Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

print
பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.

ஜகந்நாதனின் எழில்மிகு தோற்றங்களில் ஒன்று...
ஜகந்நாதனின் எழில்மிகு தோற்றங்களில் ஒன்று…

அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. ஊருக்கு மத்தியில் ஒரு பிரார்த்தனை கூடத்தில் யாராவது மகாவிஷ்ணுவின் பெருமைகளை கூறும் பாகவதத்தை உரக்க படிப்பார்கள். விளக்கம் சொல்வார்கள். இதை கேட்க பலர் செல்வதுண்டு. ஜாதி மற்றும் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் என்பதால் இதில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தாஸியா பாவுரியும் ஒருவர். ஆனால், தாஸியா பாவுரியின் பக்திக்கு இந்த பாகுபாடெல்லாம் அணை போட்டுவிட முடியுமா?

அந்த பிரார்த்தனை கூடத்தின் தொலைவில் நின்று, காதுகளை தீட்டிக்கொண்டு பாகவதத்தை கேட்பார். அந்த காலத்தில் ஜகந்நாதரின் புகழ் பெற்ற பக்தர்களாக விளங்கிய ‘பஞ்ச சேவகர்கள்’ என்பவர்கள் மிகவும் பிரசித்தம். அவர்களுள் ஜகந்நாத தாஸ் என்பவரை நம் தாஸியா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

Dasia 1ஒரு நாள் பலிகான் கிராமத்தை சேர்ந்த சிலர் பூரிக்கு யாத்திரை புறப்பட்டனர்.  தாஸியாவுக்கும் அவர்களோடு போகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரது பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. எனவே அவர்களிடம் ஒரே ஒரு தேங்காயை கொடுத்து பூரியில் ஜகந்நாதரிடம் சேர்பித்துவிடுங்கள் அதுவும் பூரி கோவிலின் நான்கு நுழைவாயில்களில் ஒன்றான அருணை ஸ்தம்பத்தில் தான் இதை சேர்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாதரே அதை பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

“என்னப்பா இது இவர் இப்படி கயிறு திரிக்கிறான்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், தாஸியாவை நோக்கி “யோவ் என்னய்யா தமாஷ் பண்றே? என்னவோ உன் தேங்காய்க்காகத் தான் அங்கே ஜகந்நாதர் காத்துக்கிட்டுருக்குற மாதிரி சொல்றே… போய் வேலையை பாரு என்று நகைத்தனர்.

அவர்களில் ஒருவர், “தாஸியா சொல்றது போல நடக்குதான்னு பார்ப்போமே…. இதுனால நமக்கு என்ன நஷ்டம். ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா அதை நேர்ல பார்க்குற பாக்கியம் கிடைக்குமே ” என்றார்.

இதையடுத்து அவரிடம் தேங்காய் பெற்றுக்கொண்டு பூரிக்கு புறப்பட்டனர் அந்த குழுவினர்.

அங்கே பூரியை சென்றடைந்தபின்னர், அருணை ஸ்தம்பத்தின் கீழே அதை வைக்க, அடுத்த நொடி அந்த தேங்காய் மாயமாய் மறைந்துவிட்டது. அனைவரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.

"

இவர்கள் ஊருக்கு திரும்பி வந்தவுடன், தாஸியா கிட்டத்தட்ட ஒரு கதாநாயகன் போலானார்.

தாஸியாவுக்கு ஜகந்நாதரின் மீதிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் ஜகந்நாதரை தரிசிக்க கால்நடைப் பயணமாக கிளம்பியே விட்டார்.

அவரிடம் நெசவு செய்து சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை கொண்டு ஜகந்நாதனுக்கு ஏதேனும் வாங்கிச் செல்லவேண்டும் என்று விரும்பினார்.அந்த நேரம் பார்த்து ஒரு மாம்பழ வியாபாரி கூடையில் மாம்பழங்களை சுமந்தபடி சென்றான். அத்தனையும் உயர் ரக மாம்பழங்கள். அதை பார்த்த தாஸியா ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை வாங்கிச் செல்ல விரும்பினார். தன்னிடம் இருந்த பணம் அத்தனையும் கொடுத்து அந்த பழங்களை (கிட்டத்தட்ட 40 பழங்கள் இருந்தன) கூடையோடு சேர்த்து விலைக்கு வாங்கி தனது தலையில் சுமந்தபடி பூரி நோக்கி நடக்கலானார்.

பூரியில் ஜகந்நாத ஷேத்ரத்தில் சிம்மத் துவாரத்தை அடைந்தபோது, ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிராமணர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு, நாங்கள் தான் ஜகந்நாதருக்கு மாம்பழங்களை படைப்போம் எங்களிடம் கொடுத்துவிடு என்று நச்சரித்தனர்.  இதன் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாஸியா, “நீங்கள் யாரும் என் ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை படைக்கத் தேவையில்லை” என்றார்.

“அப்போது பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும்? இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய்? இதை இறைவனுக்கு என்று கொண்டு வந்துவிட்டு அவருக்கு படைக்காமல் நீ திருப்பி எடுத்து சென்றால் இதை யாரும் தொடர் மாட்டார்கள்” என்றனர்.

தாஸியா ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து அடி பின்னே வந்தார். கீழே கூடையை வைத்தார்.

கோபுரத்தின் மீதிருந்த நீல சக்கரத்தை பார்த்தபடி, “ஜகந்நாதா இவை உனக்கு உரியவை. உனக்காக நான் கொண்டு வந்தவை. இவர்கள் இதன்பொருட்டு ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்? இவைகளை நானே உனக்கு தருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்” என்று கூறி, இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினார். அடுத்த நொடி அவரது கைகளிலிருந்து இரண்டு மாம்பழங்களும் மாயமாய் மறைந்துவிட்டன.

இப்படியே அனைத்து மாம்பழங்களும் தாஸியா எடுத்து நீட்ட நீட்ட மாயமாய் மறைந்துவிட்டன.

சுற்றியிருந்த அனைவரும் இதை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தனர்.

கண்ணெதிரே நடைபெற்ற இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை. “நீ ஏதோ மந்திர தந்திர வித்தைகளை செய்து மாம்பழங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டாய். நீ ஒரு சூனியக்காரன்” என்றனர்.

"

“என்னது நான் சூனியக்காரனா? உள்ளே சென்று ஜகன்னாதனின் சன்னதியில் பாருங்கள்” என்றார்.

அனைவரும் மூலஸ்தானத்தை நோக்கி ஓட்டமாய் ஓடினர்.

என்ன அதிசயம்… இவர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே செல்லும் வகையில், ஜகந்நாதரின் முன்பு மாம்பழக் கொட்டைகளும், தோல்களும் காணப்பட்டன.

அனைவரும் தாஸியாவின் கால்களில் வீழ்ந்தனர்…..!

“தாஸியா நீ அப்பழுக்கற்ற பக்தன். உண்மையான தொண்டன். உன் பக்தியின் மூலம் இறைவனை அடிமைப்படுத்தியவன். உன் பக்திக்கு முன்னாள் நாங்கள் ஒன்றுமேயில்லை. எங்களை மன்னித்துவிடு” என்று கூறி, ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதிருந்த மாலையை எடுத்து அவருக்கு சூட்டி மரியாதை செய்தனர்.

இதைகக் கேட்ட தாஸியா அவர்களின் பாதங்களில் தான் பதிலுக்கு வீழ்ந்து, அவர்களின் பாத தூளியை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு “ஜகந்நாதனை தினசரி தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற, அவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற நீங்கள் தானே என்னை விட பாக்கியசாலிகள்” என்றார்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

இதன் பிறகு தாஸியா ஏற்கனவே கிராமத்தில் பாகவத உபன்யாசத்தில் பகவானின் தசாவதாரங்களை பற்றி கேட்டு கேட்டு அவற்றை காண ஏக்கம் கொண்டமையால் இங்கே ஜகந்நாதனிடம் “இறைவா… உன் தசாவதார கோலத்தை காண இந்த ஏழைக்கு வாய்ப்பு கிடைக்குமா? அதன் மூலம் இந்த பிறவிப் பயனை நான் அடைய விரும்புகிறேன்” என்று வேண்ட அடுத்த நொடி, பூரி கோவிலின் கருவறைக்கு மேல் உள்ள நீல சக்கரத்தில் தோன்றிய புருஷோத்தமன் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை தசாவதாரங்களை தாஸியாவுக்கு காண்பித்து மறைந்தார்.

இது கற்பனை கதையல்ல. உண்மை சம்பவம். ஜகந்நாதரின் திருவிளையாடல்களில் ஒரு சில துளிகள் தான் இவை. இது போல இன்னும் பல இருக்கிறது. நீங்களும் திருமால் திருவிளையாடலை பரவசத்துடன் படிக்கவிருக்கிறீர்கள்.

பூரி பயணம்!

பூரி மற்றும் ஜகந்நாதர் தொடர்பான அதிசயங்களை எழுத எழுத நமக்கு பூரி செல்லவேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் பூரிக்கு நேரில் செல்லவிருக்கிறோம். நேரில் சென்றால் பலப் பல தகவல்களை தோண்டியெடுத்து, ஜகன்னாதனின் திருவிளையாடல்  தொடர்பான பல இடங்களையும் சென்று தரிசித்து ஆதாரங்களை திரட்டி இன்னும் சிறப்பாக எழுத முடியும். இந்த அத்தியாயத்தில் நீங்கள் பார்த்த தாஸியாவின் ஊருக்கும் சென்று, அவரது  இல்லம், அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பீடம் மற்றும் அவர் நீரெடுத்த, தாமரை பூப்பறித்த குளம், (அந்த குளத்தில் ஒரு டஜன் அதிசயங்கள் நடைபெற்றுள்ளனவாம்!) அவரது திருவுருவச் சிலை இவற்றை பார்க்க ஆவல் கொண்டுள்ளோம். ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து கிட்டத்தட்ட 32 கி.மீ. தொலைவில் தாஸியா வாழ்ந்த ஊரில் அவரது நினைவாக தாஸியா பாவுரி பீடம் எழுப்பப்பட்டுள்ளது.

(திருமால் திருவிளையாடல் தொடரும்…)

==============================================================

அன்பான வேண்டுகோள்!

உயிரினும் மேலான உழைப்பில் விளையும் ரைட்மந்த்ரா பதிவுகளை தயவு செய்து காப்பி & பேஸ்ட் செய்து எங்கும் அளிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பதிவின் லிங்க்கை அளித்து அதன் மூலமே பகிரவேண்டும். உங்கள் நட்பு வட்டங்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் முகநூல், இ-மெயில், டுவிட்டர் போன்றவை மூலம் இந்த பதிவை பகிர்ந்துகொள்ள தனித்தனி வசதிகள் பதிவின் துக்கத்திலும் இறுதியிலும் உள்ளன. அவற்றை பயன்படுத்தவும். காப்பி பேஸ்ட் செய்து FORUM களில் வெளியிடும்போது அங்கிருந்து நமது படைப்புக்கள் நமது பெயரின்றி வெளியே சென்றுவிடுகின்றன. கடைசியில் நமது தளத்தின் பெயரின்றி அவை உலவுகின்றன. புரிதலுக்கு நன்றி!!

==============================================================

For earlier episodes…

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

==============================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

==============================================================

Also check :

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==============================================================

[END]

6 thoughts on “ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

  1. மெய் சிலிர்க்கும் பதிவு.
    ஜகன்னாதரின் புகைப்படம் வெகு அழகு.
    தங்களின் பூரி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    நன்றி

  2. ஜகன்நாதரின் திருவிளையாடல்களுக்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. இந்த பதிவு அற்புதம். ஸ்ரீ மஹா பக்த விஜயம் நூலில் பாண்டுரங்கர் மற்றும் ஸ்ரீ ராமனின் லீலைகள் மற்றும் அவர்களது பக்தர்களுக்காக அவர்கள் செய்த அதிசயங்கள் நிறைய இருக்கின்றன. திரும்ப திரும்ப நான் படித்து கொண்டேயிருக்கின்றேன். எல்லாமே ஐநூறு வருடங்கள் முன்னால் நடந்ததுதான். படிக்க படிக்க பக்தி இல்லாதவர்களுக்கு கூட தானாக பக்தி வந்து மஹா விஷ்ணுவின் கருணையை உணர்வார்கள்.

    நமது வாசகர்கள் அந்நூலை படிக்கவும். அது தவிர அந்நூல் நமது வீட்டில் இருந்தாலே சகல நலனும் கிடைக்கும். தெரிந்தவர்களுக்கும் சொல்லவும். அவர்களும் பயன் பெறட்டும்.

    நன்றி.

    1. பக்த விஜயத்தை பற்றியும் அதன் சிறப்புக்களை பற்றியும் பல பதிவுகளை நம் தளத்தில் இதுவரை அளித்திருப்பதோடு அதை ஆன்லைனில் வாங்க லிப்கோவின் முகவரியையும் அளித்திருக்கிறேன்.

      http://rightmantra.com/?p=1240

      ஆனால் தாஸியாவின் கதை பக்த விஜயத்தில் இல்லை.

  3. ஜகந்நாதர் கோயில் பல
    அற்புதங்களின்
    உறைவிடம் என்று
    கூறப்படுகிறது. அவற்றில் சில:
    கோயில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி
    காற்றடிக்கும் திசைக்கு
    எதிர் திசையில்
    பறக்கும்.
    கோயில் அ
    இடமான பூரி
    என்ற நகரில் நின்று எந்தப் பக்கத்தில்
    இருந்து
    பார்த்தாலு
    இருக்கும் சுதர்சன
    சக்கரம்
    காண்பவரை நோக்கியே
    இருக்கும்.
    பொதுவாக காலையிலிருந்து
    மாலை
    வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து
    நிலத்தை
    நோக்கியும்
    மாலை
    முதல் இரவு
    முழுவது
    நிலத்திலிருந்து கடலை
    நோக்கியும் வீசுவது
    இயற்கை. ஆனால் பூரியில் இதற்கு நேர்எதிரான திசை நோக்கிக்
    காற்று வீசும்.
    இக்கோயிலின் முதன்
    நிழல் பகலில் எந்த
    நேரத்திலும்
    கண்களுக்குப் புலப்படுவதில்லை.
    கோயிலின் உள்ளே சமைக்கப்படு
    உணவின் அளவு ஆண்டின்
    அனைத்து
    நாட்களிலு
    ஒரே அளவாகவே
    இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள்
    எண்ணிக்கை லட்சக்கணக்கில்
    கூடினாலும்,
    குறைந்தாலு
    சமைக்கப்பட்ட உணவு
    போறாமல்
    போனதும் இல்லை,
    மீந்து
    இருந்ததும்
    இல்லையாம்.
    இக்கோயிலின் நுழைவாயிலான சிங்கத்துவாராவின்
    முதல்படியில் கோயிலின்
    உட்புறமாகக்
    காலெடுத்து வைத்து
    நுழையும்போது கடலில்
    இருந்து வரும்
    அலையோசை கேட்காது. ஆனால்
    அதே சிங்கத்துவராவின்
    முதல் படியில் கோயிலின்
    வெளிப்புற
    வரும்போது கடலில்
    இருந்து வரும்
    அனைத்து
    சப்தமு
    கேட்கும். இதனை
    மாலை
    நேரங்களில் தெளிவாக உணர
    முடிய

  4. திருமால் திருவிளையாடல் தொடர் மிக மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, முந்தைய பதிவுகளில் விரட்டப்பட்ட பக்தருக்காக தடுத்தாட்கொள்ளல், பக்தனுக்காக தேரோட்டம் நிறுத்திய பூரி ஜகன்னாதர் என்ற வரிசையில் ஜகன்னாதர் சாபிட்ட மாம்பழங்கள். என்னே..!திருமாலின் திருவிளையாடல் ..

    பக்தனின் மீது எத்துனை அன்பிருந்தால் இது போன்ற நிகழ்வு நடந்தேறும். ஜகன்னாதரின் எழில்மிகு தோற்றத்தில் சொக்கி தான் போனேன். தங்களின் பூரி பயணம் சிறக்க எம் வாழ்த்துக்கள்.

    நன்றி அண்ணா..

  5. ஜகன்னாதரின் திருவிளையாடல் தொடர் மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் பதிவாக விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு பதிவிலும் அவர் தனது உண்மையான பக்தனை தடுத்தாட்கொண்ட விதம் பற்றி படிக்க படிக்க பூரி ஜகன் நாதரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

    தாசியா கதையை தெரிந்து கொண்ட நாங்கள் பாக்கியசாலிகள்

    தங்கள் பூரி பயணம் திட்டமிட்டபடி இனிதே அமைய வாழ்த்துக்கள். தங்களின் பூரி பயண ஆராய்ச்சியின் மூலம் பல அறிய தெரியாத தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்ளலாம்

    வாழ்க …. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to sampathkumar.j Cancel reply

Your email address will not be published. Required fields are marked *