Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

print
சுமார் 60 ஆண்டுகளுக்கு வள்ளிமலையில் படிகள் அமைக்கும் திருப்பணி நடந்த போது நடைபெற்ற அதிசய சம்பவம் இது. வாரியார் ஸ்வாமிகள் தாம் இருந்த காலத்தில் வருடந்தோறும் வள்ளி பிறந்த, முருகன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்கு சென்று திருப்புகழ் பாடி படி உற்சவம் நடத்துவார். திருப்புகழ் பாடிக்கொண்டே கிரிவலமும் வருவார். நடக்க முடியாத நாள் வரையில் அவர் கிரிவலம் வரத் தவறியதில்லை.

Variyarவள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்த இந்த படி உற்சவம் பின்னர் வாரியார் ஸ்வாமிகளால் வள்ளிமலை உள்ளிட்ட பல திருத்தலங்களில் நடத்தப்பட்டது.

வள்ளிமலைக்கு இப்போது உள்ளது போல அப்போது படிகள் கிடையாது. ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும்.

சுமார் 50 – 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது. வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் விருப்பத்திற்கு இணங்க, வள்ளிமலையில் படிகளை அமைக்கும் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. அதற்கு தலைவர் வாரியார் ஸ்வாமிகள்.

Vallimalai Miracle 2

வேலூர் வைத்தியபூபதி அப்பாத்துரை அவர்கள் செயலாளர். டாக்டர் அப்பாத்துரை வள்ளிமலையில் அடிவாரத்தில் தங்கி பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். மலையின் பாதிவரை படிவேலை நடந்தது.

Vallimalai Miracle 3

மேலே போகும்போது சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில படியமைக்கும்பொருட்டு இரண்டு கொத்தனார்கள் அதை பெயர்க்கும்போது, உள்ளே இருந்து மட்டிப்பால் சாம்பிராணி புகை குபு குபுவென வந்தது. அடுத்த நொடி கொத்தனார்கள் இருவரும் வாயிலும் மூக்கிலும் ரத்தம் பொங்கி மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள். படியமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

Vallimalai Miracle 4
கந்தரனுபூதி பாடுகிறார் திருமதி. வள்ளி உமாபதி

Vallimalai Miracle 9Vallimalai Miracle 5அருகே இருந்த சித்தாள்கள் ஓடிப்போய் வைத்தியபூபதி அப்பாத்துரை அவர்களிடம் கூறினார்கள். அவர் விரைந்து சென்று பார்த்தார். படியை பெயர்த்த இடத்தில பார்த்தால் உள்ளே மங்கலாக யாரோ ஒரு முனிவரின் உருவம் தெரிந்தது. அப்படியே கீழே விழுந்து வணங்கியவர், படிக்கலை எடுத்து மூடிவிட்டார்.

Vallimalai Miracle 6
அதிசயங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு அமைதியாக காட்சியளிக்கும் சித்தர் மண்டபம்

மேற்கொண்டு பணியை தொடர்வதா வேண்டாமா? வாரியார் ஸ்வாமிகள் மாவட்ட ஆட்சி தலைவர் உட்பட அனைவரிடமும் ஆலோசித்தார். கடைசீயில், அந்த மண்டபத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு படிகளை அமைக்கும் பணி தொடர்ந்தது. இப்போதும் அந்த மண்டபம் அப்படியே இருக்கிறது.

சித்தர்கள் தவம் செய்யும் பூமி வள்ளிமலை என்பது இதன் மூலம் புலனாகிறது.

வள்ளிமலையில் எல்லா படிகளும் புதிதாக போடப்பட்டன. அந்த இடத்தில் மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.

வாரியார் ஸ்வாமிகள் இருக்கும்போது இங்கு படி உற்சவத்தில் கலந்துகொள்வார். ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி பொருள் சொல்வார். அந்த மண்டபத்தில் மட்டும் விழுந்து வணங்கி, வெகு நேரம் நின்று கந்தரனுபூதி பாடுவார்.

வாரியார் ஸ்வாமிகளில் தவறாமல் நடத்தப்பட்ட இந்த படி உற்சவம் தற்போதும் ஆண்டுதோறும் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Vallimalai Miracle 1
புனரமைக்கப்பட்ட மண்டபம்
Vallimalai Miracle 8
அப்படியே விடப்பட்ட சித்தர் மண்டபம்

நாம் சென்ற வாரம் சென்ற போது வள்ளி உமாபதி அவர்களின் தலைமையில் படி உற்சவம் நடைபெற்றது. இந்த சித்தர் மண்டபத்திற்கு அனைவரும் வந்தவுடன், அங்கு எல்லோரும் சிறிது நேரம் நின்றோம். வள்ளி உமாபதி அவர்கள் வாரியார் ஸ்வாமிகள் படித்திருப்பணி செய்தபோது நடைபெற்ற மேற்படி சம்பவம் பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறி, அங்கு சித்தர்கள் தவம் செய்வது பற்றி கூறினார். தொடர்ந்து அங்கு கந்தரனுபூதி பாடப்பட்டது.

நாம் வள்ளிமலையில் பாடி உற்சவம் நிறைவு பெற்று முருகனை தரிசித்துவிட்டு திரும்பவும் கீழே வரும்போது, இந்த சித்தர் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு சென்ற வாரம் பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்களுக்கும் நம் வாசகர்களுக்கும் பிரார்த்தனை செய்தோம்.

இந்த பதிவை தட்டச்சு செய்யும்போதே மீண்டும் அடுத்த முறை மீண்டும் எப்போது இங்கு செல்வோம் என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.

* இந்த பதிவை நீங்கள் படிக்கும் இந்நேரம் நாம் காலடியில் (ஆதிசங்கரர் அவதரித்த ஊர்) இருப்போம். உங்கள் அனைவருக்காகவும் அவரது திருக்கோவிலில்  நிச்சயம் பிரார்த்தனை செய்வோம் என்பதை சொல்லவேண்டுமா என்ன?

===============================================================

காலடியில் அனைத்தும் நல்லபடியாக போய்கொண்டிருகிறது. சொர்ணத்து மனையை பார்த்துவிட்டு வந்துவிட்டோம். லக்ஷ்மி தேவி தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த அந்த வீட்டைவிட்டு வர மனம் வரவில்லை. காரணம், அன்னை தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள் என்பதனால் அல்ல. அந்த ஏழைப் பெண்ணின் ஊழை எதிர்த்து அன்னையிடம் வாதாடி அவள் அருள் மழையை சங்கரர் பொழிய வைத்த இடமாயிற்றே… நெல்லிக்கனி மழை பொழிந்த அந்த இடத்தில் அப்படியே சில வினாடிகள் நின்று அவள் அருள் மழையை அனைவருக்காகவும் வேண்டினோம்.

IMG_1709 copy

இங்கு டேட்டா கார்ட் சிக்னல் கிடைப்பதில் சிரமமாக உள்ளது, சென்னை திரும்பியவுடன் விரிவாக பேசுவோம்.

IMG_1817 copy
தங்க நெல்லிக்கனி பொழிந்த வீடு!

IMG_1798 copyIMG_1818 copy* தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ முதலில் ஒரு சாதாரண ஒட்டுவீடாகத் தான் இருந்தது. தற்போது நீங்கள் பார்க்கும் இந்த வீடானது ‘சொர்ணத்து மனை’ பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஆம்…. புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. ஏனோ தெரியவில்லை இந்த இடத்திலிருந்து வர மனமே வரவில்லை. அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியாம் சங்கரனின் கருணைக்கும் சாட்சியல்லவா இந்த வீடு…! கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த இங்கு அக்ஷய திரிதியை நாளான நேற்று அமர்ந்து ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ படித்தது மறக்க முடியாத அனுபவம்.

===============================================================

அடுத்து வருவது :

வள்ளிமலை கிரிவலம் – ஒரு நேரடி (பரவச) அனுபவம்!

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

For Episode 1 of this series…

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

=====================================================================

Also check :

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

=============================================================

[END]

8 thoughts on “சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

  1. சுந்தர் அண்ணா..

    மிகவும் அருமையான பதிவு அண்ணா..

    வள்ளிமலை முழுவதும் ஏராளமான அற்புதங்கள்..மலை அடிவார கோவில் முதல் கோவில் தெப்பகுளம் என சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இயைந்த மலை ஒற்றிய படிபாதை…

    மிகவும் அருமை அண்ணா..

    முருகனை துதித்து கொண்டே 444 படி ஏறிய அனுபவம் மிகவும் மன நிறைவை தந்தது.நாம் மலை ஏறிய போதும், இறங்கிய போதும், என் கவனத்தை மிகவும் ஈர்த்தது – சித்தர் மண்டபம்.

    சித்தர் மண்டபம் – சொல்ல முடியாத பரவசம். இயற்கையான காற்றும், குளு குளு சூழ்நிலையும், சித்தர் மண்டபதை விட்டு வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

    நம் தள அன்பர்களுக்காக, சித்தர் மண்டபத்தில் அமர்ந்து,தங்களோடு இணைந்து, பிரார்த்தனை செய்தது என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

    வள்ளி மலை – வரம் தரும் மலை என்று தான் சொல்ல வேண்டும்.மறுபடியும் எப்போது வள்ளிமலை செல்வோம் என்ற ஆவல் உள்ளது அண்ணா..அடுத்த முறை வள்ளி மலை சென்றால் கண்டிப்பாக கிரிவலம் செல்ல வேண்டும்.

    வள்ளி மலை கிரிவல அனுபவம் மற்றும் “காலடி” தரிசனதையும் எதிர் நோக்கி..

    மிக்க நன்றி அண்ணா..

  2. வள்ளி மலையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நாங்களும் அனுபவித்து கொண்டோம்.
    படி அமைக்கும் போது நடந்த அதிசியம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
    ஆதி சங்கரர் தங்க மழை பொழிந்த இடத்தில தாங்கள் இருப்பது தாங்கள் செய்த புண்ணியம். அதுவும் அட்சயதிரிதியை அன்று.
    யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    நன்றி

  3. வணக்கம் சுந்தர். தங்களின் பயணம் இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறோம். நீங்கள் போனாலே நாங்களும் அந்த கோவில்களுக்கு போன மாதிரி தானே. ஏனெனில் நீங்கள் தங்களின் பதிவின் மூலமாக எங்களை அங்கேயே அழைத்துச் சென்று விடுவீர்கள். மிக்க நன்றி.

  4. அருமை. வள்ளிமலை பற்றி அறியாத செய்திகள். தரிசனம் செய்ய அந்த வேலவன் அருள் புரிய வேண்டும்.

  5. வணக்கம் சுந்தர். மிகவும் புண்ணியம் செய்தவர் என்று சொல்லவேண்டும் உங்களை. ஏனென்றால் சித்தர் மண்டபம் ,தங்க நெலிகனி பொழிந்த மனையில் அமர்ந்து தியானம் செய்யும் வரம் கிடைத்து உள்ளது. மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள். அலைமகளின் அருள் ஆசியோடு திரும்புங்கள்.நன்றி

  6. ஆஹா என்ன அற்புதம். அட்சய திரிதி அன்று எப்பேர்பட்ட அனுபவம்.

    மிக்க மகிழ்ச்சி

    jr

  7. லேட்டாக படித்தாலும் , இந்த பதிவை படித்ததே நான் செய்த பாக்கியம். படி உற்சவத்தை பற்றி படிக்க படிக்க என் மனம் பரவசமாகி விட்டது. ஒருமுறை இறை அருளால் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது/

    கனகதாரா சொர்ணத்து மனை பற்றி படிக்க படிக்க மனதில் அளவில்லா ஆனந்தம்.. தாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் அந்த மனையில் கனகதார சுலோகம் அட்சய திதி அன்று சொல்வதற்கு. …..தாங்கள் இந்த வருடம் அட்சய திதி அன்று அங்கு இருந்து இருகிறீர்கள் . வரும் வருடம் அனைத்தும் தங்களுக்கு பொருளாதார சிறப்பும் … வாழ்கையில் ஏற்றமும் அமைந்த ஆண்டாக கண்டிப்பாக இருக்கும் . நம் தளம் மேலும் மேலும் முன்னேற்றம காண வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *