Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?

மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?

print
னிதர்களுக்கு தான் மதம் என்கிற பேதம் உண்டு. ஆனால் இறைவன்? அவன் பேதங்களற்றவன். மதத்தின் பெயரால் அவனை வேறு படுத்தி பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்.

ஒரே தகப்பனின் பிள்ளைகள் ‘என் தந்தை தான் உயர்ந்தவர்’ என்று ஆளாளுக்கு வாதிட்டால் அது எத்தனை அறிவின்மையோ அத்தனை அறிவின்மை “எங்கள் மதம் தான் உயர்ந்தது; மற்றது தாழ்ந்தது” என்று ஒருவர் வாதிடுவதும்.

இன்றைக்கு உலகிற்கு தேவை மதவாதிகள் அல்ல. ஆன்மீக வாதிகளே… !

எனவே நல்ல விதைகளை விதைப்போம். நல்லவற்றையே அறுவடை செய்வோம்!!

================================================

இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த நாள் இன்று ‘ஈஸ்டர்’ என்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறி ஏதாவது பதிவிடவேண்டும் என்று நினைத்தபோது கிடைத்தது தான் கீழே நீங்கள் படிக்கும் இந்த அரிய பொக்கிஷம்.

இதை படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது. எவ்ளோ பெரிய விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் சும்மா பத்து வரியில சொல்லியிருக்காங்க…. !

நேற்றைய தினகரன்-ஆன்மீக மலரில் வந்த சிறுகதை ஒன்றை தந்திருக்கிறேன். படிச்சி பாருங்க… சும்மா…. மிரண்டு போவீங்க!

================================================

பேச்சில் தெரியும் பண்பு!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, ‘‘ஏய், கிழவா, இந்த வழியே   எவனாவது வந்தானா’’ என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் ‘‘இல்லை’’ என்று பதிலளித்தார்.

அவன் போன பிறகு, அவ்வழியாக வந்த இன்னொருவன் ‘‘ஐயா, எனக்கு முன் இங்கு யாராவது வந்தார்களா?’’ என்று கேட்க, சற்று முன் ஒருவன்  அவ்வழியே சென்றதாகச் சொன்னார் முதியவர்.

சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த மூன்றாமவன், ‘‘மதிப்பிற்குரிய பெரியவரே, வணக்கம்! தாங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். நான்  வருவதற்கு முன்பாக வேறு யாரேனும் இவ்வழியாய் வந்தார்களா?’’ என்று கேட்டான்.

பார்வையற்ற அந்த முதியவர், ‘‘மன்னா வாழ்க, உங்களுக்கு முன் முதலாவதாக ஒரு வீரனும் இரண்டாவதாக அமைச்சர் ஒருவரும் இவ்வழியே சென்றார்கள்’’ என்றார். இதைக்கேட்ட மன்னருக்கு அதிர்ச்சி. ‘‘ஐயா உங்களுக்கு கண் தெரியாது. அப்படியிருக்க என்னையையும் எனக்கு முன் வந்தவர்க ளையும் சரியாக எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’’ என்று கேட்க, முதியவர், ‘‘மன்னரே ஒரு நபரை இன்னார் என்று கண்டுபிடிக்க பார்வை அவசியமில்லை; அவர்கள் பேசும் பேச்சு தொனியை வைத்தே சரியாய் கணித்து விடலாம்’’ என்றார்.

நம்முடைய பேச்சுகளின் வார்த்தை நலம், நாம் எப்படிப்பட்டவ(ர்)ன் என்பதை உலகிற்கு காட்டி விடுகிறது. காரணம் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத் 12: 34)

பேசுதலை குறித்து வேதம் என்ன சொல்கிறது?

* துன்மார்க்கன் தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள். (சங் 17: 10).

* நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளை பேச அறியும். துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது (நீதி 10: 32)

* பட்டயக் குத்துகள் போல பேசுகிறவர்களும் உண்டு. ஞான முள்ளவர்களுடைய நாவோ ஔஷதம் (நீதி 12: 18).

* நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்கு பிரியம். நிதானமாய் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார் கள் (நீதி 16: 13).

* உன் உதடுகள் செம்மையானவற்றைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும் (நீதி 23: 16).

* துன்மார்க்கரின் இருதயம் கொடுமையை யோசிக்கும். அவர்கள் உதடுகள் தீவினையை பேசும் (நீதி 24: 2).

* நியாயமின்றி பிறனுக்கு விரோதமாய் சாட்சி கூறாதே. உன் உதடுகளினால் வஞ்சகம்  பேசாதே (நீதி 24: 28).

* தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான் (நீதி 28: 23).

* பொய்களைப் பேசுகிறவன் ஆக்கினைக்கு தப்பான் (நீதி 19: 5).

* நம்முடைய பேச்சு மரியாதை நிறைந்ததாகவும் தேவனுக்கு பிரியமானதாகவும் அமைதலே நலம். தீயனவற்றை, தரக்குறைவானதை பேசாதிருப்போம். நம் பேச்சு நம்மை நல்லவர்களாக வெளிப்படுத்தட்டும்.

(நன்றி : தினகரன் ஆன்மீக மலர் | பரமன்குறிச்சி பெவிஸ்டன்)

கிறிஸ்தவ நண்பர்களுக்கு ‘ஈஸ்டர்’ நல்வாழ்த்துக்கள்!

3 thoughts on “மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?

  1. உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசு பிரான் போதித்த தியாகம், பாவமன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றுவோம்.

    //இன்றைக்கு உலகிற்கு தேவை மதவாதிகள் அல்ல. ஆன்மீக வாதிகளே… !

    எனவே நல்ல விதைகளை விதைப்போம். நல்லவற்றையே அறுவடை செய்வோம்!!//

    கிறிஸ்தவ நண்பர்களுக்கு ‘ஈஸ்டர்’ நல்வாழ்த்துக்கள்!

  2. அருமையான சிறுகதை. இன்றைய கால கட்டத்தில் தன்மையாக பேசினால் இளிச்சவாயன் என ஏமாற்றுகின்றனர் . ஒருவரின் தனித்தன்மையை தக்க வைத்துக்கொள்ள அதீத பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைபடுகிறது.

Leave a Reply to Jayanthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *