி
ஓம்     பூரட்டாதிபதியே     போற்றி
ஓம்     பொற்பிரியனே     போற்றி
ஓம்     பொற்குடையனே     போற்றி
ஓம்     பொன்னாடையனே     போற்றி
ஓம்     பொன்மலர்ப் பிரியனே     போற்றி
ஓம்     பொன்னிற த்வஜனே     போற்றி
ஓம்     மணம் அருள்பவனே     போற்றி
ஓம்     மகவளிப்பவனே     போற்றி
ஓம்     மஞ்சள் வண்ணனே     போற்றி
ஓம்     `மமதை’ மணாளனே    போற்றி
ஓம்     முல்லைப் பிரியனே     போற்றி
ஓம்     மீனராசி அதிபதியே     போற்றி
ஓம்     யானை வாகனனே    போற்றி
ஓம்     யோகசித்தி சோதரனே     போற்றி
ஓம்     ரவிக்கு உற்றவனே    போற்றி
ஓம்     ருத்ராட்சதாரியே    போற்றி
ஓம்     வடதிசையனே    போற்றி
ஓம்     வடநோக்கனே    போற்றி
ஓம்     வள்ளலே    போற்றி
ஓம்     வல்லவனே    போற்றி
ஓம்     வச்சிராயுதனே    போற்றி
ஓம்     வாகீசனே    போற்றி
ஓம்     விசாக நாதனே    போற்றி
ஓம்     வேதியனே    போற்றி
ஓம்     வேகச் சுழலோனே    போற்றி
ஓம்     வேண்டுவன ஈவோனே    போற்றி
ஓம்     `ஹ்ரீம்’ பீஜ மந்திரனே    போற்றி
ஓம்     வியாழனே    போற்றி

(நன்றி : Dinamalar.com, Maalaimalar.com)

[குறிப்பு : குருப் பெயர்ச்சி பலன் சுமாராக இருப்பவர்கள் கலங்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஒரு விரிவான பதிவு நம் தளத்தில் வரவிருக்கிறது!]

11 thoughts on “குருப்பெயர்ச்சி – சிறப்பு தகவல்கள் !

  1. சுந்தர்ஜி,

    இந்த குரு பெயர்ச்சியில் தங்களுக்கு டும் டும் டும் டும் மேளம் கொட்டி
    நல்ல மனையாள் அமைய வாழ்த்துக்கள்.

  2. குரு பெயர்ச்சி தினமான இன்று,குரு பெயர்ச்சி பலன்கள் தெரிந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது .

    நன்றி நன்றி ……

  3. சுந்தர் சார்,

    உஷா மேடம் சொன்னதை நான் வழிமொழிகிறேன். விரைவில் உங்களுக்கு மண மாலை அமைய குரு பகவானை வேண்டுகிறேன்.

  4. குருபெயர்சியாகிய இந்நாளில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அதிக போராட்டம் இல்லாத வழ்க்கையை தர வேண்டும் என (குறிப்பாக கடவுள் நம்பிக்கை உள்ள நம் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு) அந்த குரு பகவானை மனதார பிரார்த்திக்கின்ரேன்.

  5. வணக்கம் சுந்தர். குரு பெயர்ச்சி பலன்கள் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. எல்லோரும் எல்லாமும் பெற்று நல்வாழ்வு வாழ குரு பகவான் அருள் புரிய நாமும் அவரை வேண்டுவோம். நமது தள நண்பர்கள் சொன்னது போல தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற அவர் அருள் புரிய வேண்டுகிறேன்.

  6. சுந்தர் சார், உங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. அதேபோல்
    உஷா மேடம், பரிமளம் மேடம், தீபா மேடம்
    சொல்லியது பலிக்கட்டும். ஆல் தி பெஸ்ட்.

    1. வாழ்த்தும் ஆசியும் கூறிய அனைவருக்கும் நன்றி!
      – சுந்தர்

  7. இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நல்ல படியாக அமைந்து அவரவர் மனக்குறைகள் தீர்ந்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல அந்த தெட்சினாமூர்த்தி பகவான் எல்லோருக்கும் அருள்புரிவாராக !!!

    கடமையை செய்வோம்
    பலனை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார் !!!

    வாழ்க வளமுடன் !!!

  8. சுந்தர் சார்
    இந்த குரு பெயர்ச்சியில் தங்களுக்கு திருமண மேளம் கொட்டி
    நல்ல மனையாள் அமைய மனமார வாழ்த்துகிரண் .

  9. குருபகவான் அருளால் நம் நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க கடவுளை பிராத்திக்கிறேன்

  10. இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *