Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 23, 2024
Please specify the group
Home > Featured > திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

print

மது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் உழவாரப்பணியாக வரும் சனிக்கிழமை ஜனவரி 7 அன்று குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவூரகப் பெருமாள் (குன்றத்தூர் கோவிந்தனின் கதை!) கோவிலில் நடைபெறவுள்ளது. புத்தாண்டின் முதல் உழவாரப்பணி இது.

**********சென்ற ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய பதிவு இது.**************

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்…

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் உழவாரப்பணி இந்த முறை மட்டும் நாளை மறுநாள் 07/01/2017 சனிக்கிழமை நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்!

நமது உழவாரப்பணிக்கு வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…!

1) தங்கள் வருகையை நமக்கு தவறாமல் (மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ் / அலைபேசி மூலமாக) உறுதிப்படுத்தவும். உணவு, வாகன வசதிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும். இதை பலர் செய்வதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

2) தவிர்க்க இயலாத காரணத்தினால் வர இயலாத பெண் வாசகர்கள் முந்தைய தினம் மாலைக்குள் நமக்கு தெரியப்படுத்தவும்.

3) உழவாரப்பணிக்கு முந்தைய தினம் மிதமான எளிய உணவுகளை உட்கொண்டு சீக்கிரம் உறங்கச் செல்வது மிக மிக அவசியம். சனிக்கிழமை அவசியம் சீக்கிரம் உறங்கச் செல்லவேண்டும். அலாரம் வைப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி எழுப்பச் சொல்வது என அனைத்தையும் கையாளவும்.

4) ஞாயிற்றுக்கிழமை பொதுவாக தாமதமாக எழும் வழக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பதால் சனிக்கிழமை காலையே சீக்கிரம் தூக்கம் விழித்து உடலையும் மனதையும் உழவாரப்பணிக்கு தயார்படுத்துவது மிகவும் முக்கியம்.

5) சோம்பல் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவோ ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை தவிர்க்கவேண்டாம்.

6) ஒவ்வொரு உழவாரப்பணிக்கும் கூடுமானவரை தவறாமல் வர முயற்சிக்கவும். நியாயமான, தவிர்க்க இயலாத காரணங்களினால் ஒன்றிரண்டு பணிக்கு வர முடியாது போனால் அது குறித்து வருந்தவேண்டாம்.

7) இது தொண்டு மட்டுமல்ல அதற்கும் மேலான சிவபுண்ணியம் என்பதை மறக்கவேண்டாம். ஈசனுக்காக நீங்கள் தியாகம் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்கு அளவற்ற நற்பலன்களை தரும் என்பதை மறக்கவேண்டாம்.

8) பணிக்கு வரும் ஆண்கள் கையில் ஒரு வேஷ்டி, துண்டு SPARE எடுத்து வரவும்.

9) பணியின் போது சம்பந்தப்பட்ட ஆலயத்தையோ, நிர்வாகத்தினரையோ குறை கூறுவது, புறம்பேசுவது இவற்றை தவிர்க்கவும்.

10) பணியின்போது உங்கள் கவனம் பணியின் மீது மட்டும் இருக்கட்டும்.

11) ஒரு ஆலயத்தை தேர்ந்தெடுத்து உழவாரப்பணி செய்வதன் பின்னணியில் எத்தனை விஷயங்கள், நடைமுறை சிரமங்கள் உள்ளன என்று பலருக்கு தெரியாது.

12) உங்கள் தேவைகளை மற்றும் இன்னபிற அவசியங்களை ஒருங்கிணைப்பாளரிடம் கூற தயங்க வேண்டாம்.

13) உழவாரப்பணிக்கு செல்லும் வாகனத்தில் ஏற, குறித்த நேரத்தில் வருவது மிகவும் முக்கியம். தாமதமான புறப்பாடுக்கு நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.

14) நமது தளத்தின் செயல்பாட்டுக்கோ அல்லது சேவைக்கோ உதவுபவர்கள் எந்த வித ஐயத்தையும், நெருடலையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு உதவிகளை செய்யவேண்டாம். இத்தகு உதவிகள் நமக்கு ஏற்புடையதல்ல. நாம் கடந்து வந்த பாதையும், இதுவரை ஆற்றிய பணிகளும், நமது உழைப்பும், பதிவுகளுமே நமக்கு உரைகல்.

15) சிறிதோ பெரிதோ உங்கள் உதவியினால் தான் இந்த மகத்தான பணிகள் சாத்தியமாகின்றன. பணி சிறக்க உங்கள் மேலான ஒத்துழைப்பையும் புரிதலையும் வேண்டுகிறோம்.

நற்றுணையாவது நமச்சிவாயமே!

  • ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215  | E : editor@rightmantra.com

==========================================================

நமது உழவாரப்பணி பிரதி மாதம் மூன்றாம் ஞாயிறு என்று அறிவித்திருந்தாலும் சில ஆலயங்களில் அவர்களின் தேவைக்காக செய்யவிரும்புகிறோம். ஆலயங்களின் தேவைக்கு தான் உழவாரப்பணியே தவிர நமது சௌகரியத்திற்கு அல்ல.

சென்ற ஆண்டு நாம் இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செய்த உழவாரப்பணி மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. நம் உழவாரப்பணி குழு உறுப்பினர்கள் திரளாக வந்திருந்து கைங்கரியத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார்கள்.

பணி நாளன்று அனைவரும் வந்து சேர்ந்த பிறகு சுமார் 7.30 அளவில் பணி துவங்கியது.

“முதலில் வேலையை துவக்கிவிடுங்கள்… உங்கள் குழுவினருக்கு விஷேஷ தரிசனம் + அர்ச்சனை இவற்றை மதியம் பார்த்துக்கொள்ளலாம்” என்று சுரேஷ் பட்டர் கூறியதை அடுத்து உடனே பணி துவங்கியது.

பல குழுக்களாக பிரிந்து பணி செய்தோம்.

பிரகாரத்தில் மண்டியிருந்த புற்களை அகற்றுவது சற்று கடினமான பணியாக இருந்தது.

மகளிர் குழுவினர் வழக்கம் போல அவர்களுக்கே உரிய பிரத்யேக பணிகளை சிரத்தையுடன் செய்தனர்.

மற்றொரு பிரிவினர் ஒட்டடை அடித்து, தரையை சுத்தம் செய்து பின்னர் அலம்பிவிட்டனர்.

கோவிலின் ராஜகோபுரத்தின் நுழைவாயில் கதவு நாள்பட்ட ஒட்டடை மற்றும் தூசி ஆகியவை படர்ந்து மிகவும் அசுத்தமாக இருந்தது. எனவே அதை ஒருவர் சுத்தம் செய்தோம். கதவு முழுக்க ஒட்டடை அடிக்கப்பட்டு, கோவில் கதவு முழுமையாக ஒரு துணி வைத்து துடைக்கப்பட்டது.

தூண்களில் இருந்த எண்ணை கறை மற்றும் பிசுக்கு ஆகியவை சுரண்டியும் துடைத்தும் அகற்றப்பட்டது.

நம் குழுவின் ஜூனியர் உறுப்பினர் பணி செய்கிறார்…

சுத்தம் செய்யப்பட பிறகு…

இந்த பணியை பொறுத்தவரை பல விஷயங்களை குறிப்பிடலாம்…

சாம்பிளுக்கு சில….

ஒன்று :- மகளிர் அணியினர் துலக்கி சுத்தம் செய்த தீப மேடை… படத்தில் தீபமேடை துலக்குவதற்கு முன்பு எப்படி இருந்தது, துலக்கிய பின்பு எப்படி இருந்தது என்று பாருங்கள்..

இரண்டு :- வைகுண்ட ஏகாதேசி தரிசனத்துக்காக நாங்கள் நிர்மாணித்த மேடை. நமது உறுப்பினர்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த மேடையை உருவாக்கினார்கள். (அடுத்த சில நாட்களில் வந்த வைகுண்ட ஏகாதசி தரிசன புகைப்படங்களை பாருங்கள்!)

மூன்று :- கோவிலில் பார்த்த எலக்ட்ரிக்கல் பணிகள். லைட்டுகள், பிட்டிங்குகள் என ஆலயத்திற்கு தேவையான எலக்ட்ரிக்கல் சாமான்கள் வாங்கித் தரப்பட்டது.

லைட் கட்டும் பணியில் எலக்ட்ரீசியன்…

எலக்ட்ரிகல் சாமான்கள் தயார்…
லைட்டுகள் ஒப்படைக்கப்படுகிறது…

மதிய உணவைப் பொருத்தவரை சில கோவில்களில் மதிய உணவு ஏற்பாடு செய்வார்கள். சில கோவில்களில் கிடைக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வெளியே ஏற்பாடு செய்துவிடுவோம். வெளியூர் போகும்போது நம் வீட்டில் அனைவருக்கும் டிபன் செய்து கொண்டுசென்றுவிடுவோம். இந்தக் கோவிலில் மடப்பள்ளியோ அன்னதான திட்டமோ இல்லை. எங்கள் மதிய உணவை சுரேஷ் பட்டர் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டுவந்துவிட்டார். அதற்கு பணம் தர முற்பட்டபோது வாங்க மறுத்துவிட, நாம் வேறுவிதத்தில் அவரிடம் சேர்பித்துவிட்டோம்.

கூட்டத்தை கட்டுப்படுத்த க்ரில் அமைக்கப்படுகிறது…
எலிகளின் பொந்துகள் அடைக்கப்பட்டபோது…

மதிய உணவான புளிசாதம், தயிர்சாதம் இரண்டையும் நண்பர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். (நம்பினால் நம்புங்கள் நாம் வழக்கம் போல கொஞ்சம் தான்!). அனைத்தும் தேவாமிர்தமாக இருந்தது.

இறுதியில் பணிக்கு வந்த அனைவருக்கும் சுவாமியிடம் வைத்து அர்ச்சனை செய்யப்பட ‘கோவிந்த நாமாவளி’ புத்தகம் தரப்பட்டது.

இறுதியில் பிரார்த்தனை கிளப் கோரிக்கைகளை பெருமாளிடம் வைத்து பிரார்த்தனையாளர்களுக்கும் நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்களின் பெயர்களுக்கும் விசேஷ அர்ச்சனை நடைபெற்றது. நமது தள வாசகர்கள் மற்றும் அவர்களது குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதை படிக்கும் நல்லுள்ளங்களுக்கும் கைங்கரியத்தில் பங்கு பெற்ற புண்ணியத்தை கருணைக் கடலாம் எங்கள் கோவிந்தன் தருவான் என்பதில் ஐயமில்லை.

அனைத்தும் முடிந்த பின்னர் அனைவரும் கோவிந்தனிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றோம்.

சுத்தம் செய்யப்பட்டது கோவில் மட்டுமல்ல எங்கள் கர்மவினைகளும், தீவினைகளும், செய்த பாபங்களும் தான்.

அகற்றப்பட்டது தூசி, ஒட்டடை மட்டுமல்ல எங்கள் மனதில் உள்ள அழுக்குகளும் தான்.

கோவில் விளக்கு மட்டும் சுத்தப்படுத்தப்படவில்லை எங்கள் வாழ்வெனும் விளக்கும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

மொத்தத்தில் அவன் ஆலயத்தில் பணி செய்து எங்கள் கர்மாவை கரைத்ததோடு புண்ணியமும் தேடிக்கொண்டோம். புண்ணியம் தேடுவது எங்கள் நோக்கமல்ல. அவனுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் இருந்தாலும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டல்லவா?

இந்தப் பதிவை படித்தவர்களுக்கு சரி அவர்கள் குடும்பத்தாருக்கும் சரி இனி இந்த கைங்கரியத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவுள்ள விரும்புகிறவர்களுக்கு சரி கோவிந்தனின் அருள் பரிபூரணமாக கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

==========================================================

எங்கள் பணிக்கு பிறகு…

நம் குழுவினர் பணி செய்த பின்பு அடுத்த சில நாட்களில் வந்த வைகுண்ட ஏகாதேசி அன்று எடுத்த படங்கள்… (இதற்காகத் தானே ஆசைப்பட்டோம்!)

==========================================================

நமது உழவாரப்பணிக் குழுவில் சேர விரும்பினால்…

நமது உழவாரப்பனிக் குழுவில் நீங்கள் சேர விரும்பினால்… ‘TEMPLE CLEANING VOLUNTEER’ என்று குறிப்பிட்டு தங்கள் பெயர், வசிப்பிடம், அலைபேசி எண் ஆகியற்றை editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும். உழவாரப்பணி இறுதி செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். (* உழவாரப்பணி பிரதி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும்! ** பண்டிகை மற்றும் விசேஷ நாட்களைப் பொருத்து இது மாறும்!)

Rightmantra Sundar  | M : 9840169215  | E : editor@rightmantra.com

==========================================================

உங்கள் உதவியை எதிர்நோக்கி உங்களுக்காக இயங்கும் ஒரு தளம்…!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Also check articles on  ‘உழவாரப்பணி’:

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா?

தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

==========================================================

[END]

2 thoughts on “திருஊரகப் பெருமாளுடன் சில மணிநேரம்!

  1. வணக்கம்
    இந்த பதிவை படித்ததே மீண்டும் ஒரு முறை பெருமாள் கோயில் சென்று வந்தது போல உள்ளது.
    எல்லா இடத்திலும் எங்களுக்கு பணிகள் இருந்தாலும் பெருமாள் கோயில் ஸ்பெஷல் தான்.
    தீப பாத்திரங்கள் மற்றும் சுவாமி வஸ்திரங்கள் என 75 % குழாய் அடியில் இல்லாமல் எல்லா இடத்திலும் நாங்கள் (மகளிர் அணி) பணி செய்துள்ளோம்.
    பணியில் கலந்துகொள்வதே எங்களின் புண்ணியம்.
    நம் வாசகர்கள் அனைவரும் முடிந்தவரை தவறாமல் கலந்து கொள்வது நல்லது.
    நன்றி

Leave a Reply to Narayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *