Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

print
ன்று மகா பெரியவா ஜயந்தி. நாட்டின் பல இடங்களில் வெகு விமரிசையாக அது தொடர்பான உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் மட்டும் நான்கைந்து இடங்களில் விமரிசையாக பெரியவா ஜயந்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ப்ரீதியான வேத பாராயணம், கோ- பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ஹோமங்கள், அன்னதானம் போன்றவற்றோடு பல அமைப்புக்கள் இதை விமரிசையாக கொண்டாடிவருகிறார்கள். நாம் ஏதாவது ஒரு நிகழ்வில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று நினைத்தோம். அடுத்தடுத்த ஆலய தரிசன பயணங்களால் முடியவில்லை. இருப்பினும் மகா சுவாமிகளுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்றில் தான் இன்றைய நாள் கழிந்து வருகிறது. ஆம்… சிவபுண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் நம்மை ஈடுபடுத்தி வருகிறோம்.

அனுமன் எப்படி தன்னை விட ராமனின் புகழைக் கேட்டால் உள்ளம் மகிழ்வானோ அதே போன்று பெரியவாவும் ஈஸ்வரனின் பெருமையை கேட்டால் மனம் குளிர்வார் அன்றோ?

பெரியவாவின் அவதார நோக்கமே சிவபக்தியை நிலைநிறுத்தி வேத நெறியை தழைத்தோங்க செய்வது தான். இரண்டையுமே குறைவறச் செய்தவர் சம்பந்தப் பெருமான். (அவரது குருபூஜை வரும் 24 ஆம் தேதி வருகிறது – அதாவது அவர் ஈஸ்வரனோடு ஐக்கியமான நாள்!)

sambandhar illam

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
– சேக்கிழார்

எனவே பெரியவாவின் ஜயந்தியையொட்டி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் கடலூர் மாவட்டம் ஆச்சாள்புரம் ஆகிய இரண்டு இடங்களில் நாம் சம்பந்தப் பெருமான் தொடர்புடைய தலங்களை நேரில் சென்று தரிசித்து அது பற்றி தளத்தில் பதிவளிக்கலாம் என்று நினைத்தோம். அதையொட்டி பயண ஏற்பாடுகளை செய்தபோது எதிர்பாராதவிதமாக புயல் மையம்கொண்டு தஞ்சை மாவட்டத்தில் கடும் மழை பெய்தது. எனவே பயணத்தை ஒத்திவைக்க வேண்டியதாகிவிட்டது.

DSC04974-22

மழை ஓய்ந்ததையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை, குடந்தை மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துவந்தோம். சென்ற இடத்தில் இறைவனின் ஆஞ்ஞையினால் ஒரு நாள் கூடுதலாக தங்கவேண்டியதாகிவிட்டது. எனவே இன்று பெரியவா தொடர்புடைய நிகழ்வுகள் எதற்கும் செல்லமுடியவில்லை.

மேற்படி பயணத்தில் தஞ்சை ஒரத்தநாடு அருகே பேய்க்கரும்பன் கோட்டை கிராமத்தில் உள்ள திருஞானசம்பந்தர் திருக்கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவில், அடுத்த நாள் காலை சீர்காழியில் சம்பந்தர் அவதரித்த இல்லம் பின்னர் இறுதியாக சம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகையை கரம் பிடித்த திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம் – அனைத்தையும் தரிசித்தோம். இன்பத்தில் திளைத்தோம்.

DSC04883-22
தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோவில் முகப்பில் உள்ள நந்தி!

சென்ற இடங்களில் எல்லாம் அத்தனை ஆத்மானுபவம். உங்களுக்காக பல தகவல்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம். அந்தந்த இடத்தின் அழகையும் படம்பிடித்து வந்துள்ளோம். (சாம்பிள் புகைப்படங்களே எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?!)

திருஞானசம்பந்தர் அவதார இல்லம் நம் ப்ளானில் இல்லை. நாம் ஏற்கனவே சிலமுறை .. சொல்லியிருக்கிறோம். நாம் பின் செல்ல தான் முன் சென்று உதவிகள் செய்வான் எந்தை ஈசன் என்று. அவன் அருளால் அவ்வில்லத்தையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. (விரிவான பதிவு பின்னர்.)

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பனகோட்டையில் அமைந்துள்ள சம்பந்தர் திருக்கோவில்...!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பனகோட்டையில் அமைந்துள்ள சம்பந்தர் திருக்கோவில்…!

இதனிடையே, பேய்க்கரும்பன் கோட்டை கிராமத்தினர் வரும் 24/05/2016 அன்று காலை மற்றும் மாலை நடக்கவிருக்கும் சம்பந்தர் உற்சவத்தில் அவசியம் நாம் கலந்துகொள்ளவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டிருக்கிறார்கள். மிக அருமையான அந்நிகழ்ச்சியை அவர்கள் புகைப்படத்தில் கூட பதிவு செய்ய வேண்டும் என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நமது சேவை அவசியம் அங்கு தேவை என்பதை கருத்தில் கொண்டு நாளை மீண்டும் தஞ்சை புறப்படுகிறோம்.

திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம்
திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம்

அடுத்து நல்லூர் பெருமணத்தில் (கடலூர் மாவட்டம் கொள்ளிடம் அருகே அமைந்துள்ளது இத்தலம்) நாளை 23 திங்கட்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சம்பந்தப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடக்கவிருக்கிறது. அதிலும் நாம் கலந்துகொள்ளவேண்டும் என்று குருக்கள் அழைப்பு விடுத்திருக்கிறார். அம்பாள் திருநீற்று உமையம்மை சன்னதியில் வைத்து அவர் நம்மிடம் இந்த அன்புக்கட்டளையை இட்டார். மறுக்கவே முடியவில்லை. நிச்சயம் இது சம்பந்தப்பெருமானின் திருவுள்ளம் தான். ஏதோ காரணம் உள்ளது. எனவே நாளை மதியம் மீண்டும் நல்லூர் பெருமணமும் அதற்கு அடுத்த நாள் காலை ஒரத்தநாடும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

கரும்பை வெட்டிக்கொண்டு வந்து உங்களுக்கு அளிக்கலாம் என்று நினைத்தால் கரும்புத் தோட்டமே வா வா என்று அழைக்கிறது. விடலாமா?

ஒரு மாபெரும் விருந்து ஈசனருளால் உங்களுக்கு நிச்சயம் உண்டு!

இதனிடையே, மகா பெரியவா தொடர்பான பதிவு ஏதாவது ஒன்றையேனும் அவசியம் இன்று அளிக்கவேண்டும் என்று கருதி, ஏற்கனவே நாம் தட்டச்சு செய்து தயார் செய்த வைத்த ஒரு பதிவை அளிக்கிறோம்.

“பெரியவா சொன்னா அது பெருமாள் சொன்ன மாதிரி” என்பது புரியும். மேலும், அவரது பார்வையின் கடாக்ஷத்தின் தீக்ஷண்யமும் புரியும்!

திருவருளும் குருவருளும் அனைவருக்கும் குறைவின்றி கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

Also check for Sivapunniya Stories : 

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

ஸ்ரீ மடம் பாலு அவர்கள் தொகுத்த ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ நூலிருந்து கீழ்கண்ட கட்டுரை அளிக்கப்படுகிறது.

பெரியவாவின் பார்வை நம் மேல் பட்டால் என்னாகும் ?

ன் தகப்பனார் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சாஸ்திரிகள், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரியில் ஹிந்தி விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஹிந்தி மொழிப் புலமை வயிற்றுப் பாட்டுக்கு உதவிற்று. ஆனால், சிறுவயதில் அவர் வேத பாட சாலையில் அத்யயனம் செய்திருக்கிறார். சமஸ்க்கிருதம் பயின்று, தேர்வுகளில் நிறைய மதிப்பெண் பெற்று தங்கமெடல் வாங்கியிருக்கிறார்.சமஸ்கிருதம் படித்தவர்களிடம் மகாப் பெரியவாளுக்கு அலாதி பிரியம் உண்டு. தரிசனக் காலங்களில் சிறு சலுகைகளும் உண்டு. 1956-ல் அப்பா கல்லூரி வேலையில் சேர்ந்தார். முதன் முதலாக தரிசனத்துக்கு மடத்திற்கு போனார். கூட்டம் அதிகமில்லை. அப்பாவுக்கு அருமையான சந்தர்ப்பம். தன்னுடைய வடமொழிப் புலமையை வெளிப்படுத்தி, பெரியவாளிடம் அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருந்தார். பொன்னான வாய்ப்பை நழுவ விடுவாரா?

‘அஹம் சிவசுப்ரமணிய சாஸ்திரி. பச்சையப்பன் மகாவித்யாலயே…’ பெரியவாளின் பார்வை, அவர் பேச்சுக்குத் தடை போட்டார் போலிருந்தது. அமாம் தடைதான். ‘சிகை இல்லாமல் சமஸ்கிருதத்தில் பேச வேண்டாம்…’ என்று கடுமையான உத்தரவு. அப்பா, ஸ்தம்பித்து போய் விட்டார். அவர் அப்போது, கிராப்பு தலை. கிராப்பு தலைக்குள் வடமொழி வாடிப் போய்விடுமா? அப்பாவுக்கு இளமை முறுக்கு. வந்ததே கோபம்! ‘சுவாமிகள் என்ன இப்படி சொல்லி விட்டார்கள்! பெரியவாளுக்கு இவ்வளவு உஷ்ணமாக பேச தெரியுமா? என்ன?… சரி, தரிசனத்துக்கு போனால்தானே. இந்தச் சிகை பிரச்சனை? வேண்டாம். இந்த ஊரில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. தெய்வ தரிசனம் செய்யவேண்டும் போலிருந்தால், கோவிலுக்கு போகிறேன்? மடத்துக்குத்தான் போகணுமா, என்ன? பல வருஷங்கள் – மடத்து பக்கம் தலை வைத்து படுக்கவில்லை, என் அப்பா!

Maha periyava

அம்மாவால் அவ்வளவு வைராக்கியமாக இருக்க முடியவில்லை. ‘காஞ்சிபுரத்தில் இருப்பதே மகாப்பெரியவாளைத் தினமும் தரிசனம் பண்ணுவதர்க்காகத்தானே?” என்பாள். ஒரு தடவை அம்மாவுக்கு பிரசாதம் கொடுக்கும் போது, ‘அவனுக்கு என் மேலே கோபம்; குடுமி வைத்துக் கொள் – என்றேன். வீம்பு வேண்டாம் தரிசனத்துக்கு வரச் சொல்லு’ என்று உத்திரவாகியது. அப்புறம் அப்பாவும் தரிசனத்திற்கு போக ஆரம்பித்தார். ஆனால் ஒவ்வொரு தடவையும் சிகை விஷயம் மட்டும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.

ஒரு நாள் பெரியவாளே சொல்லி விட்டார்கள். ‘நீ சிகை வைத்துக் கொள்ளணும்னு தான் என் அபிப்பிராயம். அதனாலே சங்கடப் பட்டுண்டே இருக்காதே. உனக்கு எப்போ சௌகரிகப் படுகிறதோ, அப்போ சிகை வச்சுக்கோ….’ அப்பாவுக்கும் சமாதானமாகிப் போய் விட்டது. ஆனால், சிகை விஷயம் மறைந்து போய் விடவில்லை. அவ்வப்போது புகைந்து கொண்டுதான் இருந்தது. பெரியவாளுக்கு டிரிக்கெல்லாம் தெரியும். ‘நேரில் பார்த்துக் கேட்டால்தானே, இந்த சாஸ்திரிக்கு கோபம் வருகிறது. அவனை வேறு விதமாக மடக்கிப் போடுகிறேன் பார்!’ கனவில் வந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள் பெரியவாள். அப்பா என்ன செய்வார் பாவம்! கனவு வராமல் தடுக்க முடியுமா? நாளடைவில் பெரியவாளின் சொற்களில் மிரட்டல் அதிகமாகி விட்டது. கனவில்தான். ‘நான் உயிரோடு இருக்கும் வரை நீ சிகை வச்சுக்க மாட்டே? அப்படித்தானே? உன்னை நான் சிகையோடு பார்க்க கூடாதுன்னு பிடிவாதமா இருக்கே? அப்பா வெல வெலத்து போய்விட்டார். இந்தக் கனவு தோன்றி, பொழுது விடிந்த நாளே க்ஷவரம் செய்வதற்கு ஏற்ற நாளாக இருந்தது. (நாள், நட்சத்திரம்,பார்த்துதான் அப்பா முடி நீக்கம் செய்து கொள்வார்; அது அவர் காலம்; இது our காலம்) அம்மாவாசை அன்றைக்கு கூட கன்னம் முடி மழித்தல் கனஜோராய் நடக்கிறது. பித்ருக்கள் கண்ணை மூடிக் கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்திர தாகசாந்தி கூட கிடைக்காது. சிகை வைத்துக் கொண்டாகி விட்டது. 1976-ல் கல்லூரிக்கு போக வேண்டுமே? அவமானம், வெட்கம், என்று எத்தனையோ உணர்ச்சிகள். குனிந்த தலை நிமிராமல், (ஆக்ஸிடன்ட் ஏற்படாமல்) சைக்கிளில் ஏறிப் போனார், கல்லூரிக்கு.

“அட! என்னையா!…என்ன ஆச்சு…?”

“பெரியவா ஆக்ஞை…”

கையெடுத்து கும்பிட்டார்கள். கேலிக்கூத்தை எதிர்பார்த்துச் சென்றவருக்கு, ஏக மரியாதை; சென்றவிடமெல்லாம் சிறப்பு.

அப்பா, ரொம்ப நாள் கழித்து சொன்னார். ‘சிகை வைத்துக் கொண்டால் இவ்வளவு கௌரவம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நான் எப்போதோ சிகை வைத்துக் கொண்டிருப்பேன்!’

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. கடுமையான காய்ச்சல். குடும்ப டாக்டர் ராமமூர்த்தி மருந்து கொடுத்துவிட்டு, ‘கம்ப்ளீட் ரெஸ்ட்!… பெஸ்ட் ரெஸ்ட்!…என்னபுரிகிறதா?” என்று நிபந்தனை விதித்துவிட்டுப் போனார். அந்த நேரம் பார்த்து, ஸ்ரீமடத்திலிருந்து ஒருவர் செய்தி கொண்டு வந்தார். ‘ஹிந்தி பண்டிட்டைத் தரிசனத்திற்கு வரசொல்லி உத்திரவாகிறது…’

மகாசுவாமிகள் உத்திரவுதான். மறுப்பதற்கில்லை. மனம் ரெடியாக இருக்கிறது. உடம்பு எழுந்திருக்க மாட்டேன் என்கிறது.

மடத்து அன்பர், அப்பாவின் நிலையை நேரில் பார்த்துவிட்டு, அனுதாபப்பட்டுவிட்டு திரும்பி சென்று விட்டார்.

ஒரு மணி நேரம் சென்று, மடத்துக் குதிரைவண்டி வாசலில் வந்து நின்றது.

ஏதோ முக்கியமான, அவசரமான விஷயம் போலிருக்கிறது. ஆலோசனையின்போது ஹிந்தி பண்டிட் அருகில் இருந்தால் உபயோகமாக இருக்கும் – என்று பெரியவாள் எண்ணியிருக்கக் கூடும்.

போய்த்தான் ஆக வேண்டும்.

நாலைந்து நாட்களாகவே, அப்பாவின் உணவு வெறும் அரிசி கஞ்சிதான்; ரசம் சாதம் கூட கொடுக்கக் கூடாதென்று டாக்டர் சொல்லி விட்டார்.

வேண்டா வெறுப்பாக, ஒரு டம்ளர் கஞ்சியைக் குடித்துவிட்டு ஜட்காவில் ஏறிக்கொண்டார் – மடத்து சிப்பந்தி உதவியுடன்.

maha periyava 2

மடத்தை அடைந்ததும் மிகவும் சிரமப்பட்டு வண்டியிலிருந்து இறங்கினார். மடத்து ஊழியர் அவரைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்று, பெரியவர் சன்னதியில் சேர்ப்பித்தார். பெரியவாள் ஜாடைக் காட்டி, அப்பாவை உட்காரச் சொன்னார்கள். தரிசனத்திற்காக யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். எத்தனையோ உத்தரவுகள்; கடிதப்பரிமாறல்கள்; ஆசிர்வாதங்கள்.

இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவுக்கு பசியெடுக்க ஆரம்பித்து விட்டது. ‘ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. எனக்கோ உடம்பு சரியில்லை. அர்ஜண்ட்டாக வரச் சொல்வானேன்? இங்கே வந்ததில் யாருக்கு என்ன உபயோகம்?’

பெரியவாளிடம் கைங்கரியம் செய்து கொண்டிருந்த ஒரு சிஷ்யரிடம் தன் தவிப்பை, கண்பார்வையினாலேயே அப்பா தெரிவித்தார்.

‘ஹிந்தி பண்டிட்டுக்கு உடம்பு சரியில்லை, ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறார்…’

அடுத்த நிமிடம் பிரசாதம் கொடுத்து விட்டார்கள். பிரசாதமாக கொடுத்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டார், அப்பா.

பெரியவாளைப் பார்த்துக் கும்பிட்டார். மடத்து சிப்பந்தி அப்பாவை கைத்தாங்கலாக அழைத்துச் செல்வதற்காக அருகில் வந்தார்.

‘வேண்டாம் நானே நடக்கிறேன்…’ என்று சொல்லி விட்டு தளர்ச்சியில்லாமல் நடந்து சென்று ஜட்காவில் ஏறினார். அப்பா வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரே கூப்பாடு, பசி …ரொம்ப பசிக்கிறது…என்ன சமையல்?’ கஞ்சி மட்டும்தான் சாப்பிட சொல்லி இருக்கிறார் டாக்டர்…’

“அவர் கிடக்கிறார். இலையை போடு…” அன்றைக்கு முழுசாப்பாடு சாப்பிட்டார், அப்பா.

சாயங்காலம் டாக்டர் வந்து பரிசோதனை செய்தார். ‘காய்ச்சலே இல்லையே வேறு என்ன மருந்து சாப்பிட்டீர்?’

“நீங்க கொடுத்த மருந்துதான்…’

“இல்லை வேற என்னமோ பண்ணியிருக்கிறீர்…”

மடத்துக்கு போய் இரண்டு மணி நேரம், சும்மா உட்கார்ந்து விட்டு வந்த சோகக்கதையைக் கூறினார் அப்பா.

டாக்டருக்கு பரவசம்.

‘நான் சொன்னேனே? – நீர் வேறு ஏதோ செய்திருக்கிறீர் – என்று. அது சரிதான். பெரியவா கடாட்சம், ரெண்டு மணி நேரம் உங்கள் மேல பட்டிருக்கு, அவாளுடைய அருள் வட்டத்தின் வைப்ரேஷன். உங்க உடம்பைத் தாக்கி, நோயை விரட்டியிருக்கு…. பெரியவா வைத்தியருக்கெல்லாம் மேலான வைத்தியர். என் மருந்து சீக்கிரத்தில் உம்மை குணப்படுத்தாது – என்பதால், தன் மருந்தை – கடாட்சத்தை கொடுப்பதற்காக உம்மை வரச் சொல்லி இருக்கிறார்…’

என்ன கருணை! பெரியவா இருந்த திசையை நோக்கி ஆயிரம் கும்பிடு போட்டோம்!

– மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

==========================================================

Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

==========================================================

Also check our earlier articles on Ramana Maharishi

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava…

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

3 thoughts on “பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

  1. Maha Periyva is a Living God. We cant Understand the Power of Maha Periyva Just like that.

    Maha Periyva Thiruvadi Saranam.

    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

    S.Narayanan

  2. சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
    கருணா ப்ரவாஹ தெய்வம் , காஞ்சி இறைவன் ,ஆபத் பாந்தவன் ,
    அனாத ரட்சகன் ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பரம ஈஸ்வரரே சரணம்!!! .
    “ஜெய ஜெய சங்கர” என்று மனமதில் சொல்லிட
    ஜெயமருள் குணநிதி , அவரது திருவடி பற்றிட சேரும் நம் வாழ்வில் நிம்மதி
    அறவழி நின்றிட அருளுவார் நவநிதி
    நீறணிந்த முகமும் அருள் பொங்கும் கரமும்
    நீக்கிடும் முந்தை வினைகளையே
    குளிர்ந்த புண் சிரிப்பும் கூர்ந்த பார்வையும்
    சேர்த்திடும் கோரிய வரங்களையே
    கோடானு கோடி நன்மை தந்திடுமே!
    மகா பெரியவாளை சேவிப்பவர்க்கே
    என்றும் அவர் அருட் பார்வை வேண்டும் .
    ஓம் குருப்ப்யோ நம!
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர !!!
    என்றும் அவரது திருவடி நிழலில் சுகித்திருக்க பிரார்த்திப்போம் .

Leave a Reply to somasundaram palaniappan, muscat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *