Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

print
மீபத்தில் அவிநாசி சென்று வந்தது முதல், அவிநாசி திருத்தலம் நமது வாழ்க்கை கோவிலாக மாறிவிட்டது என்று நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். சிவராத்திரி ஸ்பெஷலாக  (மார்ச் 7, 2016 மகா சிவராத்திரி) அவிநாசி அற்புதங்களை தொடராக தருவதாக கூறியிருந்தோம். இதோ தொடரின் முதற்பகுதி.

Avinasi temple

இதுவரை நாம் பல தேவாரப் பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு தலமும் ஒன்றுக்கொன்று அழகில் விஞ்சி நிற்கும். ஆனால் அவிநாசி அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டதொரு தலம்.

========================================================

Also check :

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

காமுகன் கயிலை சென்ற கதை!

விநாசிக்கு (அதாவது திருப்புக்கொளியூர்) கிழக்கே திருமுருகன்பூண்டி என்கிற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது. இதற்கு புராண பெயர் முல்லைவனம். முல்லைவனம் ஒரு ஞானபூமி. அந்த ஊரிலே எஞ்ஞகுத்தன் என்கிற ஒரு செல்வச் செழிப்பு மிக்கதொரு வணிகன் வாழ்ந்து வந்தான்.

ஞானபூமியிலே இருந்தும் மெய்ஞானம் இல்லாத ஞானசூனியமாக இருந்தான் அவன். காமத்தில் உழலும் காமுகனாக இருந்தான். கடவுள் பக்தியோ பெரியோர்களிடையே மரியாதையோ இல்லாது இருந்தான். அதுமட்டுமல்லாது, நேர்மையற்ற வாணிபம் செய்து வந்தான். தரும சிந்தனை என்பதே துளியும் இல்லாத அவன், பரத்தையரிடம் செல்லும்போது மட்டும் கணக்கு பார்க்காமல் பணத்தை அள்ளிவீசுவான்.

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் ஒரு நாள், அவிநாசியில் சித்திரை திருவிழா வந்தது.

அப்போதெல்லாம் திருவிழா நடக்கும் இடங்களில் சந்தை முதலானவை நடைபெறும். தொலைதூரங்களில் இருந்தெல்லாம் வரும் வணிகர்கள் தங்கள் பொருட்களை கோவில் அருகே கடை போட்டு விற்பார்கள்.

எஞ்ஞகுத்தன் திருவிழாவில் கடைபோட விரும்பி, தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து திருப்புக்கொளியூர் கோவில் அருகே உள்ள தெருவில், ஒரு வீட்டு திண்ணையில் கடையை விரித்து அமர்ந்தான். அந்த திருவிழாக்கூட்டத்தில் வியாபாரம் ஓஹோவென நடைபெற்றது.

திருவிழாவில் ஒரு நாள், அவிநாசியப்பர் இடப வாகனத்தில் எழுந்தருளி கருணாம்பிகையுடன் உலா வரும் காலத்தே சுவாமி முன்பு கணிகைகள் சிலர் (தாசிகள்) சிலர் நாகவரளி ராகத்தில் பாடல் ஒன்றை பாடியபடி ஆடிக்கொண்டு வந்தனர். அவர்கள் அழகைக் கண்டு எஞ்ஞகுத்தன் மயங்கி அவர்கள் மீது காதல் கொண்டான்.

Avinasiyappar Chiththirai Thiruvizha

செய்துகொண்டிருந்த வியாபாரத்தை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் பின்னாலேயே சென்றான். கோவிலுக்குள் சென்றபின்னும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அப்போது சாயரட்சை பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு வசிஷ்ட மாமுனிவர் அப்பூஜையை தரிசித்துக்கொண்டிருப்பதை பார்த்தான். பக்தர்கள் கூட்டத்தோடு அக்கணிகைகளும் அவிநாசியப்பரை தரிசித்துக்கொண்டிருன்தனர். பூஜை முடிந்து தீபாராதனை காட்டியபின் அனைவரும் பிரசாதம் பெற்று செல்லலாயினர்.

எல்லோரும் சிவசிந்தனையில் லயித்திருக்க, எஞ்ஞகுத்தனோ கோவிலைவிட்டு வெளியேறியவுடன் அக்கணிகைகளிடம் பணம் கொடுத்து சல்லாபத்திற்கு அழைக்கும் எண்ணத்துடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான்.

அந்நேரம், சபா மண்டபத்தில் ஒரு அறிஞர், அவிநாசித் தள வரலாற்றில் தாடகை சிவபெருமானை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அதில் சில வரிகள் எஞ்ஞகுத்தன் காதில் விழுந்தன. முழுவரலாற்றையும் கேட்கும் மனமில்லாமல், பெண்ணாசையால் உந்தப்பட்டு கணிகை மாதர்களை தவறவிட்டுவிடக்கூடாது என்று வேகமாக வெளியேறினான்.

ஆனால் அவர்கள் அதற்குள் மாட்டு வண்டியிலேறி தங்கள் இல்லத்துக்கு புறப்பட்டுவிட்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து வந்த எஞ்ஞகுத்தன் அவர்களை காணாமல் தவித்தான்.

காமத்தின் மயக்கத்தில் இருந்தவனை பசி மயக்கம் வேறு வருத்த, அவர்களை அடையும் வழிமுறைகளை சிந்தித்தப்படியே அவசர அவசரமாக ஆகாரத்தை உண்டான். அதனால், சோறு தொண்டையில் அடைத்துக்கொள்ள, விக்கி விக்கி ஒரு வீட்டுத் திண்ணையின் முன்பு மூர்ச்சித்து விழுந்து இறந்து போனான்.

அந்நேரம், எஞ்ஞகுத்தனை எமலோகம் கொண்டு செல்ல, எமகிங்கரர்கள் பாசக் கயிற்றுடன் வந்தனர்.

அவனை பாசக்கயிற்றால் பற்றி கட்டி இழுத்து செல்லும் வேளையில், திடீரென்று கயிலையில் இருந்து சிவகணங்கள் இருவர் வந்தார்கள். அவர்கள் எமகிங்கரர்களை தடுத்து, “காலதூதர்களே இவன் பிறந்தது திருமுருகன்பூண்டி, மரித்தது காசிக்கு சமமான அவிநாசி. இங்கு உயிர் நீத்தோர் நரகம் புகலாமோ? அது தவிர, இவன் அவிநாசியப்பரை சந்தியா கால தரிசனம் செய்துள்ளான், வசிஷ்ட மகரிஷியை பார்த்துள்ளான், அவிநாசி தல புராணத்தின் சில வார்த்தைகளை கேட்டிருக்கிறான். எனவே இவனை சிவலோகம் அழைத்துச் செல்ல விமானத்துடன் வந்திருக்கிறோம்.” என்றனர்.

தொடர்ந்து சிவகணங்கள் அவனை சிவலோகம் அழைத்துச் செல்ல, அங்கு சிவபெருமானை தரிசித்து தவறுகளை மன்னிக்கவேண்டி பணிந்து நின்றான் எஞ்ஞகுத்தன்.

நல்லோரை காண்பதும், அவிநாசியப்பரை ஒரு வேளை தரிசிப்பதும், அவிநாசி தலப்புராணத்தை கேட்பதும் எத்தனை பெரிய புண்ணியம் என்பது இதன் மூலம் விளங்கும்!

காலைதொழ அற்றவினை கட்டகலும் கட்டுச்சி
வேலை தொழ இப்பிறப்பில் வெந்துயர்ப்போம் – மாலையினில்
வந்து சிவன்தாளை வந்தித்தால் ஏழ்ப்பிறப்பின்
வெந்துயரம் எல்லாம் விடும்
– ‘சிவதரிசன மகத்துவம்’

… ‘அவிநாசி அற்புதங்கள்’ தொடரும்

========================================================

Become our ‘Voluntary Subscriber’ today. Help Rightmantra to run without any hassles!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

Also check :

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

7 thoughts on “காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

  1. மிகவும் அருமையான கதை.எஞ்ஞகுத்தன் காமுகனாக இருந்தாலும், அவினாசியப்பரை தரிசித்ததாலும், இறைவனின் புராணத்தை கேட்டதாலும் சொர்கத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.. கோவில் கோபுரமும், சுவாமி உலா வரும் சித்திரமும் அழகோ அழகு. காசிக்கு சமமான அவினாசி அப்பரை ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பதிவை படித்த பிறகு ஏற்பட்டுள்ளது. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். முதல் சிவராத்திரி ஸ்பெஷல் , சிவனை சிந்தையில் நிறுத்தும் பதிவாக அட்டகாசமாக உள்ளது. வாசகர்களுக்கு ஒரு அழகிய பதிவு கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் ஆழியார் பயணம் கான்செல் ஆகி விட்டது. சுபெர்ப் article ஒரு சிறிய விண்ணப்பம். தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்ற தலைப்பில், ஒவ்வொரு பாடல் பெற்ற ஸ்தலங்களை பற்றியும் பதிவாக எழுதுங்கள். 275 பாடல் பெற்ற ஸ்தலங்கள் என நினைக்கிறேன்
    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. அவிநாசி அற்புதங்களை படிக்க படிக்க உடனே அவிநாசி செல்லத் தோன்றுகிறது. கோவில் மண்டபத்திலிருந்து கோபுரத்தை பார்க்கும் அந்தப் புகைப்படம் மிக மிக அழகு. தாங்கள் காமிராவை கையாளும் பாங்கே தனி.

    எஞ்ஞகுத்தன் கதை விறுவிறுப்பாக சென்றது. கிளைமேக்ஸ் எதிர்பாராதது. எப்பேற்ப்பட்ட தவறு செய்பவர்களுக்கு உய்யும் வழி இருக்கிறது என்பதே நாம் இதில் தெரிந்த்கொள்ளக்கூடிய விஷயம்.
    அவிநாசி அற்புதங்களின் அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. முக்கியமான ஒரு விஷயம். ரமீஸ் அவர்களின் ஓவியம் கொள்ளை அழகு. இந்த கதைக்கு மேலும் வலு கூட்டுவதுடன் மறக்கமுடியாமல் செய்கிறது.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. /பன்னிரு திருமுறை விழா தி,நகரில் நடக்க இருப்பதாக தெரிகிறது ,
    தேதியும் நேரமும் நம் வெப்சைட் இல் தெரியபடுத்தவும் .

    நன்றி

  5. நீங்கள் கொடுத்து வைத்தவர் சார்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவையில் தான்.அவிநாசி கோவில் வழியாக சிலமுறை சென்றதுண்டு.இவ்வளவு அருகில் இருந்தும் இன்று வரை அவினசியப்பரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் அல்லவா ! யு ஆர் லக்கி சார்

  6. நாங்களும் அவினாஷியப்பர் கோவிலுக்கு ஒரு முறை சென்றோம் . மிகவும் அற்புதமான தரிசனம் . பின்பு அவினஷியப்ப்ர் மீது இருந்த சிறு பூ மாலை ஒன்றை ஐயர் கொடுத்த பொழுது சிலிர்த்துவிட்டேன் என்னென்றால் நான் அந்த சிறு மலை வேண்டும் என்று விரும்பினேன் . மிக்க நன்றி . அவினஷியபர் கதைகள் படிக்கும் பாகியம் கிடைக்க தாம் மிகவும் உதவி செய்தீர்கள். தங்களின் நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் .

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *