Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

print
றைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும்.

Avinasi Gopuram6

சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ வழிபாடு ஒன்றுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட தன்மை உண்டு.

வானரம் ஒன்று சிவலிங்கத்தின் மீது இலைகளை போட்டு விளையாடி அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததும், சிவாலயம் ஒன்றில் அணையவிருந்த விளக்கின் திரியை தன்னையுமறியாமல் தூண்டிவிட்ட காரணத்தால் மூஷிகமானது அடுத்த பிறவியில் நாடாளும் மகாபலிச் சக்கரவரதியாக பிறந்ததும் இதற்கு உதாரணம்.

========================================================

Also Check : விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

========================================================

அப்படிப்பட்ட பட்டியலில் காகம் ஒன்றும் உள்ளது. அதுவும் நம் அவிநாசி தலத்துடன் தொடர்புடைய ஒன்று.

சிவானுக்கிரகத்தை பெற இந்த காகம் என்ன செய்தது?

கொங்கு நாட்டில் காவிரியும் பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் ‘வதரிகாசிரம்’ என்ற ஒரு வனம் உள்ளது. அது தவசிகளுக்கு சிறந்த இடமாக திகழ்ந்தது. அங்கு துர்வாச முனிவர் சில காலம் தங்கியிருந்து சிவபூஜை முதலிய தவங்களை செய்யும்போது ஒரு நாள் காமதேனு பசுவானது சிவபூஜைக்கு பால் அளிக்க தாமதமாக வந்தது.

Crow worshipping Sivalinga

சினம் கொண்ட முனிவர் அதனை, “நீ மற்ற மிருகங்களை போல் திரியக் கடவாய்” என்று சபித்தார். உடனே காமதேனு மிக வருந்தி ‘நான் உய்யும் வகையினை அருளவேண்டும்’ என்றபோது முனிவர் ‘நீ பழனி மலை சென்று பூசித்தால் உய்யலாம்’ என்று கூறினார். அதன் பிறகு அவர் கந்தபுரி என்னும் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதரை பூசித்தார்.

Thirumurugan Poondi
அருள்மிகு ஆவுடை நாயகி சமேத திருமுருகநாதர் திருக்கோவில், திருமுருகன்பூண்டி

கந்தபுரி பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தார். மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற்காலம் சிவதீர்த்ததில் ஸ்நானம் செய்து நியம அனுட்டானங்களை முடித்து ஆலயத்திற்கு அருகே நிருருதி திக்கிலுள்ள ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் முதலியவைகளை புரிந்து அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு பலி (சோற்றுருண்டை) வைத்தார். அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் செல்ல அவிநாசிக் கடைவீதி வழியாக பறந்து சென்றது.

அச்சமயம் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் ஒரு பருக்கை சோறு சிவவேடம் பூண்ட ஒரு பரதேசியின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அவன் அறியாது ஒரு இடத்தில் போய் தங்கிச் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.

சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது, ஒரு வேடன் சிறு வில்லில் களிமண் உருண்டையை வைத்து அக்காகத்தை அடித்தான். உடனே அது அலறிக் கீழே திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது.

அப்போது அந்த காகம் தேவவுருப் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்து, உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது.

சிவபெருமான் புன்முறுவல் பூத்து, திருப்புக்கொளியூர் அவிநாசியில் வசித்து வந்த காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சோற்றை ஒரு சிவனடியார் உண்டதனால், இக்காகம் இங்குவர ஏதுவாயிற்று என்று சிவகணங்களுக்கு கூறினார். காகத்திற்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

சிவனடியாருக்கு ஒரு சோற்றுப் பருக்கையை தன்னையுமறியாமல் அளித்து திருப்புக்கொளியூரில் மரித்த ஒரு காக்கைக்கே இந்த நற்கதி என்றால் சிவ வழிபாட்டின் மகத்துவத்தை என்னவென்று சொல்ல? 

… ‘அவிநாசி அற்புதங்கள்’ தொடரும்

========================================================

Help Rightmantra to function without any hassles!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions
Rightmantra.com, Shop. No.64,
II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel),
82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also Check :

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

One thought on “காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

  1. அவினாசி அற்புதங்கள் ஒவ்வொரு அத்தியாயமும் விறு விறுவென செல்கிறது. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஏங்க வைக்கிறது.

    நாங்கள் வாழ்நாளில் இங்கெல்லாம் போவோமோ என்று தெரியாது. நம் தளதிலாவது இவற்றை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதே. அந்த வகையில் சந்தோஷம்.

    காகம் சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்திருக்கும் படம் உருகவைக்கிறது.

    ‘சிவாய நம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *