Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

print
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீராமநவமி சமயத்தின்போது, ‘வைதேகி’ என்கிற கன்று பிறந்ததை பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணம் பற்றிய பதிவு இது.

DSC03690-22

காசி-விஸ்வநாதர் கோவிலில் பிரதிமாதம் நாம் கோ சம்ரட்சணம் செய்துவந்தாலும், முக்கிய பண்டிகை நாட்கள், விஷேட நாள் கிழமைகள், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அங்கு கோ-சாலைப் பசுக்கள் கன்று ஈனும் தருணங்கள் ஆகியவற்றின் போதேல்லாம் தவறாமல் விசேஷ கோ-சம்ரட்சணம் செய்து வருவோம். சில சமயம் அடுத்தடுத்த அலுவல்களால் இது பற்றிய பதிவுகள் அளிக்க முடிவதில்லை. மற்றபடி இதெல்லாம் தானாக நடந்துவரும். கோ-சம்ரட்சணத்தை நமது தளத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்றாக கருதுகிறோம். விஷேட கோ-சம்ரட்சணம் செய்யும்போது மட்டும் நண்பர்களிடம் உதவி கோருவோம். ஏனெனில் செலவு அதிகம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் எந்த குறையும் இதில் நாம் வைக்கமாட்டோம். நாம் ஆத்மார்த்தமாக, சந்தோஷமாக செய்து வரும் பணிகளுள் இது ஒன்று.

DSC04014-22
நண்பரின் தங்கை மகன் குரு பிரசாத் – யார் இருவரில் அழகு?

IMG_0155-22விசேஷ கோ-சம்ரட்சணத்தின் போது பசுக்களுக்கு சிறப்பு உணவு அளிப்பதுடன், கோ-சாலை ஊழியர்களை கௌரவித்து, வஸ்திரம், இனிப்புக்கள் முதலவனற்றை தருவது நமது வழக்கம். அவர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதம் தான் இது செய்யப்படுகிறது. இப்போதெல்லாம் பல கோ-சாலைகளுக்கு பொருளுதவிகூட கிடைத்து விடுகிறது. மனித உதவி தான் கிடைப்பதில்லை. சில பல காரணங்களால் யாரும் இந்த வேலைக்கு வருவதில்லை. எனவே இருக்கும் ஒரு சிலரையாவது நாம் பார்த்துக்கொள்ளவேண்டும் அல்லவா?

கர்மாவை உடைப்பதில் பெரும்பங்கு பசுக்களுக்கு உண்டு. பசு சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் புனிதமானது. மகத்துவம் மிக்கது. தோஷமற்ற விலங்கு பசு ஒன்று தான்.

IMG_0165-22

IMG_0170-22மேற்கூறிய கோ-சம்ரட்சணம், சென்ற வார இறுதியில் ஒரு நாள் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது. நமது வேண்டுகோளை ஏற்று நண்பர் திரு.ராஜன் கணேஷ் தனது இல்லத்தரசியுடனும், தங்கை குழந்தையுடனும் வந்திருந்தார்.

வஸ்திரம், துணிமணி, இனிப்புக்கள், உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துவிட்டு அனைத்து ஏற்பாடுகளுடன் நாம் தயாராக இருந்தோம்.

IMG_0184-22

IMG_0187-22மாலை 6.30 க்கு நண்பர் வந்தவுடன் காசி விஸ்வநாதருக்கும் அன்னை விசாலாட்சிக்கும் அர்ச்சனை நடைபெற்றது. நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்கள் சிலரின் பெயருக்கும் அர்ச்சனை நடைபெற்றது. தனது தாயாரின் உடல்நிலை தொடர்பாக நமக்கு தகவல் அனுப்பியிருந்தார் ஒரு வாசகி. அவரது பெயருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த விசேஷ சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் நிவேதனம் செய்யப்பட்டது.

IMG_0189-22

DSC00644 copy 2
பதிகம் பாடி கோ-சம்ரட்சணத்தை நிறைவு செய்த போது…

தொடர்ந்து பசுக்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. பின்னர் கோ-சாலை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பின்னர் தாம்பூலம், துணிமணிகள் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது. (இதில் ஒரு சிலர் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு சேரவேண்டிய பொருட்களையும் பத்ரி அவர்களிடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொண்டோம்.)

திரு.பத்ரி அவர்கள் தான் நமது இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமையேற்று பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌரவிக்கும் சம்பிராதயம் முடிந்தவுடன் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கலும், காராமணி சுண்டலும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த நண்பர் ராஜன் கணேஷ் அவர்களுக்கு நம் நன்றியும் வாழ்த்துக்களும். அவரது பிரார்த்தனையும் உள்ளக்கிடக்கையும் விரைவில் நிறைவேறி, மற்றுமொரு கோ-சம்ரட்சணத்தில் இதே ஆலயத்தில் சந்திப்பதாக கூறியிருக்கிறோம்.

இந்த இனிய தருணத்தில், கோ-சம்ரட்சணத்தின் மகத்துவத்தை உணர்த்தும் விதம் பகவான் ரமணர் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கே அளிக்கிறோம்.

==========================================================

Don’t miss these articles…

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

==========================================================

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ண்ணாமலை சுவாமியின் அடுத்த வேலையாக கோசாலை கட்டும் பணி தரப்பட்டது. அப்பொழுது ஆசிரமத்தில் பசு லக்ஷ்மி மட்டுமே இருந்தாள். ஆகையினால் சின்னசுவாமி ஒருசிறிய அளவிலான 10′ நீளம் 10′ அகலத்துக்கு கோசாலை அமைக்கத் திட்டமிட்டார். பகவான் விருப்பம் அதுவாக இல்லை.

cow-lakshmi-with-ramanar
பககவான் ரமணர் லக்ஷ்மியுடன்….!

பூமி பூஜை செய்யப்பட்டது. எல்லோரும் சென்றவுடன், பகவான் அண்ணாமலை சுவாமியிடம், ”வர்ற காலங்களிலே நெறைய பசுமாடு வரப்போகிறது”! பெரிசா கட்டு! நீயே முன்னிருந்து கட்டணும்!” என்றார். பிறகு தன் கைத்தடியால் எதில் இருந்து எதுவரை கட்டவேண்டும் என்று குறித்துக் காட்டினார். ”48 அடி நீளத்துக்கு 48 அடி அகலம் வரணும்” என்றார்.

இதையெல்லாம் கூறிவிட்டு கடைசியாக, ”சின்னசுவாமி வந்து கேட்டா, நான்தான் சொன்னேன்னு சொல்லாதே! நீயா செய்யற மாதிரி செய்!” என்றார். அருணாச்சல ரமணன் நகைத்தான். சீடன் தலைகுப்புற மலை உச்சியில் இருந்து குதித்தான். அண்ணாமலை சுவாமி உடனடியாக வேலையை ஆரம்பித்தார்.

அஸ்திவாரம் தோண்டத் துவங்கினார். சின்னசுவாமி அருகில் இல்லாததால் வேலை சுலபமானது. அண்ணாமலை சுவாமி உடனடியாக வேலையை ஆரம்பித்தார். அஸ்திவாரம் தோண்டத் துவங்கினார். சின்னசுவாமி அருகில் இல்லாததால் வேலை சுலபமானது. மதியம் 1.00 மணியளவில் வந்து பார்த்த சின்னசுவாமிக்கு தூக்கிவாரிப்போட்டது. அண்ணாமலை சுவாமியை பார்த்து, ”நீ தான் பிளானை மாத்தினியா? பெரிய பிளானா இருக்கே! உனக்கு என்ன அதிகாரம்? நீ யார் பிளானை மாத்த?” என்று கோபமாகக் கேட்டார்.

DSC04065-22

அண்ணாமலை சுவாமி, நான் தான் மாத்தினேன். பெரிசா கட்டினா நல்லாயிருக்கும்!” என்றார். சின்னசுவாமி, ‘என்கிட்டே கேக்காம ஏன் மாத்தினே? நான் தானே இங்கே சர்வதிகாரி! நான் இந்த ஆசிரமத்தை நல்லா கொண்டு வரணும்னு நினைக்கறேன். உங்க உங்க இஷ்டத்துக்கு இப்படி பண்ணினா எப்படி… நீயே இதை நடத்து! நான் போறேன்…’ என்றார்.

அண்ணாமலை சுவாமி, ‘நீங்க வேலையைப் பாருங்க!’ என்று வேலையாட்களுக்கு உத்தரவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். சின்னசுவாமியை இதுவரை யாரும் இவ்வாறு எதிர்த்தது இல்லை. சின்னசுவாமி அவர் கூறியபடி ஆசிரமத்தை விட்டு வெளியேறி எதிரில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்தார். வந்துகேட்ட அன்பர்களிடம், ‘அவனே ஆசிரமத்தை நடத்தட்டும். நான் எங்கேயாவது போறேன்’ என்றார்.

டி.கே. சுந்தரேச அய்யர், ராமகிருஷ்ணசுவாமி, முனகால வேங்கடராமய்யா ஆகிய மூவரும் வந்து நடந்ததைக் கேட்டு அறிந்தார்கள். அவர்களிடம் சின்னசுவாமி ‘அண்ணாமலை சுவாமியை வெளியே அனுப்புங்கோ! நான் உள்ளே வர்றேன்’ என்றார்.

DSC04070-22

அருணாச்சல ரமணன் நகைத்தான். வேறு வழியின்றி சின்னசுவாமி மீண்டும் ஆஸ்ரமம் வந்தார். அன்று மாலையே அனைத்து பக்தர்களையும் கூட்டிக் கொண்டு ஓல்டு ஹாலுக்கு வந்தார். தன்னுடைய பிளானுக்கும், அண்ணாமலை சுவாமியின் பிளானுக்கும் இருக்கும் வித்தியாசத்தையும் அதனால் ஏற்படும் பெரும் பொருள் செலவையும் எடுத்துச் சொல்லி நியாயம் எது என்று கேட்டார்.

பகவான் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தார். பக்தர்கள் அனைவரும் சிறிய கோசாலைக்கே ஆதரவாக பேசினார்கள். சின்னசுவாமி தீர்மானம் கொண்டு வந்தார். ‘எது நல்லதுன்னு ஓட்டேடுப்போம். என்னுடைய பிளானா? அண்ணாமலை சுவாமி பிளானான்னு; அதுபடி நடப்போம்’ என்றார். எல்லோரும் சின்னசுவாமிக்கு ஓட்டளித்தார்கள். பகவான் அண்ணாமலை சுவாமியிடம் உன்னுடைய ஓட்டு யாருக்கு?” என்றார்.

‘பெரிய கோசாலை! ‘இப்போ தோண்டியிருக்கிற அஸ்திவாரத்திலேயே கட்டணும்’ என்றார் அண்ணாமலை சுவாமி. பகவான் நடுநாயகமாகவே காட்டிக் கொண்டார். இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே இரு தரப்பையும் கேட்டுக் கொண்டார். ”இரண்டுக் கட்சியா பிரிஞ்சு நிக்கிறேள்; எந்தக் கட்சி ஜெயிக்கறதுன்னு பாப்போம்” என்று கூறிவிட்டு ஹாலை விட்டு வெளியே வழக்கம்போல் மலைக்கு நடப்பதற்கு சென்றார்.

DSC04085-33

பகவானின் குறிப்புணர்ந்து அண்ணாமலை சுவாமி பெரிய கட்டடத்திற்கான அஸ்திவாரத்தை தோண்டும் வேலையில் ஈடுபடலானார். சின்னசுவாமிக்கு அண்ணாமலை சுவாமியின் பின்புலம் புரிந்தது. வேலை தொடர்ந்தது. அப்போதைய ஆசிரம சூழ்நிலையில் கட்டப்பட்ட கட்டடங்களில் மிகப்பெரிய கட்டடம் லக்ஷ்மிக்காக கட்டப்பெற்ற கோசாலையாகும். அது பலருக்கு புதிராக இருந்தது.

ஒருநாள் பகவான் கட்டடத்தை மேற்பார்வையிடும்போது அண்ணாமலை சுவாமியிடம், ”லக்ஷ்மிக்கு நாம பெரிய கோசாலை கட்டினா பெரிய டைனிங் ஹால், அம்மா கோயில், புஸ்தகாலயம் கட்டறதுக்கு தேவையான புண்ணியம் கிடைக்கும். எல்லாம் காலத்துலே நடக்கும். இந்த இடமே பெரிய டவுனாகும்” என்றார். லக்ஷ்மிக்கான கோசாலை இனிதே கட்டி முடிக்கப்பட்டது.

ரமணரின் தீர்க்கதரிசனத்தை போலவே அந்த இடமே இன்று நன்கு முன்னேறி பல வசதிகளுடன் விரிவடைந்திருக்கிறது. பசுக்களுக்கு செய்வது என்றுமே வீண் போகாது.

=========================================================

Want to become a part in this holy journey…? 

Yes… We need your SUPPORT. For details click here!

=========================================================

Also check :

புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

சரஸ்வதி குட்டி படு சுட்டி!

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?

மழைநீரில் தவித்த பசுக்களும் அவற்றை அரவணைத்த ஒரு தாயுள்ளமும்!

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

=========================================================

ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்

=========================================================

[END]

4 thoughts on “ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

  1. அருமையான பதிவு.
    கோ சாலையின் மகத்துவம் உணர்த்தும் பதிவு.
    படங்கள் அருமை.

  2. குழந்தை குருப்ரசாத்தும் கன்றும் உள்ள படம் அருமை. இருவரில் யார் அழகு என்று அந்த பிரம்மனால் கூட தீர்ப்பு கூற முடியாது.

    உங்கள் கைவண்ணத்தில் ஒவ்வொரு படமும் ஒரு கவிதை என்றால் மிகையாகாது.

    நீங்கள் சொல்வது போல, பசுக்களை வைத்து பரமாரிக்க ஆட்கள் இல்லாத காரணத்தால் தான் யாரும் அவற்றை வளர்க்க விரும்புவதில்லை. என்னுடைய உறவினர்கள் சிலர், அவர்களுக்கு மணிவிழ நடைபெற்றபோது ஒரு கோவிலுக்கு கோ தானம் செய்ய விரும்பினார்கள். ஆனால், கோவில் தரப்பில் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை என்று ஏற்க மறுத்துவிட்டார்கள்.

    நீங்கள் செய்யும் இந்த கோ-சம்ரட்சணத்தின் புண்ணியத்தில் அணுவளவு எங்களுக்கு வந்தால் கூட எங்களுக்கு அதனால் மிகப் பெரிய நன்மை விளையும்.

    இந்த பதிவில் பொருத்தமாக ரமணரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை அளித்தமைக்கு நன்றியோ நன்றி.

    ரமணரும் லக்ஷ்மி பசுவும் உள்ள படம் அத்தனை தெய்வீகம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் . கோ சம்ரட்சணம் பதிவு & படங்கள் மிக சிறப்பு . முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்யும் கோமாதாவை வணங்கி வளம் பெறுவோம் .

  4. Thanks Sundar ji for the opportunity. Feeling Blessed :). Your articles and actions are a great motivating factor for others to think/act good. When almost everyone is self centered you are one of the very few who is ready to create and provide opportunity to do some noble tasks. I am happy that you remembered me and invited me for this Gho-Samrakshanam

    Pray Mahaperiyval to bless you with choicest blessings.

Leave a Reply to somasundaram palaniappan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *