Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

print
போரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்!

DSCN9838

DSCN9950இந்த உழவாரப்பணியின் சிறப்பு!

* இந்த ஆண்டின் முதல் உழவாரப்பணி.

* நாம் பணி செய்த முதல் முருகன் கோவில்.

* அந்தப் பகுதியை சேர்ந்த உடல்/மன குறைபாடுடைய சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்தது.

நம் உழவாரப்பணியை அர்த்தமுள்ளதாக ஆக்கிய அந்த சிறுவன்!
நம் உழவாரப்பணியை அர்த்தமுள்ளதாக ஆக்கிய அந்த சிறுவன்!

* அடுத்து நம் வாசகர்களுக்கு, பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பெருமையையுடைய திரு.துரைசாமி குருக்கள் அவர்கள் மூலம் நாம் பரிசளித்த ‘காரியசித்தி ஆஞ்சநேயர்’ படத்துடன் கூடிய சிறிய சுந்தரகாண்டம் நூல்.

* அடுத்து அனைவருக்கும் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னதியில் நடைபெற்ற விசேஷ வழிபாடு + அர்ச்சனை.

* உழவாரப்பணி முடிந்த பின்னரும் தொடர்ந்த பணி (எலக்ட்ரிகல் பிட்டிங்குகளை பொருத்தியது!)

=====================================================================

இந்த பதிவில் எண்ணற்ற புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும். சற்று ஆழமாக நிறுத்தி நிதானமாக படிக்கவும்.

படிப்படியான வளர்ச்சி!

இந்த முருகன் முதலில் பனைமரத்தின் கீழ் இருந்தவர். படிப்படியாக வளர்ந்து இந்த அளவு ஒரு பெரிய ஆலயமாக உருப்பெற்றுள்ளது இந்த கோவில். இவர் வளர வளர போரூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளும் வளர்ந்தது. ஆண்டவனுக்கே வளர்ச்சி என்பது படிப்படியாக தான் அமைகிறது. மனிதர்கள் நாம் ஒரே நாளில் வளர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறோம்… சரி தானே?

DSCN9805

DSCN9808

DSCN9820

DSCN9896DSCN9899DSCN9901கடந்த கந்தசஷ்டியின் போது ஏழு நாட்களும் இந்த கோவிலுக்கு சென்று முருகனை வெவ்வேறு அலங்காரங்களில் தரிசித்து அது தொடர்பான பதிவுகளையும் நாம் அளித்தது நினைவிருக்கலாம். அப்போதே ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவரிடம் நமது உழவாரப்பணி குழு பற்றி இந்த ஆலயத்தில் பணி செய்யவிரும்புவதாக கூறினோம். அப்போது தான், தைப்பூசம் வருகிறது. அது சமயம் செய்தால் உதவியாக இருக்கும் என்றார்.

மேலும் கோவிலில் பல ட்யூப் லைட்டுகள் எரியவில்லை. பல பல்புகளை மாற்றவேண்டியிருக்கிறது. சிறு சிறு எலக்ட்ரிகல் வேலைகளும் இருப்பதாக கூறினார். அனைத்தையும் செய்து தருகிறோம்… பணிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வருகிறேன், உங்கள் எலக்ட்ரீசியனையும் வரச்சொல்லுங்கள்… அனைத்தையும் செக் செய்து பார்த்துவிட்டு என்ன என்ன தேவை என்று என்னிடம் லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்… நான் அவற்றை வாங்கித் தருகிறேன். உடனிருக்கிறேன்!” என்றோம்.

DSCN9924
அந்த சிறுவன்! (இடது ஓரம்)

DSCN9912

DSCN9929
பளீச் தரை!

ஆனால் அவர்கள் எலக்ட்ரீசியன் சபரிமலைக்கு சென்றுவிட்டதால் தேவைகள் குறித்து கணக்கெடுக்க முடியவில்லை. இன்னின்ன தேவைகள் உள்ளது என்று தெரிந்தால் தானே நாம் தொகையை தயார் செய்யமுடியும்… மலையிலிருந்து வந்தவுடன் நமக்கு கால் செய்வதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை அழைப்பு வரவில்லை.

DSCN9922
நண்பர் ராஜ்குமாருடன் இணைந்து பணி செய்யும் அந்த சிறுவன் (இடது)

DSCN9926

DSCN9959

DSCN9810

DSCN9830DSCN9903இதற்கிடையே ஜனவரி 18 ம் வந்தது. சரி… ‘நாங்கள் பணி செய்யும்போதாவது வரச்சொல்லுங்கள்… ஏனெனில் உழவாரப்பணி முடிந்துவிட்டபிறகு அதை செயல்படுத்துவது எனக்கு சிரமம்’ என்றோம். ‘நிச்சயம் நாளை நீங்கள் பணி செய்துகொண்டிருக்கும்போது அவர் வருவார்…. கையேடு முடித்துவிடலாம்’ என்றார்கள். ஆனால் அப்போதும் வரவில்லை.

DSC00465

DSC00466DSCN9954DSCN9964இதற்கிடையே நாங்கள் எங்கள் வேலையை துவக்கிவிட்டோம். நம் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு சென்ற பில்டர் காபி அனைவருக்கும் தரப்பட்டது. லயன்ஸ் கிளப்பிலிருந்து வந்த நண்பர் ஒருவர் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்திருந்தார். நான்கு மாரி பிஸ்கெட்டும் ஒரு கப் காபியும் சாப்பிட்ட பிறகு, பணி துவங்கியது.

குழுகுழுவாக அனைவரும் பிரித்துவிடப்பட்டனர். பணியை சூப்பர்வைஸ் செய்யும்பொருட்டு நாம் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்க, புகைப்படம் எடுப்பதை பெரும்பாலும் நண்பர் மனோஹரன் பார்த்துக்கொண்டார்.

DSCN9904

DSC00479

DSCN9855DSCN9895DSCN9931கோவில் வளாகம் முழுக்க குப்பைகள் அகற்றப்பட்டு, ஒட்டடை அடிக்கப்பட்டது. தீப மேடைகள் அனைத்தும் எண்ணைப் பிசுக்கு நீக்கி சுத்தம் செய்யப்பட்டது. தேவையற்ற செடி, கொடிகள், களைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. பிரகாரம் முழுக்க அலம்பிவிடப்பட்டது.

மகளிர் குழுவினருக்கு வழக்கம் போல, இங்கேயும் சவாலான பணி. எண்ணைப் பிசுக்கு ஏறிப்போயிருந்த தீப மேடைகள் சுத்தமாக தேய்த்து துலக்கப்பட்டன.

DSCN9857

DSCN9843

DSCN9847இது தவிர பிரகாரத்தில் உள்ள உப சன்னதிகள் அனைத்திலும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து அலம்பிவிட்ப்பட்டது.

ஆங்காங்கே கிடந்த குப்பைகள், பழைய அகல் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

DSCN9868

DSCN9872மூலஸ்தானத்தின் பிரதான வாயில் மேலே உள்ள வண்ண ஸ்வாமி சிற்பங்கள் ஒட்டடை படிந்திருந்தது. நாம் இங்கு கந்த சஷ்டிக்கு வரும்போது கவனித்தோம். மனம் பதறியது. “நாங்கள் இருக்க உன் ஆலயத்தை இப்படி விட்டுவிடுவோமா முருகா… நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கு அவசியம் உழவாரப்பணி மேற்கொள்வோம்!” என்று அப்போதே முடிவு செய்தோம்.

அந்த சிலைகள் இருந்த பகுதியில் நண்பர் சந்திரசேகர் ஏறி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்தார்.

DSCN9849

DSCN9866இன்னும் எங்கெங்கெல்லாம் தூசி, தும்பு, அசுத்தம் இருந்தனவோ அங்கெல்லாம் நம் நண்பர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தனர்.

நாங்கள் பணி செய்துகொண்டிருந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்ய துவங்கினான். அவனுக்கு ஏதோ உடல்/மன குறைபாடு உள்ளது என்று மட்டும் தெரியும். என்ன குறைப்பாடு என்று இங்கு ஆராய்வது  தேவையல்ல என்று கருதுகிறோம். அவனை பிரேமவாசத்தில் பார்த்திருக்கிறோம். அது மட்டும் தெரியும். எப்படியோ எங்கள் உழவாரப்பணிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.

2013 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பிரேமாவசத்தில் மேற்சொன்ன சிறுவனுடன் நாம்! (பிரேமவாசம் - சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள மாற்றுதிறன் / மனநலம் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கான இல்லம்)
2013 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பிரேமவாச குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கச் சென்றபோது மேற்சொன்ன சிறுவனுடன் நாம்! (பிரேமவாசம் – சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள மாற்றுதிறன் / மனநலம் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கான இல்லம்)

உடலும், உள்ளமும், வாழ்க்கையும், வரவும் நன்றாக இருப்பவர்களுக்கே இறைவனுக்காக மாதம் ஒரு அரை நாள் நேரம் ஒதுக்க முடியவில்லை எனும்போது இது எத்தனை பெரிய விஷயம்….

“தம்பி, நீ செய்தது எவ்வளவு பெரிய சேவை என்று தெரியுமா?”

(*அவன் எப்போது போனான் என்று தெரியவில்லை. இடையே போய்விட்டான் என்று கருதுகிறோம். இறுதியில் சுந்தரகாண்டம் தர தேடியபோது காணவில்லை.)

வாண்டுகளுக்கு பணி எதுவும் தரவில்லை. “எங்கள் எல்லாரோட பொருட்களையும் பத்திரமா பார்த்துக்கோங்க…. அது தான் உங்க வேலை” என்று அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை கொடுத்துவிட்டோம்.

DSCN9813
ராஜினாமா செய்துவிட்ட மோனிஷ்!
புதிய சீஃப் செக்யூரிட்டி மாஸ்டர் வேணு கிருஷ்ணன்!
புதிய சீஃப் செக்யூரிட்டி மாஸ்டர் வேணு கிருஷ்ணன்!

மனோஹரனின் மகன் மோனிஷ் ராஜ் இந்த உழவாரப்பணியோடு நம் குழுவில் செக்யூரிட்டி வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இனி நம் உழவாரப்பணியில் பொருட்களை பார்த்துக்கொள்ளும் வேலையெல்லாம் பார்க்கமட்டாரம். “என்ன அங்கிள் நீங்க… ஒரு ஒரு தடவையும்… வேலை கொடுக்காம சும்மா உட்காரவெச்சிடுறீங்க… என்று மிகவும் கோபித்துக்கொண்டார். அதனால் அந்த வேலை தாமரை வெங்கட் அவர்களின் மகனுக்கும்  ஸ்ரீஹரி அவர்களின் மகனுக்கும் கிடைத்தது. (ரொம்ப பெரிய செக்யூரிட்டிங்க தான்!)

DSCN9908

DSCN9893

DSCN9881

DSCN9879

DSCN9874DSCN9945DSCN9835பணி அனைத்தும் முடிந்த பின்னர் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனைக்கும் விசேஷ பூஜைக்கும் குழுமினோம்.

முதலில் கோவிலின் குருக்கள் பெரியவர் திரு.துரைசாமி குருக்கள் மற்றும் துப்புரவு பணியாளர், காவலாளி அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

DSCN9988

DSCN9995DSCN9992கோவிலில் ரெகுலராக துப்புரவு பணி மேற்கொள்ளும் அந்த பெண்ணை நாங்கள் கௌரவித்து, புடவை, ரவிக்கை பிட், ரொக்கம், ஆகியவற்றை தாம்பூலத்தோடு கொடுத்தபோது அவருக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா? புகைப்படங்களில் பாருங்கள் புரியும்.

அதே போன்று கோவிலில் காவலாளியாக பணி புரியும் அந்த பெரியவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். அவரது பணியின் மேன்மையை பாராட்டி, சில வார்த்தைகள் பேசி பின்னர் அவருக்கு வேட்டி, சட்டை, இனிப்பு, ரொக்கம் ஆகியவற்றை கொடுத்தோம். நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு.

DSCN9998

DSCN0001
இந்த சிரிப்பில் தான் எத்தனை எத்தனை அர்த்தம்..!! (கோவிலில் துப்புரவு பணி செய்யும் பெண் கௌரவிக்கப்பட்டபோது)
DSCN0004
இவர் தான் கோவிலின் வாட்ச்மேன்! நெகிழ்ச்சியில் அழுதே விட்டார்!!

உழவாரப்பணியில் பங்கேற்ற அனைவரின் பெயரிலும் அவர்கள் குடும்பத்தினர் பெயரிலும் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டது. அப்போது சிறந்த முறையில் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தொண்டு சிறக்க உதவினார் திரு.துரைசாமி குருக்கள் அவர்கள்.

நம் எப்போதும் போல டைரியை எடுத்து வர இயலாத வெளியூர் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பெயர் ராசி நட்சத்திரத்த்தை படித்து அவர்கள் பெயருக்கு சங்கல்பம் செய்தோம். (இது சுழற்சி முறையில் நாம் செல்லும் ஆலயங்களில் நடைபெற்றுவருகிறது!)

விசேஷ அர்ச்சனை நடைபெற்றபோது…

DSCN9980

DSCN9975
வர இயலாத வாசகர்கள் சிலர் பெயருக்கு சங்கல்பம் செய்யும்போது…

DSCN9970DSCN9987DSCN9979

பணியில் பங்கேற்ற நம் வாசகர்களுக்கு ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய காரிய சித்தி ஆஞ்சநேயர் படமும் சுந்தரகாண்டம் நூலும் திரு.துரைசாமி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் பரிசளிக்கப்பட்டது.

நம் வாசகர்கள் ‘சுந்தரகாண்டம்’ பெற்றுக்கொள்வதை பார்த்த அந்நேரம் கோவிலுக்கு வந்திருந்த ஒரு அம்மா, தனக்கும் ஒன்று வேண்டும் என கேட்க, அவருக்கும் அவருடன் வந்திருந்த வேறொரு பெண்மணிக்கும் சுந்தரகாண்டம் பரிசளித்தோம். அதே போல கோவிலின் காவலாளியும் தனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.

துரைசாமி குருக்கள் அவர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை. சிறுவயது முதலே இறைவனுக்கு பூஜை செய்யும் அருந்தொண்டான குருக்கள் பணிக்கு  வந்துவிட்ட இவருக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என பலர் உண்டு. ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காத்து நிர்வகிக்கும் ஒரு சிறந்த குடும்ப தலைவர்.

இவரது சிறப்பு என்னவென்றால் பல திருக்கோவில்களுக்கு தனது கைகளால் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார் அதற்குரிய யாகங்களில் பங்கேற்றிருக்கிறார். கோவிலுக்கு குடமுழக்கு செய்வது என்பது சாதரணமான விஷயம் அல்ல. மிகப் பெரிய பாக்கியம் அது.

பணியில் பங்குகொண்டோருக்கு சுந்தரகாண்டம் பரிசளித்தபோது…

DSC00485

DSC00486DSC00488DSC00489DSC00491DSC00494DSC00495DSC00497DSC00499DSC00500DSC00501DSC00502DSC00504DSC00507

DSC00492
கோவிலுக்கு வந்த அந்த அம்மா சுந்தரகாண்டம் பெற்றுக்கொண்டபோது…

இந்த பாலமுருகன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் நித்தியானந்தன் என்பவரும் இங்கு குருக்களாக இருக்கிறார். பரம்பரையே புனிதத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு உன்னத குடும்பம்.

DSCN9909
கோவிலுக்கு வழங்கப்பட்ட நமது ‘தினசரி பிரார்த்தனை’!

இறுதியாக மதிய உணவு. மதிய உணவை வெளியே ஒரு கேட்டரிங்கில் சொல்லி ஏற்பாடு செய்திருந்தோம். புளியோதரை + சிப்ஸ் + தயிர்சாதம் + ஊறுகாய். வழக்கம் போல நாம் அடக்கி வாசிக்க ஒரு சிலர் வெளுத்து வாங்கிவிட்டார்கள். (போனா போகட்டும் விடுங்க… நம்மாளுங்க தானே!).

DSC00513

DSC00515DSC00517சாப்பிட்டவுடன் மறக்காமல் மகளிர் குழுவினர் அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அனைவரும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்தபின்னர் பணியை நிறைவு செய்துவிட்டு முருகனுக்கு வாய்ப்புக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டோம். கோவில் தரப்பில் நமது பணி குறித்து பரம திருப்தி.

DSC00509

இரண்டு நாட்கள் கழித்து குருக்கள் அவர்களின் மகன் நித்தியானந்தன் (இவரும் இதே கோவிலில் குருக்கள் தான்) அழைப்பு வந்தது. “எலக்ட்ரீசியன் வந்திருக்கிறார்… வர முடியுமா” என்று. தைப்பூசத்திற்கு சில நாட்களே இருந்தன அப்போது.

“என்ன மாமா இது… நான் எத்தனை தடவை போன் பண்ணி பண்ணி இது விஷயமா கேட்டிருப்பேன். எத்தனை முறை வந்திருப்பேன்…. நேத்தைக்கு கூட அவருக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்… இப்போ நாங்க வேலையை முடிச்ச பிறகு வரச்சொல்றீங்களே…” என்றோம்.

உடனே அறங்காவலர் போனை வாங்கி, “சார்… மன்னிச்சுடுங்க… அவரை இப்போ தான் பிடிக்க முடிஞ்சுது. தெரியாம நடந்துடுச்சு. எப்படியாவது எல்லாத்தையும் (எலக்ட்ரிகல் பணிகள்) சரி பண்ணிக்கொடுங்க…. உழவாரப்பணி ரொம்ப சிறப்ப பண்ணியிருந்தீங்க…. இதுவும் முடிச்சு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.

தனது வீட்டுக்கா கேட்கிறார்… நம் அப்பன் ஆறுமுகனின் வீட்டுக்கல்லவா கேட்க்கிறார்.

“சரிங்க சார்… நான் இப்போ ஆபீஸ் கிளம்பிகிட்டு இருக்கேன். பர்மிஷன் போட்டுட்டு சாயந்திரம் ஒரு 4 மணிக்கு வர்றேன். அவரை மறக்காம வரச்சொல்லுங்க… என்னால மறுபடியும் மறுப்படியும் அலைய முடியாது சார்… எங்களை நல்லா யூஸ் பண்ணிக்கோங்க…” என்றோம்.

“நிச்சயம் சார்… நீங்க வாங்க!”

சொன்னபடி அன்று மாலை சென்று உடனிருந்து அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்து, அருகிலேயே இருந்து அனைத்தையும் கண்காணித்தபடி இருந்தோம்.

உழவாரப்பணி முடிந்த பிறகு நடைபெற்ற எலக்ட்ரிகல் பணிகள்!

f5458048

f5474304
மிக உயரமான ஒரு இடத்தில ஒயரிங்க் பழுது நீக்கி புது CFL பல்பு மாட்டுகிறார் எலக்ட்ரீசியன். (பின்னணியில் புதிதாக போடப்பட்ட அனைத்து டியூப்லைட்டுகளும் ஒளிர்வது தெரிகிறதா?)
f5520704
பிரதான ஹாலில் ஒளிரும் விளக்கு!

மிக உயரமான இடங்களில் பணி செய்யவேண்டியிருந்ததால் எத்தனை ரிஸ்க் எடுத்து எலக்ட்ரீசியன் பணி செய்கிறார் என்று புரிந்துகொண்டோம். ஒரு லைட்டை கழற்றி மாட்டுவதற்கு கால்மணிநேரத்துக்கும் மேலே ஆனது. அத்தனை (சுமார் 15 பிட்டிங்குகள்) லைட்டுகளையும் மாட்டுவது என்றால் அப்படியும் 3- 4 மணிநேரமாவது ஆகும். மறுபடியும் ஒரு ஒன்பது மணிக்கு வருவோம் என்று வீட்டுக்கு சென்றுவிட்டோம். மீண்டும் 9 மணிக்கு கிளம்பி வந்தோம். கடைசி பிட்டிங் மாட்டிக்கொண்டிருந்தார்.

புதிய ஃபிட்டிங் மாட்டுவது மட்டுமின்றி, ஒயரிங்கில் உள்ள பழுதுகளையும் நீக்கவேண்டியிருந்தது. இது முடித்து அடுத்துச் சுவிட்ச் போர்டு. அதில் கொஞ்சம் சுவிட்சுகளை மாற்றுவது… என வேலை இழுத்துக்கொண்டே போனதாம்.

அவர் கட்டணத்தில் CONCESSION கேட்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் உயிரை பணயம் வைத்து  அவர் பணி செய்ததால் (சில இடங்களில் மின்சாரம் ஷார்ட் ஆனதை நாமே நேரடியாக பார்த்தோம்) பேசிய தொகையை அப்படியே கொடுத்துவிட்டோம். (அவர் + அவரின் உதவியாளர் ஒருவர் என இருவருக்கு அன்று பணி!).

ஒவ்வொரு உழவாரப்பணியிலும் பொருட்செலவு, நடைமுறை சிரமங்கள், போக்குவரத்து ஏற்பாடு, விடாமல் செய்யவேண்டிய FOLLOW-UPs என பல உள்ளது.  நாம் அத்தனை நேர்த்தியாக எலக்ட்ரிகல் பணிகள் குறித்து ஆலய நிர்வாகத்தினரோடு FOLLOW-UP செய்தபோதும், நமது சேவையை அவர்கள் சற்று தாமதமாகத் தான் பயன்படுத்திக்கொண்டார்கள்.

எப்படியோ அனைத்தும் நல்லபடியாக முடிந்து தைப்பூசத்தில் கோவில் ஜொலி ஜொலியென ஜொலித்தது.

பணியில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் இந்த உழவாரப்பணியை மறந்தாலும் முருகன் மறக்கமாட்டான். உரிய நேரத்தில் அவன் அருள் உங்களை தேடி வரும்!

===============================================================

அடுத்த உழவாரப்பணி!

அடுத்த உழவாரப்பணி மே 17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.​) உழவாரப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்!

நன்றி!

===============================================================

முக்கிய அறிவிப்பு!

வேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு!!

அடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.

உங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check articles on  ‘உழவாரப்பணி’

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

=====================================================================

[END]

8 thoughts on “நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

  1. உழவராப்பணி கட்டுரை அருமை. உழவராராப்பணியோடு நில்லாமல், அவ்வாலயத்தின் முக்கிய தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது பாராட்டுக்குரியது.

    தை பூசத்தன்று ஆலயத்தை ஜொலிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.

    உழவராப்பணியில், கடைநிலை ஊழியர் முதல் ஆலய தலைமை குருக்கள் மற்றும் தர்மகர்த்தா என்று அனைவரையும் மரியாதை செய்வது நடைமுறையில் அரிதான விஷயமாகும். அதேபோல் உழவராப்பணியில் பங்கேற்கும் அனைவரையும் பாராட்டும் விதமாக அனைவருக்கும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பரிசாக வழங்கி ஊக்குவிப்பதும் போற்றத்தக்க நிகழ்வாகும்.

    நமது தளம் மற்றும் வாசகர்கள் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் தங்களுக்கு எப்போதும் குருஅருளும், இறையருளும் துணை நிற்கும்.

    வாழ்க பல்லாண்டு. ஓங்குக தங்கள் இறைபணி.

  2. மிக மிக அறுமையான பதிவு. நம் நண்பர்களை (வாசகர்களை தான் சொல்கிறேன்) மறுபடி சந்தித்த போல இருக்கிறது. உழவர பணிக்கு அப்புறம் கூட தாங்கள் இத்துணை மேனகட்டது எங்களுக்கே தெரியவில்லை. தெரிந்தால் தங்களுக்கு உதவியிருக்கலாம். தங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக குரு மகிமை சூப்பர். வாழ்த்துக்கள்.

  3. மிக அருமை.

    தங்கள் பணிக்கு மிக்க நன்றி.

    அனைவரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க.

    மிக மிக அருமை.

    நன்றியுடன்

    கே. சிவசுப்ரமணியன்

  4. வாழ்க வளமுடன்

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    அவ் ஆலயத்தை சுத்தம் செய்பவரை என்ன பாராட்டினாலும் தகும்

    நன்றி

  5. சுந்தர் அண்ணா..

    பற்பல அதிசங்கள் நிறைந்த, இந்த உழவார பணி யில், என்னால் பங்கு கொள்ள இயலாதது மனக்குறையே. பதிவின் மூலம் கோயிலை தரிசித்த நிறைவு வருகிறது அண்ணா..

    அடுத்த உழவார பணியை எதிர் நோக்கி.

    மிக்க நன்றி அண்ணா..

  6. வணக்கம் சுந்தர். இவ்வளவு கடுமையாக பணி செய்து இருகிறீகள் ஏன் திருப்தி அடைய மாட்டார்கள்.அதைவிட பலமடங்கு திருப்தியை அழகன் முருகன் அடைந்திருப்பான், மகிழ்ந்து இருப்பான். அருமையான படங்கள்.எப்படி சிறுவன் தானே வந்தான் பிறகு சென்றான் என்று தெரியவில்லை . பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.

  7. மனதிற்கு நிறைவான பதிவு
    புகைப்படங்கள் உங்கள் பதிவிற்கு உயிரூட்டி உள்ளன என்றால் அது மிகை இல்லை
    உங்கள் குழுவின் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடரட்டும் பக்தி சேவை
    மலரட்டும் மன அமைதி
    பெருகட்டும் எல்லா வளங்களும் நன்மைகளும்
    அழியட்டும் தீவினைகள்
    வாழ்க வளமுடன் !!!

  8. பதிவு மிக்கும் உயிரோட்டமுள்ள தத்ரூபமான பதிவு. நான் இந்த உழவாரப் பணியில் முருகன் அருளால் கலந்து கொண்டதை மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முருகனின் அருள் மழை கண்டிப்பாக பொழியும். தாங்கள் organize பண்ணிய விதம் அருமை

    அனைத்து படங்களும் நேர்த்தியாக உள்ளது

    மதிய உணவு மிகவும் நன்றாக இருந்தது.

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to sampathkumar.j Cancel reply

Your email address will not be published. Required fields are marked *