Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

print
மது தளம் துவக்கிய நாளிலிருந்து செயல்படுத்த நினைத்த ஒரு உன்னத விஷயம் இது. தற்போது அதற்கு அவசியம் வந்திருப்பதாக கருதுகிறேன். நம் தளம் சார்பாக உடனடியாக ‘பிரார்த்தனை கிளப்’ ஒன்று துவக்கப்படுகிறது. பிரார்த்தனை கிளப்பின் செயல்பாடு என்ன? எங்கே… எப்படி செய்யவேண்டும் ? என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிரார்த்தனையின் வலிமையை பற்றி அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

பிரார்த்தனையின் வலிமை கற்பனைகளுக்கு அப்பாற்ப்பட்டது. அதன் ஆற்றலை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அது எப்பேர்ப்பட்ட ஒரு அருமருந்து என்று. அதுவும் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி அசாத்தியம்…!

மருத்துவர்களால் முடியாததை பிரார்த்தனை சாதித்த அதிசயம் – உண்மை சம்பவம்

அலெக்ஸில் காரல் என்ற உலகப் பிரசித்திப் பெற்ற விஞ்ஞானி ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் வருகிற சம்பவத்தைப் பற்றி ‘தேவன்’ குறிப்பிடுகிறார்.

”இரண்டாவது மகா யுத்தத்தின்போது நடந்த ஒரு அதிசய சம்பவத்தைக் குறிப்பிட்டு மனிதனுக்கும் அப்பால், அவன் அறிவிற் கெட்டாத ஒரு சக்தி இயங்குவதைக் காட்டியிருக்கிறார்.

அது ஒரு யுத்தகளம். அதில் படுகாயம் அடைந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கொண்டு வரப்பட்ட போர் வீரர்கள் மட்டுமே சுமார் 150 பேர். அவர்களுக்குச் சிகிச்சை செய்ய வைத்திய வசதி மிக சொற்பம்… எல்லோரையும் இவர்கள் பார்ப்பதென்றால், ஒன்றுமே பலன் ஏற்படாமல் ஒருவருமே பிழைக்காமல் போகலாம் என்று அஞ்சினார்கள் மருத்துவர்கள்.

குறிப்பிட்ட இவர்களுக்கு சிகிச்சை செய்வதால், நிச்சயம் பிழைத்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தோன்றிய முப்பது வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை நன்கு கவனிப்பது என்று தீர்மானித்தார்கள்.

அவ்வாரே 30 வீரர்களை தேர்ந்தெடுத்து சிகிச்சைகள் முடிந்தன. ஆனால் முப்பது பேரில் பிழைத்தெழுந்தவர் எத்தனை தெரியுமா? ஒரே இருவர் மட்டுமே! அதே சமயம் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வீண் என்று கருதி இவர்கள் ஒதுக்கித் தள்ளிய பெரும்பாலானவர்கள் பிழைத்துக் கொண்டனர்..! எப்படி?

வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டவனை நோக்கி தீனமான குரல் எழுப்பி, ”மனித சமூகம் எங்களைக் கைட்டு விட்டது. இனி உன்னையன்றி எங்களுக்கு வேறு துணை இல்லை” என்று மனமுருக கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். மனிதனையும், மனிதன் கண்டுபிடித்த அறிவியலையும் வைத்தியத்தையும் முழுமையாக நம்புவதை விடுத்து, மனிதனைப் படைத்த அந்த பரம் பொருளையே நினைத்துக் கொண்டார்கள்! ஆச்சரியம் நிகழ்ந்து விட்டது.”

அது தான் பிரார்த்தனையின் வலிமை. (Reference : Appusami.com திரு.வாதூலன் & லக்ஷ்மி கடாக்ஷம் திரு.தேவன்)

இன்றும் கூட, நிலைமை கையை மீறி செல்லும்போது மிக பெரிய மருத்துவர்களே கூட உச்சரிக்கும் வார்த்தை “எங்கள் கைகளில் இனி எதுவுமில்லை. கடவுளை பிரார்த்தியுங்கள்!” என்பது தான்.

ஸ்ரீ அரவிந்தருடைய “சாவித்திரி’ காவியத்தில் “ஒரு பிரார்த்தனை மற்றும் வல்லமை மிகுந்த செயல் ஆகியவை இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள் சாதாரண நிகழ்ச்சிகள் ஆகின்றன’ என்றொரு வரி இருக்கிறது. எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் தவறாமல் நிறைவேற்றப்படுகின்றன.

இறைவன் நம் அழைப்பிற்கு பதிலளிக்கத் ஒருபோதும் தவறுவதில்லை. அதுவும் சுயநலமற்றதாக அது இருக்கும்போது அவன் நிச்சயம் தவறுவதேயில்லை. ஒரு நொடிப்பொழுதிலும் அவன் பதில் தரலாம். அல்லது நிதானமாக அவன் முடிவு செய்த நேரத்திலும் பதில் தரலாம். எப்படி இருந்தாலும் பதில் என்பது கண்டிப்பாக உண்டு.

இறைவன் நம் அழைப்பிற்கு பதிலளிக்கத் ஒருபோதும் தவறுவதில்லை. அதுவும் சுயநலமற்றதாக அது இருக்கும்போது அவன் நிச்சயம் தவறுவதேயில்லை. ஒரு நொடிப்பொழுதிலும் அவன் பதில் தரலாம். அல்லது நிதானமாக அவன் முடிவு செய்த நேரத்திலும் பதில் தரலாம். எப்படி இருந்தாலும் பதில் என்பது கண்டிப்பாக உண்டு.

………………………………………………………………………………………………………………..

RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

நம் தளம் சார்பாக இனி ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை கிளப் செயல்படும். அவரவர் இருப்பிடத்திலேயே இது நடைபெறும் என்பதால் நம் தள வாசகர்கள் எவர் வேண்டுமானாலும் இதில் பங்குபெறலாம்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் அவரவர் இருப்பிடத்தில் தனியாகவோ குடும்பத்தினருடன் சேர்ந்தோ ஞாயிறு மாலை 5.30 முதல் 5.45 வரை சுத்தமான ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். அவரவர் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைக்கான மையக்கரு மற்றும் கோரிக்கை மூன்று நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.

மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது உங்கள் பிரச்சனைகளை இறைவன் தாமாகவே தீர்த்து வைக்கும் அதிசயத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இதை மேற்கொள்ள ஸ்லோகங்களில்லை; மந்திரங்கள் தேவையில்லை. மனத்தின் நம்பிக்கையும், இடைவிடாமல் நெஞ்சம் எழுப்பும் குரலும் போதும்.

சற்று யோசித்து பாருங்கள்…. ஒரு 100 பேர் இதை படித்துவிட்டு அவரவர் இடத்தில் ஒரே நேரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் அது எவ்வளவு உன்னத விஷயம்? நூறு பேரில், இறையருளை பரிபூரணமாக பெற்ற ஒரு நான்கைந்து ஆன்மாக்கள் இருந்தால் கூட போதுமே நம் பிரார்த்தனை வெற்றியடைவதற்கு…!

நமது இந்த பிரார்த்தனை கிளப் தொடர்பாக ஆலோசனை பெறவும், கருத்துக்களை கேட்கவும் நம் தள வாசகர்கள் மற்றும் வாசகிகள் சிலரை தொடர்புகொண்டு புதன் மாலை பேசினோம். சொல்லிவைத்தார் போல அனைவருமே, இதற்கு முன்பு அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய பிரச்சனை ஒன்று வந்தபோது, இதே போன்று ஒரு கூட்டுப் பிரார்த்தனை மூலம் அது தீர்ந்ததாக கூறி நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள். உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும்படியும் கூறினார்கள்.

எனவே வரும் ஞாயிறு 24 ஆம் தேதி துவங்கும் இந்த பிரார்த்தனை கிளப், இனி வரும் மாதங்களில் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை செயல்படும்.

நம் தள வாசகர்களும் நண்பர்களும் அவர்தம் குடும்பத்தினரும் அவரவர் இல்லங்களில் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். தியானம் கைவரபெற்றவர்கள் தியானமும் செய்யலாம். இந்த பிரார்த்தனையில் ஜாதி மத பேதமின்றி எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

அந்த நேரத்தில் தவிர்க்க இயலாமல் பஸ் அல்லது இரயில் பயணத்தில் நீங்கள் இருந்தால் கூட பரவாயில்லை. மனம் ஒன்றி குறிப்பிட்ட அந்த 15 நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும்.

முதல் பிரார்த்தனை ஈழத் தமிழர்களுக்காக….

நமது பிரார்த்தனை கிளப்பின் முதல் பிரார்த்தனை ஈழத் தமிழர்களின் நலனை வேண்டி நடைபெறவிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஈழப் பிரச்னை மிகத் தீவிரமாக எழுந்துள்ளது. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே உண்ணாவிரதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பற்றியெரியும் இந்த புரட்சித் தீயை அணைப்பது எப்படி என்று தெரியாது அரசுகள் விழிக்கின்றன. இந்த சூழ்நிலையில் நமது தளம் சார்பாக நிச்சயம் நமது ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறோம். அது நமது கடமையும் கூட.

ஈழத்தில் விரைவில் பூரண அமைதி திரும்பவேண்டியும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டியும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியும், இழந்த சொத்துக்களை தமிழர்கள் திரும்பப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டியும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

“உங்கள் துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு, உங்கள் நல்வாழ்வுக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி பிரார்த்தனை செய்ய இதோ நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம்….!” என்று நம் ஈழத் தமிழ் சகோதரர்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டவே இந்த பிரார்த்தனை. மேலும் அவர்களது நல்வாழ்வுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் என்றென்றும் நாமும், நண்பர்களும் நம் தள வாசகர்களும் குடும்பத்தினரும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறேன்.

மேலும் இந்த பிரார்த்தனையில் கூடவே விரைவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் நம் தள வாசகர்களின் பிள்ளைகள் நன்கு தேர்வெழுதி தேர்ச்சி பெற்று அவர்கள் விரும்பும் உயர் கல்வியை தடையின்றி பயிலவும் திருவருள் வேண்டி பிரார்திப்போம்.

நன்றி….

இந்த உன்னத முயற்சியில் நமக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவதாக கூறியுள்ள Livingextra.com நண்பர் ரிஷி அவர்களுக்கும் Shivatemples.com திரு.நாராயணசாமி அவர்களுக்கும், Aathmaseva.org திரு.சிவ குமரன் அவர்களுக்கும் நம் வாசகர்கள் சார்பாகவும் ஈழத்தமிழ் நண்பர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

================================================================
RightMantra பிரார்த்தனை கிளப் – பிரார்த்தனை 1

நாள் : 24/03/2013 ஞாயிற்றுக் கிழமை

நேரம் : மாலை 5.30 மணி முதல் 5.45 மணி வரை.

இடம் : அவரவர் இல்லங்கள்

நோக்கம் : ஈழத் தமிழர்களின் நல்வாழ்வும் சந்தோஷமும் & பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வை சிறப்பாக எழுதவும்.
================================================================

================================================================
நம் பிரார்த்தனை கிளப்பில் உங்கள் கோரிக்கை இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

அடுத்து நம் தளம் சார்பாக நடைபெறும் கூட்டு பிரார்த்தனைகளில் உங்கள் கோரிக்கைகள் இடம்பெற உங்கள் கோரிக்கைகளை விரிவாக விளக்கி எமக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அவசியம் ஏற்பட்டால் நம்மை 9840169215 என்ற அலைபேசியில்அழைக்கவும். (மாலை 7 மணிக்கு மேல்).

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் அதை குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

வாருங்கள்… பிரார்த்தனை செய்வோம்… விதியை மாற்றுவோம்!

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
================================================================

37 thoughts on “ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

  1. வணக்கம் சார்,

    தங்களுடைய பிரார்த்தனை முயற்சி வெற்றி அடைய வாழ்த்தி இறைவனை வணங்குகிறோம் .

  2. சுந்தர், இதை இதை இதைதான் உங்களிடமும் நம் தளத்திடமும் நான் எதிர்பார்த்தேன். தன்னலமில்லாமல் மற்றவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனைக்கு இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பான். இந்த பிரார்த்தனை குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை சொல்லவும் வேண்டுமா? நன்றி சுந்தர்.

  3. ரொம்ப நல்ல விஷ்யம் நானும் இந்த கூட்டு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பிரார்தனை செய்வேன் .

    நன்றி!!!

  4. எல்லோரும் இன்புற இறைவனிடம் வேண்டுவோம்.
    உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்தனை செய்வோம்.

    மேலும், மழை வேண்டியும் பிரார்த்தனை செய்வோம்.

    உங்கள் தன்னலமற்ற உழைப்பிற்கு வாழ்த்துக்கள் ஜி,

  5. மகத்தான பணியை துவக்கி இருக்கிறீர்கள் !!!
    எல்லாம் வல்ல இறைவன் அருளோடு எல்லாம் இனிதே நடைபெற எமது உளமார்ந்த வாழ்த்துக்கள் !!!

    மனதார பிரார்த்திப்போம்
    மன்றாடி வேண்டுவோம்
    நல்லதொரு மாற்றத்தை வேண்டி !!!

    வாழ்க வளமுடன் !!!

  6. நானும் இந்த கூட்டு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பிரார்தனை செய்வேன் .

  7. கூட்டு பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது.
    எட்டிய க்ஷணம் அற்புதம் நிகழும்.
    இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும்.
    மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும்
    அவிழ்க்கும் திறனுடையது .
    இது ஆண்டவனை எட்டும்.

    நமது பிரார்த்தனை நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு நலம் தரும்.

    மற்றபடி நானும் ரெடி. என்னுடைய பிரச்சனையும் ரெடி.

  8. நல்ல முயற்சி சுந்தர் . வாழ்த்துக்கள் . கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அதேபோல் கூட்டாக பிராத்தனை செய்வோம் அணைத்து இடத்திலும் நன்மையும் அமைதியும் நிறையட்டும் .

  9. Very Good n fantastic Initiative from Rightmantra.com n Sundar Sir. Lets pray ourself to the Positive Vibrations of this Space. Sure Miracles will/must happen. But we cant expect anything overnight(from my experience).

    A doubt for me, is it right to add up more than agenda or motive in a single group prayer?

  10. தங்களின் கூட்டு பிரார்த்தனைகளில் நாம் கலந்துகொண்டு நண்பர்களின் வேண்டுதல்களை கடவுள்ளிடம் கொண்டு செல்வோம்.

    சுந்தர் சார் ,‘பிரார்த்தனை கிளப்’ முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

    விவேக் ராம்.

  11. அனைவரது கூட்டு பிரார்தனிக்கு எல்லாம் வல்ல அந்த இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

    உங்களது எல்லா முயற்சிகளிலும் நாங்கள் பங்கு கொள்வோம்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  12. நானும் இந்த கூட்டு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பிரார்தனை செய்வேன் . நன்றி.

  13. தங்களின் இந்த கூட்டு பிரார்த்தனை முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் இந்த பதிவை எனைசார்ந்த அனைவருக்கும் உடனே தெரியபடுத்துகிறேன்.
    இதுதான் உண்மை.

    எந்த ஒரு வேர்வைக்கும் ஒரு நாள் வேர் வைக்கும்.

    நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்
    நல்லதே நடக்கும்

    சிவகுமார்

  14. hallo சுந்தர் ஜி உங்களை பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது. வருகின்ற sunday அன்று பிரார்த்தனையில் நிச்சயம் கலந்து கொள்வோம் . எல்லாம் வல்ல இறைவன் அருளால் வெற்றி நிச்சயம் நமக்கே. எங்கள் relation ஒருவர் ஏஜ் below 40 புற்று நோயால் படுக்கையில் உள்ளார்.அவருக்கும் நாம் ஒரு நாள் பிரார்த்தனை செய்ய வேண்டும். ( சார், மூன்று குழந்தைகள் உள்ளது. நாம் எப்படியாவது பிரார்த்தனை மூலம் காப்பாற்றியே ஆக வேண்டும்.)

    1. நிச்சயமாக!

      ஒரு பெரியவர் தனக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பட்டியலிட்டு தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருக்கிறார். படிக்கவே உருக்கமாக இருந்தது.

      நீங்கள் கூறும் நபருடன் அவருக்கும் சேர்த்து பிரார்த்தனை ஏற்பாடு செய்கிறேன்.

      எனக்கு பெயர் விபரத்துடன் சற்று விரிவான மெயில் அனுப்பவும்.

      நன்றி..

      – சுந்தர்

  15. தங்களின் இந்த கூட்டு பிரார்த்தனை முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர் . நானும் இந்த கூட்டு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பிரார்தனை செய்வேன் . நன்றி. நல்ல விஷயத்தை தள்ளி போடாமல் உடனே செய்ய நினைத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  16. “அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

    ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்”

    ரைட் மந்த்ரா வாழ்த்துக்கள்

  17. தூய உள்ளத்துடன், மனமுவந்து செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவன் நிச்சயம் செவிமடுப்பான்……! நான் பலமுறை இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்…நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள்…! நம்முடைய இந்தக் கூட்டுமுயற்சி, துயருற்றவர்களுக்கு இரட்டிப்புப் பலனை பெற்றுத் தரும்….! இம்முயற்சியில் என் பங்கும் உண்டு….!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  18. பிரமாதம் சுந்தர். பிரார்த்தனையின் வலிமை சாதாரணம் அல்ல. அளவற்ற நலன்களைத் தர வல்லது. நல்ல முயற்சி. வாழ்த்துகிறேன்.

  19. பாசமுள்ள பார்வையிலே
    கடவுள் வாழ்கிறான்
    அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
    கோயில் கொள்கிறான்

    இந்த பதிவுக்கு மட்டும் எவ்வளவு ஆதரவு பார்த்திங்களா

    பல நூல் படித்து நீ அறியும் கல்வி
    பொது நலம் நினைத்து
    நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே
    இருப்பது தான் தெய்வம்
    இவை அனைத்திலுமே
    இருப்பது தான் தெய்வம்

  20. இன்று (22.03.2013) காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம். உங்கள் பிரார்த்தனை கிளப்பில் மற்றவர் நலனில் அக்கறை உள்ளவர் அனைவரும் விரும்பி பங்கேற்பர் .என் வாழ்த்துக்கள்

    1. நினைவூட்டியமைக்கு நன்றி!
      – சுந்தர்

  21. சுந்தர் சத்யமான உண்மை. கூட்டு பிராத்தனைக்கு எத்தகைய வலிமை உண்டு என்பதை நான் உணர்வேன். அற்புதமான இல்லை மிகப் புனிதமான செயல் இது, நானும் கலந்துகொள்வேன்.

  22. நன்று. பிரார்த்தனை செய்யவும் அவனருள் வேண்டுகிறேன். “அவனருளாலே அவன் தாள் வணங்கி…”

  23. sundar ji its really a great effort what you r doing now. No words to praise you.

    Usha madam, for ur relation whom affected with cancer pls follow the 2 steps
    its enough,rest he (GOD) will look after.

    1. procure Maha periyavas photo wearing kunjithadapadam (a greedam made of special herbs) and pray to him.

    it will be available at photo shops in Mylapore or you can download it from net.

    2. chant Vishnu sahasra namam in Tamil (LIFCO publishers) rs.10. available at Giri traders, Mylapore.

    chanting can be done by anyone on behalf of patient.it takes max.30 mins only.
    chant daily morning and even(6 to 7 pm) for better results.it will do miracles.

    1. Prabhu sir thanks a lot for your information . In this connection i would like to inform you that i have already received Maha Periyava kunchitha paadam photo from Mr.Sundar during Hindu Spiritual & Service Fair held last month. Thank you so much again and wish you all well to you and your family .

  24. பிரார்த்தனை கிளப் ஆரம்பிக்கும் நாள் பிரதோஷ தினம். அநேகர் கோவிலில் இருந்தபடி பிரார்த்தனை செய்வர் என எண்ணுகிறேன். ( என்னையும் சேர்த்து. அந்த நேரம் நினைவுக்கு வர வேண்டுமே என்று நினைத்துதான் அவனருள் வேண்டும் என்று எண்ணினேன். அதிசயம் பாருங்கள். கோவிலில் நிச்சயம் நினைவுக்கு வந்துவிடும்.

    1. உண்மை தான். பிரதோஷ நேரத்தில் நமது பிரார்த்தனை துவங்குவது நிஜமாகவே நான் எதிர்பாராதது. இதுவும் சிவனின் அருள் தான்.

      – சுந்தர்

  25. திரு சுந்தர்,
    வாழ்த்துக்கள் தங்களின் தளமும்,கிளப் மற்றும் உழவார பணியும் மேலும் மேலும் வளர்ந்து சிகரங்கள் தொட்டு சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வேண்டுகிறேன்.

  26. ஈழ தமிழருக்காகவும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் என்னுடைய பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்.

  27. Indeed, it’s a lovely effort you’re taking to organize us in unified manner and to focus and give our energies to the problems.
    ***
    I’m very happy to so many given their nods and comments of joining this prayer on sundays.
    ***
    Great to see this. When we join together for any cause and proceed with persistence, we will achieve anything. Anything.

    One of the examples of this great practice is gandhiji’s life. He united people with his unique non-violence strategy and won us freedom from British people who’re powerful in all ways.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  28. சுந்தர்,
    நானும் லண்டனில் இருந்து ஈழ தமிழருக்காகவும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் பிராத்தனை செய்தேன் . மனம் அமைதியாக உள்ளது . பிராத்தனை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.

    நன்றி ,
    ஜெயசுந்தரம்

  29. சுந்தர்ஜி நான் நேற்று மயிலாப்பூரில் இருந்தேன். பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். மனம் நிறைவாக இருந்தது. நன்றி நன்றி நன்றி .

Leave a Reply to anuradha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *