Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

print

‘கோவில் சொத்து குல நாசம்’ என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியை பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்ன? ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா?

ஒரு கதையையும் ஒரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம்.

அம்பாளின் முத்துமாலை…. 

ரு கோவிலின் தர்மகார்த்தாவாக இருக்கும் ஒருவருக்கு அம்பாளின் முத்தாரம் மீது ஆசை ஏற்பட்டுவிடுகிறது. அதை எப்படியாவது அடையவேண்டும் என்று துடித்தவர் அதைப் போன்றே ஒரு போலி முத்துமாலையை தயார் செய்து வைத்துக்கொண்டு பொக்கிஷ அதிகாரியை தனது வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுகிறார். அவரும் வர, விருந்து தடபுடலாக நடக்கிறது. பின்பு மெல்ல பொக்கிஷ அதிகாரியிடம் விஷயத்தை கூறி நகையை மாற்றி வைக்க அவரது ஒத்துழைப்பை வேண்டுகிறார்.

kamakshi

அம்பாள் மீது பேரன்பும் பக்தியும் செலுத்திவந்த பொக்கிஷ அதிகாரி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெகுண்டு எழுகிறார். ஆவேசமாக தர்மகர்த்தாவை பார்த்து “உங்களை என்னவோன்னு நினைச்சேன்… நீங்க என்னடான்னா கோவில் சொத்துக்கு ஆசைப்படுறீங்களே… அங்கே இருப்பதெல்லாம் ஆபரணம்னா நினைச்சீங்க??”

“அவனவன் தன்னோட வியாதியும் தீராத வினைகளும் தீரணும்னு வேண்டிகிட்டு, அது தீர்ந்த பிறகு காணிக்கையாக கொடுத்தது அதெல்லாம். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அம்பாள் கழுத்தில் இருக்கும் காசு மாலை எனக்கு காக்கா வலிப்பா தெரிகிறது. பச்சைமாலை எனக்கு பச்சைவாதமாக தெரிகிறது. கையில் மின்னும் வைர வளையல் வயிற்று வலியாக தெரிகிறது… நீ கேட்டியே முத்துமாலை அது என் கண்களுக்கு புற்றுநோயாக தெரிகிறது. அவனவன் கோவிலுக்கு பொருளை கொடுத்து தன்னோட கர்மாவை தீர்த்துக்குறான்… அந்தப் பொருளை எடுத்து நீ ஏன்யா கர்மாவை விலைக்கு வாங்க நினைக்கிறே….கோவில் சொத்தை அபகரிக்கவேண்டும் என்கிற எண்ணம் கொண்ட உன் வீட்டில் ஒரு வேளை சோற்றை சாப்பிட்ட நான் அடுத்த ஜென்மத்தில் வெறிபிடித்த தெரு நாயாகத் தான் பிறக்கவேண்டும். இப்போதே காசிக்கு போய் செய்த பாவத்தை கங்கையில் தலைமூழ்கி தொலைத்துவிட்டு வருகிறேன்… அப்போது தான் அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்தாலும் நல்லவர் வீட்டில் பிறந்து நல்லவன் போடும் சோற்றை சாப்பிடமுடியும்” என்று கூறிவிட்டு உடனே காசிக்கு போய்விடுகிறார்.

இப்போது புரிகிறதா கோவில் சொத்து ஏன் குல நாசம் என்று சொன்னார்கள்?

Rightmantra New Year temple visit 19

அவரவர் அவர்களது கர்மாவையும் நோய்களையும் ஜென்ம ஜென்மாக தொடரும் சாபங்களையும் தோஷங்களையும் தீர்க்க கோவிலுக்கு நகையும் பணமும் கொடுக்கிறார்கள். நிலபுலன்களை எழுதிவைக்கிறார்கள். அந்த சொத்துக்களை ஒருவர் துய்த்தால் அவர்கள் கர்மாவை துய்ப்பதாகத் தானே அர்த்தம்?

(கோவில் நிலத்தில் கட்டிடங்களில் வசிப்பவர்கள் வாடகை பாக்கியை உடனே செலுத்திவிடுவது அவர்களுக்கு நல்லது. கோவில் நிலத்தை, சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனே திரும்ப கொடுத்துவிடுங்கள்.)

மேற்கூறிய கதையில் அவன் யாராக இருந்தாலும் கோவில் சொத்தை தனதாக்கிக் கொள்ள நினைத்தவன் வீட்டில் உண்பது கூட பாவம். அதுவும் அந்த பாவத்திற்கு தெருநாயாக பிறக்கவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். அப்படியென்றால் கோவில் சொத்தை அபகரிப்பவர்களுக்கு ஏற்படும் கதியை சொல்லவேண்டுமா என்ன?

(‘காஞ்சி காமாக்ஷி’ என்னும் படத்தில் மேற்கூறிய இந்த சம்பவம் இன்னும் விரிவாக இடம்பெற்றிருக்கும்!)

எனவே தான் கோவில் சொத்து குல நாசம் என்றார்கள் பெரியோர்கள். அதிலும் சிவன் சொத்து என்றால் கேட்கவே வேண்டாம்…!

கீழ்கண்ட உண்மை சம்பவம் உங்களுக்கு அதை விளக்கும்….!

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

முகநூலில் கண்ட பதிவு இது….!

சிவன்சொத்து…!

நன்றி: குமார் கந்தசாமி

றத்தாழ 35 ஆண்டுகளாயிற்று. அப்போது சைதாப்பேட்டை கிளையில் பணிபுரிந்தேன்.

அப்போது ஒருநாள் ஒரு வாடிக்கையாளர் என்னை தேடி வந்து அறிமுகம் செய்து கொண்டார்.

நடுத்தர வயது. நெற்றி நிறைய விபூதி. சிவப்பழம்.

நானே அவரை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

அவரே என்னை தேடி வந்து விட்டார். அந்தப் பகுதியில் பெரும் வணிகர்.

அறிமுகம் முடிந்த பிறகு தன் வியாபாரத்திற்காக ஒரு கார் தேவைப்படுகிறது என கூற, கணக்குகளை ஆராய்ந்தேன். ஏகப்பட்ட வரவு செலவு லட்சக்கணக்கில் இருப்பு.

உடனே சரி என்று சொல்லி விட்டேன். சில நாட்களில் கடன் தொகை கொடுக்கப்பட்டு வண்டியை டெலிவரி எடுத்தவர் நேராக என்னிடம் வந்தார்

“சார் இன்று மாலை காரணீஸ்வரர் கோவிலில் வண்டிக்கு பூஜை நீங்கள் வந்து சாவியை எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்றார்

“சரி என்று நானும் சொல்ல ஏனோ என்னால் போக முடியவில்லை

வெகு நாட்களாக போக நினைத்த காரணீஸ்வரரை பார்க்க முடியவில்லையே என சிறு வருத்தம். மறு நாள் வங்கியை திறக்கும் போது அருகிலுள்ள பஜாரில் கடைகளெல்லாம் மூடப்பட்டு இருந்தன

விஷயத்தை கேள்விப்பட்டதும் ஒரே அதிர்ச்சி. புதிய வண்டியை எடுத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்ற அவர் மூத்த மகன் வண்டி மரத்தில் மோதி பலி. உடனே அவர் வீட்டிற்கு விரைந்தேன். ஆறுதல் சொன்னேன்.

Thirisoolam Kailasanadhar temple 34

நான் கொடுத்த வண்டியில் இப்படியாகிவிட்டதே என்ற குற்றவுணர்வு. அவர் என்னை தேற்றிவிடட்டு திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையை மட்டுமே உதிர்த்தார். காரணீஸ்வரர் கோயில் நிர்வாகிகளில் இவர் தலைமை நிர்வாகி என தெரிந்தது. அதற்கு பிறகு அவரை பார்க்க முடியவில்லை

ஒரு நாள் அவரே என்னை தேடி வந்தார். மகன் வண்டி ஒட்டும் வயது வராததால் இன்சூரன்ஸ் செட்டில் ஆவது சிக்கல் என கூறி கடன் தொகையை கட்டி விட்டுப் போனார்.

இப்படி ஒரு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு சோதனையா என காரணீஸ்வரனை நொந்து கொண்டேன். ஒரு வருடம் ஓடியது மீண்டும் அசம்பாவிதம் அவருடைய மற்றொரு மகன் விஷம் குடித்து தற்கொலை. அவரைப் பார்க்க போகவே இல்லை. ஒரு நாள் அவர் வீட்டிற்கு அழைத்தார் அவ்வளவு கலைநயம் அந்த வீடு

கோயில் போலவே இருக்கிறதே என்று அவரிடம் வியந்தேன். என்னையே ஒரு நிமிடம் பார்த்தவர் கோவில் தான் சார் என பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

இந்த இடம் கோயில் வெளிப்பிரகாரம். என்னுடைய முன்னோர்கள் பார்த்து பராமரித்த கோவில். என் பராமரிப்பின் கீழ் வந்தவுடன் திராவிட சகவாசமும் வந்தது. கோயில் நிலத்திலேயே இந்த வீடு மற்ற நிலங்களையும் ஆக்கிரமித்தேன். என் உறவினர்கள் கூறிய அறிவுரையை தூக்கி எறிந்தேன்

இப்போது தொடர்ந்து இரு சோகங்கள். எனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது.

நான் விலை கொடுக்க வேண்டிய நேரம் இது தான் போலும் என உடைந்தார்.

இதைத் தான் சிவன் சொத்து குல நாசம் என்பார்களோ.

பிறகு பல சந்தர்ப்பங்கள் வாய்த்தும் ஏனோ இன்றளவும் காரணீஸ்வரனை பார்க்க போகவில்லை.

வட மாநிலங்களுக்கு போய் மீண்டும் வந்த போது அவரைப் பற்றி விசாரித்தேன். தன் சொத்துக்களை விற்று காசியில் பெரிய இலவச தங்குமிடம் கட்டி அங்கேயே இறந்தும் போய் விட்டாராம்

எத்தனையோ பேர் நன்றாகத் தானே வாழ்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்.

ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு நேரம் குறித்திருக்கிறான்.

இல்லாவிட்டால் ராமானுஜ காவியம் ஏது? மலையை குடைந்து நந்தி கோயில் ஏது?

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

 

One thought on “சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

  1. ஒவ்வொன்றும் அருமைஜி!

    சிவாய நமஹ!

    வாழ்க வளமுடன்!!

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply to nagarajan ekambaram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *