Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

print
“தாய் தந்தையரை துதியுங்கள், வாழ்க்கையில் நீங்கள் உயர்வீர்கள்….! பொன், பொருள், புகழ் உள்ளிட்ட அனைத்தும் உங்களை தேடி வரும்!!!” என்பதே வேதங்களின், தீர்ப்பு! மகரிஷிகளின் வாக்கு!!

சரி…. சில மாதங்களுக்கு முன்ன நடந்த சம்பவம் இது. என் நண்பரோட நண்பருங்க இவர். கால் டாக்ஸி டிரைவரா வேலை பார்க்குறார். பேர் கார்த்திகேயன். அவர் அவங்க அம்மா. ரெண்டே பேர் தான் அவங்க ஃபேமிலில.

புறநகர்ப் பகுதியில வீடு இருக்குது அவருக்கு. நகருக்கு வெளியே அவுட்டர்ல வீடு இருக்குறதால அவரால் டூட்டி முடிஞ்சி வீட்டுக்கு சரியான டயத்துக்கு போகமுடியலே. வீட்டுல வேற அம்மா தனியா இருப்பாங்க. அதுனால, சமீபத்துல ஒரு நாள், நகருக்குள்ளே வீடு மாற விரும்பி, சிட்டிக்கு உள்ளே வீடு தேடி அலைஞ்சிருக்கார்.

சென்னையின் முக்கியப் பகுதியான தி.நகர்ல ஒரு குடியிருப்பு பகுதி ஒண்ணுல, அவர் தேடிகிட்ருக்குற மாதிரி வீடு ஒன்னு மனசுக்கு நிறைவா, எளிமையா கிடைச்சது. அவருக்கு வீடு ரொம்ப பிடிச்சி போச்சு.

வீட்டுக்காரரிடம், “சார்… நாளைக்கு வந்து அட்வான்ஸ் பண்ணிடுறேன்” என்கிறார். அதற்கு அந்த ஹவுஸ் ஒனர், “ஏற்கனவே ஒருத்தரு பார்த்துட்டு, சீக்கிரம் அட்வான்ஸ் கொடுக்குறேன்னு சொல்லியிருக்கார். அதனால் நீங்க உடனே அட்வான்ஸ் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வீடு. இல்லேன்னா யார் முதல்ல அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ  அவங்களுக்கு தான் வீடு. அட்லீஸ்ட் டோக்கன் அட்வான்சாவது பண்ணனும்.”

“காலைல வந்து மொத்த அட்வான்சும் பண்ணிடுறேன் சார்….!”

“சரி… நாளைக்கு எனக்கு கொஞ்சம் பக்கத்துல போகவேண்டிய வேலை இருக்கு. வீட்டுக்கு வந்தவுடனே ஃபோன் பண்றேன். நீங்க உடனே வந்துடுங்க” என்கிறார்.

இவர் சரியென்று கூறிவிட்டு, தனது மொபைல் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். வீட்டில் அவரது அம்மாகிட்டே சொன்னவுடனே, “வேற யாராவது முந்திக்க போறாங்க. நான் கூட அவசியம் இல்லே. நீ நாளைக்கே போய் அட்வான்சை கொடுத்திட்டு வந்துடுறா” என்று சொல்லிவிடுகிறார்கள்.

மறுநாள் காலை, இவர் டூட்டியில் இருக்கும்போது ஹவுஸ் ஒனரிடமிருந்து ஃபோன் வருகிறது. இவருக்கு போன் செய்த வீட்டு முதலாளி… ஒரு சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பின்னர்….”சரி… நீ வாப்பா… அட்வான்ஸ் கொடுத்திடு!” என்கிறார்.

அட்வான்ஸ் கொடுக்கப் போனவரிடம் அந்த ஹவுஸ் ஒன்ற சொன்னதை கேட்டு இவருக்கு கடும் அதிர்ச்சி. சாதாரண அதிர்ச்சி அல்ல. இன்ப அதிர்ச்சி.

“நீ இந்த வீட்டுக்கு வாடகையே தரவேண்டாம்பா. அட்வான்ஸ் மட்டும் போதும். எவ்வளவு நாள் இருக்கணும்னு ஆசைப்படுறியோ அவ்ளோ நாள் இருந்துக்கோ. ஒரு நையா பைசா கூட வாடகை வேண்டாம்.” என்கிறார்.

“என்ன சார் சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலே…”

“நீ உன் செல்போன் காலர் டியூனா வெச்சிருந்த பாட்டை கேட்டேன். என்னமோ தெரியலே. எனக்கு அதுக்கு பிறகு தோணிச்சி இது. அதான் உடனே உன்கிட்டே சொல்லிட்டேன்.”

நண்பருக்கு லேசில் அவர் வார்த்தைகளில் நம்பிக்கை வரவில்லை. இருந்தாலும் அந்த ஹவுஸ் ஓனர் உறுதியாக சொல்லிவிட்டாராம் வாடகையே வேண்டாம். இருக்குற வரைக்கும் இருங்கன்னு.

சென்னையில், அதுவும் இன்னைக்கு வாடகை இருக்குற ரேஞ்சுல – அதுவும் – தி.நகர்ல நடந்த உண்மைச் சம்பவங்க இது. முடிஞ்சா சம்பந்தப்பட்ட ரெண்டு போரையும் பேட்டி எடுத்து போடமுடியுமான்னு பார்க்குறேன்.

“அப்பா அம்மாவை வணங்குங்க. வாழ்க்கையில் நீங்க ஓஹோன்னு வருவீங்க. எல்லாம் உங்களை தேடி வரும்!”னு போன பதிவுல சொன்னேன். இங்கே பாருங்க ஒருத்தர் சும்மா காலர் ட்யூன்ல அந்த பாட்டை வெச்சதுக்கே அவருக்கு வாடகையே இல்லாம ஃப்ரீயா வீடு கிடைச்சிருக்கு. அப்போ மனப்பூர்வமா அப்பா அம்மாவை வணங்கிட்டு வந்தா? எவ்ளோ சிறப்புக்கள் கிடைக்கும்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

அப்படி என்ன பாட்டை தான் அவர் வெச்சிருந்தார் காலர் ட்யூனா?

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…” என்கிற ‘அகத்தியர்’ பட பாட்டை தாங்க.

அற்புதங்களோ அதிசயங்களோ அவங்கவங்க வாழ்க்கையில அவற்றை நம்புறவங்களுக்கு தான் அது சாத்தியமாகும். அப்பா அம்மாவை வணங்கினா நல்லது நடக்கும்னு மனப்பூர்வமா நம்புங்க. நல்லதே நடக்கும்!

சரி… அந்த ஹவுஸ் ஓனருக்கு இப்படி தோன்ற வேண்டிய அவசியம் என்ன?

அவர் வாழ்க்கையில் அவரது பெற்றோருக்கான கடமைகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகள் உள்ளிட்டவற்றில் அவருக்கு ஏதாவது சந்தேகங்கள் நீண்டகாலமாக இருந்திருக்கலாம். மேற்படி பாடலை கேட்டவுடன் அவருக்கு அதற்கான பதில் கிடைத்திருக்கலாம். (சில நீண்ட கால சந்தேகங்களுக்கு பதில் எங்கே எப்போ கிடைக்கும்னு சொல்லமுடியாதுங்க!) உடனே அதற்கு வெகுமதியாக நம்முடைய நண்பரின் நண்பருக்கு வாடகையின்றி வீட்டை அளித்துவிட்டார். அவ்வளவே!

நல்ல பாடலின் வீடியோவை இன்னொரு முறை இங்கே ரிபீட் செய்கிறேன்….!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை… பாடல்

பாடியவர் : T.K.கலா
திரைப்படம்: அகத்தியர்
இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள் : பூவை செங்குட்டுவன்

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

(தாயிற்)

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

(தாயிற்)

பொறுமையிற் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று .. குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

(தாயிற்)

வீடியோ…

[END]

9 thoughts on “செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

  1. “அப்பா அம்மாவை வணங்குங்க. வாழ்க்கையில் நீங்க ஓஹோன்னு வருவீங்க. எல்லாம் உங்களை தேடி வரும்!” இது சத்தியமான வார்த்தை. அவர்கள் மேல் எத்தனை மதிப்பு இருந்தாலும் அவர்களுக்கு என்ன மாதிரி பார்த்து கொண்டாலும் ஒரு சில காரணங்களால் அவர்களை பிரிந்து இருக்கும் எனக்கு ரொம்ப உறுத்தலாக இருக்கு. ஏதோ தப்பு செய்த மாதிரி இருக்கு. தெய்வம் என்னை மன்னிக்குமா?

  2. சுந்தர்ஜி,

    அருமையான பதிவு.

    தாய் , தந்தையரை தெய்வமாக கொண்டாடும் எவரும் கெட்டுபொவதில்லை.அப்பா அம்மாவின் மனம் கோணாமல் நடந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

    உங்கள் வெற்றியும் விரைவில் ……………..

    நன்றி

  3. அப்பா அம்மாவை வணங்குங்க. வாழ்க்கையில் நீங்க ஓஹோன்னு வருவீங்க. எல்லாம் உங்களை தேடி வரும்!” என்று எதிர்பார்த்து பெற்றோருக்கு தன் கடமையை செய்வது சிரந்த மகன் இல்லை..குழந்தை பருவத்தில் அவர்கல் நம்மை பேனி காத்தனர் இப்போது அவர்கலை நாம் பேனி காக்கவெண்டும் அது ஒவ்வொரு மகனின் கடமை…

    1. நீங்கள் கூறுவதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.

      அதே சமயம் ஒருவரது கடமைகளை கூட அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டு தான் இந்த காலத்தில் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. என்ன செய்ய….

      – சுந்தர்

  4. அம்மை அப்பனை சுற்றி பழத்தை பெற்று கொண்டார் நமது விநாயகப்பெருமான் .நாமும் அவ்வழியே செல்வோம்.

    \\தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை\\

  5. நெகிழ வைக்கும் பதிவு !!!
    மிக்க நன்றி !!!

    மாதா
    பிதா
    குரு
    தெய்வம் !!!

  6. அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
    அவர் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை..

    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல்வழிகாட்டும் தலைவன்.

    இதுதானய்யா உண்மை.

  7. படித்து மனம் நெகிழ்ந்தேன்.
    வாழ்க்கையின் இரு கண்களாக
    திகழும் பெற்றோரை போற்றி வணங்குவோம்.
    வாழ்வோம் வள‌முடன்

Leave a Reply to Amuthan Sekar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *