Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்

print
காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23). சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடந்த ஜனவரி 27 தைப்பூசத்தன்று வினோதினியை நாம் தியாகி திரு.முத்தப்பா அவர்களுடன் சென்று சந்தித்தபோது கூட நம்முடன் அவர் படுக்கையில் இருந்தபடி பேசினார். முகத்தில் காயங்கள் ஓரளவு குணமாகத் துவங்கியது தெரிந்தது. நம்மிடம் நம்பிக்கையுடன் பேசினார். “நன்றி அண்ணா. உங்களையெல்லாம் பார்க்க முடியவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது” என்று துடித்தார். பின்னர் இரண்டாம் கட்ட தொகையை அவர் தந்தையிடம் திரு.முத்தப்பா அவர்கள் மூலம் வழங்கினோம்.

அவர் இறப்பு செய்தியை நம்ப முடியாது தவிக்கிறேன். அவர் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

நம் தளத்தின் சார்பாக வினோதினிக்கு அஞ்சலி செலுத்தவும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் நண்பர் ராஜா மற்றும் உள்ளிட்டோர் வினோதினி சிகிச்சை பெற்று வந்த ஆதித்யா மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.

…………………………….…………………………….…………………………….
ஜனவரி 1 புத்தாண்டு அன்று திரு.பாலம் ஐயாவை அழைத்து சென்று முதல் முறை விநோதினியை சந்தித்தபோது…

http://rightmantra.com/?p=2012
…………………………….…………………………….…………………………….

29 thoughts on “ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்

  1. இந்த மிக பெரிய சோக செய்தியை படிக்கும்போதே மனம் கலங்குகிறது…

    இவ்வளவு பேரின் பிரார்த்தனைகளும் கண்ணீரும் அந்த கடவுளுக்கு தெரியவில்லையா???

    வினோதினி க்கு எவ்வளவு கனவுகள், ஆசைகள் , இலட்சியங்கள் இருந்திருக்கும்?? எல்லாம் கனவாகவே போய்விட்டதே……

    அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்…..

    PVIJAYSJEC

  2. Andava antha payannn uyiroduu yeerukirannn……..pavamm intha ponnuu
    uyirroduu illai.

    She should born again and fight that raskal again………..not for revenge……..
    he should know how that girl feels…………

    ithu nadukkum paruuu antha paynoodaa valkaiyillaaaaaaaaa…….andavan karunai
    yalla……………

    Namma onnuu nallathu senchaaa…………….peryedi villuthuu……..parpom
    nammalla illa antha vithiyaaanuu…………

    Regards
    Sakthivel.D

  3. May Her divine soul rest in peace!!
    Pray to the almighty to give strength to her family!!

    Regards
    R.HariHaraSudan.

  4. இறைவன்

    இது போன்றதொரு துயரத்தை தாங்கும் மனவலிமை .அவர் குடும்பத்தாருக்கும் நமது தல வாசகர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் ………..

    அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்…..

    மனோகரன்

  5. இதை படிக்கும் போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது!! எத்தனை பேர் எவ்வளவு உதவிகள் செய்தீர்கள்!! எவ்வளவு பிரார்த்தனை?? அது அதனையும் வீண் தான் அஹ!!! பாவம் இவள் என்ன செய்வாள்?? இவள் தந்தை என்ன செய்வார்!! அவர்கள் முகத்தை எப்படி நீங்கள் பார்ப்பீர்கள் என்று தெரியவில்லை !! ஆறுதலே கூற முடியாது!! மிக பெரிய இழப்பு!! இந்த மாதிரி சமயங்களில் தான் கடவுள் மீது கோவம் அதிகமாக வருகிறது!! நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான் என்பதெல்லாம் சும்மா பேச்சு!! இதர் மேல் என்ன சோதனை வேண்டும் அல்லது கை கொடுத்து தான் என்ன புண்ணியம்!! எனது தந்தைக்கு சாலை விபத்து நேரும் போதும் இதே கேள்வி தான்!! ஏற்கனவே எனக்கு பக்தி கம்மி தான்!! இப்போது இன்னும் குறைந்து விட்டது!! GOD is GREAT 🙁 🙁

    1. தம்பி மனோஜ் அவர்களை சோதனை என்பது வேறு ஒருவரது தலைவிதி என்பது வேறு அது யாராலும் மாற்ற முடியாது கடவுள் என்பவர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை.

      வாழ்க வளமுடன்

    2. மனோஜ்,
      பணம் பொருள் கொடுப்பது நமது கடமை இதில் நம்மில் பலர் செய்துள்ளனர்,,, ஆனால் அவரது வலியை யாரால் பங்கு போட முடியும்…கடவுள் அவருக்கு இறப்பு என்ற வரத்தை கொடுத்திருகிறார் அவரது வேதனையை கடவுளாலே தாங்கிக்கொள்ள முடியவில்லை போலும்

  6. சற்று முன் தான் மருத்துவமனையில் இருந்து வந்தேன் ,தங்கை வினோதினியின் அப்பா அவர்களை சந்திக்க முடியவில்லை ,தங்கை வினோதினி அவர்களின் மாமா திரு ரமேஷ் அவர்களை சந்தித்து நமது தளம் சார்பாக ஆறுதல் சொன்னேன்

    உண்மையில் ஜீரணிக்க முடியவில்லை ,தைபூசம் அன்று நான் முருகர் கோவிலுக்கு சென்று வைத்திருந்த பிரசாதத்தை அவரது தகப்பனார் நெற்றியில் வைத்துவிட்டார் அப்பொழுது தங்கை யாருப்பா அது என்று கேட்டு நீங்களே வைத்துவிடுங்கள் அண்ணா ,நீங்கள் எல்லாம் இருப்பது எனக்கு மிகுந்த தைரியம் கொடுகிறது என்றார் ,நாங்கள் ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்ததை விட ,தைபூசம் அன்று பார்த்த பொழுது நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தார் ,இப்பவும் என்னால் நம்ப முடியவில்லை

    இப்படி ஒரு சம்பவம் இனிமேல் இந்த நாட்டில் நடக்கவே கூடாது ,அவரது மாமா அவர்களிடம் பேசியபோது அவர் சொன்னது ஒரு உயிரை பறிக்க கூடிய சக்தி இருக்கும் திராவகம் அது எல்லா கடையிலும் லிட்டர் கணக்கில் கிடைப்பது தடுக்க படவேண்டும் ,கண்காணிக்க படவேண்டும் ஒருவருக்கு குறைந்த பட்சம் தான் திராவகம் தேவை படும் வீடு உபயோகத்திற்கு ,அதை மீறி லிட்டர் கணக்கில் வாங்குவதற்கு ஏதாவது நடைமுறை படுத்தவேண்டும் என்று கேட்டார் உண்மையில் அவர் சொன்னது ஞாயம் தான் ,அப்படி கண்காணிப்பு இருந்தால் இரண்டு லிட்டர் அளவு அவன் வாங்கி இருக்க முடியாது

    தங்கை வினோதினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  7. மிகவும் வருத்தமாக உள்ளது. நிச்சயம் இந்த நிலையில் இருந்து நலமோடு மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தோம்.

    எத்தனை கனவுகளோடு/இலட்சியங்களோடு வாழ்க்கையை எதிர்கொண்டிருப்பார். இந்த இழப்பை எதை கொண்டு ஈடு செய்ய முடியும்.

    இந்த ஆன்மா இறைவனடியில் இளைப்பாறவும், இறைவன் பிரிவால் வாடும் இந்த குடும்பத்தை நிறைவாக ஆசிவதிக்கவும் வேண்டுவோமாக.

  8. நான் சென்று இருந்த பொழுது கம்யூனிஸ்ட் தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் வந்து ஆறுதல் சொல்லி சென்றார் வினோதினி குடும்பத்திற்கு

  9. என்ன சுந்தர், இப்படி ஒரு கொடுமையான செய்தி. எங்கேயோ கண்ணுல பாக்காம, நீங்க சொல்றத கேக்குற எங்களுக்கே அவங்க இறந்துட்டாங்கனு செய்தி – ய கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, அவங்க கஷ்டத்துல பங்கெடுத்த உங்கள மாதிரி நல்லவங்களுக்கும்,, அவங்க குடும்பத்துக்கும் எப்படி இருக்கும்.

    கடவுள் இருக்காரா, இல்லையா? பாவம் பண்ணுனவன் உயிரோட இருப்பானாம். அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு. அவள மட்டுமே நம்பி இருந்த அவ குடும்பத்தையும் சேர்த்து கடவுள் கை விட்டுட்டார்னு தான் தோனுது.. ஆத்திரத்துல ஒரு நிமிடத்துல் அவன் ஆசிட் வீசிட்டு, அவன் போயிட்டான். இந்த 3 மாதமா, அந்த பொண்ணும், அவங்கள சேர்ந்தவங்களும், எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு இருப்பாங்க.

    என்ன சொல்ரதுனே தெரியல. அவங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்க தான் முடியும். அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்…..

    —————————————————-
    என்ன செய்வது… சில கேள்விகளுக்கு இறைவனால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
    – சுந்தர்

  10. ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய வல்ல இறைவன் அருள் செய்யட்டும்

  11. வார்த்தைகள் வரவில்லை …கண்ணீர் தான் வருகிறது….அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும் ..

    ஜெயம் …

  12. வினோதினியின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் .இது போன்ற கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் நிகழாத அளவிற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் அரசு.இது தான் வினோதினியின் சாவிற்கு அரசு செய்ய வேண்டிய பிரயாட்சிதம் .

  13. இந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    சகோதரி வினோதினியின் ஆத்மா சாந்தி அடைய அந்த இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் கூறியது போல் ஆண்டவன் போடும் கணக்கு நமக்கு புரியாது. நமது தளம் சார்பாக இரு நிமிட மவுன அஞ்சலிக்கு நேரம் அறிவியுங்கள். எல்லோரும் அந்த நேரத்தில் அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் மவுன அஞ்சலி செலுத்தட்டும்.

  14. மிகவும் வருத்தமாக உள்ளது சுந்தர் .வினோதினியின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  15. சகோதரி வினோதினி மேலும் மேலும் அவஸ்தை படக்கூடாது என்பதற்காக கடவுள் அந்த நல்ல ஆத்மாவை தன்னுடைய திருவடிகளில் சேர்த்துகொண்டிருக்கலாம். முற்பிறவியிலும் இந்த பிறவியிலும் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்கையும் அதன் முடிவும் இருக்கும். அதற்காக கடவுளை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இறைவனின் கணக்கு நமக்கு புரியாது. எத்தனையோ பேர் மனதார பிரார்த்தனை செய்ததின் பலனாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நம் கண்முன்னே இன்று நலமுடன் இருக்கிறார். அது அவருடைய பூர்வ ஜென்ம பலன். வினோதினியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    1. மிக அருமையாக சொன்னீர்கள் அனைவருக்குமே வருத்தம் எல்லாமே உண்டு வாழ வேண்டிய வயதில் இந்த பெண் இப்படி சென்று விட்டாளே என்று ஆனால் கடவுளின் கணக்கு வேறாக இருக்கலாம் ,உண்மையில் அந்த பயனுக்கு கிடைக்கும் தண்டனை பாருங்கள் அப்பொழுது புரியும் கடவுளை பற்றி

      ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் கோவில் இரு சிறு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அரக்கனை எல்லாரும் பார்த்தோம் அப்பொழுதும் பல பேருக்கு இதே சந்தேகம் வந்தது கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா என்று ,ஆனால் அவனுக்கு அரசாங்கம் கொடுக்கும் முன்னரே கடவுள் கொடுத்தார் தண்டனையை ஒரு காவல்துறை அதிகாரி மூலமாக

      இவனுக்கும் தண்டனை கிடைக்கும் என்னை பொறுத்தவரை இவன் உடனடியாக மரணம் அடைய கூடாது அணு அணுவாக சித்ரவதை அனுபவித்து தான் மரணம் அடைய வேண்டும் நடக்கும்

  16. Shock to hear this news. Let her Soul be rest in heaven. My heartiest condolences to her family members and brothers like you. We should do something to prevent this type of incidences in future.

  17. சகோதிரி வினோதினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.

  18. சகோதிரி வினோதினியின் ஆன்மா சாந்தி அடைய அந்த எல்லாம்வல்ல இறைவனை பிரதிபோம்

    மாரீஸ் கண்ணன்

  19. வினோதினி மீண்டு வருவார் என மிகவும் நம்பினேன். அவர் இழப்பு ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இறைவன் கணக்கு வேறு என்பது புரிந்து கொள்ள முடிகிறது. வினோதினியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனையும் என் சத் குருவையும் மன்றாடி பிரார்த்திக்கிறேன். அவர் தம் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நளினி ராஜலிங்கம்.

  20. வினோதினியின் ஆத்மா சாந்தி அடையவும், இறைவன் அடி சேரவும் பிரார்த்திப்போம்.

Leave a Reply to Elango Cancel reply

Your email address will not be published. Required fields are marked *