Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

print
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை. ‘ஜெய் ஹிந்த்’ என்ற ஒரு சொல் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் தேசபக்தியை கொழுந்துவிட்டெரியச் செய்தவர். இன்று நேதாஜியின் நினைவு நாள். அவர் மறைந்ததாக சொல்லப்படும் நாள். அவர் மரணம் குறித்து ஆணித்தரமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படும் நாள் இன்று தான். அவருடைய உடலுக்கு தான் மறைவே தவிர அவருடைய பெயருக்கு அல்ல.

DSCN0678

DSCN0775
சென்னையின் பெருமிதம் – நேதாஜி இரு முறை தங்கிய ‘காந்தி பீக்’ இல்லம்

இன்று காலை எழும்போதே நேதாஜியின் சென்னை வந்தபோது சில நாட்கள் தங்கிய – ராயப்பேட்டையில் உள்ள ‘காந்தி பீக்’ இல்லம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் நேதாஜியின் மூச்சுக் காற்று பட்ட அந்த இல்லத்தில் மீண்டும் நம் கால் பதிக்க விரும்பினோம். வீட்டு உரிமையாளர் திரு.தனஞ்செயனை தொடர்புகொண்டு நமது விருப்பத்தை தெரிவித்தோம். மதியம் 4.00 – 5.00 க்குள் வரச் சொன்னார்.

Netaji_Gandhi Peak 1

நமக்கு ராயப்பேட்டையில் வேறொரு வேலையும் இருந்தது. அதாவது கிளிகளின் தந்தை சேகர் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான உதவியை வழங்குவது. நமது நண்பர் ஒருவர் அனுப்பிய தொகையுடன் நமது தளம் சார்பாகவும் சேர்த்து சேகர் அவர்களுக்கு காசலை வரைந்து எடுத்துக்கொண்டோம். சேகர் அவர்களுக்கு போன் செய்து நேதாஜியின் நினைவு நாளை முன்னிட்டு ‘காந்தி பீக்’ இல்லத்திற்கு நாம் வரும் விஷயத்தை கூறி, அவரும் அங்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். தான் அதே தெருவில் இருந்தாலும் இதுவரை அந்த இல்லத்திற்கு சென்றதில்லை என்றும் இதை வாய்ப்பாக வைத்து வருவதாகவும் சொன்னார். (அந்த இல்லத்திற்கு நான்கைந்து வீடுகள் தள்ளி தான் சேகர் அவர்களின் வீடும் இருக்கிறது.)

நேரே ராயப்பேட்டை மார்கெட் சென்று ஒரு மாலை வாங்கிக்கொண்டு காந்தி பீக் சென்றோம். நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்தில் நாம் வந்துவிடுவோம் நீங்களும் வந்துவிடுங்கள் என்று சேகர் அவர்களிடம் சொன்னதால் சேகர் அவர்களும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டார்.

Netaji_Gandhi Peak 2

காந்தி பீக் இல்லத்தின் உரிமையாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் நம்மை வரவேற்றார்.

தனஞ்செயன் அவர்களிடம் சேகர் அவர்களை அறிமுகப்படுத்தி கிளிகளை அவர் சம்ரட்சணம் செய்து வரும் விஷயத்தை சொன்னோம்.

Netaji_Gandhi Peak 7

தனஞ்செயன் “நான் தான் தினமும் கிளிகளை பார்க்கிறேனே… இயற்கை அதிசயம் அது. நானே உங்களை நேர்ல பார்க்கனும்னு நினைச்சிகிட்டுருந்தேன் சார்… சுந்தர் புண்ணியத்துல பார்க்க வாய்ப்பு கிடைச்சது சேகர் சார்!”

“நானும் இந்த வீட்டுக்கு வரணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன். சுந்தராலே இதுவும் இப்போ சாத்தியமாச்சு… அதுவும் நேதாஜியின் நினைவு நாளான இன்னைக்கு…” என்றார் திரு.சேகர்.

மூவரும் சிறிது நேரம் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். இன்று தூர்தர்ஷனில் திரு.தனஞ்செயன் அவர்களை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த பேட்டியை மறுஒளிபரப்பு செய்ததாக சொன்னார்.

Netaji_Gandhi Peak 3

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திருமதி.தனஞ்செயன் அவர்கள் எங்கள் அனைவருக்கும் டீ போட்டு கொண்டுவந்தார். டீ சாபிட்டுவிட்டு மேலே மாடியில் நேதாஜி தங்கியிருந்த அறைக்கு சென்றோம்.

அங்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினோம்.

தனக்கு தெரிந்த அவரது தந்தையும் தாத்தாவும் சொல்லி கேட்ட நேதாஜியின் நினைவுகள் சிலவற்றை பகிர்ந்துகொண்டார் தனஞ்செயன்.

தனஞ்செயன் அவர்களுடனான சந்திப்பு நமது தளத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது. (சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!)

பின்னர் சேகர் அவர்களுக்கு ரூ.3000/- த்துக்கான காசோலையை அளித்தோம்.

Netaji_Gandhi Peak 5

நேதாஜி தங்கிய அறையில் தமக்கு அதுவும் அவரது நினைவு நாளான இன்று தமக்கு இது கிடைத்தது மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார் திரு.சேகர்.

சில வினாடிகள் கண்களை மூடி பிரார்த்தனை செய்தோம். “நேதாஜி, அரும்பாடுபட்டு பல தியாகங்களை செய்து உங்களை போன்ற தலைவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை இளைய தலைமுறையினர் உணரவில்லை. சுதந்திரத்தின் அருமையையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஜெய் ஹிந்த்!”

பின்னர் தனஞ்செயன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

Netaji_Gandhi Peak 4

நேதாஜியின் தங்கிய அறையை தரிசித்தது மறக்கமுடியாத அனுபவம் என்றார் திரு. சேகர்.

அவருடன் சென்று கிளிகள் வந்து செல்லும் அழகை ரசித்துவிட்டு புறப்பட்டோம்.

நேதாஜியின் நினைவு நாளை முன்னிட்டு அவர் வாழ்வில் நடந்த நெஞ்சை நெகிழ வைக்கும் இரண்டு சம்பவங்களை தந்திருக்கிறோம்.

படித்து முடிக்கும்போது உங்கள் மனதில் தோன்றக்கூடியது ஒன்றே ஒன்று தான். அதை இறுதியில் சொல்லியிருக்கிறோம்.

=================================================================

சம்பவம் 1

நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழிக்கு சரியான உதாரணமாக விளங்கியவர் நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

சுபாஷ் சந்திர போஸ் பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றார். கடும் கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் மிக்க பள்ளி அது. வங்காள மாணவர்களுக்கோ அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் சுபாஷுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. எனவே படிப்பில் நல்ல ஆர்வத்தை செலுத்தி நன்றாக கல்வி கற்றான்.

Bose copyஅந்த பள்ளியில் எல்லாம் இருந்தாலும் ஒரு மாபெரும் குறை இருந்தது. ஆங்கிலேயே மாணவர்களும் அந்த பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இனவெறி மிக்கவர்களாக இருந்தனர். நம் மண்ணின் மைந்தர்களை சமயம் கிடைக்கும்போதெல்லாம் இழித்தும் பழித்தும், கேலி கிண்டல்கள் செய்தும் வந்தனர்.

சுபாஷின் வகுப்பில் படித்த சக வங்காள மாணவன் ஒருவன், ஒரு வெள்ளைக்கார துரையின் மகனின் புத்தகத்தை தொட்டுவிட்டான்.

“ஏய்… கருங்குரங்கே…. என்ன தைரியம் இருந்தால் என் புத்தகத்தை நீ தொடுவாய்? என் அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அம்மாணவனை மிரட்டிக்கொண்டிருந்தான்.

அம்மாணவனோ மிகவும் பயந்துவிட்டான். “தெரியாமல் தொட்டுவிட்டேன். சாரி…!” என்றான்.

வெள்ளைக்கார மாணவனோ அதை ஏற்கவில்லை. இந்திய மாணவனை பல கேட்ட வார்த்தைகளால் ஏசி, மாணவனின் காதை பிடித்து திருகி பலவாறு துன்புறுத்தினான்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுபாஷூக்கு நரம்புகள் புடைத்தன. இருப்பினும் பள்ளியில் கண்ணியம் காக்கவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தான்.

"

வகுப்புக்கள் நிறைவடைந்தவுடன், வெள்ளைக்கார சிறுவனால் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட நம் மாணவனை பார்த்து, “அவன் செய்த அனைத்தையும் ஏன் சகித்துக்கொண்டிருந்தாய்?” என்று கேட்டான்.

“அவன் அப்பா பிரிட்டிஷ் இந்தியா அரசில் பெரிய அதிகாரி. நான் ஏதாவது செய்யப்போய் அவரால் எங்கள் குடும்பத்திற்கு ஏதும் தொல்லை வரக்கூடாது என்பதால் பொறுமையாக இருந்தேன்” என்றான்.

“நான் என்ன செய்கிறேன் என்பதை பொறுத்திருந்து பார்” என்று கூறி, பள்ளியை விட்டு வெளியே வந்த வெள்ளைக்கார சிறுவனிடம் போய், “ஏன் எங்கள் சக மாணவனை தவறாக நடத்தினாய்?”

“அதைக் கேட்க நீ யார்? கருங்குரங்கே…!” என்றான் சுபாஷை பார்த்து அந்த சிறுவன்.

“என்ன தைரியம் உனக்கு?” என்று கோபத்தில் வெடித்த சுபாஷ் அந்த சிறுவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளினான். இத்தனைக்கு சுபாஷைவிட அவன் நன்கு வளர்ந்திருந்தான் பலசாலி வேறு. ஆனால், நம் சுபாஷின் ஆன்ம பலத்திற்கு முன்னர் அது எம்மாத்திரம்?

இதைப் பார்த்தவுடன் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தைரியம் வந்தது. தன் பங்கிற்கு அந்த வெள்ளைக்கார சிறுவனுக்கு இரண்டு தர்மடிகள் விழுந்தன.

“இனி எங்களை குறைத்து மதிப்பிடாதே… உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் சுபாஷ்.

"

பிற்காலத்தில் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

சம்பவம் 2

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு குரல் கொடுக்கிறதா?

விடுதலை போராட்டம் இந்தியாவில் மிக தீவிரமாக இருந்த நேரம். அப்போதெல்லாம் போலீஸார் ஒருவரை கைது செய்ய காரணமே தேவையில்லை. அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினார் என்று காரணத்தை காட்டி நேதாஜி அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போஸை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து கைது செய்திருந்தனர்.

போஸைத் தவிர இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்றோர் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறைக்குள் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடிக்கும். வெறி கொண்ட போலீஸார் கைதிகளை ‘நன்கு’ கவனிப்பார்கள்.

Netaji

அப்படி ஒருமுறை ஒரு கைதியை காட்டுமிராண்டித் தனமாக அடித்துக்கொண்டிருந்ததை போஸ் பார்த்துவிட்டார்.

சிறு வயதில் சகமானவனை காதை பிடித்து திருகியதற்கே பதிலடி கொடுத்தவராயிற்றே…. சும்மாயிருப்பாரா?

"

“ஏன் இந்த அப்பாவியை போட்டு இப்படி அடிக்கிறீர்கள்? ஒரு கைதியிடம் போய் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லை?” என்றார்.

யாரது நமக்கு எதிராக இப்படி கர்ஜிப்பது?

திரும்பிப் பார்த்த சிறைக்கவலர்களுக்கு கோபம் கொப்பளிக்க போஸ் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

“நீயே இங்கே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு குரல் கொடுக்கிறதா?” என்று எகத்தாளமாக சிரித்தனர்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. :
9120 2005 8482 135
Account type :
Current Account
Bank :
Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code :
UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நம் தளம் மேலும் மேலும் வளர,  உங்கள் பங்களிப்பு அவசியம்!

“எங்கள் அடிமைத் தளை அறுபடும் நாள் சீக்கிரமே வந்துவிடும். ஆனால் நீங்கள் கைக்கூலிகள் என்ற பெயரில் தான் இருப்பீர்கள்!”

சிறை அதிகாரிகளின் கோபம் தலைக்கேறியது. என்ன துணிச்சல் இவனுக்கு? இவனுக்கு நிச்சயம் ஏதேனும் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தனர்.

எந்தக் கைதிக்கு பரிந்து போஸ் பேசினாரோ அதே கைதியை கொண்டு அவரை அடிப்போம் என்று முடிவு செய்து, அடி தாங்காமல் சுருண்டு ஓரமாக கிடந்த கைதியிடம் “போஸை அடித்தால் உன்னை அடிக்காமல் விட்டுவிடுகிறோம்” என்று சொன்னார்கள்.

ஒரு நிமிடம் தயங்கினான். பின்னர் என்ன நினைத்தானோ போஸை அடிக்கத் தொடங்கினான். எத்தனையோ ஆங்கில வீரர்களின் அடிகளை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட போஸால், தன் சொந்த சகோதரனின் அடியை தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அடி தாங்காமல் படிகளில் உருண்டார் போஸ்.

இது தான் உலகம். இது தான் வாழ்க்கை. போஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

=================================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 5

Pic 1வெற்றிலை விதிகள்!

தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

டிப்ஸ் தொடரும்…

=================================================================

Also Check :

சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

=================================================================

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின்  குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

=================================================================

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

[END]

5 thoughts on “நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

  1. நேதாஜியின் பதிவு மிக அருமை. அந்த காலத்தில் வெள்ளையனிடமிருந்து நம் நாட்டை மீட்பதற்கு எவ்வளவு தியாகங்களை செய்து அடி வாங்கி நம் நாட்டை மீட்டிருக்கிறார்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். அனால் இன்றைய இளைய சமுதாயம் நடிகர்களின் பின்னே வால் பிடித்து கொண்டு அவர்களை மென்மேலும் பணக்காரர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.

    இப்பொழுதுதான் நல்ல மனம் படைத்த பேர் விழித்து கொண்டு ஆக்க பணியினை துவக்கியுள்ளர்கள். அனைத்து இளம் தலைமுறையினரும் அவர்களை பின்பற்றி ஒற்றி நடந்தால் நாடும் பயன் பெறும். அவர்களும் பயன் பெறுவார்கள்.

    வாழ்க நம் தாய் திரு நாடு.

  2. நேதாஜியின் நினைவு நாளன்று அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று கௌரவித்தமைக்கு நன்றி.

    ரமா ஷங்கர் அவர்கள் கூறியுள்ளது போல நாட்டுக்காக போராடியவர்களை மறந்துவிட்டு தங்களை சுரண்டும் திரைப்பட நடிகர்கள் பின்னே இளைஞர்கள் செல்வது வேதனைக்குரியது. சில பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர்களின் ரசிகர்கள் வைக்கும் அலங்கார பேனர்களின் செலவுகள் மட்டும் எங்கள் ஊரிலேயே பல லட்சங்கள் ஆகும். இதற்க்கெல்லாம் அந்த நடிகர்களா பணம் தருகிறார்கள்?

    இவர்கள் பெற்றோர் பாடுபட்டு சேர்த்த பணத்தை இவர்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை இப்படி வீணாகுகிறார்கள். அந்தப் பணத்தில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு கரும்பலகை, பெஞ்ச் உள்ளிட்ட ஏதாவது செய்தால் கூட உபயோகமாக இருக்கும்.

    நேதாஜி அவர்களின் இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று நேர் காண்டிராஸ்ட். கண்களில் நீரை வரவைக்கிறது.

    நேதாயின் நினைவு நாளில் சேகர் அவர்களுக்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி. அதுவும் தகுதியுடைய ஒருவரின் கரங்கள் மூலம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    சம்பந்தப்பட்ட அனைவருக்கும், இந்த அற்புத பதிவை அளித்த உங்களுக்கும் என் நன்றி.

    ஜெய்ஹிந்த்

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. வணக்கம் சுந்தர்.இதுதான் நம்மிடம் இருக்கும் பெரிய குறை. நமக்கு சப்போர்ட் செய்தவரை காட்டிகொடுப்பது ,அடிப்பது என.இதனாலே பல மாபெரும் இயகயங்கள் பல வெற்றி பெறாமலே போய்விட்டன.டிப்சும் ,கட்டுரையும் அருமை. நன்றி

  4. திரு நேதாஜியின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து அவர் தங்கி இருந்த இருப்பிடத்திற்கு சென்று மாலை அணிவித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    திரு சேகரையும், திரு தனஞ்சயனையும் மீட் பண்ண வைத்து அவர்கள் இருவரையும் நெகிழச் செய்த இடம் அருமை.

    முதல் சம்பவம், நேதாஜியின் வீரத்தையும், நாட்டுபற்றையும் பறைசாற்றுகிறது . இரண்டாவது சம்பவம், நெஞ்சை நெகிழச் செய்கிறது. உதவி செய்பவர்களை எட்டி உதைத்து, உதாசீனப் படுத்தும் உலகம் இது.

    தேசப் பற்றுள்ள பல பதிவுகளை நம் தளத்தில் எதிர் நோக்குகிறோம்.

    வாழ்க …… வளமுடன்

  5. வெற்றிலை விதிகள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

Leave a Reply to UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *