“உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். அது ஒன்று தான் அவன் அருளை பெற ஒரே வழி” என்று விஸ்வாமித்திரர் வாதிட்டார். வசிஷ்டரோ “துறவிகளுக்கு வேண்டுமானால் தவமிருப்பது சாத்தியப்படலாம். ஆனால், சம்சார சாகரத்தில் பல்வேறு பிரச்னைகளில் இன்னல்களில் ஆசா பாசங்களில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது ஒன்றே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும்” என்றார்.
இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வந்தபாடில்லை.
இருவரும் நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், “நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள்”, என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். “என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். மகாவிஷ்ணு தான் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வு சொல்வதில் சமர்த்தர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார். அவரிடம் செல்லுங்கள்” என்றார்
இருவரும் பரந்தாமனை நோக்கி ஓடினார்கள். விஷ்ணு ஒரு சிறிய புன்முறுவலுடன் “முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன். அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான்” என்று ஆதிசேஷனை காண்பித்து தான் தப்பித்துக் கொண்டார்.
ஆதிசேஷன் அவர்களை வணங்கிவிட்டு, “முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் ஏதாவது செய்து சற்று குறையுங்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தின் பலனில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கடைசியில் தான் செய்த அத்தனை தவப் பயனையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை.
வசிஷ்டர் தன் சிஷ்யர்களுடன் தான் செய்த கூட்டுப்பிரார்த்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர் தலை குனிந்தார்.
தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். எனவே கலியுகத்தில் கூட்டு பிரார்த்தனையைவிட வலிமைமிக்கது வேறொன்றுமில்லை.
எனவே அடுத்தவர் நன்மைக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். இறைவன் அவற்றை உடனே தீர்ப்பது மட்டுமின்றி நம் கோரிக்கைகள் தாமே நிறைவேற்றப்படும்.
வரும் ஞாயிறு மாலை 5.30 முதல் 5.45 மணி வரை கீழ்கண்ட நம் தளவாசகர்களின் கோரிக்கைகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் அதை குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
=========================================================
Prayer 1:
Mother suffering from kidney cancer
I am Amuthan Sekar, regular reader of Right Mantra.com.
My mother is suffering from Kidney cancer which spreads to brain, lungs, Thigh and Left shoulder also.
We came to know, she was affected by cancer on 25-Feb-2013 only. She was unable to move her left hand. Doctor told that because of cancer bone got affected. For the past one week she was in hospital. Now she is taking the tablet medicine “Sorafenat 200mg – Sorafenib 200mg Tablets (Natco)”.
Kindly include her name for the prayer in Right Mantra Prayer club.
My Mother name is: S. Singari Ammal Age : 69 Years
We are living in Chennai, Old Washermenpet.
– Amuthan Sekar
=========================================================
Prayer 2:
Needed to undergo urgent kidney transplantation
I am V. Krishnamurthy suffering from severe Kidney trouble and now doctors have confirmed that kidney transplantation is required urgently. I am presently undergoing treatment at Apollo Hospitals in Chennai.
I have registered for Cadaver Kidney (Deceased / Brain death donor) Transplantation in this Hospital as per the hospital guidelines. Now my serial list number for this surgery is approaching and my name has been put on priority.
Going by the hospital previous record, it may take about 2 months time for kidney to be available as this is dependent upon factors over which hospital has no control. Please note that kidney availability is unpredictable and my presence in Chennai is required otherwise I will stand to lose my serial seniority number.
I wanted to join this club for all and GOD Grace for my kidney transplant take place soon.
Namaskar
Krishnamurthy,
Nanganallur
=========================================================
Prayer 3:
அம்மாவும் அப்பாவும் ஏழு வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்
வணக்கம் சார். என் அப்பா திரு.நமசிவாயம், அம்மா மீனாக்ஷி இரண்டு பேரும் கடந்த ஏழு வருடமாக கால் மற்றும் மூட்டுவலியால் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் படும் துன்பம் கண்டு என்னால் பொறுக்க முடியவில்லை. அதுவும் அப்பாவுக்கு ஒரு பக்கம் வாதம் வந்து தாங்கி தாங்கி தான் நடக்கிறார். அம்மாவுக்கு பாத எரிச்சல் வ்மற்றும் மூட்டு வலி. அவர்களுக்காக நமது பிரார்த்தனை கிளப் மூலம் பிரார்த்தனை செய்யும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். திக்கற்றோருக்கு தெய்வமே துணை.
– பரிமளம்
=========================================================
Prayer 4:
உணவுக் குழாயில் புற்றுநோய்
என் நெருங்கிய உறவினர் திரு.சிவசுப்பிரமணியன். யூ.எஸ்.ஸில் பணி புரிந்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு சென்னை திரும்பினார். சென்ற மாதம் வயிற்றில் பிரச்னை ஏற்பட்டு டாக்டரிடம் சென்று காட்டியபோது தான் வயிற்றில் புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு புற்று நோய் வயிற்றில் பரவி நான்காவது லெவெலில் உள்ளது. உணவு குழல் மிகவும் மோசமடைந்துள்ளது. அவரால் வாய் வழியாக சாப்பிட இயலாது. பைபாஸ் செய்து டியூப் வழியாகத்தான் உணவு செல்கிறது. அதுவும் சமயத்தில் எடுத்து கொள்ளவில்லை. பிரார்த்தனை ஒன்றை தவிர வேறு வழியில்லை. மூன்று குழந்தைகள் அவரை நம்பி இருக்கின்றனர். நிச்சயம் அந்த குழந்தைகளுக்கு அப்பா வேண்டும்.
அவர் விரைவ்ல் குணமடைந்து நலமுடன் வாழ நம் தள வாசகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
– உஷா முரளி, குரோம்பேட்டை
=========================================================
திரு.அமுதன் சேகர் அவர்களின் தாயார் சிங்காரி அம்மாள் அவர்களுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் குணமாகி அவர்கள் பரிபூரண நலன் பெறவும், நங்கநல்லூரில் வசிக்கும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எந்த வித இடையூறும் இன்றி இனிதே நடைபெற்று அவர் தம் எஞ்சிய காலத்தை ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் கழிக்கவும், திருமதி. பரிமளம் அவர்களின் பெற்றோர் திரு.நமச் சிவாயம் மற்றும் மீனாக்ஷி அவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் மூட்டு பிரச்னை தீர்ந்து, அவர்கள் தங்கள் அன்றாட பணிகளை மற்றவர்கள் போல திறம்பட செய்யவும், திருமதி. உஷா அவர்களின் உறவினர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்களின் வயிற்று புற்றுநோய் குணமடைந்து அவரும் அவர் தம் குடும்பத்தினரும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்கி வரும் திருமலை திருப்பதி ஸ்ரீனிவாசனும், நினைத்தாலே முக்தியை நல்கும் சிறப்புடைய திருஅண்ணாமலையை ஆண்டு வரும் எங்கள் அருணாச்சலேஸ்வரரும் காஞ்சி மகாபெரியவா அவர்களின் பரிபூரண நல்லாசியோடு நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அனைவருக்கும் பரிபூரண ஆரோகியத்தையும் சௌக்கியத்தையும் வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
பிரார்த்தனை நாள் : மார்ச் 31, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
தங்களின் சேவைக்கு மிக்க நன்றி சுந்தர்.நானும் வேண்டி கொள்கிறேன்.
இங்கு பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள நான்கு பேரும் நிச்சயம் நலம் பெறுவார்கள். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் . நம்பிக்கைஉடன் பிரார்தனை செய்கிறோம் .
விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும் .
குறிப்பு.
நமக்கு தெரிந்த நல்ல உள்ளங்களுக்கு இந்த லிங்க் forward செய்யும்படி கேட்டுகொள்கிறேன் .
http://rightmantra.com/?p=3828
கூட்டு பிரார்த்தனை பற்றி நல்ல விளக்கம் .
எல்லோரும் நலம் பெற கடவுளை வணங்குவோம்.
சுந்தர்ஜி, மிக்க நன்றி.
நேம் தவறுதலாக கொடுத்து உள்ளேன். சிவசுப்பிரமணியன் என்று பெயர் மாற்றம் செய்யவும். நிச்சயம் நம் பிரார்த்தனை அந்த நாலு பேரையும் காப்பாற்றி விரைவில் குணமடைவார்கள்.
நல்ல உண்மையான கருத்து. நம் பிரார்த்தனை முலம் அனைவரும் விரைவில் குணமடைவார்கள்.
மிக்க நன்றி சுந்தர்.
andavan arulal ellarum nalam peratum….
அவர்கள் நலமுடன் வாழ இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று பிரார்த்திக்கறேன்.
கூட்டு பிரார்த்தனை நபர் !!!
–Uday