Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > சகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’!

சகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’!

print
நாளை சனிக்கிழமை ‘கோ துவாதசி’ அதாவது கோவத்ஸ துவாதசி. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் இந்த துவாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு ‘கோ துவாதசி’ என்று பெயர். கோ-சம்ரட்சணத்துக்கும் கோ தரிசனம் மற்றும் கோ பூஜைக்கு ஏற்ற நாள் இந்த கோ-துவாதசி. அன்று கன்றுடன் கூடிய பசுவை பூஜித்து வணங்க வேண்டும். பிராமணர் , பசுக்கள் இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ‘அமுல்யம்’ அதாவது விலை மதிக்க முடியாதவர்கள்.

திருவெறும்பூர் ஏறும்பீசர் கோவில் வாசலில்....
திருவெறும்பூர் ஏறும்பீசர் கோவில் வாசலில்….

உலக நன்மைக்காக பிரம்மதேவர் சிருஷ்டியின்போது யக்ஞத்தைப் படைத்தார். அந்த யக்ஞத்திற்கு மந்திரங்களும் ஹவிஸும் மிக மிக அத்தியாவசியமான ஒன்று. மந்திரங்கள் உத்தமமான பிராம்மணர்களிடத்தில் இருக்கின்றன. ஹவிஸ் எனும் நெய் பசுக்களிடம் இருக்கிறது இந்த உலகத்தில் பசுக்களுக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

இந்த நாளில் பசு கன்றுக் குட்டி இரண்டையுமே நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். பசு கன்று இரண்டையுமே சந்தனம் குங்குமம் இட்டு பூ வைத்து அலங்கரிக்கவேண்டும். பசுவுக்கு தீவனம் வைக்க வேண்டும். அகத்திக்கீரையும் கொடுக்கலாம்.

 திருப்புன்கூர் ஆலயத்தில் கண்ட பசு...

திருப்புன்கூர் ஆலயத்தில் கண்ட பசு…

நான் பசுமாடு வளர்க்கவில்லை, எனவே இதை எப்படி செய்வது என்று யோசிக்கவேண்டாம். அருகே உள்ள கோ-சாலைக்கு சென்று கோ-சாலையை சுத்தம் செய்து தரலாம். மாட்டை குளிப்பாட்டலாம் அல்லது குளிப்பாட்ட உதவி செய்யலாம்.

காளை மாடுகளின் மூத்திர வாசனை காற்று பட்டாலே போதும் – “புத்திர பாக்கியமே இல்லை” என்று சொல்லப்பட்டவள் கூட பிள்ளை பெறுவாள் என்பது மகாபாரதம் ‘விராட பருவம்’ கூறும் தகவல். (நாம் ஏற்கனவே கோ-சாலையில் தொண்டு செய்வதன் மேன்மையை ரமண மகரிஷி உணர்த்திய ஒரு அருமையான சம்பவத்தை நம் தளத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!)

மேலும் பசுக்களின் கழுத்து பகுதியில் சொறிந்து கொடுப்பது மிகவும் உத்தமமான காரியம். “கோகண்டூயனம்” என்னும் இந்தச்செயல் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கக்கூடியது. மிகப்பெரும் புண்ணியத்தைத்தரக்கூடியது. (பசுவிடம் ஓரளவு பழகிய பின்னரே இதை செய்யவேண்டும். இல்லையெனில் அது அச்சப்பட்டு முட்டக்கூடும். எச்சரிக்கை!)

பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவில் பசு...
பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவில் பசு…

நாளை கோவத்ஸ துவாதசி நன்னாளில் பசுவையும் கன்றையும் வழிபட்டு பிரம்மச்சரியம் காத்து பாய் தலையணை மெத்தை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தரையில் உறங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும் நாளை ஒரு நாள் பால், தயிர், நெய், முதலிய பால் பொருட்களை தவிர்த்தல் நலம்.

Noombal2
நூம்பல் அகத்தீஸ்வரர் கோவில் பசு…

இதனால் குடும்பத்தில் அழியாச் செல்வமும் மங்கலமும் உண்டாகும். தவிர கோலோகமும் கிட்டும் என்பது தாத்பர்யம். கோலோகம் என்பது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் வாசஸ்தானம் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். அவன் பெயரே கோபாலன் தானே?

கோ துவாதசி சிறப்பு கோ-சம்ரட்சணம்

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் உள்ள பவானி என்கிற பசு பெண் கன்று ஒன்றை ஈன்றுள்ளதையடுத்து நாளை சனிக்கிழமை கோ-துவாதசி அன்று மாலை 7.00 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் நடைபெறவிருக்கிறது. அது சமயம், பசுக்களுக்கு விஷேட உணவு வழங்கப்படும், கோ-பூஜையும் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கோ-சாலை பணியாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். வாசகர்கள் வந்திருந்து கோ-மாதா அருளை பெறவேண்டும்!

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்

இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

=============================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================

Also check :

என்ன தவம் செய்தனை யசோதா…!

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

=============================================

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

7 thoughts on “சகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’!

  1. Bro ,
    updated Website have some issues.take lot of Time.its difficult to read in Mobile devices.

    regards
    vijayakumar

  2. இந்த உலகத்தில் பசுக்களுக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. சத்தியமான உண்மை சார்.

    நான் முடிந்தவரை எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மாலை நேரத்தில் வந்து தங்கும் காளை மற்றும் பசு, கன்றுகளுக்கு வாழைபழம்

  3. இந்த உலகத்தில் பசுக்களுக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. ஆம் சார் சத்தியமான உண்மை .

    நிறைய தெரிந்து கொண்டேன் .

    அம்மாவாசை அன்று பசு, கன்று, மற்றும் காளை மாடுகளுக்கு வாழைபழம் கொடுப்பது வழக்கம் .

    இனி முடிந்தவரை செய்வேன் சார்.

    நன்றி,

    தங்களின்

    சோ ரவிச்சந்திரன்.

  4. சுந்தர்ஜி எங்களின் என்ஸைக்ளோபீடியா நீங்கள் தான். தகுந்த நேரத்தில் ஞாபக படுத்தி புண்ணியம் செய்யவும் தூண்டுவது தங்களின் நெருக்கத்தால் தான் நடக்கிறது. RM குரூப் இல்லாமல் இருந்து இருந்தால் நாங்கள் என் செய்வோம். என்னிடம் புண்ணியம் கூட இருக்கிறதே!!!!!!

  5. We have to Support Sundaji and RM for making his show Running. Lets propagate this group to the extent and support financially RM. We all should try our level best to offer our contribution without fail monthly once. Every one of us should plan to allot a budget (like Daily new papers, journals, etc., for contributing to RMs noble cause. Afterall we are not paying for each one of his article. Lets think that we have to pay minimum for each post and calculate how much will come monthly. It is our gifted group and Sundar’s strength should be well preserved and nurtured, to extract more articles and support to man kind. only if he is Financially free (to some extent) any creator can concentrate better in their Job. Sundarji, these are all my ideas (just want to share, which I was thinking off for quite some time.) Could u pl. share this as my post in whatsup also. Hatts off to you. Pranams to your Appa and Amma.

  6. Happy to know abt govatsa dwadesi thro our site. On this auspicious day, we will do the best to gomathas and chant. Gomatha sloga.

    Rajkumarji, ur point is correct. We will do our level best for the betterment of RM.
    Thanks and regards
    Uma venkat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *