Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

print
ந்தறிவு பெற்ற விலங்குகள் பல நேரங்களில் ஆறறிவு(!) பெற்ற மனிதர்களை விட இறை பக்தியில் விஞ்சி நிற்கும் அதிசயங்கள் பலவற்றை நம் பக்தி இலக்கியங்களில் – வரலாற்றில் – கண்டு வியந்துள்ளோம். மகா விஷ்ணுவுக்கு பூஜை செய்ய தாமரை பறிக்க சென்ற கஜேந்திரன் என்கிற யானையை அங்குள்ள முதலை பிடித்தவுடன் “ஆதிமூலமே” என்று அது அலறியது சரணாகதி தத்துவத்தை எத்துனை அருமையாக விளக்குகிறது? கஷ்டம் வந்தா பகவான் பேரை நம்மில் எத்தனை பேர் இன்னைக்கு சொல்கிறோம்?

அவ்வளவு ஏன் திருக்காளத்தியில் இறைவனை சிலந்தி பூஜித்து முக்தி பெற்றிருக்கிறதே? (ஐந்தறிவு விலங்கினங்கள் இறைவனை வணங்கி பேறு பெற்ற தலங்கள் பற்றி தனி பதிவு வரவிருக்கிறது!).

மகா பெரியவா மீது பேரன்பு கொண்டு அவர் மீது பக்தியும் பாசமும் வைத்து வணங்கி வருவோர் எண்ணற்றோர் உண்டு. தற்போது நாம் பார்க்கப்போவது அவர் வாழ்ந்த காலத்தில் அவரை தினசரி தரிசித்து, அவர் மீது உயிரையே வைத்திருந்து, அவர் விரதமிருந்தால் தானும் விரதமிருந்து வாழ்ந்து வந்த ‘நாய்’ ஒன்றை பற்றி. படியுங்கள். கண்கள் பனிக்கும்.

“ஐயனே… இந்த நாய் வைத்திருந்த பக்தி கூட ஆறறிவு கொண்ட நாங்கள் உன் மீது வைக்கத் தவறிவிட்டோம். இந்த நாயைவிட நாங்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்களல்ல. எங்கள் செருக்கு அழிந்தது!” என்று தான் கதறத் தோன்றுகிறது.

சென்ற வாரம் வெளியான ‘தினமலர்’ ஆன்மீக மலரில் படித்து உருகிய விஷயம் ஒன்றை இத்துடன் தந்திருக்கிறேன்.

நன்றிதான் நிஜ பக்தி!

1927 ஆம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும் அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும் பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்துவிட்டால் அது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த மகா பெரியவா ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகிவிட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.

சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்துவிட்டால் பட்டினியாகவே கிடக்கும். பெரியவா உபவாசம் (விரதம்) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவா மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லகில் செல்லும்போது, பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும். (பெரியவா பிற்காலத்தில் பல்லக்கை துறந்து நடைபயனமாகவே எங்கும் சென்று வந்தது தனிக்கதை!)

ஒரு நாள், பெரியவா ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குறைத்துக்கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்துவிடுங்கள்,” என்று உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதை பிடித்துக்கொண்டு, 40 கி.மீ. தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டுவிட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன,,,, கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்துவிட்டது.

அன்று முதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகா பெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம் இத அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.

பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்… நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கு நன்றி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத் தருகிறது.

– நீலக்கல் ஆர்.சியாமா சாஸ்திரி, காஞ்சிபுரம்

பக்தி செய்வதால் லாபம் நமக்குத் தான்

– மகா பெரியவாவின் அருள் மொழிகள்

* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.

* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான்.

* தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை.

* நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும்.

[நன்றி : தினமலர்]

(அறிவிப்பு : சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சிக்கு வரும் ஞாயிறு மதியம் 3.00 மணிக்கு செல்லவிருக்கிறோம். வர விரும்பும் அன்பர்கள் சரியாக மதியம் 2.45 மணிக்கு நுழைவாயில் அருகே வரவும். 24/02/2013 ஞாயிறு அன்று கண்காட்சி நிறைவு பெறுகிறது. சுந்தர் 9840169215)

5 thoughts on “நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

  1. அந்த நாய்க்கு தெரிந்து விட்டது போலும் மஹா பெரியவா சிவனின் அம்சம் என்று . இதை படிக்கும் போதே கண்களில் நீர் வந்து விடுகின்றது. தொடரட்டும் உங்கள் பயணம். மஹா பெரியவா ஆசிரவாதம் உங்களுக்கு கிடைக்கும்

  2. குரு அருள் கிடைக்கும் படிக்கும் அனைவருக்கும் ….

  3. Eagerly waiting for your post regarding our function regarding periyava’s blessings and miracles.
    ***
    And indeed, it was great. And then, coming to this post, yes. sincerely got it and loads of things to learn from these creatures – from everyone. Each – regardless of small or big – they teach us something.
    ***
    Here, this dog teaches us spirituality and related things.
    ***
    Thanks so much for the share.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  4. ஒரு சில இடங்களில் மிருகங்களிடம் ,மனிதன் தோற்றுவிடுகிறான்,இந்த மாதிரி பக்தியில் மட்டும் அல்ல ,நன்றியில் ,பாசத்தில் இப்படி நிறைய இன்றைய அவசர உலகத்தில் மனிதர்கள் பல பேர் இதை மறந்துவிட்டார்கள் ஆனால் வாய்பேச முடியாத இந்த ஜீவன்கள் என்றுமே மாறவில்லை

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *