Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, October 14, 2019
Please specify the group
Home > All in One > கோபுர தீபம்…

கோபுர தீபம்…

print
குறள் எண் : 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

குறள் விளக்கம்

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

என்கிற வள்ளுவரின் மொழி நமது ரைட் மந்த்ரா சுந்தர் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அவரது எண்ணங்களும் செயல்களும் நம்மிடையே என்றும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அவர் இறைவனின் பாதத்தை சரணாகதி அடைந்து இன்றோடு ஒரு வருடமாகிறது. இருப்பினும் அவர் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

இந்த ஓர் ஆண்டில் அவரைப் பற்றி நினைக்காதவரில்லை. நம்மில் பெரும்பான்மையானோர் அவரிடம் பேசியிருக்கிறோம், பழகியிருக்கிறோம், ஆலோசித்திருக்கிறோம். அவரிடம் பேசியதே நமக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும். அவருடைய வார்த்தைகள் நமக்கு ஊக்கமளிக்கும். ஆன்மீக குறிப்புகளோடும், சிறு கதைகளோடும் அவர் கூறும் கருத்துக்கள் சுவாரஸ்யமானவை. உதவி என்று கேட்டு வந்தோரை வெறும் கையோடு திரும்பி அனுப்பியதில்லை. தன்னால் இயன்றதை கொடுத்து உதவுவார்.

அவரது பண்பும், பிறர் பயன் காக்கும் எண்ணமும் போற்றக்கூடியவை. அன்னாரது நினைவு நாளான இன்று இவ்வுலக மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று ஒற்றுமையோடும், சிறப்புடனும் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *