Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > திருடனை துரத்திய துறவி….!

திருடனை துரத்திய துறவி….!

print

ன்றைக்கு துறவிகளின் இலக்கணமே மாறிவிட்டது. அடுத்த வேளை உணவைப் பற்றி ஒரு சந்நியாசி யோசிக்கக்கூடாது என்கிறார் யாக்ஞ வல்கியர். ஆனால் இன்று ? ஏதோ ஒரு மலையடிவாரத்தில் பல நூறு ஏக்கர்களில் ஆஸ்ரமம். ஹை-டெக் அறைகள், நீச்சல் குளம் என்று நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருக்கின்றன சந்நியாசிகளின் ஆசிரமங்கள். அருளைத் தவிர அங்கு அனைத்தும் கிடைக்கின்றன.

அக்காலங்களில் துறவிகள் எப்படி இருந்தார்கள்? துறவின் இலக்கணம் என்ன? அவர்களின் குண நலன்கள் என்ன? அவர்களை பயன்படுத்தி சம்சாரியானாலும் சரி சாமானிய பிரம்மச்சாரியானாலும் சரி எப்படி நன்மை பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும்.

rishikesh-2d
ரிஷிகேஷில் கங்கையின் அழகான தோற்றம்!

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு முழுக்க அவர் சந்தித்த பல்வேறு மாமனிதர்களை பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. இருக்காதா பின்னே? உலகம் சுற்றிய வாலிபராயிற்றே…!

மேலும் குரு என்றால் யார்? அவருடைய தகுதிகள் என்ன? எல்லோரும் குருவாகிவிடமுடியுமா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் அவர் வரலாற்றில் பல்வேறு சுவையான சம்பவங்களுடன் காணப்படுகின்றன. இதெல்லாம் படித்து தெளிவு பெறாமல் குரு குரு என்று யார் யார் கால்களிலோ விழுவதால் எந்த பயனும் இல்லை.

சுவாமி விவேகானந்தர் குறித்த செய்திகளை சம்பவங்களை நம் தளத்தில் நாம் அடிக்கடி பகிர்ந்துகொள்வதன் நோக்கம் வாசகர்கள் தைரியமும், சமயோசித அறிவும், தன்னம்பிக்கையும், உண்மையான ஆன்மீகம் குறித்த தெளிவும் பெறவேண்டும் என்பது தான். இதெல்லாம் நீங்கள் படித்த ஏட்டுக்கல்வியில் கிடைக்காது. சுவாமிஜி ஒருவரை முழுமையாக நாம் படித்தாலே அனைத்தையும் படித்ததற்கு ஒப்பாகும். அந்தளவு அவர் வாழ்க்கையில் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

திருடனை துரத்திய துறவி….!

ரிஷிகேசத்தில் ஒரு மகானான துறவியைச் சந்தித்தார் சுவாமிஜி. அவர் ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைந்தவராகத் தோன்றவே சுவாமிஜி அவரிடம் சென்று பேசத் தொடங்கினார். பேச்சின் இடையே தமது பயணங்களைப் பற்றி கூறினார். தாம் சந்தித்த மகான்களைப்பற்றி கூறினார். பவஹாரி பாபாவின் பெயரைக் கூறியதும் அந்தத் துறவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

தழுதழுத்த குரலில் அவர், ‘சுவாமிஜி, உங்களுக்கு பாபாவைத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘தெரியும்’ என்றார் சுவாமிஜி.

‘அவரது ஆசிரமத்தில் நடந்த திருட்டைப்பற்றி தெரியுமா?’ என்று கேட்டார் அந்தத் துறவி.

‘தெரியுமே’ என்றார் சுவாமிஜி.

‘ஒரு நாள் அவரது ஆசிரமத்தில் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். அவரைக் கண்டதும் பயந்துபோய், தான் திருடிய பொருட்களின் மூட்டையை அப்படியே போட்டு விட்டு ஓட்டமெடுத்தான். அவரோ அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு, திருடனைத் தொடர்ந்து பல மைல் தூரம் ஒடி அவனைப் பிடித்தார். பிறகு அவனது காலடியில் அந்த மூட்டையை வைத்து, குவித்த கைகளோடும் கண்களில் கண்ணீருடனும் ”அப்பா, இது உனது சொத்து. உனது சொத்தை நீ எடுத்தபோது தலையிட்டதற்கு என்னை மன்னித்துவிடு. இவற்றைப் பெற்றுக்கொள்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்’ என்று சுவாமிஜி அந்தக் கதையைக் கூறிவிட்டு, ‘உண்மையிலேயே பாபா ஓர் அற்புத மனிதர்’ என்றார்.

கதையை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி கதை நிறைவுற்றதும் சுவாமிஜியை அமைதியாகப் பார்த்து, ‘சுவாமிஜி, அந்தக் கதையில் வரும் திருடன் நான் தான்’ என்றார்.

swami-vivekananda

சுவாமிஜி திகைத்துப்போனார். துறவி தொடர்ந்தார்: ‘அன்று பாபாவைச் சந்தித்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஆயிற்று. எனது வழிகள் தவறு என்பதை நான் புரிந்துகொண்டேன். செல்வங்களில் எல்லாம் பெரிய செல்வமாகிய இறைவனையே பெறுவதற்காக இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.’

அதன்பிறகு அவர் சுவாமிஜியிடம் தாம் ஒரு துறவியாக அடைந்த அனுபவங்களைக் கூறினார். இரவு நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவரைச் சந்தித்தது சுவாமிஜிக்கும் ஓர் இனிய அனுபவம் ஆயிற்று. ‘யாரையும் பாவி என்று இகழ்வதற்கில்லை. பாவியினுள்ளும் ஒரு மகான் இருக்கிறார். அவர் ஒரு நாள் அல்லது ஒருநாள் வெளிப்படவே செய்வார்’ என்று பின்னாளில் தமது சொற்பொழிவில் அவர் குறிப்பிட்டபோது இந்தத் துறவி அவரது மனத்தில் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

– சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து…!

==========================================================

Like our website? Kindly extend your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. | IFSC Code : UTIB0001182

==========================================================

Also check :

“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!

நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை… என்ன செய்வது?

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

 

One thought on “திருடனை துரத்திய துறவி….!

Leave a Reply to Ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *