Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

print
மாதக்கடைசி தேவைகளை சமாளிக்க ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று தவித்த அந்த நடுத்தரக் குடும்பத்து இளைஞர், பொருட்ளை தானே தயாரித்து சைக்கிள் சென்று வீடு வீடாக டெலிவரி செய்து வந்தார். இன்று இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவரது நிறுவனம் டர்ன்ஓவர் செய்து வருகிறது.

யார் இந்த இமாலய சாதனைக்கு சொந்தக்காரர்?

குஜராத் மாநிலத்தில் ருப்பூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கர்சன்பாய் பட்டேல். தனது 21 ஆம் வயதில் வேதியியல் படிப்பில் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றவர் ஒரு பரிசோதனைக் கூடத்தில் டெக்னீஷியனாக சேர்ந்தார். வாங்கும் சம்பளம் இருபது நாட்களுக்கு மேல் போதாத நிலையில் மாதக் கடைசி தேவைகளை சமாளிக்க என்ன செய்வது என்று யோசித்தார்.

அப்போது வாஷிங் மெஷின்கள் புழக்கத்தில் இல்லை. வாஷிங் பவுடர் எனப்படும் சலவைத் தூள் தான் பயன்பாட்டில் இருந்தது. அதுவும் பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகிக்கும் ஒன்றாக இருந்தது. வேலைக்கு செல்பவர்களுக்கு சோப்பு கட்டி தேய்த்து துணிகளை துவைக்க நேரமில்லை. வயதானவர்களுக்கும் அது கடினமான பணியாக இருந்தது. எனவே சோப்புத் தூளை மலிவான விலையில் நடுத்தர மக்களும் வாங்கும் வண்ணம் நாமே ஏன் தயாரிக்கக் கூடாது என்று கருதி வேலை நேரம் போக மீதி நேரம் தன்னுடைய வேதியியல் அறிவைக் கொண்டு தனது வீட்டுக்கு பின்புறம் ஒரு டென்ட் போட்டு அதில் டிட்டர்ஜெண்ட் தூள் தயாரிக்க ஆரம்பித்தார்.

மூலப்பொருட்களை நகரத்திற்கு சென்று குறைந்த விலைக்கு வாங்கி வந்தார். பின்னர் சோப்புத் தூளை தயாரித்து கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்று பிரித்து பேப்பரில் சுற்றி பேக்கிங் செய்து தனக்கு தெரிந்தவர்களிடம் விற்று வந்தார். சுமார் 10 X 12 அடி நீளம் உள்ள சிறிய அறையிலேயே பேக்கிங் முதல் அனைத்தும் நடந்தது.

தினமும் தன் அலுவலகத்துக்கு (17 கி.மீ.) அவர் சைக்கிளில் தான் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அந்த சோப்பு தூளை பாக்கெட்டுகளில் அடைத்து வழிநெடுக விற்றுக்கொண்டு போவார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் அந்த சோப்புத் தூளை கிலோ ரூ.3.50/- க்கு விற்றுவந்தார். அப்போதெல்லாம் முன்னணி பிராண்டுகளின் விலை கிலோ ரூ.13/- முதல் 15/- வரை. எனவே ஏழை பாழைகள் அவரது தயாரிப்பை ஆவலுடன் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

nirma-1ஓரளவு தனது தயாரிப்பு பிரபலமாக துவங்கியவுடன் அதற்கு தனது மகளின் பெயரான ‘நிர்மா’ என்பதை வைத்தார்.

தொடர்ந்து சந்தையில் அவரது தயாரிப்புக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைத்து டிமாண்ட் அதிகரித்தது. அவரது ஊரான கிசான்பூரில் அதிக விற்பனையாகும் பிராண்டாக ‘நிர்மா’ உயர்ந்தது.

1985 ஆம் ஆண்டை நெருங்கும்போது, நாடு முழுதும் அதிகளவு விற்பனையாகும் டிடர்ஜென்ட் பவுடர் என்கிற பெயரை நிர்மா பெற்றது.

நிர்மாவின் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, சேல்ஸ்மென் சில்லறை விற்பனையாளர்கள் நோக்கி படையெடுத்தனர். சில்லறை விற்பனையாளர்கள் அதுவரை பன்னாட்டு தயாரிப்புக்களை டீல் செய்து வந்தவர்கள். இவர்கள் சென்று பணம் கேட்கும்போது, இப்போது இல்லை அடுத்த மாதம் வாருங்கள் என்றோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக் பிய்த்து பிய்த்து தான் பேமெண்ட் செய்தனர். முழு சரக்கும் விற்றுத் தீர்ந்த பிறகும் கூட சிலரிடம் சில்லறை கூட பெயரவில்லை. இந்த நிலை நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் நீடித்து வந்தமையால், நிர்மா நிறுவனத்திற்கு வரவேண்டிய தொகை சந்தையில் எக்கச்சக்கமாக பெருகியது. அதாவது பொருள் விற்கிறது. விற்பனையாளர்களிடமிருந்து பணம் வரவில்லை.

தனது சேல்ஸ் டீமை அழைத்து ஆலோசித்தார் கர்சன்பாய் பட்டேல். அப்போது தான் அந்த துணிச்சலான முடிவை பட்டேல் எடுத்தார். ஆனால் புரட்சிகரமான முடிவு அது.

மீட்டிங்கிற்கு மறுநாள் மீண்டும் சில்லறை விற்பனையாளர்களை மொத்த விற்பனையாளர்களையம் சந்திக்க நிர்மா தரப்பிலிருந்து ஆட்கள் சென்றனர். ஒன்று பணம் வாங்கு. அல்லது சரக்கை திருப்பி வாங்கு… இது தான் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

அடுத்த சில நாட்களில் விற்பனையாளர் அதிர்ச்சியடைந்தனர். மார்க்கெட்டில் நிர்மா கிடைக்கவேயில்லை. அடுத்த ஒரு மாதம் முழுதும் டெலிவிஷன் பத்திரிக்கைகள் என முழுக்க முழுக்க நிர்மா விளம்பரம் தான். (விளம்பரத்தின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது! இதைப் பார்த்தால் பழைய ஞாபகங்கள் மலரும்!!)

வாஷிங் பௌடர் நிர்மா
வாஷிங் பௌடர் நிர்மா
பாலைப்போல வெண்மை நிர்மாவாலே வருமே.
வண்ணத்துணிகள் எல்லாம் பளபளப்பு பெருமே.
எல்லோரும் போற்றும் நிர்மா.
வாஷிங் பௌடர் நிர்மா
நிர்மா

குண்டூசியானாலும் தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் தான் அதற்கு மதிப்பும் கிராக்கியும். நிர்மா விளம்பரம் பட்டி தொட்டி முதல் நகரம் வரை எங்கும் சூப்பர் ஹிட்டானதையடுத்து ப்ராடக்ட்டுக்கு கிராக்கி பன்மடங்கு அதிகரித்தது.

கடைகளில் கேட்டால் நிர்மா ஸ்டாக் இல்லை. கடைகளுக்கு படையெடுத்த கஸ்டமர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப ஆரம்பித்தனர். இதற்காகத் தானே காத்திருந்தார் கர்சன்பாய் பட்டேல்.

மறுபடியும் தனது பணியாளர்கள் விற்பனையளர்கள் கூட்டத்தை கூட்டினார் கர்சன்பாய் பட்டேல். டெலிவரி வேன்கள் தயார் செய்யப்பட்டன. இப்போது சந்தைகளில் நிர்மா பவுடர் பாக்கெட்டுகள் குவிக்கப்பட்டன. கையில காசு, வாயில தோசை பாணியில். கடனோ தவணையோ துளியும் கிடையாது.

நிர்மாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று : தரமான பொருளை போட்டியாளர்களைவிட குறைந்த லாபத்துக்கு குறைந்த விலைக்கு கொடுத்தது தான்.

வெற்றிக்கான வியாபார சூத்திரம் : வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, எப்போது தேவையோ, எங்கு தேவையோ, என்ன விலையில் தேவையோ அதை பூர்த்தி

**************************************************************

Similar articles….

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

**************************************************************

செய்யுங்கள். விற்பனை தானே நடக்கும். வெற்றிகரமான ஒரு வணிகத்தை நிறுவ, மார்க்கெட்டிங் டிகிரியோ வியாபாரம் சம்பந்தப்பட்ட படிப்போ தேவையில்லை என்பதை நிரூபித்தவர் கர்சன்பாய் பட்டேல். வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியும் (passionate burning desire) புதுப் புது யுத்திகளை கையாள (innovation) ஆர்வமுமே போதும்.

லாபத்தை அதிகரிக்க நிர்மா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. தனது தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை தானே உற்பத்தி செய்ய முடிவு செய்தது. சோப்புத் தூள் தயாரிக்க மூலப் பொருட்களான சோடா, சிலரி ஆயில், டினோபால் பவுடர் போன்றவற்றை தங்கள் தொழிற்சாலையில் தாங்களே தயார் செய்தனர். தங்கள் மூலப் பொருள் தேவையை இதை மூலம் பூர்த்தி செய்த்துக்கொண்டதுடன் வெளிமார்க்கெட்டிலும் அந்த பொருட்களை சப்ளை செய்தனர்.

மேலும் பல சோப்புத் தூள் தயாரிப்பாளர்களும் இந்த பொருட்களை வாங்கினர். இதன்மூலம் லாபம் பன்மடங்கு அதகிரித்தது.

nirma-karsanbhai-patel

சந்தைப் போட்டிகளாலும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளாலும் நிர்மாவின் விற்பனை காலப்போக்கில் குறையத்துவங்கியபோது இது அவர்களுக்கு மிகவும் கைகொடுத்தது. யார் சோப்பு தூள் தயாரித்தாலும் மூலப்பொருட்கள் அவசியம் தானே?

இன்றும் நிர்மாவுக்கென்று மார்கெட்டில் ஒரு கணிசமான ஷேர் இருக்கிறது.

மேலும் தனது தயாரிப்புகளை நவீனமயமாக்கல், விரிவுபடுத்துதல், மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும் நிர்மா முக்கியத்துவம் கொடுத்தது. நவீன தொழில்நுட்பத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் நிர்மா மிகவும் உறுதியாக இருந்தது.

Corporate Social Responsibility என்று சொல்லக்கூடிய நிறுவன சமூகப் பொறுப்பிலும் நிர்மா கவனம் செலுத்தியது. 1994 ஆம் ஆண்டு Nirma Education & Research Foundation (NERF) என்கிற பல கல்வி நிறுவனங்களை துவக்கி நிர்வகிக்க கல்வி ஆராய்ச்சி நிறுவனமும், Nirma Labs என்று சொல்லக்கூடிய சிறு, குறு தொழில் முனைவருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஆய்வுக் கூடங்களும் துவக்கப்பட்டன. இது தவிர பல்வேறு சமூக, அறப்பணிகளை செய்ய Nirma Memorial Trust, Nirma Foundation என்று அறக்கட்டளைகள் துவக்கப்பட்டன. இது தவிர, Nirma Institute of Technology (1995), Nirma University of Science and Technology (2003), Nirma Education and Research Foundation (2004) என்கிற பல கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்டது. நமது நாட்டின் வளர்ச்சி கல்வி வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது என்பது கர்சன்பாய் பட்டேலின் ஆணித்தரமான நம்பிக்கை. 2010 ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

1969 ஆம் ஆண்டு ஒரு நபருடன் துவக்கப்பட்ட நிர்மா இன்று சுமார் 14000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டுக்கு பல்லாயிரம் கோடிகளை அனாயசமாக டர்ன்ஓவர் செய்கிறது!

கர்சன்பாய் பட்டேலின் வெற்றிக்கு காரணம் என்ன?

ரிஸ்க் எடுக்க துணிந்த அவரது தன்னம்பிக்கை + புதுமையாபன சிந்தனை!

சுயதொழில் புரிவோர், வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் “செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்” என்ற வைர வரிகளை நினைவில் வைத்திருங்கள்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்

லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோட போராடு!

**************************************************************

* செய்தொழிலில் லாபம் பெருகவும், செல்வம் குவியவும் கீழ்கண்ட பதிகத்தை உங்கள் தொழில் செய்யுமிடத்தே தினசரி ஒதிவரவேண்டும். 

Download the following pdf and chant daily @ your business place.

https://goo.gl/ehlj8r

இது தொடர்பான பதிவுக்கு : மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

**************************************************************

ரைட்மந்த்ரா அலுவலகத்தில் ஆயுத பூஜை!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள நம் ரைட்மந்த்ரா அலுவலகத்தில் நாளை (08/10/2016) மாலை சுமார் 6.00 மணியளவில் ஆயுத பூஜை கொண்டாடப்படவிருக்கிறது.

ayudha-pooja

தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை மாணவர்கள் வந்திருந்து பூஜை செய்து நம்மை ஆசீர்வதிக்கவிருக்கிறார்கள். சென்ற ஆண்டும் இதே மாணவர்கள் வந்திருந்து நம்மை ஆசீர்வதித்தது குறிப்பிடத்தக்கது.

நம் உழவாரப்பணிக் குழு அன்பர்களும், ஏனைய வாசகர்களும் வந்திருந்து பூஜையில் பங்கு பெற்று நம்மை வாழ்த்தியருள வேண்டும்!

**************************************************************

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Similar articles….

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்! ஆயுத பூஜை SPL குட்டிக்கதை – 1

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்!!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

**************************************************************

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

**************************************************************

[END]

3 thoughts on “ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

  1. அருமையான பதிவு

    அயராத முயற்சியோடு உறுதியான தன்னம்பிக்கையும் கொண்டிருந்தாள் லட்சியம் வசப்படும் என்பதை நிரூபிக்கும் பதிவு

    வாழ்க்கையில் இக்கட்டான சமயங்களில் எடுக்கும் துணிச்சலான முடிவு வியப்பூட்டும் மாற்றத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை

    பன்னாட்டு நிறுவங்களின் பல்முனை போட்டியை சமாளித்து சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் திரு பட்டேல் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பாராட்டுக்கள்

    நிர்மா கடந்து வந்த பாதையை நம்மோடு பகிர்ந்துகொண்ட சுந்தர் அவர்களுக்கு நமது நன்றிகள்

    நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்

  2. Ji, Lots of spelling mistakes found in the article. Please correct it and request to keep the article very neat and readable.

    Thanks a million…!!!

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *