Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > தங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)

தங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)

print
சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை திருநாளை முன்னிட்டு கேரளாவில் உள்ள ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடிக்கு நாம் சென்றிருந்தது நினைவிருக்கலாம். காலடி பயணத்தை ஓரிரு பதிவுகளில் அடக்கிவிட முடியாது. எனவே தான் தொடராக அளிக்க ஆரம்பித்தோம். தொடரில் நான்கு பகுதிகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், இதோ ஐந்தாம் பகுதி அளிக்கப்படுகிறது. இந்த ஐந்தாம் பகுதி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளிக்கப்படுகிறது என்று நமக்கு தெரியும். வாசகர்கள் மன்னிக்க. எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இந்த தளம் நடத்தப்படுகிறது. இந்த பதிவு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது என நம்புகிறோம்.

பதிவின் இடையிலும், இறுதியிலும் முந்தைய பதிவுகளின் சுட்டியை அளித்துள்ளோம். மேலும் இந்த பொன்மழை தொடர்பாக மஹா பெரியவா கூறியது குறித்தும் தனியாக ஒரு கட்டுரை அளிக்கப்பட்டுள்ளது. பொறுமையாக படிக்கவும்! நன்றி!!

IMG_1721-22

ஒரு ஏழைப் பெண் அளித்த பிக்ஷைக்கு அகமகிழ்ந்து ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லி மழை பொழிய வைத்த இடம் காலடியிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்றது ஒரு அக்ஷய திரிதியை அன்று தான். அந்த இடத்திற்கு ‘சொர்ணத்து மனை’ / ‘ஸ்வர்ணத்து மனை’ என்று பெயர். அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட பரம்பரையினர் இன்றும் வசித்து வருகிறார்கள். இதைப் பற்றி அறிந்தவுடன் உடனே நேரில் சென்று அந்த இடத்தை தரிசித்து அந்த அற்புத அனுபவத்தை உங்களிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினோம். காலடி பயணத்தின் நோக்கமே அது தான்.

IMG_1728-22

IMG_1729-22DSC01507-22இதைத் தொடர்ந்து காலடி பயணம் தொடர்பான ஏற்பாடுகளில் இறங்கினோம். நம்முடன் நண்பர் சிட்டியும் வர ஒப்புக்கொண்டார். நம் பாதை, நாம் செல்கின்ற பயணம், அதன் அருமை மற்றும் முக்கியத்துவம் இவை அனைத்தையும் அறிந்தவர் சிட்டி. மேலும் நாம் செல்லகூடிய இடங்கள் குறித்த விபரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு நம்முடன் வருவார். இது நமக்கு பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.

முன்னதாக காலடியில் சங்கரர் கோவிலையும் அன்னை சாரதாம்பாளையும் தரிசித்த பின்னர், கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் அக்ஷய திரிதியை சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரசாதம் பெற விரும்பினோம்.

IMG_1734-22

IMG_1736-22
The golden gate!

DSC01509-22ஆலயத்தின் டிரஸ்டி திரு.ஸ்ரீகுமார் நம்பூதிரி அவர்கள் நம்மிடம் “நீங்கள் அதற்குள் சொர்ணத்து மனையை தரிசித்துவிட்டு வந்துவிடுங்கள். இங்கு பூஜை மதியம் 3.00 மணிக்கு தான் துவங்கும். சொர்ணத்து மனை போவதற்கே முக்கால் மணிநேரம் ஆகும். வர முக்கால் மணிநேரம். அங்கு ஒரு அரைமணி நேரம். சரியாக இருக்கும்” என்றார்.

நமக்கு காலடி புதிது என்பதால் அவரே நமக்கு ஒரு விசேஷ ஆட்டோவை ஏற்பாடு செய்து தந்தார். ஆட்டோ ஓட்டுனர் நம்மை கோவிலிலேயே வந்து பிக்கப் செய்துகொண்டார். கட்டணம் UP & DOWN ஐந்நூறு ரூபாய் என்று நினைக்கிறோம். BUT WORTH. காரணம், காலடியிலிருந்து சொர்ணத்து மனை கிட்டத்தட்ட 22 கி.மீ. தூரத்தில் பழம்தொட்டம் என்னுமிடத்தில் உள்ளது. அங்கு செல்வதாக இருந்தால் அந்த ரூட் தெரிந்தவரால் தான் செல்லமுடியும். மேலும் அங்கு செல்ல நேரடி சாலை கிடையாது. பல இடங்களை சுற்றிச் சுற்றி செல்லவேண்டும். நீங்களே கார் எடுத்துக்கொண்டு போனால் கூட, கேட்டு கேட்டு போவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். மேலும் சொர்ணத்து மனை காலடி போல ஒரு TOURIST DESTINATION அல்ல. அது ஒரு தனியார் வீடு.

DSC01549-22222222222222222222222222IMG_1738-22DSC01552-2222சொர்ணத்து மனையின் அருமை முக்கியத்துவம் கேரள மக்கள் அறிந்திருக்கவில்லை என்றே கருதுகிறோம். ‘உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது’ என்ற முதுமொழி எத்தனை உண்மை!

காலடியில் இருந்து சொர்ணத்து மனைக்கு செல்லும் வழியெங்கும் பசுமை தான். பொதுவாகவே கேரளா சற்று செழிப்பான பூமி. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மழை பெய்துகொண்டே இருக்கும். மக்கள் வெளியே செல்லும்போது குடையுடன் தான் செல்வார்கள்.

IMG_1750

நாம் சென்ற நாளன்றும் மழை அவ்வப்போது பெய்துகொண்டிருந்தது. நாம் புறப்பட்ட நேரம் மழை பெய்து ஓய்ந்த நேரம். கிளைமேட் சிலு சிலுவென மிகவும் இதமாக இருந்தது. சென்னையின் வறுவல் வெயிலில் அவதிப்பட்ட நமக்கு அது அத்தனை இனிமை.

நாம் சென்ற ஆட்டோவின் டிரைவர் திரு.பாபு, நமக்கு முழு ஒத்துழைப்பு அளித்து நமது பயணம் சிறக்க உதவியாக இருந்தார். இது போன்ற SPIRITUAL பயணங்களில் டிரைவர்கள் அமைவது ஒரு வகையில் வரம் என்றே சொலல்வேண்டும். இது விஷயத்தில் சங்கர பகவத் பாதாளின் பரிபூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தது என்றே கருதுகிறோம். எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பயணம் முழுக்க பொறுமையாக இருந்தார் பாபு. பாம்பு போல வளைந்து நெளிந்து சென்ற எர்ணாகுள மாவட்ட தெருக்களில் நாம் சென்ற ஆட்டோ விரைந்தது.

IMG_1783-22

IMG_1762-222

IMG_1756-2222

IMG_1757-222IMG_1763-222DSC01551-22ஸ்வர்ணத்து மனைக்கு பொதுவாக ஆட்கள் வருவது மிகவும் அரிது. அக்ஷய திரிதியை அன்று மட்டும் சிலர் வந்து செல்வார்கள் என்று பாபு சொன்னார்.

ஸ்வர்ணத்து மனையை அடைந்தபோது, அந்த கேட்டின் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு நாம் உள்ளே நுழையும்போதே ஒரு வித சிலிர்ப்பை உணரமுடிந்தது.

ஸ்வர்ணத்து மனையை சுற்றிலும், பச்சை பசேல் என்கிற மரங்களும் பசுமை போர்த்திய புல்வெளிகளும் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறது.

ஸ்வர்ணத்து மனையையும் அதன் சுற்றுபுறத்தையும் அங்குலம் அங்குலமாக ரசித்தோம். அதற்கே அரைமணிநேரம் போய்விட்டது. அதன் பின்னர் அங்கு அமர்ந்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்தோம்.

IMG_1819-22-copy

சிட்டி ... கும்பிடை பார்த்தீங்களா? எலக்ஷன்ல நிக்கிற மாதிரி...
சிட்டி … கும்பிடை பார்த்தீங்களா? எலக்ஷன்ல நிக்கிற மாதிரி…

இங்கே யார் வந்தாலும் வெளியே திண்ணையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படித்துவிட்டு அமைதியாக செல்லலாம். மற்றபடி வீட்டுக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை.

நமக்கு இந்த வீட்டில் இருக்கும் யாரவது ஒருவருடனாவது பேசிவிடவேண்டும் என்று ஆசை. கதவைத் தட்டி யாரையும் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று கையை பிசைந்தபோது, தெய்வாதீனமாக கதவு திறந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். அவரிடம் சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் முகம் கோணாமல் நம்மை மதித்து பேசினார். தமிழுக்கும் மலையாளத்துக்கு பெரிய வித்தியாசமில்லை. ஓரளவு நாம் பேசியது அவருக்கு புரிந்தது. அவர் பேசியது நமக்கு புரிந்தது.

IMG_1797-22

இப்போதுள்ள ‘ஸ்வர்ணத்து மனை’க்கு சொந்தக்காரர் நாராயணன் நம்பூதிரி (63) என்பவர். 10,351 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்டமான வீடு ஸ்வர்ணத்து மனை. சங்கரர் 8 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த சமயம் இது ஒரு எளிமையான ஓட்டு வீடாக இருந்தது. இப்போதுள்ள இந்த STRUCTURE சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த வீடுகளுக்கு NALUKETTU என்று பெயர். மற்றவையெல்லாம் காலப்போக்கில் மாறிவிட, இந்த ஸ்வர்ணத்து மனை மட்டும் மாறாமல் கடந்த கால அற்புதத்திற்கு சாட்சியாக கம்பீரமாக நிற்கிறது.

அந்த இளைஞருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மிகப் பெரிய பாக்கியங்களுள் ஒன்று இது என கருதுகிறோம். சங்கரர் பொன்மழை பொழிந்த இல்லத்தில் குடியிருந்த அயாசகனின் வம்சாவழியினர் இவர்கள்.

நாம் அங்கு இருந்த நேரம் தமிழகத்திலிருந்து ஸ்வர்ணத்து மனையை பார்வையிட சிலர் குழுவாக வந்தார்கள். அவர்கள் காலடிக்கு வேனில் வந்து அங்கிருந்து பின்னர் இங்கே வந்தார்களாம்.

DSC01560-222
தமிழக சுற்றுலா குழுவினர்

அவர்களிடம் பேச்சு கொடுத்தபோது, அவர்களில் ஒருவர் வீட்டைக் கட்ட ஆரம்பித்து பின் நிறைவு செய்ய இயலாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறினார். உடனே அவருக்கு அந்நேரம் நமது கைகளில் இருந்த ‘பலன் தரும் பதிகங்கள்’ நூலை பரிசாக கொடுத்து, அதில் இடம் பெற்றுள்ள ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை படிக்கச் சொன்னோம். ஒருவருக்கு தர, மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். நல்லவேளை நம்மிடம் அப்போது போதுமான அளவு இருந்தது. அனைவருக்கும் ஒரு காப்பி கொடுத்தோம்.

ஸ்வர்ணத்து மனையில் அந்த பரிசு கிடைத்ததில் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஸ்வர்ணத்து மனையில் ஒரு நல்ல புத்தகத்தை பரிசாக அதுவும் அக்ஷய திரிதியை நன்னாளில் தரமுடிந்ததில் நமக்கு அதைவிட மகிழ்ச்சி.

மேலும் அந்த புனித பூமியில் சுமார் அரைமணிநேரம் செலவழித்து விட்டு அந்த பூமியை பிரிய மனமின்றி அங்கிருந்து புறப்பட்டோம்.

அக்ஷய திரிதியை நன்னாளில் அறங்கள் பல செய்து கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது அதன் தமிழ் பதிப்பான ‘பொன்மழை’யை படித்திடுவோம். அன்பும் அறமும் பக்தியும் உள்ள இடத்தில திருமகளின் கடாக்ஷத்துக்கு குறைவேது? ¶¶

==========================================================

* நாளை (09/05/2016) திங்கட்கிழமை அக்ஷய திரிதியை நன்னாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக வழக்கம்போல எளிய இனிய அறப்பணிகள் நடைபெறவுள்ளது. இன்று மாலை ஏற்கனவே ஒன்று நடந்துமுடிந்துவிட்டது. விபரங்கள் விரைவில்…

==========================================================

Also check :

கர்மா Vs கடவுள் முந்தைய அத்தியாயங்கள்…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

ஏழை வீட்டில் தங்கமழை – மஹா பெரியவா சொல்வது என்ன?

ங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிமழை பொழிய வைத்த சம்பவம் பற்றி ‘தெய்வத்தின் குரல்’ நூலில் மகா பெரியவர் மிக அழகாக விவரித்திருக்கிறார். ஆயிரம் சொல்லுங்கள், தெய்வத்தின் குரலிலேயே அதை கேட்பது சிறப்பு தானே!

Over to Maha Periyava….

maha periyava“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார் திருவள்ளுவர். எல்லோரும் வீடு வாசலை விட்டுவிட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபட முடியாது. உலக வாழ்க்கையை நடத்துவதானால் பணம் வேண்டித்தான் இருக்கிறது. இப்படிச் சம்பாதித்து குடும்பம் நடத்துபவர்கள் இருப்பதனால்தான் வேறு சிலர் ஆத்ம விசாரம் செய்ய முடிகிறது. பொருள் தேடி வாழ்க்கை நடத்தும் கிருஹஸ்தர்கள்தான் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்ட சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளித்து அவர்களை ரக்ஷிக்கிறார்கள். கிருஹஸ்தர்கள் இல்லாவிட்டால், பொருளைப் பற்றி நிர்விசாரமாக சந்நியாசிகள் என்று சிலர் ஞானம், பக்தி இவற்றிலேயே ஈடுபட்டிருக்க முடியாது. “பொருள் (பணம்) என்பது பொருள் இல்லாதது”. ‘அர்த்தம் அனர்த்தம்’ என்று சொன்ன அதே ஆதி சங்கராசாரியாள், அதே ‘பஜகோவிந்த’த்தில் பணப் பேராசை பிடித்து அலையாதே! ஆனால் உனக்கு உரிய கர்மத்தினால் நீ சம்பாதிக்கிற பொருளைக் கொண்டு நியாயமாக வாழ்ந்து உன்னையே உயர்த்துக் கொள் என்றார்.

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன விநோதய சித்தம்.

செல்வத்துக்கு அதி தேவதையாக இருக்கப்பட்டவள் மஹாலக்ஷ்மி. அவளைப் பிரார்த்தித்தால் நமக்கு தர்ம நியாயமாக வேண்டிய சம்பத்தைத் தந்து அநுக்கிரகம் செய்வாள். ஞான, வைராக்கியக் கிரந்தங்களை நிறையச் செய்த ஸ்ரீ ஆசாரியாள் தம்முடைய பரம காருண்யத்தால் விவகார தசையிலுள்ள லோக ஜனங்களை உத்தேசித்து அவர்கள் மஹாலக்ஷ்மியை எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற மாதிரி, ‘கனகதாரா ஸ்தவம்’என்ற லக்ஷ்மீ பரமான ஸ்தோத்திரத்தை, நமக்கு அநுக்கிரகித்திருக்கிறார்.

IMG_1825-232

இந்தக் ‘கனகதாரா ஸ்தவம்’ உண்டானதற்கு ஒரு கதை உண்டு. ஆசாரியார் சன்னியாசம் வாங்கிக் கொள்வதற்கு முற்பட்ட கதை அது. அவர் பால தசையில் காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து வீடு வீடாகப் போய் பிக்ஷை வாங்கி வந்த சமயம், ஒரு துவாதசியன்று பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிக்ஷைக்காகப் போனார். அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவவே போனார் போலிருக்கிறது! இவர் போன போது உஞ்சவிருத்திப் பிராமணனாகிய வீட்டுக்காரன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா! எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி! இவருக்குப் பிக்ஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்” என்று நினைத்தாள். ஆனால், பிக்ஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடித்தேடி பார்த்ததில் ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப் பாரணைக்காக அவள் புருஷன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி! ‘போயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது!’ என்று ரொம்பவும் மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால் “பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டுவிட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அநுப்பக்கூடாது என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பாலசங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ‘ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?’ என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்து தவித்து நடமாடிவிட்டு கடைசியில் ‘அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்!’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்கனியை ஆசாரியாளுக்குப் போட்டாள்.

==========================================================

Also check :

அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்!

அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!

==========================================================

பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் ஆசாரியாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று. உடனேதான் அவளுக்காக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்து, ‘கனகதாரா ஸ்தவம்’ பாடினார்.

லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே உட்சான்று (Internal evidence) இருக்கிறது.

“தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.

இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஒரு அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.

இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்திற்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பேரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் பொன்மழை என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான்.IMG_1804

DSC01565--22-copy222222222

ஆசாரியாள் முதல் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.

ஆசாரியாள் “எல்லாம் ஒன்றே” என்று சொன்னவர் முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவார். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. ‘கீர்தேவதேதி’ என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹா விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.

– ‘தெய்வத்தின் குரல்’ – ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா

==========================================================

அடுத்து வருவது : 

நம் காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே?

ஆதிசங்கரர் ஜன்ம பூமி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற அக்ஷய திரிதியை – கனகதாரா பூஜை – ஒரு நேரடி வர்ணனை!

==========================================================

A REMINDER TO ALL …. உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Donate us. Support us. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For full details : We need your support and financial assistance. Click here!

==========================================================

Also Check :

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!

காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!

==========================================================

[END]

7 thoughts on “தங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)

  1. அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவதை விட உயர்ந்த , என்றும் நம்மிடம் தங்கும் செல்வத்தை நம் தளம் இன்று வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை. இன்னாளில் நாங்களே சொர்ணத்து மனைதனை தரிசித்த பாக்கியம் பெற்றது போல் தங்கள் கட்டுரையும் புகைப்படங்களும் அமைந்து உள்ளது. மஹா பெரியவா அவர்களின் குரலில் கனக தார மகிமை இன்னும் அற்புதம்! மிக்க நன்றி ! கனக தாரா தமிழ் பதிப்பின் லிங்க் அளித்தால் நலம் ஆக இருக்கும்! ( ஒரு சந்தேகம் ! துவாதசி அன்று தங்கமழை பொழிந்து இருப்பதாக கதை ! ஆனால் திரிதியை அன்று கனக தாராவிற்கு சிறப்பு ! )

    1. இதில் ஏதேனும் சூட்சுமம் ஒளிந்திருக்கும். ஆவணி அவிட்டம் ஆவணியில் எப்படி வருவதில்லையோ அது போல. தெரிந்தால் பகிர்கிறேன்.

      நன்றி.

  2. வாவ்… அருமை. அருமை.

    இன்று இந்த பதிவை படிக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

    இந்த பின்னூட்டத்தை இரவு அளிக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ராதாமணி அவர்களின் பின்னூட்டத்தை பார்த்து உடனே நானும் அளிக்கிறேன். விரிவான பின்னூட்டத்தை இரவு அளிக்கிறேன். மற்ற பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்துவருகிறேன். சேர்த்து வைத்து.

    இந்த பதிவை இன்னும் முழுமையாக அனுபவித்து படிக்கவேண்டும். மேலோட்டமாகத் தான் படித்திருக்கிறேன். அதுவே அமிர்தமாக இருக்கிறது.

    படங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு அத்தனை குளுமை. ஸ்வர்ணத்து மனையின் அழகை யாராவது இதுவரை இத்தனை அழகாக படம்பிடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னது போல லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக பதிவு வந்துள்ளது. நீங்கள் பதிவை உங்கள் சௌகரியதிர்க்க்கு ஏற்ப அளிக்கவும். எப்போது எந்த பதிவு அளித்தாலும் எங்களுக்கு ஒ.கே. தான். எங்களை பட்டினி போடாமல் பார்த்து பார்த்து கேள்வி ஞானத்தை அள்ளித் தருகிறீர்கள். அதுவொன்றே போதும். நாங்கள் உங்களிடம் பட்ட கடனை எப்படி தீர்க்கப்போகிறோம் என்று தான் தெரியவில்லை. ஏதோ நாங்கள் கிள்ளித் தரும் சொற்ப சந்தாவோடு முடியும் விஷயம் அல்ல அது.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. Very well said Ms. Premalatha. The dedication and deep interest with which Sundarji gathers information and dissipates to all of us the readers is just non-comparable to the little contributions that we make. I believe, It is the reader’s duty to extend the best possible support to him always – physically or fiscally.

  4. சுந்தர் சார்,
    சூப்பர். இன்று எதிர் பார்க்காத பதிவு. அட்சய திருதியை பற்றி அறிந்திடாத உண்மை சொல்லி இருக்கீர்கள். அருமை. நன்றி

  5. சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
    அட்சய திரிதியை நாளில் எங்களையெல்லாம் ஆதி சங்கரரின் ஜென்ம பூமிக்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி . கனகதாரா ஸ்துதி பாடி பொன் மழை பொழிந்த ஸ்வர்ணத்து மனையையும் பார்த்து பேரு உவகை அடைந்தேன் .
    பாக்கியம் இருந்தால் மட்டுமே இந்த பதிவை காணும் பேறு கிடைக்கும் .
    இந்த நாளில் மட்டுமல்லாது எல்லா நாளிலும் கனகதாரா ஸ்துதி , ஸ்ரீ லலிதா நவரத்னமாலை, அகஸ்திய மகரிசி அருளிய மகா லக்ஷ்மி துதி படித்து வந்தால் அன்னையின் அன்பும் , அருளும் , ஆசியும் , பொன்னும் , பொருளும் கிடைக்க பெறுவீர்கள் .
    “அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கராப்பரண வல்லபே
    ஸித்யர்த்தம் ஞான மோட்சம் பிக்சாந்த தேஹி ச பார்வத்ய நம”!

  6. Hi ji,

    Post have come very well. Even though it’s been given a little late but better late than never. Plus, coming on Akshaya Trithiyai day – is a double bonus.

    Kerala – indeed, is a god’s own country. Wonderful climate compared with here. Everywhere you can see trees, trees, trees.

    And kalady, yes – it’s a wonderful place. First, after reaching in the morning and had taken a bath, wonderful water – plus, we had taken a dip in the great river where great Adi Shankaracharya himself took bath and that crocodile incident happened at the same place. Had a wonderful bath and then went to temple.

    Before reaching temple itself, rain has come – imagine, rain in summer in TN – nearly impossible, lol. then, we worshipped deities and then, went to this auspicious place – it takes an hour to reach. Then, we had a breakfast over there. Without proper knowledge of a driver, it would have been hectic to reach the place. He took us there by taking several turns – nook and corners of kerala. 😉

    After reaching the place, I felt little surprised – considering such a great place and great day but not even a five visitors on that day (later while we were about to depart, many have come). It’s been maintained with that same feel – but could see some of the rooms while checking from outside are in dilapidated condition.

    We sat and read ‘Kanaga Thara Shostram’ on that auspicious day and in auspicious, very right place. By then, I didn’t realize the value of that shosta. But now, slowly realizing value of it. Felt one with the peace and surroundings.

    After that, while we about to depart, people from TN (If I remember correctly, they were from coimbatore) have come like us and and you have given them that ‘pathigam’ which is very same you have given to ‘Sekar’ sir the day before – since he was worried about the parrots if he come across situation of changing the house and other financial commitments. And those people, one by one, were started asking you eagerly and were asking you more than you had. So, you have asked their address and told them you would courier for more copies. Nice.

    After we departed from great place, then we visited ‘about-to-be-constructed’ Krishna temple where some auspicious thing was there (remember what’s it now hardly). then, we returned to kalady and had a lunch at the temple itself – one sweet payasam was given at the end I remember – which you had take more than me (I had twice, I guess) 😉

    Then, you have got more than 15 bags of akshaya trithiya special pooja coins and in the mean time, I had taken pictures around the temple. Temple is very perfect kerala temple – old, authentic kerala feel, pure water, air, Even by then, it was raining. what a lovely atmosphere it was.

    After 4, place where Shankaracharya’s mother’s samathi kept has been opened and we visited it – we saw pillayar, Aryamba’s samathi, Shankaracharya’s life history pictures, yagna places, everything. Then, finally we left it around 5 and had to catch 6 train to madurai.

    Kalady trip was over – was very great one. Would love to go again there. Probably next year. Thanks so much for taking me there. It’s a wonderful experience. Many, Many thanks to you.

    With Love,
    Chitti.

Leave a Reply to Prabu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *