Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை – காமராஜர் B’DAY SPL 2

முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை – காமராஜர் B’DAY SPL 2

print
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு 2 இது. பதவியால் பெருமை பெற்றவர்கள் மத்தியில் பதவிக்கே பெருமை தேடித் தந்தவர் காமராஜர். அவரை பற்றி படிக்க படிக்க பிரமிப்பு, ஆச்சரியம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என பலவித உணர்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன. படிப்பறிவில்லாத ஒருவரால் இப்படியெல்லாம் கூட இந்த தேசத்தை பரிபாலனம் செய்ய முடியுமா என்று வியப்பு ஏற்படுகிறது.

Kamarajar Mani Mandapam

நிர்வாகத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் முதலில் காமராஜரை ஒருவர் படிக்கவேண்டும்.

அரசியல் நாகரீகத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அவரது அரசியலை படிக்கவேண்டும்.

எளிமையை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், அவருடன் அவரது காலத்தில் பயணம் செய்யவேண்டும்.

அவரது நேர்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அவருக்கு கீழே பணிபுரியவேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் பல்வேறு நூல்களிலும் கலைக்களஞ்சியங்களிலும் படிக்கும்போது, இப்படிப்பட்ட ஒரு மனிதனை தோற்கடித்த பாவத்திற்காகத்தான் இப்போது இந்த மாநிலம் இத்தனை சீர்கேடுகளை சந்தித்து வருகிறதோ என்று தோன்றுகிறது.

(விருதுநகரில் அவரை தோற்கடித்த கதையை படித்தீர்கள் என்றால் கண்கள் கலங்கிவிடும். வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி அப்போது ஆட்சிக்கு வந்தது திராவிடக் கட்சி. அன்று ஏமாறத் துவங்கி இன்று வரை ஏமாந்த்கொண்டிருக்கிறோம்.)

காமராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களை இங்கே தருகிறோம். அவரைப் பற்றிய பிரமிப்பு உங்களுக்கு இன்னும் பலமடங்கு கூடும் என்பது மட்டும் உறுதி. கூடவே இப்போதுள்ள ஆட்சியாளர்களிடம் இதெல்லாம் சாத்தியம் தானா என்றும் உங்களுக்கு தோன்றும்.

* இந்தப் பதிவில் உள்ள கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டப புகைப்படங்கள் குமரியில் உள்ள நண்பர் ஒருவரிடம் சொல்லி, அங்கு ஒரு புகைப்படக் கலைஞரை வைத்து எடுக்கப்பட்டு நமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Kamarajar Mani Mandapam 2
கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணி மண்டபதின் உள்ளே அவரது திருவுருவச் சிலை

முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை

அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் திருப்பங்களால் காமராஜரை முதலமைச்சர் பதவி தேடி வந்த நேரம் (1954). தமிழ்நாட்டில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் காமராஜரே முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினர். ஆனால் காமராஜர் தயங்கினார்.

தனது ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும். நீங்கள் வாக்குறுதி அளித்த பிறகே பதவியை ஏற்றுகொள்வது குறித்து நான் வாக்குறுதி அளிப்பேன்” என்றார்.

“நான் முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும். நீங்கள் வாக்குறுதி அளித்த பிறகே பதவியை ஏற்றுகொள்வது குறித்து நான் வாக்குறுதி அளிப்பேன்” என்றார்.

“உங்கள் நிபந்தனையை சொல்லுங்க ஐயா. நாங்கள் ஏற்றுகொள்கிறோம்” என்றனர் அனைவரும் ஒருமித்த குரலில்.

“நான் மந்திரிசபை அமைக்கும் பட்சத்தில், ‘மந்திரியாக அவரைப் போடு, இவரைப் போடு’ என்று யாரும் யாரையும் சொல்லக்கூடாது. எந்த ஒரு தனிப்பட்ட காரியத்துக்காகவும் சிபாரிசு சலுகை இதெல்லாம் கேட்டு வரக்கூடாது. இதற்கெல்லாம் சம்மதம் என்றால் நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால், இப்போதே ஒதுங்கிவிடுகிறேன்” என்றார்.

இந்திய அரசியல் சரித்திரத்தில் ஏன் உலக அரசியல் சரித்திரத்தில் கூட எந்த ஒரு தலைவரும் இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அனைவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்கள். (அட அது அந்தக் காலங்க!).

Kamarajar Mani Mandapam 3
காமராஜர் மணி மண்டபம், கன்னியாகுமரி

படிப்பறிவில்லாதவரால் மாநிலத்தை நிர்வகிக்கமுடியுமா? எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு காமராஜரின் பதில் என்ன?

காமராஜர் முதல்வர் பொறுப்புக்கு வந்தபோது, படிப்பு வாசனையே இல்லாத ஒருத்தர் பதவிக்கு வந்திருக்கார், அவருக்கு நம்ம நாட்டைப் பத்தியும் பொருளாதரத்தை பத்தியும் மக்களைப் பத்தியும் என்ன தெரியும்?? ஒரு பட்ஜெட் ஒழுங்கா போடமுடியுமா அவரால என்று ஏகத்துக்கும் கிண்டலடித்தன எதிர்கட்சிகள். (வேற யார்? நாட்டை இன்னைக்கு குட்டிச்சுவர் ஆக்கி வெச்சிருக்குற தாய்க்கழகம் தான் அப்போது பிரதான எதிர்கட்சி).

அதற்கு காமராஜர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

“நான் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் படித்ததாக சொன்னதில்லை. அப்படி நினைத்துக்கொண்டதுமில்லை. எனக்கு பூலோக சாஸ்திரம் நன்றாக தெரியும். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மிக நன்றாகவே தெரியும். எங்கெல்லாம் ஆறு இருக்கு, எங்கெல்லாம் ஏரி இருக்கு, பாசனத்துக்கு எதை தூர வாரணும், எதை அகலப்படுத்தனும் இதெல்லாம் எனக்கு தெரியும். எங்கெல்லாம் தண்ணி வீணாப் போகுதுன்னும் தெரியும். எந்தெந்த ஊர்ல என்னென்ன ஜாதிக்காரங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் மக்கள் எங்கெங்கே என்னென்ன தொழில் செஞ்சி பிழைக்கிறாங்கன்னு தெரியும். இதெல்லாத்தையும் விட, நேர்கோடுகளையும் வளைந்த கோடுகளையும் கொண்டிருக்கும் புத்தகங்கள் தான் பூகோள சாஸ்திரங்கள் என்றால், அப்படிப்பட்ட ஒன்றை நான் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுகிறேன்.” என்றார்.

“நான் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் படித்ததாக சொன்னதில்லை. அப்படி நினைத்துக்கொண்டதுமில்லை. எனக்கு பூலோக சாஸ்திரம் நன்றாக தெரியும். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மிக நன்றாகவே தெரியும். எங்கெல்லாம் ஆறு இருக்கு, எங்கெல்லாம் ஏரி இருக்கு, பாசனத்துக்கு எதை தூர வாரணும், எதை அகலப்படுத்தனும் இதெல்லாம் எனக்கு தெரியும். எங்கெல்லாம் தண்ணி வீணாப் போகுதுன்னும் தெரியும்.”

கருப்பின மக்களின் விடிவெள்ளி மார்டின் லூதர் கிங்குடன் பெருந்தலைவர்...
கருப்பின மக்களின் விடிவெள்ளி மார்டின் லூதர் கிங்குடன் பெருந்தலைவர்…

நியமனத்தில் கடைபிடித்த சாதுரியம்…

காமராஜர் பதவியேற்ற சமயத்தில், ஒரு அதிகாரியின் நியமனத்தை குறித்த ஆலோசனை தேவைப்பட்டது. அப்போது தலைமை செயலாளராக இருந்த ராமுண்ணி மேனன் ஐ.சி.எஸ். காமராஜரை சந்தித்து, “திருப்பதியில் நிறுவப்படவிருக்கும் பல்கலைக் கழகத்திற்கு இங்கே பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை துணை வேந்தராக நியமிக்க விரும்புகிறார்கள். அவரை அனுப்ப முடியுமா என்று கேட்டு தகவல் அனுப்பியிருக்கிறார்கள்” என்றார்.

“ஆந்திரா இப்போது தான் பிரிந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் இதை செய்து கொடுக்காவிட்டால், பிரிந்து போன மாநிலத்துக்கு எதுவும் செய்துகொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று வீண்பழி விழும். ஒருவேளை இவரை அங்கே அனுப்பிவிட்டால், அந்த இடத்திற்கு யாரை பணியிலமர்த்துவது சரியாக இருக்கும்?” என்று கேட்டார்.

“இங்கே அந்த பதவிக்கு வருவதற்கு இரண்டு பேருக்கு சம வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இருவருக்கும் 42 வயது தான் ஆகிறது. இந்த வயதிலேயே அத்தனை பெரிய பொறுப்பை தருவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை” என்றார் தலைமைச் செயலாளர்.

“இரண்டு பேரும் வேண்டாம் சரி… அப்போ யாரை நியமிக்கிறது?”

“ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.சி.எஸ். அதிகாரி யாரையாவது நியமிக்கலாம்” என்றார்.

காமராஜர் யோசித்தார். “ஒரு முக்கியப் பதவிக்கு வரப்போகிறவர் எப்போ பதவிக் காலம் முடியப்போகுதுன்னு யோசிச்சிகிட்டிருந்தா காலம் தான் ஓடுமே தவிர வேலை நடக்காது. அந்த பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ரெண்டு பேர்ல ஒருத்தரை நியமிச்சா, அவங்க ஆர்வமா வேலை பார்ப்பாங்க. அந்த ரெண்டு பேர் ரெக்கார்டுகளையும் பார்த்துட்டு யாரோடது நல்லா இருக்கோ அவங்களை நியமிச்சிடலாம்” என்று ஆணையிட்டார்.

ஒரு முக்கியப் பதவிக்கு வரப்போகிறவர் எப்போ பதவிக் காலம் முடியப்போகுதுன்னு யோசிச்சிகிட்டிருந்தா காலம் தான் ஓடுமே தவிர வேலை நடக்காது. அந்த பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ரெண்டு பேர்ல ஒருத்தரை நியமிச்சா, அவங்க ஆர்வமா வேலை பார்ப்பாங்க.

“அதையும் நான் பார்த்துட்டேன் ஐயா…  ஒருத்தரோட ரெக்கார்ட் நல்லா கிளீனா இருக்கு. அவர் சரியா இருப்பார்”

“அப்படின்னா அவரையே போட்டுடுங்க. தேவைன்னா சர்வீஸ் கமிஷனுக்கு ரெண்டு பேரையும் அனுப்புங்க” என்றார் காமராஜர்.

காமராஜர் அப்படி நியமித்த அந்த அதிகாரி யார்? அதை பிறகு சொல்கிறோம்.

Kamarajar with Lalbahadur

நான் படிக்கப் போய்ட்டா எனக்கு யார் சோறு போடுவா?

மதிய உணவுத் திட்டம் பிறந்த வரலாறு!

அடுத்து முதல் காரியமாக ராஜாஜியின் குலக்கல்வி முறையால் இழுத்து மூடப்பட்ட 6000 ஆரம்பப் பள்ளிகளை உடனே திறந்தார் காமராஜர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இது காமராஜருக்கு ஆறாத வேதனையை ஏற்படுத்தியது.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை குறைகூறி பதவிக்கு வந்த காமராஜர், தனது கல்வி திட்டத்தில் தோற்றுவிட்டார் என்று வெளிப்படையாகவே அனைவரும் பேசினர்.

கல்வி அதிகாரிகளையும் அமைச்சர்களையும் வைத்து காமராஜர் அடிக்கடி இந்த பிரச்னை தொடர்பாக கூட்டம் நடத்தினார். அப்படியும் எந்த உருப்படியான யோசனையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஓர் சுற்றுப்பயணத்திற்காக நெல்லையிலிருந்து தூத்துக்குடி நோக்கி போய்க்கொண்டு இருந்தார். இடையே சேரன்மாதேவி அருகே ரயில் செல்வதற்காக ரயில்வே லெவல் கிராஸிங்கில் கேட் மூடியிருந்தது.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி கேட்கீப்பரை “கேட்டை திற, எனக்கு அவசரம்” என்றெல்லாம் சொல்லவில்லை காமராஜர். பொறுமையாக காத்திருந்தார்.

எழுத்தறிவித்து இறைவனான கர்மவீரருக்கு திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் நினைவஞ்சலி....
எழுத்தறிவித்து இறைவனான கர்மவீரருக்கு திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் நினைவஞ்சலி….

சற்று காற்று வாங்கலாம் என்று காரிலிருந்து இறங்கியவர், சுற்று முற்றும் பார்த்தார். தூரத்தில் ஒரு சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவனை அழைத்து ரயில் கடந்து போகும்வரை பேச்சுகொடுத்துக் கொண்டிருந்தார். அவனுக்கு தாம் ஒரு முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. சொல்லப்போனால் காமராஜர் யார் என்றே அவனுக்கு தெரியவில்லை.

“என்ன தம்பி… ஆடு மேய்ச்சுகிட்டு இருக்கே? பள்ளிக்கூடம் போகலியா??”

“எங்க ஊர்ல பள்ளிக்கூடம் இல்லீயே… நான் எப்படி படிக்க போகமுடியும்?” என்று திருப்பிக் கேட்டான் அந்த சிறுவன்.

“உங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்தா நீ படிக்கப் போவியா?”

“அதுவும் முடியாது. நான் படிக்கப் போய்ட்டா எனக்கு யார் சோறு போடுவா?”

“ஓ… அப்படியா சங்கதி.. அப்போ சோறு போட்டா படிக்கப் போவியா?”

“ம்…. எதுக்கும் எங்க ஐயா கிட்டே ஒரு வார்த்தை கேளுங்க”

அவன் பேசிய பேச்சு காமராஜருக்கு ஒரு புதுவித சிந்தனையை ஏற்படுத்தியது. எல்லாம் நேரமும் அதுப் பற்றியே யோசித்தபடி இருந்தார். அந்த நேரத்தில் தான் எட்டயபுரம் மகாராஜா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு கொடுத்து பாடம் சொல்லித் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டார்.

Kamarajar

கல்வி ஒன்றே இந்த நாட்டில் நிலவும் வறுமை, அறியாமை உள்ளிட்ட அனைத்து சீர்கேடுகளுக்கும் முடிவு கட்டும் என்று உறுதியாக நம்பியவர் காமராஜர். அதனால் பசிக்கு உணவிட்டு, படிக்க பள்ளியும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று முடிவு செய்தார்.

கல்வி ஒன்றே இந்த நாட்டில் நிலவும் வறுமை, அறியாமை உள்ளிட்ட அனைத்து சீர்கேடுகளுக்கும் முடிவு கட்டும் என்று உறுதியாக நம்பியவர் காமராஜர். அதனால் பசிக்கு உணவிட்டு, படிக்க பள்ளியும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று முடிவு செய்தார்.

1955 மார்ச் 27 ஆம் தேதி, பூங்கா நகர், மெமோரியல் மண்டபத்தில் ‘சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டை’ துவக்கி வைத்து பேசினார் காமராஜர். அருகில் பள்ளிக் கல்வி இயக்குனர் அமர்ந்திருந்தார்.

“தமிழ்நாடு முழுக்க தொடக்கப் பள்ளிகூடங்களில் படிக்கும் ஏழை பிள்ளைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு கொடுக்கவேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டார் அவரிடம்.

“இப்போது நம் மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் சுமார் பதினாறு லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்தது ஒரு கோடி ரூபாய் செலவாகும்” என்றார் இயக்குனர். (இப்போ அதிகாரிங்க கிட்டே இதே கேள்வியை கேட்டா மூணு மாசம் டயம் கேட்பாங்க. எத்தனை பேர் படிக்கிறாங்கன்னு சொல்றதுக்கு!)

அதை கேட்டுக்கொண்ட காமராஜர், அந்த மாநாட்டில், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளிக் கூடங்கள் அமைக்கவேண்டும். பள்ளிக்கூடம் இருக்கும் ஊர்களில் கூட எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு படிக்கப் போவது கிடையாது. காரணம் வறுமை. அவருக்கு ஒரு வேளை சாப்பிடுவதே பெரும்பாடாக இருக்கிறது. அந்த ஒரு வேலைக்கு குடிக்க கூழோ கஞ்சியோ கிடைத்தால் போதும் என்று கருதி, ஆடு மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்கிறார்கள்.

Students kamarajar 2

அவர்களை பள்ளிக்கூடம் வரச் செய்யவேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வயிற்றுப் பிரச்னையை நாம் தீர்க்கவேண்டும். எனவே ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழகவேண்டியது அவசியம். அப்போது தான் படிக்க வருவார்கள். படித்தால் தான் நாடு முன்னேறும்.

இந்த திட்டத்துக்கு தொடக்கத்தில் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்கிறார்கள். மேலும் பல பள்ளிகளில் இதை விரிவுபடுத்தும்போது கூட இரண்டு மூன்று கோடிகள் ஆகலாம். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவையென்றால் அதற்கு தனி வரி கூட போடலாம்.” என்று தனது கருத்துக்களை சொன்னார்.

Kamarajar birthday celebrations

கல்வித் துறை இயக்குனர் இதற்கு ஒப்புக்கொண்டாலும் வருவாய்த் துறை செயலாளர், பல ஆட்சேபங்களையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அவை அனைத்துக்கும் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.

நிதித்துறை பெரும் சுமையை சந்திக்கும் என்று எச்சரித்தார்கள். ஆனாலும் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அதனால் முதலில் எட்டையபுரம் மகாராஜா பள்ளிக்கூடத்தில் நடந்து வந்த திட்டத்தை முறைப்படி தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் சோதனை முயற்சியாக சுமார் 1,000 பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காமராஜர் மற்றும் கல்வித் துறை இயக்குனர் ஆகியோர் பேசும் முன்னர், வருவாய்த் துறை செயலாளர் பேசினார்.

“நாம் சோதனைக்காக சில பள்ளிகளில் போட்ட மதிய உணவு திட்டத்தால் சில காண்டிராக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மட்டுமே பலனடைந்தார்கள். குழந்தைகளுக்கு கிடைத்த பலன் மிக மிக குறைவு. 1,000 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட பணம் விரயம் தான். இதை அடுத்தகட்டமாக மேலும் 15,000 பள்ளிகளுக்கு விருவுபடுத்தவேண்டாம் என்று எச்சரிப்பது எனது கடமை.  இந்த திட்டத்தை கைவிடுவதே நல்லது” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

ஒரு நொடிக் கூட தாமதிக்காது காமராஜர் சொன்ன பதில், “இயக்குனர் இதை குறித்து வைத்துக்கொள்ளட்டும். விரிவான ஆணை பிறப்பிக்கும்போது பள்ளிப் பகல் உணவு திட்டத்தை கான்ட்ராக்ட் முறையில் நடத்தக் கூடாது” என்றார் அழுத்தந்திருத்தமாக.

அதன் பிறகு மீண்டும் தொடர்ந்த வருவாய் துறை செயலார், “மாணவர்களுக்கு சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கும் அனுப்பிவிடுகிறார்கள். மாணவர்களுக்கு அது போகத் தான் மீதி கிடைக்கும்” என்றார். காமராஜர், எந்த தயக்கமும் இன்றி சிரித்த முகத்தோடு, “திட்டத்தில் இன்னொரு விதியையும் சேர்த்துவிடுங்கள். பகல் உணவு திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களும் மாணவர்களோடு சேர்ந்து சாப்பிடலாம். அந்த கூடுதல் சாப்பாட்டு செலவு நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளப்படும்!” என்று கூறினார்.

(எவ்வளவு நல்ல மனசிருந்தா, அந்த நிதிநெருக்கடியான சூழ்நிலையிலயும் ஆசிரியர்களுக்கும் சேர்த்து சாப்பாடு போடுங்கன்னு பெருந்தலைவர் சொல்லியிருப்பாரு… நெகிழ வைத்த கட்டமிது!)

காமராஜர் இந்த திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்தியே தீருவது என்ற முடிவிலிருக்கிறார் என்று தெரிந்தபிறகு யாரும் அதற்கு பிறகு குறுக்கிடவில்லை. பகல் உணவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Students kamarajar 3

பகல் உணவுத் திட்டத்தை அரசுத் திட்டமாக நிறைவேற்றுவதற்கு முன்னரே, பல ஊர்களில் பொதுமக்கள் காமராஜரின் வேண்டுகோளை ஏற்று, தங்கள் சொந்த பொறுப்பில் அதை நிறைவேற்ற முன்வந்தனர். பகல் உணவு திட்டத்தை முதலில் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் துவக்கினார். (பாரதிக்கு உண்மையான அஞ்சலி இது தான்!)

திட்டத்தை துவக்கி வைத்து காமராஜர் பேசியதாவது, “நாம் பெறத் தவறிய படிப்பை வரும் தலைமுறையாவது பெற்று வளர்ந்து வாழ்வாங்கு வாழட்டும். அன்னதானம் நமக்கு புதிதல்ல. இதுவரை வீடு தேடி வந்தவர்களுக்கு உணவு போட்டோம். இப்போது பள்ளிக்கூடத்தை தேடிப் போய் உணவு போடச் சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியமும் கிடைக்கும். ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும். கல்விக் கண்ணை திறப்பதைவிட இப்போதைக்கு வேறு முக்கிய பணி எதுவும் இல்லை. இதையே எல்லாவற்றில்லும் பிரதானமாக கருதுகிறேன். இதற்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராக போய் பகல் உணவு திட்டத்துக்காக் பிச்சை எடுக்கவும் இந்த காமராஜ் தயார்.”

“நாம் பெறத் தவறிய படிப்பை வரும் தலைமுறையாவது பெற்று வளர்ந்து வாழ்வாங்கு வாழட்டும். அன்னதானம் நமக்கு புதிதல்ல. இதுவரை வீடு தேடி வந்தவர்களுக்கு உணவு போட்டோம். இப்போது பள்ளிக்கூடத்தை தேடிப் போய் உணவு போடச் சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியமும் கிடைக்கும். ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.”

இவ்வாறாக முனைப்புடன் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார் காமாராஜர். இதனால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

===============================================================================

காமராஜர் இரண்டு அதிகாரிகளில் ஒருவரை நியமனம் செய்ததாக சொன்னோம் அல்லவா…? அன்று காமராஜரால் பள்ளி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட திரு.நெ.து.சுந்தரவடிவேலு தான் காமராஜர் பல்வேறு கல்வி சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்த பதிவில் நாம் கூறிய பள்ளிக் கல்வி இயக்குனர் அவர் தான். மதிய உணவு குறித்து வரைவு திட்டத்தை தயாரித்து காமராஜரிடம் தந்ததும் அவர் தான்.

Kamarajar Mani Mandapam 5

ஆக… சரியான ஒரு அதிகாரியை காமராஜர் தேர்ந்தெடுத்ததால் தான் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் சாத்தியமானது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் அதிகரித்தார்கள்.

“உன்னையும் என்னையும் படிக்க வெச்ச தெய்வம்” என்று காமராஜரின் விசிறிகள் முகநூலில் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அதன் பொருள் இது தான். ஆனால், அவர் உன்னையும் என்னையும் மட்டுமல்ல… ஒரு தலைமுறையையே படிக்க வைத்த தெய்வம்.

===============================================================================

* காமராஜர் சென்னை மாவட்டத்தில் சத்துணவு திட்டம் கொண்டு வந்தபோது அவரது கரங்களினால் முதலில் உணவு பெற்று சாப்பிட்ட ஒருவரை சமீபத்தில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறோம். அவரை நாம் சந்திக்க சென்றது ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்கு. ஆனால், பேசும்பொது யதேச்சையாக இந்த தகவலை நம்மிடம் சொன்னார் அவர்.

“என்னது… பெருந்தலைவர் கையால், முதல்ல மதிய உணவு வாங்கி சாப்பிட்ட ஆளா? என்ன ஐயா இவ்வளவு சாதரணமா இதை சொல்றீங்க. எப்பேற்பட்ட புண்ணியாத்மா நீங்க…!!!” என்று நமது வியப்பை வெளிப்படுத்தினோம்.

யார் அவர்? விபரங்கள் விரைவில்…..!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

===============================================================================

Also check our earlier articles about Kamarajar:

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சென்ற ஆண்டு காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாம் அளித்த பதிவு…

காமராஜரும் ராமராஜ்ஜியமும்!  கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

2013 ஆம் ஆண்டு காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாம் அளித்த பதிவு…

===============================================================================

Also check our earlier articles about Kannadasan :

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

கடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

11 thoughts on “முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை – காமராஜர் B’DAY SPL 2

  1. திரு.காமராஜ் அவர்களுக்கு நம் வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள்……….நம் நாடு சிறக்க காமராஜர் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்………தியாக சூரியன் என்கிற அடைமொழி அவருக்கும் மிகவும் பொருத்தம்……

    காமராஜர் கைகளால் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தில் உணவுண்டவர் குன்றத்தூர் திரு.பார்த்திபன் அவர்கள் என யூகிக்கிறோம் ….. சரியா?

  2. காமராஜர் பற்றி படிக்க படிக்க மிரண்டு விட்டேன். இப்படி பட்ட மாமேதை வாழத தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்பதில் நாம் பெருமை அடைவோம். இந்த பதிவை படித்த பிறகு மீண்டும் அவர் இந்த மண்ணில் பிறக்க மாட்டாரா என்று நினைக்கத் தோன்றுகிறது .

    மணிமண்டபம் படம் இந்த பதிவிற்கு ஒரு மணிமகுடம்.

    இந்த பதிவில் கூறிய சாதனையாளர் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

    1. எளிமையாக வாழ்வது எப்படி என்பதை நாம் காமராஜரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டத்தை மதிக்கும் மகான் அவர். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி. கட்சி பேதம் பார்க்காமல் இந்த நாடே அவரின் பிறந்த நாளை விழாவாக கொண்டாட வேண்டும் . இதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை.

      ஒரு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது கதர் துண்டு போட்டு வழி நெடுகிலும் மரியாதை செய்தார்கள் . ஏகப்பட்ட துண்டு சேர்ந்து விட்டது. இது அனைத்தையும் வைத்து காமராசர் என்ன செய்வார் , தமக்குத் தானே கொடுப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஒரு தொண்டர் அவருக்குத் தெரியாமல் ஒரு துண்டை எடுத்து வைத்துக் கொண்டார். காமராஜருக்கு இது தெரிந்து விட்டது. அந்த தொண்டரிடம் , எடுத்த துண்டை மூட்டையில் வைத்து விடு,. நான் புது துண்டு வாங்கி தருகிறேன். இந்த கதர் துண்டு அனைத்தும் சென்னையில் உள்ள ஏழைக் குழந்தைகள் படிக்கும் பால மந்திர் பள்ளிக்கு அனுப்பப்படும் என்றார். // எழைக்கு உதவிடுங்கள் என்பதே அவரின் தாரக மந்திரம்..

      நேற்றே பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், என் மொபைலில் இருந்து தட்டச்சு செய்ய முடியவில்லை

      வாழ்க … வளமுடன்

      நன்றி
      உமா வெங்கட்

  3. காமராஜர் அவர்களைப் பற்றி படிக்கும் ஒவ்வொரு தகவல்களுமே வியப்பினைத் தருகின்றது. அம்மாமேதையின் வழி நடக்க முயற்சிக்கவேண்டும். காமராஜர் அவர்களைக் குறித்த இரண்டு பதிவுகளும் அருமை. கன்னியாகுமரி காமராஜர் நினைவு மண்டபம் படங்கள் சிறப்பு. திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் அனைத்தும் புத்தம்புது மலர்களாய் மிளிர்கின்றனர். தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  4. வணக்கம் சுந்தர். இப்படி பட்ட உயர்ந்த மனிதர் இன்னும் சில காலம் பதவியில் இருந்து இருந்தால் தமிழகம் எவ்ளவு முன்னேறி இருக்கும். இவர் தோற்றதற்கு காரணம் நம் மக்களா, நம் மாநிலம் இப்படி சிரமப்படவேண்டும் என்ற விதியா.தெரியவில்லை. நன்றி

  5. இனி அவரே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர் இருந்த போதே அவரை பல விதமான அவமானத்திற்கு உட்படுத்தினர் நம் மக்கள்.

    இருக்கும் போது அதன் அருமை தெரியாமல், போன பின்பு அதை நினைத்து வருத்தப்படுவது நமது இயல்பு. என்று இந்த சினிமா மோகம், குடி மோகம், போலி மதச்சார்பின்மை ஒழிகின்றதோ அன்றே நமக்கு நல்ல காலம். அது சத்தியமா நடக்கப்போவது இல்லை…

    1. உங்கள் கோபம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் எதிர்மறையாக பேசவேண்டாமே. நல்லதே நினைப்போம்.

      நன்றி.

  6. இப்படியொரு பெருந்தலைவர் வாழ்த்திருக்கிறார் எனும் போது மகிழ்ச்சி,வியப்பு, பிரமிப்பு,ஆச்சர்யம் என பலவிதமான உணர்வுகள் தோன்றியது..அதே நேரம் தற்போது நினைத்து பார்க்கும் போது, கோபமும் தோன்றுகிறது.

    அண்ணா..இது போன்ற வரலாற்று கதாநாயகர்கள் பற்றி நம் தளத்தில் மாதம் தோறும் எதிர்பார்க்கிறோம்.அவருடைய பிறந்த நாளில் மட்டும் அறிவதை விட..மாதம் தோறும் படித்திட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    நல்லதொரு நாளில் – நற்சிந்தனையை ஏற்படுத்த வித்திட்ட தங்கள் நல் உள்ளத்திற்கு நன்றிகள்.

  7. நல்ல தொரு நாளில் நற் சிந்தனை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. இதை நாம் இனி வரும் ஒவ்வொரு தலைமுரைகளுக்க்ம் கொண்டு செல்வோம். முடிந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவோம் .

Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *