Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

print
செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் இருக்கும் நென்மேலி என்கிற கிராமத்தில் சிரார்த்த சம்ரக்ஷண பெருமாள் என்று ஒரு தலம் உண்டு. பித்ரு காரியம் செய்ய கயைக்கு ஈடான தலம் இது. ஆதரவற்றவர்களுக்கு யார் வேண்டுமானால் சிரார்த்தம் செய்யலாம். பெண்களும் இங்கு பித்ரு கர்மாக்களை செய்யலாம்.

இந்த ஆலயம் பற்றி ஏற்கனவே நம் தளத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவு வெளியானது. இவ்வாலயத்தை மிகச் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வரும் திரு.சம்பத் பட்டாச்சார்யா அவர்களை நமக்கு நன்கு தெரியும். இந்த அரும்பணியை ஒரு தொண்டாகத் தான் அவர் செய்து வருகிறார். லட்சக்கணக்கான மக்கள் இதுவரை அவரால் பலன் பெற்றுள்ளனர். பித்ரு தோஷங்களை போக்கிக்கொண்டுள்ளனர்.

திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில்...
திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில்…

அந்தப் பதிவின் தொடர்ச்சியாக அவரிடம் பித்ரு தோஷ பரிகாரம் மற்றும் அபர காரியங்கள் குறித்து வாசக அன்பர்களிடம் இருக்கும் பல சந்தேகங்களைக் கேட்டு பதில் பெற்று அதை நம் தளத்தில் பதிவாக அளிக்கவேண்டி அவருடைய அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருந்தோம். நமது பணிகளையும் நோக்கத்தையும் அவர் நன்றாக அறிந்தவர் என்பதால் மிகப் பெரிய ஊடகங்களுக்கு கூட திறக்காத அந்த கதவு நமக்காக திறந்தது. அரங்கன் திருவுள்ளம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நம் தளத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் கடந்த மூன்று நாட்களாக தளம் வேலை செய்யவில்லை. சர்வரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி புதிய மென்பொருளை அப்டேட் செய்யும் பணி நடைபெற்று வந்தது. (நமது முகநூலில் இது பற்றி தெரிவித்திருந்தோம்). நமது தளத்தின் CONTENT, DATABASE, IMAGES etc அதிகம் என்பதால் ஒரே நாளில் முடியவேண்டிய பணி மேலும் இரண்டு நாட்கள் நீடித்தது.

sampath-bhattacharya-nenmeli

எனவே தளத்திற்காக எழுத்துப் பணி எதையும் செய்ய இயலவில்லை. நமக்கும் மனம் லயிக்கவில்லை. என்ன செய்வதென்று யோசித்தபோது தெய்வாதீனகமாக சம்பத் பட்டாச்சார்யா அவர்களின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நென்மேலி சென்றோம். சம்பத் அவர்கள் நமக்கு 10.00 AMக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். எனவே முதலில் திருக்கழுக்குன்றம் சென்று தாழக்கோவிலை தரிசித்துவிட்டு பின்னர் அங்கிருந்து நென்மேலி வந்தோம். நேற்று முன்தினம் ஏகாதசி என்பதால் இங்கு நல்ல கூட்டம்.

அந்தக் கூட்டத்திலும் அந்த பரபரப்பிலும் நமது கேள்விகளுக்கு அனைவர் முன்னிலையிலும் பதில் சொன்னார் திரு.சம்பத் பட்டாச்சார்யா. (அவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால்). மேலும் அனைவரிடமும் நம்மை அறிமுகப்படுத்தி வைத்தார். பல சந்தேகங்களை தீர்த்து வைத்தார். மதியம் அங்கேயே உணவருந்தினோம். கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு எங்கள் சந்திப்பு ஆற அமர நடைபெற்றது.

பல விஷயங்களை விளக்கினார். மொத்தத்தில் பதிவாக வரும் போது ரைட்மந்த்ரா வாசர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். புத்திர பாக்கியமின்மை, சுபகாரியத் தடை, அடிக்கடி விபத்து, குடும்பத்தில் சண்டை சச்சரவு இவற்றுக்கு பித்ரு தோஷமே முக்கிய காரணம். விரைவில் இந்த பித்ரு தோஷ நிவர்த்தி பரிகாரத்திற்கான அவசியம் உள்ள நம் தள வாசகர்களை இங்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம். (அது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.)

இந்த சந்திப்பின் போது திரு.சம்பத் பட்டாச்சாரியா அவர்களை நம் தளம் சார்பாக கௌரவித்தோம். அப்போது பின்னணியில் சுவற்றில் வண்ண சிற்பம் ஒன்று காணப்பட்டது. அதில் காணப்படும் ரிஷி யார் என்று கேட்டபோது, “அவர் தான் எங்கள் குரு, யாக்ஞ வல்கிய ஸ்மிருதி தந்த யாக்ஞ வல்கியர்” என்றார். தொடர்ந்து பேசுகையில் யாக்ஞ வல்கியர் மனித குலத்துக்கு தந்த யாக்ஞ வல்கிய ஸ்மிருதி பற்றியும் அதன் தனித்தன்மை பற்றியும் விளக்கினார்.

நண்பர் ஒருவர் மூலம் மறுநாள் அதாவது நேற்று (ஐப்பசி உத்திரட்டாதி), யாக்ஞ வல்கியரின் ஜயந்தி திருநாள் என்று தெரிந்தது. திரு.சம்பத் அவர்களிடம் அதை உறுதிப்படுத்திக்கொண்டு இந்த பதிவை தயாரிக்க ஆரம்பித்தோம். தளம் நேற்று வரை சரியாகாததால் அளிக்கமுடியவில்லை. இன்று அளிக்கிறோம்.

ரிஷிகள் புராண சிரவணம் = தோஷ நிவாரணம்!

==========================================================

Please check : பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம்  + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

==========================================================

சுக்ல யஜூர் வேதத்தை உலகிற்கு அளித்த மகரிஷி யாக்ஞ வல்கியர்!

கரிஷி யாக்ஞ வல்கியர் திருமாலின் அம்சமாக அவதரித்தவர். சூரிய பகவானிடம் இருந்து சுக்ல யஜுர் வேதத்தை கற்று அதை உலகிற்கு அளித்தவர். யோகீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். அவரது ஜயந்தி திருநாள் நேற்று. (ஐப்பசி உத்திரட்டாதி).

மகரிஷி பிரம்மரதர் சுனந்தா தேவி தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லை. புத்திர சம்பத்து வேண்டி பல வித விரதங்களையும் பூஜைகளையும் அனுஷ்டானங்களையும் மிகத் தீவிரமாக கடைபிடித்தனர். எதுவும் பலனற்று போக, கடைசியில் கானகம் சென்று மகாவிஷ்ணுவை நோக்கி பிரம்மரதர் கடும் தவத்தில் ஈடுபட்டார்.

தவத்தின் பலனாக அவருக்கு தேஜோ மயமான ஒரு குழந்தை பிறந்தது. பிரம்மரதரும் சுனந்தா தேவியும் அக்னி பகவானை பல்வேறு யாகங்களாலும் யக்ஞங்களாலும் பூஜித்து வந்தமையால் பிறந்த குழந்தை அக்னி போன்று ஒளிவீசியது. அக்குழந்தைக்கு யாக்ஞ வல்கியா என்று பெயரிட்டனர்.

yagna-valkya-maharishi

யாக்ஞ வல்கியருக்கு பெற்றோர் உரிய கல்வியை போதித்தனர். அவரது தாயார் சுனந்தா தேவி பல பக்திக் கதைகளை சொல்வதுண்டு. குழந்தைக்கு நன்நெறிகளையும் போதிக்க வர தவறவில்லை. பெற்றோரிடம் காயத்ரி மந்திரத்தை கற்ற யாக்ஞ வல்கியர் பின்னர் குருகுலக் கல்விக்கு அனுப்பப்பட்டார்.

வேத வியாசரின் சீடர் மகரிஷி வைஸயம்பாயனர். அவர் மிகப் பெரிய வேத பந்திதர் மட்டுமல்ல யஜூர் வேதத்தை கரைத்துக் குடித்தவர். அவரிடம் தனது மகனை கொண்டு வந்து சேர்த்தார் பிரம்மரதர். யாக்ஞ வல்கியர் அங்கு பாடங்களை உடனுக்குடன் கிரகித்துக்கொண்டார். மிகவும் புத்திக்கூர்மையுடன் திகழ்ந்தார். இதனால் வைஸயம்பாயனரின் ஆஸ்ரமத்தில் உள்ள எல்லோரது அபிமானத்தையும் பெற்றார். யஜூர் வேதத்தில் சிறந்து விளங்கினார்.

ஒரு முறை ரிஷிகளெல்லாம் கூட்டம் நடத்தினார்கள். அதற்கு வைஸயம்பாயனரால் போக முடியவில்லை. இதனால் ரிஷிகள் அனைவரும் சினந்து அவரை சபித்துவிட்டனர். அந்த சாபத்தை போக்க தவம் செய்யும்படி தன் சீடர்களுக்கு உத்தர விட்டார் வைஸம்பாயனர். யாக்ஞ வல்கியர், “நான் ஒருவனே தவம் செய்து சாபத்தை அகற்ற முடியும். மற்றவர்கள் எதற்கு?” என்று கூற வைஸம்பாயனருக்கு கோபம் வந்துவிட்டது.

“உனக்கு ஆணவம்து தலைக்கேறிவிட்டது. எனக்கு சீடனாயிருக்க உனக்கு தகுதியில்லை. என்னிடம் கற்ற வேதத்தை என்னிடமே திருப்பிக் கொடு” என்று கூற அத்தனையையும் உணவாக கக்கிவிட்டார் யாக்ஞவல்கியர். அதன் பின்னர் இனி மானிடர்களில் யாரையும் குருவாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்து சூரிய பகவானை நோக்கி தவமிருந்தார். வைஸம்பாயனர் கற்காத யஜூர் வேதத்தின் பகுதிகளையும் சேர்த்து கற்கவேண்டும் என்பதே அவரது உறுதியான லட்சியம். அவரது கடும் தவத்திற்கு இரங்கிய சூரியன் ஒரு குதிரையின் வடிவத்தை எடுத்துக்கொண்டு யாரும் அறியாத யஜூர் வேதத்தின் பகுதிகளை யாக்ஞ வல்கியருக்கு உபதேசித்தார். இதுவே சுக்ல யஜூர் வேதம் எனப்படுகிறது.

யாக்ஞ வல்கியர் காலப்போக்கில் இரண்டு பெண்களை மணந்துகொண்டார். ஒருவர், மைத்ரேயி. மற்றொருவர் காத்யாயினி. இவர்களில் மைத்ரேயி ஒரு பிரம்மாவதாணி. (அதாவது பிரம்மத்தை அரிய முற்படுபவர்).

யாக்ஞ வல்கியர் பல படைப்புக்களை தந்திருக்கிறார். ஆத்மா, அதன் தன்மை, அளவற்றை ஞானத்தை பெறுதல், பிறவா நிலை இவற்றை பற்றிய யாக்ஞ வல்கியர் படைப்புக்கள் மிகவும் அற்புதமானவர். அவருக்கும் மைத்யிரேக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் மிகவும் பிரபலமானது. பிரஹதாரண்ய உபநிஷதத்தில் அது பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மைத்ரேயிக்கும் ஜனக மகாராஜனுக்கும் அவர் உபதேசித்த விபரங்கள் பிரஹதாரண்ய உபநிஷதத்தில் காணப்படுகிறது. ஜனக மன்னன் ஒரு முறை தலைசிறந்த பிரம்மஞானியை தேர்ந்தெடுக்கும் போட்டி ஒன்றை அறிவித்தான். அதில் கலந்து கொண்ட யாக்ஞ வல்கியர் கார்கி என்கிற அக்காலத்தைய புகழ்பெற்ற பண்டிதருடன் வாதிட்ட நிகழ்வுகள் பிரஹதாரண்ய உபநிஷதத்தில் காணப்படுகின்றன.

இந்து மதத்தை கடைபிடிப்பதற்கு காலத்திற்கேற்ப எழுதப்படும் விதிகளின் தொகுப்பு ஸ்மிருதி எனப்படும். ஸ்மிருதிகளுள் புகழ் பெற்ற யாக்ஞயவல்கிய ஸ்மிருதி (மற்ற இரண்டும் பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி) இவர் இயற்றியதே ஆகும். இன்று இந்துக்கள் கடைப்பிடித்து வரும் பல சட்டதிட்டங்கள் இவர் உருவாக்கியதே.

yagna-valkyaதனது கருத்துக்களையும் வேதத்தின் உட்பொருளையும் ஆழத்தையும் நன்கு விளக்க விரும்பிய யாக்ஞ வல்கியர் அதற்கென்று எழுதியதே சுக்ல யஜூர் வேதம். கர்மம் மற்றும் ஞானத்தை பற்றி இரண்டு கருத்துக்கள் இந்நூலில் இருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய யாக்ஞயவல்கிய ஸ்மிருதியில் சந்திர சூரிய இயக்கங்கள் பற்றி மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது இன்றைய அறிவியலுக்கு ஒரு ஆச்சரியம் என்றால் மிகையாது. அதுமட்டுமல்ல, ஆன்மாவை பற்றியும் மோட்சத்தை பற்றியும் மிகத் தெளிவான விளக்கங்கள் இதில் காணப்படுகின்றன.

வேதத்தின் சிறப்புக்களையும் அதை கற்கவேண்டிய அவசியத்தையும் தன் வாழ்நாள் முழுக்க கூறி வந்த யாக்ஞய வல்கியர் வேதங்களை மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கே பயன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இன்று விதவைத் திருமணம் பரவலாகிவிட்டது. மற்ற இரண்டு ஸ்மிருதிகளிலும் கணவன் இறந்தால் பெண் மறுவிவாகம் செய்யக்கூடாது என்று கூற, யாக்ஞய வல்கிய ஸ்மிருதியில் மட்டுமே அது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அதன் சிறப்பை நாம் அறிந்துகொள்ளலாம்.’

கணவரைப் போலவே பொறுப்புடன் அவர் மனைவிமார்களும் திகழ்ந்தனர். தனது வாழ்நாளின் இறுதியை இமயமலையில் உள்ள அடர்ந்த வனத்திற்கு சென்று தவத்தில் ஈடுப்பட்டு கழிக்க விரும்பிய யாக்ஞயவல்கியருடன் முதல் மனைவி மைத்ரேயி செல்ல, மற்றவர் ஆஸ்ரமத்தில் இருந்து அதை பார்த்துக்கொள்வதாக கூறினார்.

தனது வாழ்நாளின் கடமைகளை செம்மையாக நிறைவேற்றிவிட்ட யாக்ஞய வல்கியருக்கு இறுதியில் அனைத்தையும் துறந்து தனது வாழ்நாளின் இறுதியை இமயமலையில் உள்ள அடர்ந்த வனத்திற்கு சென்று தவத்தில் ஈடுப்பட்டு கழிக்க விரும்பினார்.

ஒரு கிரஹஸ்தனுக்கு இருக்கக்கூடிய கடன்கள் மூன்று : ரிஷிக்கடன், தேவர்கள் கடன், பித்ருக்கள் கடன்.

ரிஷிகள் கடனை வேதங்களை கற்பதன் மூலமும் அதை கூறுவதன் மூலமும், சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுவதன் மூலமும் தீர்க்கலாம். ஹோமம், யாகம், யஞ்கம் போன்றவற்றை செய்வதன் மூலம் தேவர்கள் கடனை தீர்க்கலாம். சிரார்த்தம், தர்ப்பணாதி காரியங்களை சரிவர செய்வதன் மூலம் பித்ரு கடன்களை தீர்க்கலாம். இவை அனைத்தையும் முறைப்படி செய்து இக்கடன்களை தீர்த்துவிட்டமையால் யாக்ஞய வல்கியர் இறுதியில் துறவறத்தை மேற்கொண்டு தவம் செய்து பிறவா நிலையை விரும்பினார். (முந்தைய யுகங்களில் மோட்சம் அத்தனை எளிதல்ல!)

ஆனால் துறவறத்திற்கு மனைவிகள் சம்மதிக்கவேண்டுமே?

காத்யாயினி கடமையே கருத்தானவர். அவர் நீங்கள் தாராளமாக துறவறம் மேற்கொள்ளுங்கள். இங்கே நான் இருந்து ஆஸ்ரமத்தையும் மாணவர்களையும் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். மைத்ரேயி அத்தனை சுலபத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பிரம்மா ஞானி என்பதால் அவரை சம்மதிக்க வைக்க யாக்ஞ வல்கியர் படாத பாடு படவேண்டி இருந்தது. இறுதியில் கணவருடன் தானும் துறவறத்தை ஏற்பதாக கூறி ஒப்புக்கொண்டார்.

யாக்ஞ வல்கியர் தொடர்ந்து ஜீவன் முகத்தனாக மாறி ஞானத்தை அனைவருக்கும் அள்ளி வழங்கினார். மைத்ரேயி சந்நியாச தர்மத்திற்கே உரிய உஞ்ச விருத்தி முதலானவைகளை செய்து காலத்தை கழித்தாலும் வெளித்தோற்றத்தில் சந்நியாசிகளுக்கு உரிய அடையாளங்களை தரிக்கவில்லை. இவர் பிற்காலத்தில் இயற்றியதே மைத்ரேய உபநிஷதம்.

யாக்ஞ வல்கியர் இயற்றிய பிருஹதாரண்யக உபநிஷதம் துறவறம் மூலம் மோக்ஷத்தை அடைய வேண்டுபவர்களுக்கு உரிய நெறிமுறைகளை விதிமுறைகளை தெளிவாக கூறுகிறது. அதே போன்று இவர் இயற்றிய சுக்ல யஜுர் வேதத்திலும் பிரம்மச்சரியத்திலிருந்து சந்நியாச தர்மத்தை தழுவுவதற்கு உரிய விதிமுறைகள் காணப்படுகின்றன. அதில் காணப்பட்ட விதிமுறைகளேயே ஆதி சங்கரர் துறவறம் மேற்கொண்ட போது பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாக்ஞ வல்கியரின் அருள் இந்நன்னாளில் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக. ¶¶

==========================================================

இந்த வார பிரார்த்தனைக் கிளப் பதிவை தயாரித்து வருகிறோம். இன்று நிறைவடைந்துவிட்டால் அதை அளிக்கிறோம். இல்லையெனில் அடுத்த வாரம் நிச்சயம் அளிக்கிறோம். ஒருவேளை இன்று மாலை 7.00 PM க்குள் அளிக்கவில்லையெனில் சென்ற பிரார்த்தனையையே இந்த வாரமும் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club

==========================================================

copyright-notice-2

==========================================================

Like our website? Kindly extend your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.

==========================================================

Also check :

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர், சிவனிடம் கேட்டது என்ன? – ரிஷிகள் தரிசனம் (5)

அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்ம மகரிஷி! ரிஷிகள் தரிசனம் (4)

உருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)

இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)

==========================================================

Some important articles on Pariharam :

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு?

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம்

=========================================================

[END]

2 thoughts on “சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

  1. அருமை ஜி!

    Hats off to you !

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply to nagarajan ekambaram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *