Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

print
ட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை. இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல்
* தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல்
* 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல்
* ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்
* 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல்
* 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல்
* கைகளை உதறிக் கொண்டே இருத்தல்
* ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை
* கதை கேட்பதில் விருப்பமின்மை
* தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு
* கீழே விழுந்து காயம் ஏற்பட்டாமல் வலியை உணராதிருத்தல்

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தைகளிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் பெற வேண்டும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.

மதுரையில் ஆட்டிசம் விழிப்புணர்வுக்காக ‘வேள்வி’ அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் பரசுராம் ராமமூர்த்தி  (96555 73751, parasuram.ramamoorthi@gmail.com) கூறும்போது, “ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார்.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்

இவர்கள் பிறக்கும் போது நார்மலாக இருப்பர். தலைநிற்பது, நடப்பது எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் தாயின் முகம் பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. பேச்சுத்திறன் குறைவாக இருக்கும். 2 வயதுக்குள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டால், தொடர் பயிற்சியின் மூலம் குணப்படுத்துவது எளிது. சில பெற்றோர் குழந்தை பேசாததை கண்டு கொள்ளாமல், “டிவி’ முன் உட்காரவைத்து, தங்கள் வேலைகளைச் செய்கின்றனர். இதனால் குழந்தையின் பழகும் திறன் ரொம்பவும் குறைந்து விடும். அடைத்து வைக்காமல், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் அழைத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். மூளையை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்னை தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல் விட்டால் இளம் பருவத்தில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். “ஆட்டிசம்’ குழந்தைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்னையும், வேதனையும் கொஞ்சமல்ல… இதோ இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்.

அதிகரித்து வரும் ஆட்டிசம்

ஆண்டவர், சிறப்பு பயிற்றுனர், ஸ்பார்க் மையம்: இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். மாத்திரைகளால் இதை குணப்படுத்தி விடலாம் என்று யாராவது சொன்னால், பெற்றோர் நம்பக்கூடாது. இது நோய் அல்ல. குறைபாடு தான். மற்ற குழந்தைகளோடு பழகவிடுவது தான் சிறந்த பயிற்சி. நம்மைவிட திறமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களின் விருப்பத்தை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு ஒருஆசிரியர் என்ற முறையில் தொடர் பயிற்சி அளித்தால், நல்ல நிலைக்கு வருவார்கள்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு என, தனி குறைபாடுகள் உள்ளன. மிக வேகமாக, துறுதுறுவென இருப்பதால், மற்றவர்கள் இக்குழந்தைகளை இடைஞ்சலாக நினைக்கின்றனர்.அவர்களின் தேவையை அழகாக எடுத்துச் சொல்லும் திறமை படைத்தவர்கள். பேசத் தெரியாவிட்டாலும் பசிக்கிறது என்றால், தட்டை காண்பிக்கத் தெரியும். அந்தளவுக்கு நுட்பமானவர்கள். இவர்களை மனவளர்ச்சி குறைந்தவர்களாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளியிலும், சமுதாயத்திலும், அக்கம், பக்கத்திலும் ஏளனத்திற்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை… போதிய பயிற்சி. அதுவும் இரண்டு வயதுக்குள்ளாகவே. அரசு சான்றிதழிலும் “ஆட்டிசம்’ அடையாள அட்டை வழங்க வேண்டும். சாதாரண பள்ளிகளில் இவர்களும் பயில வேண்டும்.

(நன்றி : தினமலர்.காம்)

==========================================================

பிரத்யேக தகவல் :

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்றே சென்னையில் பிரத்யேகமான ஒரு தொண்டு நிறுவனம் உள்ளது. The Spastics Society of Tamilnadu (SPASTN) என்ற பெயருடைய இந்நிறுவனத்தில் சிறந்த முறையில் மேற்படி குறைப்பாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு புதன்கிழமையும் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு ASSESSMENT நடைபெறும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அன்று தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லவேண்டும்.

முருகப்பா குழுமம் மற்றும் கே.சி.பி.சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சார்ந்தவர்களால் இது நடத்தப்படுகிறது. மத்திய அரசு இதற்கு ஊக்கமும் உதவியும் அளித்து வருகிறது.

இவர்கள் முகவரி :
The Spastics Society of Tamilnadu (SPASTN) Taramani Road,
Chennai – 600 113, India.
Tel: 91 – 44 – 22541651, 22541542
E-mail: spastn@dataone.in
Website: www.spastn.org

தரமணி தவிர சென்னையில் அயனாவரம் மற்றும் இராயபுரத்திலும் இவர்களுக்கு கிளைகள் உண்டு.

==========================================================

2 thoughts on “குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

  1. “ஆட்டிசம்” என்ற வார்த்தையும் ,அதன் அறிகுறிகல் தெரிந்து கொண்டேன் .

    நன்றி

  2. அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமான தகவல்.

    மிக்க நன்றி ஜி.

    ப.சங்கரநாராயணன்

Leave a Reply to Sankaranarayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *