Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

print
றைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு ஆன்மீகக் கருவூலம் என்பது அனைவரும் அறிந்ததே. பக்தர்களுக்கு ஏற்படும் எவராலும் தீர்க்க முடியாத மிகப் பெரிய சந்தேகங்களையும் அனாயசமாக தீர்த்துவைப்பவர். முக்காலமும் உணர்ந்த மகான். அவர் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களை பற்றி படித்திருக்கிறேன்.

சிறுவயதில் தந்தையுடன் ஒரு முறை காஞ்சி மடம் சென்று அவரை தரிசித்திருக்கிறேன். ரொம்ப சிறிய வயது என்பதால் சரியாக நிகழ்வுகள் நினைவில் இல்லை. அதன் பிறகு சென்னையில் சென்ற ஆண்டு அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற ஹிந்து சமய ஆன்மீக கண்காட்சிக்கு நண்பர் ஒருவர் கூறிய தகவலின் படி சென்றிருந்தேன். நீங்கள் அவசியம் அங்கு செல்லவேண்டும் அங்கு உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்றார். எனவே நண்பர் சிட்டியை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அப்போது தான் பரமாச்சாரியாரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. காஞ்சி காமகோடி ஸ்டாலில் அவரை திடீரென்று பார்த்தவுடன் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இவர் எப்படி இங்கே என்று ஓரிரண்டு மைக்ரோ வினாடிகள் திகைத்தேன். சில வினாடிகள் கழித்து தான் புரிந்தது மகா பெரியவரைப் போன்றே அசல் தோற்றமுடைய சிலா ரூபத்தை வடிவமைத்திருக்கின்றனர் என்பது. அவரின் பாதங்களை தொட்டு வணங்கி புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

நாளை அனுமத் ஜெயந்தி. அதை முன்னிட்டு நம் தளத்தில் அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் பதிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

அனுமனுக்கு வடைமாலை சாத்துவது ஏன் என்பதற்கு பெரியவா கூறியிருக்கும் கீழ்கண்ட விளக்கத்தை படிக்கவும். நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களின் உள்ளர்த்தம் நமக்கு வியப்பை அளிக்கிறது. அது குறித்த பெரியவரின் ஞானம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. – சுந்தர்

————————————————————————————————————————–

அனுமனுக்கு இங்கே வடைமாலை அங்கே ஜாங்கிரி – ஏன் இப்படி? காரணம் என்ன?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.

“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”

பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.

ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

[button size=”large” style=”tick” bg_color=”#000000″]இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். [/button]

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.

வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

நன்றி :  மஹா பெரியவா | நூலாசிரியர் : பி. சுவாமிநாதன் [via] thapas.wordpress.com

[END]

10 thoughts on “ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

  1. இவரை போல் ஒரு ராம பக்தன் இருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான் அவ்வளவு பக்தி அது திரு அனுமன் கதைகளை படித்தால் நமக்கு தெஇர்யும் அவர் செய்த ஒவ்வொரு செயல்களுமே ராம பிரானுக்காக தான் என்று புரியும்

    அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள்

  2. மிகவும் அருமை. அனேக மக்கள் தாம் ஏன் வடை மாலை சாத்துகிறோம் என்று தெரியாமல் இருகிறார்கள். என்னையும் சேர்த்து தான். 🙂
    இம்மாதிரி யான விளக்கங்கள் மக்களிடம் போய் சேரவேண்டும்.
    உங்களது இந்த பதிவால் ஒரு 500 பேருக்காவது இந்த விஷயம் சென்றடையும் என்று நம்புகின்றேன்.
    வாழ்க வளர்க.

  3. அடடா என்ன அருமையான விளக்கம் – மகா பெரியவர் தனக்கே உரிய பாணியில் சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் அதே சமையம் தெளிவாகவும் சொல்லி எல்லோருடைய சந்தேகத்தை போக்கி ராகு தோஷ நிவர்த்தி முறையும் நமக்கு அளித்திருக்கிறார் !!!

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !!!

    தகவல்களுக்கு மிக்க நன்றி !!!

  4. வணக்கம் ,
    இக் காலத்திற்கு உகந்த பதிவு.
    உங்களுடைய பதிவுகளை பார்க்கும் தமிழன் ஒவ்வொருவனும் நிச்சயமாய் ஒரு தெய்வீக உணர்வை உணர முடியும்.
    உங்கள் இந்த தன்னலமற்ற சேவைக்கு இந்த சிறுவனின் பணிவான வாழ்த்துக்கள் கலந்த நன்றிகள்.

    சதுரகிரி, பொதிகைமலை, திருவண்ணாமலை,போன்ற தொன்மை வாய்ந்த ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்த அனுபவம் இருந்ததால் அதையும் பதிவிடலாமே , ஏனென்றால் உங்கள் கட்டுரைகளை படிக்கும் போது நாமும் அவ்விடத்தில் இருப்பது போலவே உணர்கிறோம் .
    நன்றி .

    —————————————–
    நீங்கள் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் சென்றதில்லை. இருப்பினும் நேரமிருக்கும்போது முயற்சிக்கிறேன்.
    தங்கள் அன்புக்கு நன்றி.
    – சுந்தர்

  5. It was very phenomenal to know this incident. initially I was wondering how Kanchi periyava is going to be related in the anuman’s post.
    ***
    But after reading it, really felt great to know about story and history of parikaram.

    And yes, in the expo, it was as if kanchi periyava was sitting there. From some distance, I wondered that why he is sitting on the table since I know nothing to guess it would be statue as he is no-more present in physical form.

    But after went and saw, It was then I realized its statue. So nicely they have created it.
    ***
    Thanks so much for nice post..
    ***
    **Chitti**

  6. வடை மாலையின் தாத்பர்யம் தெரியாமல் இருந்த எனக்கும் மற்றும் என்னைப்போன்றவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் உபயோகமாகமானது. இதை இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். அர்த்தமுள்ள இந்து மதத்தின் இது போன்ற எத்தனையோ விஷையங்களையும் அவற்றின் அருமையமான விளக்கங்களையும் உங்கள் தளத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மகா பெரியவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவரை ஒரே ஒரு முறை தரிசனம் செய்தேன் என்பதே நான் பெற்ற பெரிய பேறு. நன்றி சுந்தர்.

  7. மிக நல்ல விளக்கம் . ராம பக்தன் ஹனுமான் தன்னை வணங்கும் பக்தர்களின் கிரஹ தோஷம் விலகிட அருள் புரிவார் என்பதனை நாங்கள் அறிந்து கொண்டோம் .நன்றி நன்றி.

  8. வாலொடு வந்தனை! வானப்பூ நாடினை!
    மாலொடு மங்கையும் மாரிலே! – நாலொடு
    ஒன்றினை! நம்பியின் நாமமதை நாவிலே
    என்றுமே சொல்லுவா ‘ராம்’!

  9. Miga arputhamana padhivu … Many people dont know about this vadai malai including me. Iam sure about it…Maha Periyavar unmaiyana Mahan…

  10. இனிய புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் மிக நல்ல தமிழ் நடை அறிய தகவல்கள் // 16ம் தேதி புத்தக கண்காட்சி ல் பாலம் ஐய்யா சந்தித்தோம் // நன்றி சுந்தர் சார்

Leave a Reply to Senthilsigamani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *