Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

print
சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க பலர் விரும்பினாலும் அதன் கடுமையை நினைத்து அஞ்சுகிறார்கள். நாம் ஏற்கனவே பல முறை பல பதிவுகளில் சொல்லியிருக்கிறோம், சிவராத்திரி அன்று உணவு எதுவும் உட்கொள்ளாமல் வயிற்றை காயப்போட்டு கண் விழித்தாலே அதற்கு பலன் உண்டு என்று.

அது எத்தனை உண்மை என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட கதையை படியுங்கள்…

Sivarathiri 2

சிவராத்திரி அன்று கண்விழித்து, தூக்கம் துறந்த திருடனின் கதை – சிவராத்திரி விரத மகிமை!

வந்தி மாநகரில் சிவபக்தியும் ஆச்சாரமும் ஞானமும் மிக்க தீட்சிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு கற்பிற் சிறந்த இல்லாள் ஒருத்தி இருந்தாள். அவர்களுக்கு ஸுநிதி, வேதநிதி என்கிற இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.

ஸுநிதி பெற்றோரே கண்கண்ட தெய்வம் என்பதை உணர்ந்து அவர்களின் சிவதொண்டுக்கு உறுதுணையாய் அவர்களுக்கு பல பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தான். மற்றொரு மகனான வேதநிதியோ வேதம் முதலானவற்றை கற்றிருந்தாலும் நல்லொழுக்கம் இன்றி வாழ்ந்து வந்தான். வேசி ஒருத்தியின் பால் ஈடுபாடு கொண்டு அவள் வீடே கதி என்று கிடந்தான். ஸ்நானம் முதல் போஜனம் வரை அனைத்தும் அங்கே தான். அவன் நடத்தையை அவன் பெற்றோர் கண்டித்தாலும் அவன் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

அந்த நகரத்தை ஆண்ட மன்னன் ஒரு முறை தீட்சிதரின் சிவதொண்டுக்கு மகிழ்ந்து அவருக்கு விலை உயர்ந்த நவரத்தின மோதிரம் ஒன்றை பரிசளித்தான். தீட்சிதரும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு போய், தன் மனைவியிடம் கொடுத்து அதை தன் துர் புத்திரன் வேதநிதி அறியாமல் பத்திரமாக மறைத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட வேதநிதி, அதை சாமர்த்தியமாக யாருமறியாமல் திருடி சென்று தனது ஆசைநாயகியிடம் கொடுத்தான்.

அந்த தாசியோ, அதை அணிந்துகொண்டு மறுநாள் அரண்மனையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமாடச் சென்றாள்.

அரசன் தான் தீட்சிதருக்கும் பரிசளித்த நவரத்தின மோதிரம் தாசியின் விரல்களில் மின்னுவதை கண்டு திகைத்து அவளை அழைத்து அது பற்றி விசாரித்தான்.

முதலில் அவள் உண்மையை சொல்லவில்லை. அரசன் மிரட்டிக் கேட்டதும் அதை தீட்சிதரின் மகன் வேதநிதி தனக்கு கொடுத்ததாக உண்மையை போட்டு உடைத்துவிட்டாள்.

அரசன் அதை அவளிடமிருந்து பறித்துக்கொண்டு அவளை எச்சரித்து துரத்திவிட்டான்.

மறுநாள் தீட்சிதரை அரண்மனைக்கு வரவழைத்து “நான் உங்களுக்கு அளித்த மோதிரம் இன்னொன்று செய்யவேண்டியிருக்கிறது. பொற்கொல்லன் அதன் மாதிரி கேட்கிறான். அந்த மோதிரத்தை மீண்டும் ஒரு சில நாட்கள் எனக்கு தரமுடியுமா?” என்று கேட்டான்.

தீட்சிதரும், “இதோ ஒரு நொடியில் கொண்டு வந்து தருகிறேன் வேந்தே…” என்று கூறி விடைபெற்றுச் சென்று, வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் கேட்க, அவள் மோதிரத்தை தேடினால் அது அங்கே இல்லை. எப்படி இருக்கும்? அது தான் வேந்தனிடம் இருக்கிறதே.

மீண்டும் அரசவை வந்த தீட்சிதர், “மன்னா… என்னை மன்னிக்கவேண்டும். அந்த மோதிரத்தை நான் பத்திரமாகத் தான் என் இல்லாளிடம் கொடுத்து வைக்கச் சொன்னேன். அவள் அதை பத்திரமாக வைத்ததை நானும் அறிவேன். ஆனால் அதை தற்போது காணவில்லை…” என்றவாறு தயங்கித் தயங்கி நடந்ததை சொன்னார்.

மன்னனும் தான் யூகித்தது சரி தான் என்று கருதி அதை வேதநிதி திருடி தாசியிடம் கொடுத்ததையும் அவள் அதை அணிந்துகொண்டு நடனமாட அரசவைக்கு வந்ததையும் தீட்சிதரிடம் தெரிவித்தான்.

இதை அறிந்த தீட்சிதர் கூனிக்குறுகி தனது மகன் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்பதாய் மன்னனிடம் மன்றாடி பின்னர் கடும் சினத்துடன் இல்லத்துக்கு விரைந்தார்.

அங்கே தனது மகன் வேதநிதியை அழைத்து, “நீ நம் குலதூஷகன். இனி இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது” என்று கூறி அவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய வேதநிதி பல நாட்கள் அன்ன ஆகாரமின்றி திரிந்தான். தாசி வீட்டுக்கு செல்லவேண்டும் என்றால் ஏதாவது பொருளோடு தான் செல்லவேண்டும். இவனுக்கோ உழைத்து பொருளீட்ட தெரியாது. வேதம் கற்றாலும் பழகாததால் புரோகிதம் வைதீகம் உள்ளிட்டவற்றை செய்யவும் வழியில்லை.

ஒரு நாள் பசி கடுமையாக வருத்த, நேரே தன் ஆசைநாயகியிடம் சென்றான். அவளும் இவன் வீட்டை விட்டு விரட்டப்பட்டு விட்டான், இவனால் இனி நமக்கு பிரயோஜனமில்லை என்று கருதி அவனை உள்ளே சேர்க்காமல் பணியாளர்களை கொண்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதை சாத்தினாள்.

வேதநிதி தற்போது அனாதையாக முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தான். அன்று உலகமே போற்றும் மகா சிவராத்திரி தினம்.

எனவே அவந்தி நகர மக்கள் சிவராத்திரி விரத தினத்தை அனுஷ்டித்து சிவாலயம் ஒன்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய விரும்பி, பலவித பூஜை மற்றும் அர்ச்சனைக்குரிய பொருட்கள், பிரசாதம், இவற்றை எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

Sivarathiri 4

அவர்களை கண்ட வேதநிதி, இவர்கள் பின்னே சென்றால், நமக்கு பிரசாதமாவது கிடைக்கும். இன்றைய இரவை இவர்களுடன் கழித்து மறுநாள் வேறு உபாயம் பற்றி யோசிக்கலாம் என்று கருதி அவர்கள் பின்னே செல்லலானான்.

சிவாலயத்தில் நடைபெற்ற அபிஷேகம், பூஜை இவற்றை பார்த்துக்கொண்டே அடிக்கடி பிரசாதம் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தான்.

Sivarathiri 1

இவர்கள் எப்போது பூஜையை முடிப்பார்கள், எப்போது பிரசாதம் தருவார்கள் என்பதே அவன் கவலையாக இருந்தது. தூக்கம் கண்ணை சொக்கிக்கொண்டு வந்தது.

எங்கே நாம் கண்ணயர்ந்துவிட்டால் பிரசாதம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் வந்த தூக்கத்தை கஷ்டப்பட்டு விரட்டிக்கொண்டிருந்தான்.

முதற்கால சிவபூஜை ஒரு வழியாக முடிந்து தீபாராதனை எல்லாம் கட்டியபின்னர் நிருத்நம்கீதம் முதலியவற்றை இயற்றிவிட்டு பலர் தங்கள் இல்லங்களுக்கு புறப்பட்டார்கள். எஞ்சியிருந்த சிலர் அங்கேயே படுத்து உறங்கலானார்கள்.

அதுவரை பிரசாத பாத்திரங்களையே பார்த்துக்கொண்டிருந்த வேதநிதி இது தான் சமயம், என்று பிரசாதங்களை திருடித் தின்னும் நோக்கத்துடன் மூலவரை நோக்கி மெதுவாக அடிமேல் அடியெடுத்து நடந்தான்.

அப்போது அங்கிருந்த தீபங்களின் ஒளி மங்கலாக இருந்தது. எனவே பிரசாத பாத்திரங்கள் சரியாக இவன் கண்ணுக்கு புலனாகவில்லை. எந்தெந்த பாத்திரங்களில் என்னென்ன பிரசாதங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை.

எனவே அவற்றை களவாடும் நோக்கத்தில், தனது அங்கவஸ்திரத்தின் ஓரம் சிறிது கிழித்து அதை திரி போல செய்து, மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் மேல் போட்டான்.

அடுத்தொண்டி விளக்கு பிரகாசமாக சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது. சிவசன்னதியில் இருந்த இருள் மறைந்தது.

தற்போது தனக்கு தேவையான பொருட்களை திருடிக்கொண்டு வந்த வழியே மெதுவாக திரும்பிச் சென்றான். அப்படி செல்லும்போது ஆலய வாயிலில் படுத்துக்கொண்டிருந்த ஒரு சேவகரின் காலை தன்னையறியாமல் மிதித்துவிட்டான்.

Sivarathiri 3

இதைத் தொடர்ந்து அவன் கண்விழித்துப் பார்க்க, யாரோ ஒருவன் பாத்திரங்களுடன் கோயிலிருந்து வெளியே செல்வதை பார்த்து, “திருடன்… திருடன்….” என்று கத்தி கூச்சலிட்டான்.

இதைத் தொடர்ந்து அனைவரும் எழுந்துவிட, அந்த பிரதேசமே பரப்பரப்புக்குள்ளானது.அவ்வளவு தான்… வேதநிதி பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.

பக்தர்கள் சிலர் அவனை பிடிக்கவேண்டி அவன் பின்னே கூச்சலிட்டபடி அவனை துரத்திக்கொண்டு சென்றனர்.

இதை கண்ட அரண்மனை இரவு ரோந்து காவலர்கள் சிலர் அவர்களுடன் சேர்ந்து அவனை துரத்திச் சென்றார்கள்.

இருப்பினும் இருளில் ஓடியதால் அவர்களால் வேதநிதியை பிடிக்கக முடியவில்லை. எனவே அவன் ஓடிய திசை நோக்கி வில்லைப் பூட்டி அம்பெய்து விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்கள்.

ஆனால் சரமாரியாக புறப்பட்ட அம்பு மழையில் ஒரு அம்பு, வேதநிதியின் முதுகைத் துளைக்க, அதை கையைவிட்டு எடுக்க இயலாத வேதநிதி வேதனையில் ஆழ்ந்து அங்கேயே மூர்ச்சித்து விழுந்தான். பல மணிநேரம் உயிருக்கு போராடி இறுதியில் இறந்தும் போனான்.

இவ்விதமாக வேதநிதி தன்னையுமறியாமல் சிவராத்திரி அன்று உணவு உட்கொள்ளாமல் ஜாகரணமும் (கண் விழிப்பது) இருந்த காரணத்தால், கருணாமூர்த்தியான சிவபெருமான், அவனை சிவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்தவனாகே அனுக்கிரகித்தார்.

திருஞானசம்பந்தர் திருப்பாதம்
திருஞானசம்பந்தர் திருப்பாதம்

இந்நிலையில் அங்கே யமதூதர்கள் அவனை நரகுக்கு இழுத்துச் வந்தார்கள். கயிலையில் இருந்து சிவகணங்களும் வந்தார்கள்.

இருவரும், “இவன் எங்களுக்கு உரியவன். நாங்களே அழைத்துச் செல்வோம்” என வாதிட்டனர்.

“இவன் நரகம் புகக் கூட தகுதியற்ற துராத்மாவாயிற்றே… இவனை எதற்கு நீங்கள் அழைத்துப் போக வந்தீர்கள்?” என்று யம கிங்கரர்கள் கேட்க, அதற்கு சிவ கணங்கள், “இவன் மாபாவியாய் இருந்தாலும் சிவராத்திரி விரதத்தை தன்னையுமறியாமல் அனுஷ்டித்தான். மேலும் ஜாகரணமும் இருந்தான். எனவே புனிதனாகிவிட்டான்” என்றனர்.

Sivarathiri 6

இங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குவாதங்களை அறிந்த யமதர்மராஜன் தானே அங்கு நேரில் தோன்றினான்…. “இவர்கள் கூறுவது உண்மையே. இவன் தன்னையுமறியாமல் சிவராத்திரி விரதமிருந்த காரணத்தால் அவன் பாவங்கள் யாவும் ஒழிந்தன” என்று கூறி வேதநிதியை வாழ்த்தியருளினான்.

இதன் பயனாக வேதநிதி அடுத்த ஜென்மத்தில், கலிங்க தேச மன்னனாக பிறந்து பல சிவாலயங்களை கட்டி, குடமுழுக்கு செய்து சிவ பூஜையையே தனது பக்தியாக செய்து சிவராத்திரி விரதம் முதலானவற்றை தவறாமல் அனுஷ்டித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்து வந்தான். இறுதியில் மோட்சமும் அடைந்தான்.

சிறிதும் பக்தியின்றி சிவராத்திரி விரதம் அனுஷ்டித்த வேதநிதி போன்ற துராத்மாவே இந்த நற்கதி பெற முடிந்தது என்றால், இந்த விரதத்தை பக்தியோடு அன்போடு அனுஷ்டிப்பவர்கள் பெறக்கூடிய நற்கதியை பற்றி சொல்லவேண்டுமா என்ன?

திருடும் நோக்கத்துடன் சிவாலய தீபத்தை சுடர்விட்டு எரியச் செய்தமைக்கே சக்கரவர்த்தியாக வேதநிதி பிறந்தான் என்றால், பக்தியோடும் ஞானத்தோடும் சிவாலயத்தில் தீபம் ஏற்றுபவர்கள் பெறக்கூடிய பலனை சொல்லவேண்டுமா என்ன?

சிவபெருமானைவிட கருணாமூர்த்தி எவரும் இல்லை. சிவராத்திரி விரதத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை.

– இது சிவமஹா புராணத்தில் ஞான சம்ஹிதையில் வரும் கதையாகும். நமது பாணியில் இதை எளிமையாக்கி முழுமையாக தந்திருக்கிறோம்.

சிவராத்திரி அன்று நம்மையறிமாமல் உணவை துறந்து கண்விழித்திருந்தாலே அது எத்தனை பெரிய பலனை தரும் என்று உணர்த்துவதற்கே இந்த கதையை பகிர்ந்தோம். ஆனால் இதையே உதாரணமாக கொண்டு இருந்துவிடக்கூடாது. இதுவரை விரதம் அனுஷ்டிக்காதவர்களுக்கு இது முதற்படி. அடுத்த முறை இன்னும் சற்று கடுமையாக தூய்மையாக இருக்கவேண்டும். அதற்கு அடுத்த முறை இன்னும் தீவிரமாக. ஒரு கட்டத்தில் விரதம் எப்படி இருப்பது என்று உங்களுக்கே பழகிவிடும்! உடலும் மனமும் கட்டுப்படும்!

 

இவ்வளவு அழகான புகைப்படங்கள் எந்த கோவிலுடையது? 

இது தானே உங்கள் கேள்வி…

இப்பதிவில் நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை அடுத்துள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் புகைப்படங்கள். சம்பந்தரும் திருநாவருக்கரசரும் பாடியுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. அவனருளால் அவன் தாள் வணங்கி இங்கு தான் நாம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவுள்ளோம். நாளை மதியம் மேலக்கடம்பூர் புறப்படுகிறோம். செவ்வாய் மதியம் சென்னை திரும்புவோம்.

**************************************************************

வாசகர்கள் கவனத்திற்கு…

நமக்கு ‘விருப்ப சந்தா’ செலுத்திவரும் வாசகர்கள் / பணிகளில் உதவி வரும் வாசகர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை அலட்சியப்படுத்தவேண்டாம். நன்றி!

**************************************************************

Also Check :

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL3

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

Rightmantra needs your support to function smoothly…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

3 thoughts on “சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

  1. அன்புள்ள சுந்தர் அவர்களுக்கு,

    இறைவன் யாரையும் விரதம் இருக்க சொல்ல வில்லை…இருந்தும் இதில் தவறு ஏதும் இல்லை..உணவு உண்ணாமல் இருப்பது மட்டும் விரதம் இல்லை..எண்ணங்களை, எண்ண அலைகளை ஒதுக்கி சற்று இறைவன் மீது முழு பற்று வைப்பதே விரதத்தின் மைய்யக் கருத்து.

    1. //இறைவன் யாரையும் விரதம் இருக்க சொல்ல வில்லை…//

      இந்த நேரத்தில் இது போன்ற வார்த்தைகள் இன்றைய சூழலை நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் இருக்கிறது. நீங்கள என்ன மனதில் நினைத்து இதை பதிந்தீர்கள் என்று தெரியவில்லை.

      மற்றபடி….

      புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
      வாய்மையால் காணப் படும். (குறள் – 298)

      என்பதே என் கருத்தும் கூட!

  2. அய்யா அருமையான பதிவு நன்றிகள் பல …..

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,……

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் ……

    எங்கள் ஆணைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டி கொள்கிறேன்
    நன்றிகள்
    குரு பிரசாத்

Leave a Reply to Guru Cancel reply

Your email address will not be published. Required fields are marked *