Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

print
மது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்…. முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் புரிந்தது. நமது வளர்ச்சிக்கும் பயணத்திற்கும் உறுதுணையாக இருந்து நம்மை வழி நடத்துவதாக நாம் உணரும் திருவள்ளுவரையும் விவேகானந்தரையும் வைத்த பின்னர் பேனருக்கு ஒரு இறுதி வடிவம் கிடைத்தது.

Book Release Backdrop 10x8 V13

வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பவர்களும் தூக்கி விடுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பவர்களும் ஜோதிடர்களை தேடி ஓடுவதற்கு பதில், விவேகானந்தரையும் திருவள்ளுவரையும் படியுங்கள். அதற்கு பிறகு பாருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை. இது பொய்யில்லை… உண்மையிலும் உண்மை!

"

சமீபத்தில் ஒரு தொழிலதிபரை சந்திக்க நேர்ந்தது. நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அவர் இன்று பல கோடிகளுக்கு அதிபதி. அவர் தனது வளர்ச்சிக்கு காரணமாக நம்மிடம் கூறியது யாரைத் தெரியுமா? திருக்குறளைத் தான்!

சமயம் சார்ந்த இலக்கியங்களுக்கு மட்டுமே ‘திரு’ என்கிற அடைமொழி இருக்கும். ஆனால், நீதி நூல் ஒன்றுக்கு ‘திரு’ என்கிற அடைமொழி இருக்கிறதென்றால் நமக்கு தெரிந்து அது திருக்குறள் ஒன்றுக்குத் தான். மேலும் தெய்வப்புலவர் என்று பெயர் பெற்ற ஒரே ஒருவர ‘திரு’வள்ளுவர் மட்டுமே.

ரைட்மந்த்ரா அலுவலக திறப்புவிழாவில் நண்பர்களுக்கு பரிசளிக்கப்படும் திருக்குறள்
ரைட்மந்த்ரா அலுவலக திறப்புவிழாவில் நண்பர்களுக்கு பரிசளிக்கப்படும் திருக்குறள்

திருக்குறளை படியுங்கள்… ‘திரு’ உங்களை தேடி வரும்.

திரு என்ற சொல்லுக்கு பொருள் என்ன தெரியுமா?

“மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, வெற்றி, புகழ்” இப்படிப் பல.

ஜோதிடர்கள் சுவற்றுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று வேண்டுமானால் உங்களுக்கு சொல்லக்கூடும். ஆனால் ஆனால், அதை உங்களால் மாற்ற முடியுமா?

சற்றே சிந்திப்பீர்!

ஆனால், சுவற்றுக்கு அப்பால் இருப்பதை உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு வழிமுறைகள் மேற்சொன்ன இருவருக்குத் தான் தெரியும். அதைத் தான் அவர்கள் வாழ்நாள் முழுதும் சொல்லி வந்துள்ளார்கள்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)

“உன்னால் முடியாத செயல் எதுவும் இருப்பதாக ஒரு போதும் எண்ணாதே…!”
– சுவாமி விவேகானந்தர்

இந்த வரிகளின் வீரியத்தை புரிந்துகொண்டு உங்களை நீங்கள் இந்த நொடி மாற்றிக்கொண்டால், நிச்சயம் வருங்காலத்தில் நம்மை நேரில் தேடி வந்து ‘நன்றி’ சொல்வீர்கள்.

==============================================================

Please check :  ‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை !

==============================================================

உங்களிடம் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள இயலாத ஒரு மாற்றத்தை ஒரு ஜோதிடரோ ஜோதிடமோ பரிகாரமோ ஏற்படுத்திவிட முடியும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட நாம் நட்பு பாராட்ட தயங்குவதில்லை. ஆனால், தன்னம்பிக்கை இல்லாமல் திரிபவர்களிடம் தான் நட்பு கொள்ள யோசிக்கவேண்டியுள்ளது.

"

அளப்பரிய தன்னம்பிக்கையுடன், திருக்குறளை கலங்கரை விளக்கமாக கொண்டு, விவேகானந்தரை வழித்துணையாக கொண்டு இன்றே புறப்படுங்கள். உங்கள் லட்சியப் பாதையை நோக்கி. இனியும் தாமதிக்கவேண்டாம். மிகச் சிறந்த எதிர்காலமும், எல்லையற்ற வாய்ப்புக்களும் உங்கள் முன்னே கொட்டிக்கிடக்கின்றன.

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே உங்கள் முன் தருகிறோம்.

திருவள்ளுவர் தினத்தன்று மயிலையில் உள்ள திருவள்ளுவருடன்..
திருவள்ளுவர் தினத்தன்று மயிலையில் உள்ள திருவள்ளுவருடன்..

விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய சம்பவம்…

எழுந்து நில்லுங்கள்…. சிகரம் எட்டிவிடும் தூரம் தான்!

மயமலையில் வெகு கடினமான பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது வழியில், ஒரு மரத்தடியில் மிகவும் வயதான ஒருவர் உடல் தளர்ந்து போய் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

swami vivekanandaவாடிய முகத்துடன் இருந்த முதியவரிடம் விவேகானந்தர் பேசினார். என்ன காரணத்தால் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்று விவேகானந்தர் கேட்டதற்கு, இமயமலையின் உச்சியை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு மலையில் ஏறத் துவங்கினேன்.

ஆனால், இந்த இடத்தை அடைவதற்குள் எனக்கு சோர்வு ஏற்பட்டுவிட்டது. என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறினார்.

அவரது பேச்சில் இருந்து, அவர் மனதால்தான் தளர்ந்துள்ளாரே தவிர, உடலால் அல்ல என்பதை விவேகானந்தர் புரிந்து கொண்டார். உடனே, அவரிடம் இவ்வாறு கூறினார் விவேகானந்தர்..

“நீங்கள் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். மிக நீண்ட, கடினமான பாதையை நீங்கள் கடந்து இந்த இடத்துக்கு வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் செல்ல வேண்டிய இடமோ மிகக் குறுகிய தூரத்தில்தான் உள்ளது. எழுந்து உற்சாகத்தோடு நடந்து இலக்கை அடைந்துவிட்டீர்களானால், நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் பாதையும் உங்கள் பின்னால் சென்றுவிடும்” என்றார்.

Sometimes

விவேகானந்தரின் உற்சாகப் பேச்சும், அவரது ஒளி பொருந்திய முகமும், முதியவருக்கு உற்சாகத்தை அளித்து, உடனடியாக எழுந்து நடக்கத் துவங்கினார். தனது லட்சியத்தை அடைந்தார்.

எனவே, விவேகானந்தரின் உற்சாகப் பேச்சு ஒரு தள்ளாத முதியவரையும் இமயமலையின் உச்சியை எட்ட வைத்தது.

விவேகானந்தர் கூறுவது போல, உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளே உங்கள் முன் வந்து நின்றாலும் அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை..

==============================================================

Please check :  களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

==============================================================

உங்கள் பயணத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் போல தோன்றுவது எல்லாம் உண்மையில் வாய்ப்புக்களே. அதுவும் மிக மிகப் பெரிய வாய்ப்புக்கள். (Blessings in disguise). மாபெரும் சாதனையாளர்கள் அனைவரும் இப்படி பிரச்சனைகளை வாய்ப்புகளாக பார்த்தவர்களே. குருட்டு அதிர்ஷ்டத்தால் கோட்டையில் ஏறி கொடி நட்டவர்களை பார்த்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.

நமது வாழ்க்கையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு!

இனி தான் ஆரம்பம்!

வெற்றியை நோக்கி செல்வது உண்மையில் ஒரு நெடும்பயணம். ஏதோ ஒரு சிறிய இலக்குடன் அது நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு உயரத்தையும் தொடும்போது தான் அந்தந்த உயரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நமக்கு புரியும். தெரியும். அதுவரை அது நமக்கு புரியாது.

நூல்களை வெளியிட்டாகிவிட்டது. நூல்களை வெளியிட்டது நாம் இலக்கை எட்டிவிட்டது போல தோன்றும். ஆனால், நம்மைப் பொருத்தவரை “இனி தான் ஆரம்பம்” என்று நமக்கு தெரியும். அதாவது இனிமேல் தான் கரடு முரடான பாதையில் பயணம் தொடங்குகிறது. அதற்கேற்றார் போல, நாம் சிந்திக்காத கோணங்களில் இருந்தெல்லாம் நமக்கு சவால்கள் தென்பட்டன.

நண்பர் ஒருவருடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நம் முன் இருக்கும் மிகப் பெரும் சவால் ஒன்றைப் பற்றி நம்மிடம் கூறினார். அவர் அதைக் கூறுவதற்கு முன்பே நமக்கு அது பற்றி ஒரு சிந்தனை இருந்தது என்றாலும், நண்பரும் அதைச் சொன்ன பிறகு தான் “அட.. ஆமாம்ல” என்று தோன்றியது. (நாம நினைக்கும் ஒரு விஷயம்… சரியா தப்பான்னு ஒரு குழப்பம் இருக்கும். மற்றவர்களும் அதை சொன்னபிறகு தான்.. நமக்கு அதில் நம்பிக்கை வரும். அது போலத் தான் இது!)

பிரச்சனைகளை பொருத்தவரை நாம் அதை அணுகும் விதமே வேறு. ஒவ்வொரு பிரச்னையையும் நாம் ஒரு வாய்ப்பாக பார்த்து பார்த்தே பழகிவிட்டோம். அதனால் ஏதேனும் பிரச்சனை தோன்றும்போதெல்லாம், இதில் நமக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று தான் பார்ப்போம்.

இந்தப் பிரச்னையை பொருத்தவரை மிகவும் சீரியஸான ஒன்று. “உடனடியாக ஏதேனும் செய்யவேண்டுமே…” என்று தோன்றியது. நமது நிலையில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இடிந்து போய் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் நம் MINDSET தான் வேறாச்சே. அதனால் இயல்பாகவே மனம் அதில் உள்ள வாய்ப்புக்களை தேடியது. அடித்தது ஜாக்பாட். நமது அடுத்த மிகப் பெரும் ELEVATION னுக்கான பாதை புலப்பட்டது.

நல்ல விஷயங்களை முயற்சிகளை நாம் எந்தக் காலத்திலும் தள்ளிப்போட்டது கிடையாது. ஏனெனில் “கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான்” என்று நமக்கு தெரியும்.

Join our Voluntary Subscription Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

அன்று மதியமே அந்தப் புதிய பாதைக்கான துவக்கப் பணிகளை தொடங்கி பிள்ளையார் சுழியையும் போட்டுவிட்டோம். அன்று மாலையே நண்பரை மீண்டும் தொடர்புகொண்டு “சார்… ரொம்ப நன்றி. உங்களால ரைட்மந்த்ராவும் சரி, என் வாழ்க்கையும் சரி… அடுத்த லெவலுக்கு போகப்போகுது…” என்று கூறி விஷயத்தை சொன்னோம்.

“சூப்பர் சார்… நானே எதிர்பார்க்கலை…! செம ஸ்பீடா இருக்கீங்க…. கிரேட்” என்றார் ஆச்சரியத்துடன்.

“நாம முடியாதுன்னு நினைக்கிற விஷயத்தை உலகில் ஏதோ ஒரு மூலையில யாரோ ஒருத்தர் சாதிச்சுகிட்டுத் தான் இருக்காங்கன்னு சொல்வாங்க. அதனால, எந்த பிரச்சனை வந்தாலும் நான் சோர்ந்துபோகமட்டேன். முடியாதுன்னு கைவிடவும் மாட்டேன்” என்றோம்.

அப்படி என்ன முயற்சி?

வரும் ‘விஜயதசமி’ வரை பொறுத்திருங்களேன்.

==============================================================

தேடி வரும் திருக்குறள்!

திருக்குறளை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று அறிந்துகொள்ள நம்மை தொடர்புகொள்ளவும். திருக்குறளை எப்படி பயன்படுத்தி வெற்றிப்படிக்கட்டுக்களில் ஏறுவது என்று நமக்கு தெரிந்த உபாயத்தை சொல்கிறோம். அதுமட்டுமல்ல… உங்களுக்கு நம்மிடம் உள்ள ‘திருக்குறள்’ நூள் ஒன்றை அனுப்பி வைக்கிறோம். தபால் செலவை மட்டும் நாமே ஏற்றுகொள்கிறோம்.

நமது நண்பரும், திருக்குறள் ஆர்வலருமான திரு.ராஜேந்திரன் IRS அவர்கள் தனது துணைவியார் திருமதி.மலர்க்கொடி ராஜேந்திரன் அவர்களுடன் நம் அலுவலகத்திற்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தபோது…

உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டி, சேவை மனப்பான்மையுடன் இதை செய்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த திருக்குறள் தெளிவுரையைப் பொருத்தவரை அட்டகாசமான ஒன்று. உங்களிடம் இருப்பதைவிட வித்தியாசமான ஒன்றாக நிச்சயம் இது இருக்கும். நமது அலுவலக துவக்க விழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இதை பரிசளித்து மகிழ்ந்தோம். இன்றும் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பின் போது பரிசளித்து மகிழ்கிறோம்.

நூல் உங்கள் கைக்கு வந்தபிறகு திருக்குறளை எப்படி வாழ்க்கையில் ஊன்றுகோளாக கொள்வது என்று சொல்கிறோம்.

தயங்கவேண்டாம்… இன்றே தொடர்புகொள்ளுங்கள்…!

வெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்!

Rightmantra Sundar
M : 9840169215  | E : editor@rightmantra.com

==============================================================

More articles on Swami Vivekananda in Rightmantra.com

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==============================================================

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==============================================================

Also check for more motivational stories :

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

5 thoughts on “‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

  1. ௮ருமையான பதிவு.

    “முயற்சி திருவினை ஆக்கும் ” எஎன்பது பொய்யில் புலவன் வாக்கு..
    எண்ணம் போல் வாழ்வு என்று ௮ன்றே கூறியுள்ளார் பட்டிணத்தார்…

    உங்களது நல்லெண்ணமும், ௮சைவில்லா ஊக்கமும்
    உங்களுக்கும், நம் தள வாசகர்களுக்கும்
    ஆக்கத்தை ௮ளிக்கும்….
    இதில் எள்ளளவும் ஐயமில்லை

    சி. இராஜேந்திரன், குடும்பத்தினர்

  2. நல்ல முயற்சி. திருக்குறளை முழுவதுமாக அல்ல, ஒரே ஒரு குறளை நம் வாழ்நாளீல் இடையறாது பின்பற்றினாலே முன்னேற்றம் நிச்சயம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு திருமண வாழ்க்கையில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டு, எதற்காக இந்த வாழ்க்கை, இதற்கு திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாமே என நினைத்து என்கணவரை விட்டு பிரிந்து விடுவது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். அவரிடமும் சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு மாதங்களில் நான் விட்டை விட்டுப் போயிடுவேன்.

    அதற்குள் நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றேன். அவரும் ஒன்றும் பேசாமல் சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால், ஏற்கணவே ஒரு மனைவி இறக்க நேர்ந்ததை நினைத்து வருத்தத்தில் இருந்தவர், என்னுடன் வாழ விருப்பமில்லாவிட்டால் பிரிந்து சென்றாவது உயிர் வாழ்ந்திருக்கலாமே என தவித்தவர். அதனால் என்னைத் தடுக்கவில்லை. பிரிந்து செல்கிறேன் எனச் சொல்லி விட்டேன். ஆனாலும் என் மனதிலும் அமைதி இல்லை.

    இம் மனநிலையில் , என்பள்ளியில் படித்த கிறித்துவ தோழி ஒரு முறை சொல்லியுள்ளாள், அவர்களுக்கு, ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பமாக இருந்தால், அவ்விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டு, பைபிளை திறந்து பார்த்தால், அக்குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் வசணம் இருக்கும், அதன் படி முடிவு எடுப்போம் என்றாள். எனக்கு நாமும் அப்படி செய்தால் என்ன என்று தோன்றியது. நமது தமிழ் மறை திருக்குறள் தானே, அதன் ஒரு குறளான,

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.

    இக்குறளைதான் பள்ளி நாளில் இருந்து பின்பற்றிக் கொண்டிருந்தேன். அதனால் திருக்குறளிலேயே விடை தேடுவோமென நினைத்து, மனதில் நன்றாக வேண்டிக்கொண்டு நூலைத் திறந்து பார்த்தேன். திருவள்ளுவர் என் தலையில் சுத்தியலால் அடித்தது போல ஒரு குறளைப் படித்தேன். அறத்துப்பாலில், இல்லறவியலில், வாழ்க்கைத் துணைநலம் என்ற தலைப்பில், 56வது குறள்,

    தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலால் பெண்.

    இக்குறளைப் படித்த பின் அவரைப் பிறிந்து செல்லும் மறுபடியும் எண்ணம் வருமா?.

    1. அருமை! அருமை!!

      திருக்குறளின் பெருமைக்கு இதைவிட சிறந்த சான்று வேறு இல்லை.

      வெளிப்படையாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பலர் கண்களை இது திறக்கும்.

      நீங்கள், கூறிய ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு குறிப்பிட்ட புத்தகத்தில் ஏதேனும் பக்கத்தை திறந்து பார்க்கும் வழக்கம் நமது திருமுறைகளிலும் உள்ளது. ‘கயிறு போட்டு பார்ப்பது’ என்று அதை சொல்வார்கள்.

      நீங்கள் உலகப்பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறளை அதற்கு தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

      நீங்கள் பின்பற்றிய ஒரு திருக்குறள் உங்களை மட்டுமின்றி, உங்கள் கணவரையும் காப்பாற்றி, ஒரு நல்ல தம்பதியினரை எங்களுக்கு அறிமுகமும் செய்துவைத்தது. அது தான் உண்மை.

      ==================================

      வாசக அன்பர்களே, திரு.ஞானப்பிரகாசம் மற்றும் திருமதி.தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினரின் நேர்காணலுக்கு இந்த பதிவை பார்க்கவும்….

      “கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

      – ரைட்மந்த்ரா சுந்தர்

  3. இது வரை இந்த விஷயத்தை ஆழ்ந்து கவனிக்கவில்லை – ‘திரு’ க்குறள், ‘திரு’ வள்ளுவர் மட்டுமே ‘திரு’ என்கிற உயரிய மதிப்பினை பெற்றிருப்பதை. என்ன ஒரு பெருமை மிக்க விஷயம்.

    ஆம், வள்ளுவனும் விவேகனந்தனும் பாரதியும் நம் இந்திய மக்களை உயிர்தேழுப்பி வரலாற்றினில் சாகா வரம் பெற்றுவிட்டனர். அத்தகையவர்களை பேனரில் வைத்தது மிக்க பொருத்தமானது மற்றும் விழாவிற்கும் பெருமை சேர்த்தது.

    அவர்களின் கூற்று படி வாழ்ந்தாலே வாழ்க்கையை ஜெயித்து விடலாம். ஆனால், அது தான் மிக கடினம். அவர்களின் கூற்று எல்லாவற்றையும் பின்பற்ற முடியா விட்டாலும் கூட, ஒரு கூற்றினை பின்பற்றினாலும் போதும்.
    **
    என்ன ஜி அந்த அடுத்த லெவல் சீக்கிரம் சொல்லுங்க. ஆவலாக உள்ளோம். எதையும் நேர்மறையாக சிந்திக்கும் உங்களுக்கு அதிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
    **
    புத்தக விழா தலைமை ஏற்ற திரு.ராஜேந்திரன் அவர்களின் உரை நன்றாக இருந்தது. விழாவிற்கு வந்து தலைமையேற்று சிறப்பித்தமைக்கு நன்றிகள்.

    **
    திருமதி. ஞான பிரகாசம் அவர்களுக்கும் நன்றிகள் திருக்குறளின் அருமையை, சக்தியை கூறியதற்கு.

    வெற்றி நிச்சயம்…

  4. திருக்குறளின் பெருமையை எல்லோரும் அறியும் வண்ணம் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்த திருமதி தமிழ்செல்வி ஞானப்ரகாசத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்/ அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை மிகவும் அழகாக பதிய வைத்து திருக்குறளுக்கு பெருமை சேர்த்து விட்டார்,

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to C. Rajendiran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *