Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

print
வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!

படிக்க மட்டுமல்ல… பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி!

1) சாதனை என்பது சுலபமா?

கொலம்பஸ் பல மாதங்கள் கப்பல் பயணம் செய்து அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டு தாய்நாடான இத்தாலிக்கு திரும்பிய பின்னர் அரசாங்கம் அவருக்கு மிக பெரிய பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இது உள்ளூர் கிணற்று தவளைகள் சிலருக்கு பொறுக்கவில்லை.

Columbus Jகொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்காவே அல்ல, அவருக்கு பாராட்டு விழா நடத்தக்கூடாது என்று வாதிட்டார்கள். கொலம்பஸ்ஸின் கண்டுபிடிப்பு தவறு என்று நிரூபிக்க ஒரு கூட்டம் பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணமிருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த கொலம்பஸ் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தார்.

பாராட்டு விழாவில் பங்கேற்ப்போருக்கு விருந்தளிக்க பல உணவு வகைகள் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தன. அப்போது தட்டில் இருந்த ஒரு அவித்த முட்டையை கொலம்பஸ் எடுத்து, “என் கையில் இருக்கும் இந்த அவித்த முட்டையை யாராவது செங்குத்தாக கீழே விழாமல் சில வினாடிகளாவது நிறுத்த முடியுமா?” என்று கேட்டார்.

பலர் முயற்சி செய்து தோற்றனர். யாராலும் முட்டையை செங்குத்தாக நிறுத்த முடியவில்லை.

கடைசியில் கொலம்பஸ், “நான் செய்துகாட்டுகிறேன்” என்று கூறி முட்டையின் அடிப்பாகத்தை கத்தியால் கொஞ்சம் சீவி பின்னர் நிற்கவைத்தார்.

“இதென்ன பிரமாதம். இதை நாங்கள் கூட செய்திருப்போமே?” என்றனர் எதிர் தரப்பினர்.

“அப்படியென்றால் ஏன் செய்யவில்லை? உங்களை தடுத்தது எது?” என்று கேட்டார்.

யாராலும் பதிலளிக்க முடியவில்லை. “யாரும் செய்ய முடியாத காரியத்தை ஒருவர் செய்தால் அவர்களை  ஊக்கப்படுத்தவேண்டும். அதைவிட்டுவிட்டு குற்றம் கண்டுபிடிக்கிறீர்கள். உயிரைப் பணயம் வைத்து பல மாதங்கள் கடலில் பயணம் செய்து நான் புதிய கண்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன். எத்தனை ஆபத்துக்களில் இருந்து நாங்கள் தப்பித்தோம் என்று என்னுடன் வந்தவர்களுக்கு தெரியும். சாதனை செய்வது என்பது சுலபமானது அல்ல!” என்றார்.

அதன் பிறகு சபை அமைதியானது. கொலம்பஸை யாரும் தாக்கி பேசத் துணியவில்லை.

SOMETIMES, WE NEED TO SPEAK FOR OURSELVES!

2) தேவை என்றால் மட்டுமே வாங்குவோம்

ஒரு விருந்து நடந்தால், எல்லா பதார்த்தங்களையும் எல்லோருடைய தட்டுகளிலும் வைக்கின்றனர். ஆனால், அனைத்து உணவுகளும் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்காது. பிடிக்காத உணவுகள் குப்பைக்குப் போகின்றன. அதேபோல எல்லோராலும் எல்லா வகைகளையும் சாப்பிட முடியாது. அப்படி மீதப்படும் உணவும் குப்பைக்குப் போகிறது. வேறு சிலருக்கு சர்க்கரை நோய் இருக்கலாம். இருந்தாலும் பந்தியில் அமர்ந்திருக்கும்போது, ‘எனக்கு இனிப்பு வேண்டாம்’ எனச் சொல்லச் சங்கடப்பட்டு, அப்படியே இலையை மூடிவைப்பார்கள். அதுவும் குப்பைக்குத்தான் போகிறது.

food wastingஇது எங்கோ விருந்துகளில் மட்டும்தான் நடைபெறுகிறது என எண்ண வேண்டாம். விருந்தில் வீணடிக்கப்படும் உணவின் அளவு பிரமாண்டமானது. அதே நேரம் நம் வீடுகளிலும் உணவுப்பொருட்களை அன்றாடம் வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கணவர் வழக்கம்போல இரவு 8 மணிக்கு வந்துவிடுவார் என நம்பி, அவருக்கும் சேர்த்து சமைத்து வைத்திருப்பார் மனைவி. ஆனால், அலுவலக வேலை, நண்பர்கள் சந்திப்பு என, இரவு உணவை வெளியில் முடித்துவிடுவார் கணவர். ‘என்கிட்ட சொல்றதுக்கு என்ன?’ என்ற மனைவியின் கோபம், அதைத் தொடரும் சண்டை எல்லாம் அவர்களின் குடும்பப் பிரச்னை. ஆனால், அப்படி மீதமாகும் உணவு யாரும் சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுவது சமூகப் பிரச்னைதானே?

சமைத்து வீணாவதைவிட, சமைப்பதற்காக வாங்கிவைத்து வீணடிக்கப்படும் பொருட்களும் மிக அதிகம். வீட்டுச் சமையலறையின் தேவை அறிந்து காய்கறிகளை வாங்காமல் ‘ஃப்ரெஷ்ஷா கிடைச்சது’ என மூன்று கட்டு கீரையை வாங்கிவந்தால், தொடர்ந்து மூன்று நாட்களும் கீரையா சமைக்க முடியும்? அப்படியே சமைத்தாலும் கீரை வாங்கி வந்தவரே அதைச் சாப்பிடுவாரா? ஃபிரிட்ஜில் வைத்து அழுகிப்போய் மூன்றாம் நாள் தூக்கி வீசவேண்டியதுதான். குலோப்ஜாமூன் செய்வதற்காக வாங்கிவைத்த மாவு பாக்கெட்டில் பாதியைப் பயன்படுத்திவிட்டு மீதியை எங்கேயாவது வைத்திருப்போம். அடுத்தடுத்த வேலைகளில் அதை மறந்துபோய், சில வாரங்கள் கழித்து ஞாபகம் வந்து தேடி எடுத்தால், அதில் வண்டுகள் குடிகொண்டிருக்கும். தூக்கி வீசுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

இப்படி நம் வீடுகளில் வீணடிக்கப்படும் உணவுப்பொருட்களை, முறையான திட்டமிடல் இருந்தால் சுலபமாகத் தவிர்க்க முடியும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து, ‘அடுத்த ஒரு வாரத்துக்கான சமையல் என்ன?’ எனத் திட்டமிட வேண்டும். அதில் தங்களுக்குப் பிடித்த உணவு, குழந்தைக்குப் பிடித்த உணவு எனக் கணக்கிடும்போது யார் ஒருவருக்கும் பிடிக்காத பொருள் வாங்குவதைத் தவிர்க்கலாம். அதேபோல பொருட்களை வாங்க டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் நுழைந்தால், எது தேவையோ அதை மட்டுமே வாங்கிக்கொண்டு திரும்பி வர வேண்டும். அங்கும் இங்கும் சுற்றிக் கண்டதையும் வாங்கி அமுக்குவதால்தான், வீட்டில் தேவையற்ற பல பொருட்கள் சேர்கின்றன. இந்தக் ‘கண் பசி’யைக் கட்டுப்படுத்தினாலே, காசும் பொருளும் மிச்சப்படும். அரிசி வாங்கினால் மைதா இலவசம், மைதா வாங்கினால் முட்டை இலவசம் என, கடைகளில் எதையாவது இலவசமாகத் தந்துகொண்டுதான் இருப்பார்கள். அந்தப் பொருள் அப்போது தேவை என்றால் வாங்கலாமே தவிர, ‘பிறகு தேவைப்படும்’ என்ற எண்ணத்தில் எந்த உணவுப்பொருளையும் வாங்காதீர்கள்.

– ராஜமுருகன் @ ‘நல்லசோறு’ – ஆனந்த விகடன்

3) ‘காக்கா முட்டை’ மூலம் சொல்ல வந்தது என்ன?

கேள்வி : ”இந்தப் படம் சொல்ற செய்தியை ரசிகர்கள் கடைப்பிடிப்பாங்கனு நம்பிக்கை இருக்கா?”

Kaaka-Muttai-Movie-Trailer-Launch-Photos-1

பதில் : ”நம்ம ஊர்ல பெரும்பாலான குழந்தைகளுக்கு வயசுக்கான வளர்ச்சி இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு. அதான் உயரமா, போஷாக்கா வளர பொருள் விக்கிறோம்னு விளம்பரம் பண்றாங்க. ‘நீங்க வாழ்க்கையில ஜெயிக்கணும்னா இதைக் குடிங்க… வளருவீங்க’னு சொல்றது சரியா? ‘நீங்க சிவப்பாகணுமா… இந்த க்ரீம் தடவுங்க’னு பல வருஷமா வித்துட்டே இருக்காங்களேனு நம்ம மக்களுக்குப் புரியலையா? இதைத்தான் ‘காக்கா முட்டை’ மூலமா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, அதெல்லாம் எத்தனை பேருக்குப் போய் சேர்ந்துச்சுன்னு தெரியலை. படத்தைப் பார்த்துட்டு, ‘ஜாலியா இருந்துச்சு… நல்ல படம்’னு சொல்லிட்டு மறுபடியும் அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்தா, இந்தப் படத்தால எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனா, நிறையப் பேர் போன் பண்ணி ‘என் குழந்தை, ‘இனி பீட்சா வேணாம்பா’னு சொல்லுச்சு’னு சந்தோஷமா சொல்றாங்க. அது ஒரு சின்ன திருப்தி.”

– ‘காக்கா முட்டை’ ப(பா)ட இயக்குனர் மணிகண்டன் @ ஆனந்த விகடன்

4) வாழ்க்கை ஒரு (குறுகிய) வட்டம்டா….

(நம்மை மிக மிக சிந்திக்க வைத்த ஒரு சிந்தனை இது. உங்களையும் சிந்திக்க வைக்கும்!)

எந்தவித திட்டமிடலுமின்றி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டுஇருக்கிறது.

சம்பளம் வாங்குவதும், அதை செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக காத்திருப்பதும், என்று வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளே சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

இதுதான் சரியான பாதையா…? என்ற கேள்வி ஒரு அலைபோல மனதிற்குள் மோதியபடியே இருக்கிறது.

Confused

எப்போதும், எந்நேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாக சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப்பட்டதுதான் அதிகமாக இருக்கிறது.

“செய் ஏதேனும் செய்!” என்ற மனதின் கூக்குரலுக்கு இந்த சாமானிய சம்சாரியிடம் பதில் இல்லை!.

இந்த வாழ்க்கை நம்மை முழுமையாக தின்று தீர்க்கிறது. நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என்று நமது வாழ்வின் பாதையில் உள்ள அனைத்தயும் அது தின்று தீர்க்கிறது. வாழ்க்கை தின்று தீர்த்த ‘மிச்சங்கள்’ பெரும் பாறையாக உருவெடுத்து நம் கால்கள் மீது பிணைக்கப் படுகிறது.

எப்போதும், எந்நேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக கை தட்ட வேண்டியிருக்கிறது. வேறொருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நமது புறங்கையின் மீது தடவப்படுகிறது. நீ ‘வேண்டாம்’ என்று முகம் திருப்பினாலும் நீ நக்கித்தான் ஆகவேண்டும் என்று போதிக்கப்படுகிறது.

‘இலக்கு’ ‘டார்கெட்’ ‘அப்ரைசில்’, ‘பிளான் ஆப் ஆக்க்ஷன்’ , என்று பலவாறு, பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் ‘நுகத்தடி’ என்பதை மறந்துவிடவேண்டாம். அதை தூக்கி உன் கழுத்தில் வைத்து கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப்பையும் வைத்து விடுவார்கள்.

– தோழன் மபா @ tamilanveethi.blogspot.in

5) நீங்களும் செய்யலாமே?

என் நண்பர் வீட்டுக்கு சென்றேன். அவரது பத்து வயது மகள் அவளது தாயாருடன் மளிகை சாமான்களின் லிஸ்ட்டை செக் பண்ணி, லிஸ்ட்டில் உள்ளதை டிக் அடித்துக்கொண்டிருந்தாள்.

provision

நண்பர் சொன்னார், “என் மகளிடம் தான் வீட்டுக்கு தேவையானதை எழுதச் சொல்லி லிஸ்ட்டை தயார் செய்வோம். மளிகை பொருட்கள் வந்ததும் அவள் தான் செக் பண்ணுவாள். லிஸ்ட் எழுதுவதால் ல, ர, ற, ன, ண போன்ற எழுத்துக்களை இதன் மூலம் பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டுவிட்டாள். விலை என்ன என்று தெரிவதால் எதையும் வீணாக்க மாட்டாள்.” என்றார். அட! இதில் இவ்வளவு சமாச்சாரம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டேன்.

– அமுதா அசோக்ராஜா @ குமுதம்

(நம் வாசகர்களும் இதை அவர்கள் வீட்டில் பின்பற்றலாமே! ஒவ்வொரு முறையும் பொருட்கள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து சந்தைக்கு வரும்போது 1% முதல் 5% வரை விலை ஏறி தான் வரும். இதை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என்று தெரியாது. இதையெல்லாம் உங்கள் குழந்தை தெரிந்துகொண்டால், அவர்கள் பொறுப்புணர்ச்சி அதிகமாகும். அவர்கள் கடமையை நீங்கள் நினைவூட்டவேண்டிய அவசியமே இருக்காது. தானாக படிப்பார்கள். முன்னேறுவார்கள். 10 வயது என்றில்லை. 7 வயது முதலே இதை பின்பற்ற தொடங்கலாம். பின்பற்றிவிட்டு அதுகுறித்து நம்மிடம் அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள்!)

6) THINK TINK நேரம் தெரியுமா?

ஒரு பெரிய தொழிலதிபரை பார்க்க, “இரவு ஏழு மணி போல வரட்டுமா ?” என்றேன்.

time copy“எனக்கு 7.00 மணி முதல் 7.30 மணி வரை THINK TINK நேரம். அதனால் 7.30 க்கு பிறகு வாருங்கள்!” என்றார்.

“அதென்ன THINK TINK நேரம்…?” ஆச்சரியப்பட்டு கேட்டேன்.

“நாள்தோறும் நீங்கள் சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குகிறீர்கள். படிப்பதற்கு நேரம் ஒதுக்க்கிரீர்கள். தூங்குவதற்க்கென்று நேரம் ஒதுக்குகிறீர்கள். ஆனால் சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குகிறீர்களா? அது தான் THINK TINK நேரம். THINK என்றால் சிந்தனை. TINK என்றால் மணியடிக்கும் சத்தம். நாள் தோறும் குறித்த நேரம் வந்தவுடன் உங்கள் இலக்கை பற்றி சிந்தனை செய்ய மனத்தை பழக்கப்படுத்த வேண்டும் என்பது தான் இதன் அர்த்தம். பணக்கார்கள் இதை தொடர்ந்து செய்கிறார்கள்.” என்றார்.

ஆம்! நாள்தோறும் 15 நிமிடமாவது சிந்திப்பதற்கென்று நாம் நேரம் ஒதுக்கவேண்டும். ஒவ்வொரு நாள்ளும் அதே குறிப்பிட்ட நேரத்தையே பின்பற்ற தொடங்கினால், அந்த நேரம் வந்தவுடன் நமது மனம் தானாக இலக்குகள் பற்றி சிந்திக்க தொடங்கிவிடும். மனதை பழக்குவதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. மனம் என்பது சேவகன் போல. அதை முறையாக பயன்படுத்தினால் அது நம்மை பணக்காரராக்கிவிடும்.

– ராம்குமார் சிங்காரம் @ எனர்ஜி பக்கம், குமுதம்

7) சொன்னது நீ தானா? சொல் சொல் என்னுயிரே!

ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றபோது, பாடல் கம்போஸ் செய்வதற்காக எம்.எஸ்.விஸ்வநாதனையும், கண்ணதாசனையும் பெங்களூருக்கு அழைத்துப் போய் ஓட்டல் ரூமில் தங்க வைத்தார் ஸ்ரீதர்.

Kannadasan MSV

பாட்டுக்கான காட்சியமைப்பை சொன்ன பிறகும், கவியரசு அப்புறமா எழுதலாம் என்று சொல்லிவிட்டார். காரணம் அவருக்கு வரிகள் அமையவில்லை. ஒரு வாரமாகியும் பாடல் எழுதப்படவில்லை. சாப்பிடுவதும் தூங்குவதுமாய் பொழுதை கழித்தார் கண்ணதாசன். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த எம்.எஸ்.வி, ஏதோ குறிப்பிட்டு “அந்தாளுக்கென்ன போச்சு… டைரக்டருக்கு நான் இல்லே பதில் சொல்லணும். போய் தட்டி எழுப்பி பாட்டை வாங்கிட்டு வாங்க அந்தாளுகிட்டே” என்று யூனிட்டரிடம் சொல்ல, விஷயம் கண்ணதாசன் காதுகளுக்கு போனது.

“சொன்னது நீ தானா ?? சொல் சொல் என்னுயிரே…” என்று வரிகள் துவங்குமாறு பாடலை எழுதித் தந்தார் கண்ணதாசன்.

இதை ஒரு விழாவில் அழுதுகொண்டே பகிர்ந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

– திண்டுக்கல் லியோனி ஒரு பட்டிமன்றத்தில் கூறியது.

8) வாரியார் தமது வழிகாட்டியாக கொண்ட பாடல்!

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் ஊறிய
கைப்பதனைக் கட்டியென்று உண்பானும் இம்மூவர்
மெய்ப் பொருள் கண்டு வாழ்வார் (திரிகடுகம்)

Variyar Swamigalஒருவன் திட்டினால் அதனை வாழ்த்தாக எண்ணுதல் வேண்டும். கூழை, நெய்விட்டுப் பிசைந்த பருப்புசாதமாக எண்ணுதல் வேண்டும். வேப்பிலைக் கட்டியைச் சர்க்கரைக் கட்டியாக எண்ணுதல் வேண்டும்.

நம்மை வணங்கிப் புகழ்கிறவர்கள் நமது புண்ணியத்தில் ஒரு கூறு எடுத்துக் கொள்கிறார்கள். நம்மை அகாரணமாக நிந்திக்கின்றவர்கள் நாம் செய்த பாவத்தில் ஒரு கூறு எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்வதன்றி அவர்கள் செய்த புண்ணியத்திலும் ஒரு கூறு நமக்குத் தருகின்றார்கள். இந்தக்கருத்தைப் பீஷ்மர் சரசயனத்தில் கிடந்து பாண்டவர்களுக்கு உபதேசம் செய்த பகுதியில் காணலாம்.

மேற்படி பாடல் வாரியாருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். மேலும், அதையே தனது வாழ்வின் வழிக்காட்டியாக கருதினார். அந்தப் பாடல் கூறிய கருத்துக்கள் படி நடந்தும்கொண்டார் ஸ்வாமிகள்!

– ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி @ தமிழுலகம்

9) வீணா சந்தேகப்படாதீங்க சார்!

“என் பொண்ணு பின்னாடி சுத்துறியே… தம்மு, தண்ணி பழக்கம் உண்டா?”

“வீணா சந்தேகப்படாதீங்க சார்… உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்!”

– ஆர்.நந்தகிஷோர் @ ஆனந்த விகடன்

10) படித்ததில் பிடித்தது

அஜீத்க்கு ஆட வரல; விஜய்க்கு நடிக்க வரல; சூர்யாக்கு குதிக்க வரலனு சொன்னபடி நாம இங்கயேதான் இருக்கோம். அவங்க கோடில சம்பாதிச்சிட்டிருக்காங்க.!
– twitter.com/minimeens

என்றாவது ஒரு நாள் முன்னாள் காதலிய காணும்போது “கொஞ்சம் பொறுத்திருந்தா உன்னை எப்படி கொண்டாடியிருப்பேன் தெரியுமா”ன்னு சொல்லுமளவு வாழ்க்கை அமையனும் 🙂
– twitter.com/arattaigirl

===============================================================================

Life lesson

===============================================================================

ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம!

நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.

1) விருப்ப சந்தா

இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).

நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.

2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்

இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)

விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

===============================================================================

[END]

6 thoughts on “சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

  1. பத்து பாயிண்டுகளும் டென் commandments போல் உள்ளது

    அடுத்தவர்கள் செய்யும் நல்ல செயலை ஊக்குவிக்க வேண்டும் என்பதை கொலம்பஸ் மூலம் தெரிந்து கொண்டேன்.

    தேவையான பொருட்களை மட்டும் வாங்கி தேவையற்ற பொருட்களுக்கு குட் bye சொல்ல வேண்டும் என அழகாக உணர்த்தி இருக்கிறீர்கள்

    வாரியார் வழிகாட்டியாகக் கொண்ட பாடல் வரிகள் அருமை.

    சொன்னது நீ தானா சொல் சொல் பாடல் பிறந்த விதம் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் . கண்ணதாசனின் பிறந்த நாள் 24 ஜூன்.

    நாம் சிறந்த மனிதர்களாக முக்கிய காரண மாணவர்களை பட்டியலிட்டு சொன்னதற்கு நன்றி

    ஆக மொத்தத்தில் இந்த வார புத்துணர்ச்சி ஊட்டும் வாரமாக ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி இந்த வாரம் முழுவதும் தொடர வேண்டும்

    நன்றி
    உமா வெங்கட்

  2. பத்து செய்திகளும் அருமை என்றாலும், வாரியார் அவர்கள் வழிகாட்டியாக கொண்ட பாடல் விஷயம் வித்தியாசமானது

    அதனையே நாமும் பின்பற்ற முயற்சிக்கலாம்.

    நன்றி

  3. அருமை அருமை அனைத்தும் அருமை
    ஒவ்வொன்றும் தேடி எடுத்த மணிகள்

    நன்றி

  4. சார், நீங்கள் கொடுத்துள்ள பதிவுகள் பத்தும் நன்றாக இருந்தது.
    உங்கள் தளத்தை பல நாட்களாக பார்த்து வருகிறேன். சிறப்பு. தொடரட்டும் பணி.

    விரைவில் தங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

    மணிவண்ணன்,

    சீனியர் சப் எடிட்டர்
    தினமலர்
    சென்னை.

  5. படிக்க படிக்க திகட்டாத தொகுப்பு..10 கருத்துகளும் -10000 விளக்கங்களை தருகிறது.
    நடைமுறை செய்திகளை தருவதன் மூலம், நாமும் என்னென்ன பழக்கங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லி கொண்டே போகலாம்.ஒவ்வொன்றும் ஒரு முத்து..

    தங்கள் சிந்தனைக்கு நன்றிகள் அண்ணா..

Leave a Reply to sampathkumar.j Cancel reply

Your email address will not be published. Required fields are marked *