Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

print
மாங்காட்டில் ஆன்மீக வழிபாட்டு சபையின் சார்பாக கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குரு பூஜை பற்றிய சிறப்பு பதிவு இது. சைவ சமயம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் & மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு எத்தனை கடமைப்பட்டுள்ளதோ அதே அளவு, நம்பியாண்டார் நம்பிக்கும் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரது முயற்சியால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது.

Nambiyandar Nambi

திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

(Please check : பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!)

11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திருச்சபை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும். இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரக்கக் காணலாம்.

நாயன்மார்களை மறக்காமல் குரு பூஜை கொண்டாடும் வேளையில் திருமுறைகளை மீட்டுத் தந்த இவருக்கும் குரு பூஜை கொண்டாடுதல் தானே முறை… அதைத் தான் மாங்காட்டு ஆன்மீக வழிபாட்டு சபை ஆண்டுதோறும் செய்து வருகிறது.

DSC_9027

இந்த ஆண்டு மேற்படி குரு பூஜை கடந்த மே மாதம் 16, மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாங்காட்டில் உள்ள கல்யாணி திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரண்டு நாள் விழாவும் மிக நேர்த்தியாக நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிகளின் விரிவான அப்டேட் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு முன், நாம் பார்த்து ரசித்தவற்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம்.

** மிகப் பெரியதொரு விழாவை பற்றிய பதிவு என்பதால், இந்தப் பதிவை தயாரிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அதைவிட சவாலாக இருந்தது பதிவில் புகைப்படங்களை நுழைப்பது. பதிவில் கூடுதல் (முக்கியமான) புகைப்படங்களை  சேர்க்கவும், இருக்கும் படங்களை ஒழுங்குப்படுத்தவும் வேண்டியிருப்பதால், இந்தப் பதிவை மீண்டும் நாளை பார்க்கவும். சற்று நேர்த்தியாக மாற்றியமக்கைப்படும்.இப்போதைக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக பதிவை போஸ்ட் செய்கிறோம். நன்றி!

இது போன்ற சைவ சமய விழாக்கள், சைவப் பெரியோர்களின் குரு பூஜை விழாக்கள் பல ஆண்டுகளாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஏன்… இந்த நம்பியாண்டார் நம்பி குரு பூஜைக்கு கூட இது ஐந்தாம் ஆண்டு. ஆனால் இப்போது தான் இது பற்றிய விபரங்கள் நமக்கு தெரியவருகிறது.

இத்தனை நாள் தெரியாதது இப்போது தான் தெரியவருகிறது. காரணம், நல்ல விஷயங்களை தேடினால் நிச்சயம் அவை நம் கண்களுக்கு அகப்படும். நம் கவனத்துக்கு வரும். இத்தனை நாள் இது போன்ற விஷயங்கள் கண்ணில் படாமல் இருந்ததற்கு காரணம், கண்ணிருந்தும் குருடராய் நாம் வாழ்ந்ததே.

DSC_9059

ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மனதில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று. அது உங்கள் நலன் சார்ந்ததோ அல்லது பொது நலன் சார்ந்ததோ எதுவாக வேண்டுமான்லும் இருக்கட்டும். உங்கள் தேடல் அது குறித்தே இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அது தொடர்பான விஷயங்கள் மந்திரம் போட்டது போல உங்கள் கண்களுக்கு புலப்படும். அதுவும் உங்களுக்கு அருகிலேயே இருப்பது புரியும். உங்களை தேடி அது வரும்.

தேடல் என்கிற ஒன்று இருந்தால் தான் தேடுவது எதுவாக இருந்தாலும் கிடைக்கும். தேடல் உள்ளவரை தான் வாழ்க்கை.

நமது தேடலில் இது போன்ற விழாக்களும் நிகழ்ச்சிகளும் இயல்பாகவே தற்போது இருப்பதால் இது போன்ற விழக்களின் விபரங்கள் தேடி வந்துவிடுகின்றன. எதற்கு போவது எதை தவறவிடுவது என்கிற தவிப்பு தான் தற்போது. அந்தளவு ஒவ்வொரு விழாவும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் அற்புதமாக இருக்கின்றன.

(இந்த விழாவில் தான் நாம் சிவத்திரு.ஜனார்த்தனம் அவர்களை சந்தித்தோம்.)

DSCN6762 copy

DSC_9159

DSC_9166இந்த விழாவை பொருத்தவரை நமக்கு தெரியப்படுத்தியது நண்பர் சீதாராமன் அவர்கள். (வள்ளி,லோச்சனாவின் தந்தை). அவரும் நம்முடன் விழாவில் கலந்துகொண்டார்.

நாம் மேற்படி நம்பியாண்டார் நம்பி குருபூஜைக்கு சென்றபோது திருமுறை ஊர்வலம் புறப்பட்டு மாங்காடு கோவிலை சுற்றி வந்துகொண்டிருந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக திகழ்ந்தது. ஒரு பக்கம் சிவனுக்கு மிகவும் பிடித்த கயிலாய வாத்தியங்களை கோசை நகரான் குழுவினர் ஒலிக்க, அவர்களுக்கு சற்று பின்னே விழாக்குழுவினரின் மகளிர் அணியினர் திருமுறைகளாய் ஓதியபடி வர, அவர்களுக்கு பின்னே சீருடை அணிந்த பள்ளி மாணவ மாணவியர் திருமுறைகளை பாடிக்கொண்டே வர…. நாம் சென்னை நகரில் தான் இருக்கிறோமா என்று சந்தேகமே வந்துவிட்டது.

M Procession2

DSC00996

DSC00984

M Procession
DSC00999DSC01004நவநாகரீக (?!) ந(ர)கமாக மாறிவிட்ட சென்னையில் இப்படி ஒரு ஊர்வலமா? அதில் பள்ளி மாணவர்கள் வேறு கலந்துகொண்டு திருமுறைகள பாடிக்கொண்டு வருகிறார்களா? என்ற வியப்பு. ஊர்வலத்தில் இருந்த ஒருசிலரிடம் விசாரித்தபோது தான் புரிந்தது திரு.சங்கர் அவர்களின் மாணவர்கள் இவர்கள் என்று. (சங்கர் அவர்களுடனான சந்திப்பு இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிறது).

நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நண்பகல் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்கள் ‘பாரில் மனிதர் ஆகுவீர்’ என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

அப்போது அவர் கூறிய ஒரு சம்பவம் அருமை.

DSC_9278

திருமுறை பெற்றுத் தந்த வேலை

து நடந்து சுமார் 40 ஆண்டுகள் இருக்கும். சைவத்தின் மீதும் திருமுறைகள் மீதும் மிகவும் ஈடுபாடு கொண்ட திருச்சியை சேர்ந்த மாணவர் அவர். பள்ளியிறுதி படிப்பை முடித்த பின்னர் திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர விரும்பினார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கட்டணம் செளுத்திஎல்லாம் படிக்கமுடியாத ஒரு நிலை.

திருப்பனந்தாள் மடத்தில், அப்போது ஸ்காலர்ஷிப் திட்டம் (கல்வி உதவித் தொகை) ஒன்று இருந்தது. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அக்கல்லூரியில் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகவே இடம் தந்தார்கள். எனவே மடத்தின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் எப்படியாவது சேர்ந்து தாம் விரும்பிய வித்துவான் படிப்பை படிக்க விரும்பி நேராக திருப்பனந்தாள் மடத்தின் குரு மகாசந்நிதானத்தையே சந்திக்க வந்துவிட்டார் இவர் திருப்பனந்தாள் வந்துவிட்டார்.

DSC_9283

DSC_9286ஆனால் மடத்தில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

“என்ன விஷயம்?”

“குரு மகா சந்நிதானத்தை பார்க்கணும்.”

“என்ன விஷயமா?”

இவர் சொல்ல தயங்கின் நின்றார்.

“பரவாயில்லே என்கிட்டே சொல்லுங்க…”

“இல்லே… ஆதீனத்தோட கல்லூரில சேர்ந்து புலவர் பட்டப் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் வேணும்….”

“அதுக்கு அப்ளிகேஷன் வாங்கி பள்ளியிறுதி மார்க் உள்ளிட்ட விபரங்களை ஃபில்லப் பண்ணி கொடுத்துட்டு போங்க… நாங்களே தகவல் அனுப்புவோம்….”

“நான் ஏற்கனவே அப்ளிகேஷன் பூர்த்தி செய்து தபால்ல அனுப்பியிருக்கேன்”

“அப்புறம் என்ன?”

“இல்லே… குரு மகா சந்நிதானத்தையே நேர்ல பார்த்து பேசிட்டு போனா எனக்கு கொஞ்சம் நம்பிக்கையா இருக்கும்”

“அதெல்லாம் அவர் யாரையும் இப்போ பார்க்க மாட்டாரு. உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குறதுக்கு தகுதி இருந்தா எல்லாம் முறைப்படி நடக்கும். நீங்க முதல்ல கிளம்புங்க…”

இவர் எவ்வளவோ மறுத்தும் குரு மகா சந்நிதானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் இவருக்கு ஆதீனத்தை பார்க்காமல் ஊருக்கு திரும்ப மனமில்லை. எப்படியாவது ஆதீனம் வெளியே வந்து தானே ஆகணும். அப்போ, அவரை பார்த்து விஷயத்தை சொல்லிடலாம் என்று கருதியவர் வெளியே வந்து சாலையில் மடத்தின் எதிரே காத்திருக்க முடிவு செய்தார். நீண்ட நேரம் காத்திருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தார். உள்ளே இருந்தால் தானே விரட்ட முடியும்? வெளியே சாலையில் நிற்பவரை என்ன செய்யமுடியும்?

நீண்ட நேரமாக மடத்தின் வாசலில் ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருப்பதை குரு மகா சந்நிதானம் பார்த்துவிடுகிறார். மடத்தின் நிர்வாகியை கூப்பிட்டு, “யார் அவர்? எதற்கு இப்படி மடத்தின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார் ?” என்று விசாரிக்க, நிர்வாகி நடந்ததை கூறுகிறார்.

“உங்களுக்கு தகுதி இருந்தா அதது முறைப்படி நடக்கும் என்று நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன் சுவாமி. ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார்”

“அப்படியா சரி… அவரை  கூப்பிடு. நானே விஷயத்தை சொல்லிவிடுகிறேன்” என்றார்.

அந்த விடாக்கொண்ட மாணவர் உள்ளே அழைத்து வரப்படுகிறார்.

வந்தவர் குருமகா சந்நிதானத்தை பார்த்தவுடன், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.

பின்னர் சந்நிதானத்திடம் தனக்கு திருமுறை படிப்பு மீது இருக்கும் தணியாத ஆர்வத்தை எடுத்துக்கூறி தான் ஆதீனக் கல்லூரியில் வித்துவான் பட்டப்படிப்புக்கான  ஸ்காலர்ஷிப்புக்கு மனு செய்திருக்கும் விபரத்தை கூறினார்.

“அதான் எல்லாம் சரியா பண்ணியிருக்கீங்களே…… அதது முறைப்படி நடக்கும்… எதுக்கும் அடுத்த வாரம் வந்து பாருங்க…. இப்போ கிளம்புங்க”

“நன்றி சுவாமி” என்று கூறியவர் மீண்டும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.

“ஏம்பா… அதான் முதல்லயே நமஸ்காரம் செஞ்சுட்டியே… திரும்பவும் ஏன் செய்றே…? கிளம்பு….”

“இல்லை சுவாமி…. பெரியவங்களை  பார்க்கும்போதும் சரி விடைபெறும்போதும் சரி… ரெண்டு முறையும் தவறாம விழுந்து வணங்கனும்னு பெரியபுராணத்துல சொல்லியிருக்கு!” என்றார்.

திருமுறை மீது இவருக்கு இத்தனை ஞானமா? நெகிழ்ந்து போன ஆதீனம்… “உனக்கு ஒரு வாரம் கழிச்சு முடிவை சொல்லலாம்னு நினைச்சேன். இப்போவே சொல்றேன்… உனக்கு ஸ்காலர்ஷிப் உண்டு. ஆதீனக் கல்லூரியில இடமும் உண்டு… கவலைப்படாதே…” என்று கூறியவர், அடுத்த கணமே நிர்வாகியை அழைத்து, இந்த மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கிவிட்டேன். இவருக்கு உடனே அட்மிஷன் கொடுத்துவிடுங்கள்!” என்கிறார்.

திருப்பனந்தாள் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக ஒரு கல்லூரி பேராசிரியராக உயர்ந்து சமீபத்தில் தான் ஓய்வுபெற்றார்.

ஆக… திருமுறை அவருக்கு தந்தது கல்வியை மட்டுமல்ல…. நல்ல பணியும் நல்ல மனநிறைவான வாழ்க்கையும் தான். அவர் பெயர் கணபதி.

இவ்வாறு திரு.கி.சிவக்குமார் கூறி முடிக்க சபையில் எழுந்த கைதட்டல்கள் அடங்க நீண்ட நேரமாகியது.

திருமுறைகளை தெரிந்துவைத்திருப்பதன் அவசியத்தை இதைவிட யாராவது கூற முடியுமா என்ன?

எனவே வாசகர்களே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சைவத் திருமுறைகளை தெரிந்துகொள்ள தவறாதீர்கள். படிக்க தயங்காதீர்கள்.

DSC_9274

DSC_9287

தற்போது நிகழ்ச்சி குறித்த விரிவான அப்டேட்….

முதல் நாளான சனிக்கிழமை மாலை புலவர் சா.குருநாதன் அவர்கள் பங்குபெற்ற திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 அளவில் மாங்காடு ஸ்ரீதேவி பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற திருக்குறள் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

DSC_9011

DSC_9022

DSC_9035DSC_9042DSC_9050DSC_9054அதைத் தொடர்ந்து மாங்காடு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகாலயம் வழங்கிய “சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி” என்கிற பக்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பி.கிருஷ்ணன் பாலாஜி குழுவினர் இதை சிறப்பாக நடத்தினர்.

முடிவில் திரு.ஏ.பாண்டியன் அவர்கள் நன்றி கூற, முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

அடுத்த நாள் ஞாயிறு தான் திருவிழாவே. சும்மா பட்டை கிளப்பிவிட்டார்கள்.

அதிகாலை 4.30 க்கு திருமுறைமாமணி. சிவனகம் அருளரசு அவர்கள் திருப்பள்ளியெழுச்சி பாட, அதன் பின்னர் சிவப்பூசைத் திருக்காட்சி நடைபெற்றது. 117 அடியார்கள் கலந்துகொண்டு சிவபூசை செய்தனர். அதனை திருமுறை.வேள்வி வித்தகர் சரவணன் அவர்கள் வழிநடத்தினார். முடிவில் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் மேடையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளினார்.

DSC_9060DSC_9064DSC_9096

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் திரு.எம்.எஸ்.ராமமூர்த்தி (உரிமையாளர், கல்யாணி திருமண மண்டபம்) அவர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டு இடபக் கோடியை ஏற்றினார். சிவத்திரு.ஜெயபாண்டியன் மற்றும் சிவத்திரு.பாஸ்கர் ஆகியோர் கொடிக்கவி பாடினர்.

DSC_9107

DSC_9134

இதை தொடர்ந்து சுமார் 7.00 மணியளவில், பன்னிரு திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.

பன்னிரு திருமுறை நூலுடன் நால்வர் திருவுருவச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டு, சென்னை ஐ.சி.எப். சிவனருள் குழுவினர் மற்றும் கோயம்பேடு கோசைநகரான் குழுவினரின் கயிலாய வாத்தியங்கள் முழங்க பன்னிரு திருமுறை உலா தொடங்கியது. குன்றத்தூர் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களின் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். அரங்கில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது, மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோவிலை வலம் வந்து, மீண்டும் அரங்கை வந்தடைந்தது.

DSC_9168

கையிலா வாத்தியக் குழுவினர், வாத்தியங்களை இசைக்க விழாக்குழுவினர் மற்றும் மகளிர் மற்றும் பள்ளிச் சிறுவர் சிறுமியர் திருமுறைகளை பாடிக்கொண்டே ஊர்வலம் வந்தது கண்கொள்ளா காட்சி.

காலை 10.00 மணியளவில் திருமுறை ஊர்வலம் மீண்டும் அரங்கை அடைந்தவுடன் திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. சிவத்திருமதி.விருத்தம்பாள் சிவசந்திரன், சிவத்திருமதி.மோகனாம்பாள் ராமமூர்த்தி, மாங்காடு சிவத்திருமதி ராணி செல்வம், சிவத்திருமதி விஜயலட்சுமி மற்றும் சிவத்திருமதி கீதா பழனி ஆகியோர் பங்கேற்று விளக்கேற்றினர்.

DSCN6759

DSC_9184

DSC_9198DSC_9208

அன்னம் பாலிப்பு இல்லாமல் சைவ விழாவா? காலை சிற்றுண்டியை ருசிக்கும் அடியார்கள்!
அன்னம் பாலிப்பு இல்லாமல் சைவ விழாவா? காலை சிற்றுண்டியை ருசிக்கும் அடியார்கள்!

பின்னர் திருமுறை ஊர்வலத்தில் மாணவர்களை பங்கேற்க செய்த திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களும் தலா ஒரு டிபன் பாக்ஸ் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். இந்த குழுவினரை சிறப்பாக வழிநடத்திய சீனியர் மாணவ மாணவிகள் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

DSC_9213

DSC_9214

DSCN6822

DSCN6821

DSC_9216DSC_9226தமிழ்நாடு சேக்கிழார் மன்றத்தின் பொதுசெயலாளர் சிவத்திரு.பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். DSCN6847DSCN6840DSCN6871DSCN6872

DSC_9301

DSC_9303

மாங்காடு காமாட்சியம்மன் கோவில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மருத்துவர். ரா. சீனிவாசன் அவர்கள் தலைமையில், திரு.ஜி.கிருஷ்ண நாயக்கர் அவர்கள், திரு.பிரேம்சேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஐய்யப்பன், டி.என்.பாஸ்கர் மற்றும் ஊர் பெரியவர்கள் முநிலையில் விழா துவங்கியது.

தொடர்ந்து திருமுறை பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவத்திரு.ஜெக. சம்பந்தன் அவர்கள் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.

11.30 அளவில் தேவார இசைமணி குற்றாலம் ஜி.சுப்பிரமணியம் அவர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செந்தமிழரசு கி.சிவக்குமார் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

DSC_9277

தொடர்ந்து தவத்திரு.குருபழனி அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கினார்.

மதியம் உணவு இடைவேளை. கல்யாண விருந்து இந்த திருமுறை விருந்திடம் தோற்றுவிடும். அந்தளவு அனைத்தும் பிரமாதம். விழா ஏற்பாடு செய்வது சுலபம். ஆனால், அனைத்தையும் ஒரு ஒழுங்கோடு நடத்துவது அத்தனை  சுலபமல்ல.மாங்காடு ஆன்மீக் வழிபட்டு சபையினர் அந்த வகையில் பிரமாதப்படுத்தியிருந்தனர்.

அடியார் பசி தீர்க்கும் அருந்தொண்டு.... மதிய உணவு வழங்கப்படுகிறது!
அடியார் பசி தீர்க்கும் அருந்தொண்டு…. மதிய உணவு வழங்கப்படுகிறது!

IMG_20150517_1348012மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு, 2.00 மணியளவில், சிவனகம் அருளரசு அவர்கள் தலைமையில் ஆளுடையப் பிள்ளையாரின் பிரபந்தங்களின் முற்றோதல் நடைபெற்றது.

DSC_9337

DSC_9350DSC_9345அதன் பின்னர் சிவலோகம் சார்பாக சிவத்திரு.திவாகர் அவர்களின் சிறப்பு இயல், இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாபாஞ்சலி கலைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாலை 5.30 மணியளவில் சிறப்பாக பணியாற்றிய அடியார்களுக்கு பாராட்டு நடைபெற்றது. இறுதியாக மாங்காடு ஆன்மீக வழிபாட்டு சபையின் பொருளாளர் திரு.கோபிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேக்கிழார் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சைவ அமைப்புக்களும் உழவாரப்பணி குழுக்களும் பங்கேற்றன.

நிகழ்ச்சியின் முழு புகைப்படத் தொகுப்பு!

[Best_Wordpress_Gallery id=”4″ gal_title=”Nambiyandar Nambi Guru Pooja”]

=================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=================================================================================

Also check related articles….

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?

=================================================================================

Also check :

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

எது நிஜமான பக்தி?

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

=================================================================================

[END]

10 thoughts on “திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

  1. SundarJi,

    Thanks for this article.. interesting to know all these happening in and around Chennai.

    Rgds,
    Ramesh

  2. பதிவை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. 2 நாள் விழாவையும் கண் முன்னே கொண்டு வந்து நேரில் பார்த்த உணர்வை வெளிப் படுத்தி விட்டீர்கள், திருமுறையால் வேலை கிடைத்தது என்பதை நினைக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி . திருமுறை நமக்கு பல நல்ல குணங்களை எடுத்து கூறியிருக்கிறது. பெரியவர்களை வணங்கியதால் வேலை கிடைத்தது . திருமுறை நமக்கு ஓர் மா மருந்து . திரு சிவகுமார் அவர்களின் சொற்பொழிவை நம் 2013 ஆண்டுவிழாவில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.

    இந்த தளத்தின் மூலம் இறைவன் எங்களுக்கு ஓர் அறிய நிகழ்வுகளை படிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தி உள்ளார் . தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    அனைத்து படங்களும் அருமை .

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

    1. திருமுறையில் இம்மையே நன்மை தரும் திருப் பதிகங்கள் பல உள்ளன . அதாவது பகையை போக்கும் பண்புடைய பதிகம், தீராப் பிணிகளை தீர்க்கும் பதிகம், கண்ணொளி பெருக்கிடும் பதிகம், வழக்குகளில் வெற்றி தரும் பதிகம் , நன் மக்கட்பேறு நல்கும் பதிகள் பல உள்ளன. இவற்றை பற்றி நம் தளத்தில் பல பதிவுகளாக எழுதவும். அனைவருக்கும் பயன் படும்.

      வாழ்க … வளமுடன்

      நன்றி
      உமா வெங்கட்

  3. நேர்த்தியான பதிவு!……………தற்காலத்தில் சென்னையில் நடக்கும் விழாவா அல்லது …………………அக்காலத்தில் மன்னர்கள் முன்நின்று நடத்திய சைவ விழாவா என வியப்புறும் வண்ணம் அமைந்துள்ளது. விழா ஏற்பாட்டாளர்கள், விழாவில் பங்கு பெற்றோர், விழா சிறக்க நிதியுதவி செய்துள்ளோருக்கும், இவ்வனைத்தையும் எங்கள் பார்வைக்கு விருந்துதளித்த தங்களுக்கும் நன்றிகள்.

  4. வணக்கம் சுந்தர். அழகான புகைப்படங்கள் .நிறைய விஷயங்களை நியாபகம் வைத்து தொகுத்து தந்து இருகிறீர்கள்.பார்கவே பிரமிப்பாக இருந்தது.எத்தனை விசயங்களை இரண்டு நாட்களில் நடத்தி இருகிறார்கள்.விழா குழுவினர்க்கும் ,தொகுத்த உங்களக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  5. இத் தொகுப்பு மிகவும் அருமை. நேரில் காண்பது போன்ற தோற்றத்தை இப்பதிவு விளக்கியுள்ளது. இது போல் எல்லா விழாக்களிலும் பங்கு பெரும் பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு அளித்திருக்கின்றார்.

    மிக்க நன்றி.

  6. இந்த பதிவு ஒன்று மட்டும் போதும்..ஆயிர ஆயிரமாயிரம் தத்துவங்கள் பேசும்..தாங்கள் செய்த புண்ணியம்..எங்களுக்கும் இந்த பதிவை பார்த்து..உணர வாய்ப்பு கிடைத்தமைக்கு ..இறைவா..
    கோடான கோடி நன்றிகள்..

    சிங்கார சென்னையிலே..இது போன்ற விழாவா? தங்கள் முக புத்தகத்தில் -நிலை தகவல் பதிந்த போது..ஒரு 2 மணி நேர விழாவாக இருக்கும் என்று நினைத்தேன்..ஆனால் இரண்டு நாள் விழா ..சொல்ல வார்த்தைகள் இல்லை..

    பெரியவங்களை பார்க்கும்போதும் சரி விடைபெறும்போதும் சரி… ரெண்டு முறையும் தவறாம விழுந்து வணங்கனும்னு பெரியபுராணத்துல சொல்லியிருக்கு! என்ற தகவல் புதிதாய் தெரிந்து கொண்டேன்..இது போல் எத்தனை எத்தனை செய்திகள் இருக்கு?என்று நினைக்கும் போது..பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது..தங்களின் பக்குவத்தில் பெரியபுராணம் பற்றி கண்டிப்பாக தொடர் பதிவு எழுதவும்..

    சிவகுமார் அய்யாவின் சொற்பொழிவு கேட்க வேண்டும் அண்ணா..அடுத்த முறை கண்டிப்பாக அழைக்கவும்.

    வழக்கமாக பதிவுகளிலே உள்ள வண்ணபடங்கள் களை கட்டும்..இந்த பதிவில் 100 வண்ணபடங்கள் இணைத்து, என்னை திக்கு முக்காட வைத்து விட்டிர்கள் அண்ணா. பம்பரமாய் சுழன்று ..சுழன்று இருபிர்கள் என்று நம்புகிறேன்.தங்கள் உழைப்புக்கு வந்தனம் .
    இந்த நேரத்தில் சீதாராமன் அய்யாவிற்கும் என் நன்றிகள்..

    கொள்ளை கொள்ளும் வண்ணபடங்கள் அழகு..
    அழகோடு இணைந்த கருத்துகள் பேரழகு..

    மறுபடியும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைவர்க்கும் நம் நன்றிகளை உரித்தாகுவோமாக..!

    இந்த வார விடுமுறைக்கு – இந்த ஒரு பதிவு போதும் என்றும் தோன்றுகிறது..இது போல் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா..

  7. சென்னைக்கு பெருமை சேர்த்த ஒரு சிறப்பான விழா இது என்றால் மிகையல்ல.

    இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவை, தங்கள் புண்ணியத்தால் காணும் பாக்கியம் பெற்றோம்.

    கோடானகோடி நன்றிகள் தங்களுக்கு.

    இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்சிக்கு,எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது

    போகட்டும். தாங்கள் இந்த குறையை போக்கிவிட்டீர். இந்த விழாவை இதை விட சிறப்பாக யாராலும் விவரிக்க முடியாது. தங்கள் உரைநடையாகட்டும், புகைபடங்களாகட்டும் யாவும் அருமை அருமை.

    இந்தபதிவினை, அவ்விழா குழுவினர் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் என்று அனைவருக்கும் தெரியபடுத்தவும். அவர்கள் அடையம் மகிழ்சிற்கு எல்லையே இருக்காது.

    மற்றும்மொருமுறை என்னுடைய உள்ளார்ந்த நன்றிகள்

    1. சார்… நன்றி. ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் எடுத்த புகைப்படங்களுடன் விழாக்குழுவினரிடம் நான் கேட்டுப் பெற்ற புகைப்படங்களும் சேர்த்தே இங்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தனையும் நான் எடுத்த படங்கள் அல்ல.

      – சுந்தர்

Leave a Reply to UMA VENKAT Cancel reply

Your email address will not be published. Required fields are marked *