Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

print
மிகப் பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த அந்த செல்வந்தருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பொறுப்புக்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஓய்வு பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவருக்கு ஒரே மகன். மகனை ஒழுக்கமுடன் வளர்த்து வந்தபோதும் ஒரு தைரியமோ ஆண்மையோ இல்லாமல், ஒரு சிறு பிரச்னையை சவாலை கூட எதிர்கொள்ள பக்குவமின்றி அவன் வளர்ந்து வந்தான். மகன் இப்படியிருக்கும்போது அவனிடம் எப்படி வணிகத்தை ஒப்படைக்கமுடியும்?

எனவே அவனை தனக்கு தெரிந்த ஒரு மல்யுத்த பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றான்.

Courageபயிற்சியாளர் சொன்னார், “உங்கள் மகனை நான் எனது மல்யுத்த பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் மகனை இரண்டு மாதங்கள் இங்கே விட்டுவிட்டு செல்லவேண்டும். இந்த இரண்டு மாதமும் நீங்கள் அவனை திரும்பி கூட பார்க்கக்கூடாது. 60 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு அவனது முன்னேற்றம் குறித்து திருப்தி ஏற்படும். அதுமட்டுமல்ல அவனை குறித்த பெருமிதமும் ஏற்படும் வண்ணம் அவன் மாறியிருப்பான்” என்றார்.

செல்வந்தனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இவர் தான். எனவே நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு மகனை அங்கே விட்டுவிட்டு சென்றார். அறுபது நாட்களுக்கு மகனைப் பற்றிய எந்த கவலையுமின்றி தனது வணிகத்தில் கவனம் செலுத்தினார்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு பயிற்சியாளர் ஒரு மல்யுத்த போட்டியை ஏற்பாடு செய்து, அதில் செல்வந்தனின் மகனையும் வேறொரு திறமையான மல்யுத்த வீரரையும் பங்கேற்க செய்தார்.

போட்டி துவங்கியபோது, தனது மகனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் வீரரை பார்த்தவுடன், செல்வந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது. நல்ல கட்டுமஸ்தான உடலுடன் மிருக பலம் பொருந்தி காணப்படும் இவரை எங்கே தன் மகன் ஜெயிக்கப்போகிறான் என்று கருதி முகம் வாடிப்போனார்.

செல்வந்தர் எதிர்பார்த்தது போலவே, எதிராளி விட்ட முதல் குத்திலேயே இவர் மகன் கீழே சுருண்டு விழுந்தான். ஆனாலும் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு எழுந்து, தனக்கு தெரிந்த துளியூண்டு வித்தையை காண்பித்தான். அப்படியும் எதிராளியின் குத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்தான். இப்படியே பல முறை நடந்தது.

"

இதை பார்த்துக்கொண்டிருந்த அவனது தந்தைக்கோ ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. இருப்பினும் எதையும் சொல்லத் துணியவில்லை.

இறுதியில் செல்வந்தரின் மகன் தோற்றுவிட, எதிராளி ஜெயித்துவிட்டான்.

பயிற்சியாளர் செல்வந்தரிடம் திரும்பி, “உங்கள் மகன் எப்படி பெர்ஃபாமன்ஸ் செய்தான் பார்த்தீர்களா? அதில் அவன் வீரத்தை கவனித்தீர்களா?”

“என்னத்தை சொல்றது…. அவனை நினைச்சா எனக்கு வெட்கமா இருக்கு. ரெண்டு மாசம் பயிற்சி எடுத்தும் கூட பிரயோஜனமில்லையே. அவனுக்கு ஆண்மை, வீரம் இதெல்லாம் இனி வரும்கிற நம்பிக்கை எனக்கு இல்லே…”

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. :
9120 2005 8482 135
Account type :
Current Account
Bank :
Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code :
UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நம் தளம் மேலும் மேலும் வளர, தொய்வின்றி தொடர் உங்கள் பங்களிப்பு அவசியம்!

பயிற்சியாளர் சொன்னார்…”உங்க அறியாமையை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. வெற்றி, தோல்வி இதையெல்லாம் மேலோட்டமாத் தான் நீங்க பார்க்குறீங்க. ஒவ்வொரு முறையும் உங்க பையன் கீழே விழும்போதும், திரும்பி தானா எழுந்து நிக்கிற தன்னம்பிக்கை அவனுக்கு இருந்ததை கவனிச்சீங்களா? கீழே விழுந்ததைவிட மேலே அதிகம் எழுந்தான். என்னைப் பொருத்தவரைக்கும் அது தான் வெற்றி. ஒரு உண்மையான வீரனிடம் இருக்கவேண்டியது அது தான்! கீழே விழுவது தோல்வியில்லை. விழுந்து கிடப்பது தான் தோல்வி. தோல்வியிலிருந்து பாடம் கற்காமல் போனால் அது தான் உண்மையான தோல்வி. இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு கிடைத்தது வெற்றியா தோல்வியா?”

"

செல்வந்தனுக்கு கண்கள் திறந்தன. “நீங்கள் சொல்வது உண்மை தான். என் மகனுக்கு சுயமாக எழுந்து நிற்கவேண்டும் என்கிற தன்னம்பிக்கை இருக்கிறது. இது போதும். இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! மிக்க நன்றி!!” என்று கூறிவிட்டு அவருக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு மகனை அழைத்துச் சென்றார்.

Real failure

நாம் ஏதேனும் ஒரு புதிய செயலை செய்யும்போது உடனடி பலன்களை எதிர்பார்க்கக்கூடாது. அந்த செயலை நாம் செய்யும் போது நமக்கு கிடைக்கும் அனுபவமும், அதை முடிக்க நாம் மேற்கொண்ட முயற்சிகளும் விலை மதிப்பற்றவை. வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகவே இருந்தால் வெற்றியின்போது அது ருசிக்காது. பல தோல்விகளுக்கும் இடறி விழுதல்களுக்கும் பிறகு கிடைக்கும் வெற்றியே மகத்தான ஒன்று.

தோல்வியின் போதும் கீழே விழும்போதும் நமக்கு கிடைக்கும் பாடங்களையும் அனுபவங்களையும் வைத்துக்கொண்டு வெற்றிக்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறவேண்டும். அது தான் உண்மையான வெற்றி!

================================================================

ரைட்மந்த்ரா பதிவுகள் அனைத்தும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது. கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, பொருளாதார ரீதியான ஆதாயங்களுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். பதிவை உங்கள் நட்பு வட்டத்திடமும் சுற்றத்தினரிடமும் பகிர / மின்னஞ்சல் செய்ய தனி வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தவும். நன்றி.

================================================================

Bairavaநல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 3

தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்க!

சிலருக்கு முக்கியமான பொருட்கள் / விலை மதிக்க முடியாத பொருட்கள் கவனக்குறைவால் தொலைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் செய்யவேண்டிய எளிமையான பரிகாரம் இது.

ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, 27 மிளகை சிறு வெள்ளைத் துணியில் மூட்டை போல கட்டி, அதை விளக்கில் போட்டு, கால பைரவர் சன்னதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஏற்றி வந்தால் தொலைந்த பொருள், இழந்த பொருள் நிச்சயம் திரும்ப கிடைக்கும்.

விளக்கேற்றிய பின்னர் ‘ஓம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீ கால பைரவாய நமஹ!’ என்கிற மந்திரத்தை மனதார உச்சரித்தபடி பைரவர் சன்னதியை ஒன்பது சுற்று வருதல் சிறப்பு.

டிப்ஸ் தொடரும்…

================================================================

Also check for more motivational stories :

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

 

3 thoughts on “எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

  1. வெற்றி தோல்வி குறித்த அலசல் மிக மிக அருமை.

    உண்மை தான் நாம் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.

    விழுவதில் சிறுமை இல்லை. விழுந்து கிடப்பதில் தான் சிறுமை உள்ளது என்பதை ஆணித்தரமாக விளக்கும் பதிவு.

    பயிற்சியாளர் தோல்வி பற்றி நுட்பமான கருத்தை இளைஞனின் தந்தைக்கு எடுத்துக்கூறிய பின்னர், அவர் ஏற்றுகொள்கிறார் பாருங்கள், உண்மையில் ரசித்த இடம் அது. காரணம், நாம் எந்தவொரு விஷயத்தை அணுகும் முறையில் தான் அது நல்லதா கெட்டதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

    நல்வாழுவ்க்கொரு டிப்ஸ் அருமை. மிகவும் பயனுள்ள தகவல். தொடரட்டும் உங்கள் பணி.

    பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. நாம் செய்யும் தவறுகளிருந்து தான் உணமையான வெற்றியின் பாதையை கற்றுக் கொள்ள முடியும். எடுத்தவுடன் வெற்றிக்கனியை சுவைத்தால் நமக்கு தோல்வியை பற்றி அறிய வாய்ப்பு கிடைக்காது

    .//FAILURE IS THE STEPPING STONE TO SUCCESS //

    வெற்றியின் ரகசியத்தை ஆணித் தரமாக பதிய வைத்ததற்கு நன்றிகள் பல

    நல்வாழ்வு டிப்ஸ் அருமை.

    வாழ்க வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. வெற்றியின் ரகசியம் ? என்ன என்பது மிக சிறந்த உதாரணத்துடன் சொன்னது தான் இந்த பதிவின் ரகசியம். விடாமுயற்சி மட்டுமே வெற்றியை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்றும் உண்மையை மேலும் தெளிவாகியது நன்று.

    தங்களின் தன் நம்பிக்கை (தன்னம்பிக்கை ) கட்டுரை அனைத்தும் சூப்பர்.
    மிக்க நன்றி அண்ணா..

Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *